Followers

Monday, June 16, 2008

ஜாதகப் பொருத்தத்தில் யோனிப் பொருத்தம் என்றால் என்ன? - பொருத்தமில்லையே!

திருமணப் பொருத்தத்தில் யோனிப் பொருத்தம் சூத்திரர்களுக்கு உரியது என்கின்றார்கள். 10 வகை திருமணப் பொருத்தத்தில் சில பொருத்தங்களை சில சாதிகளுக்கு கட்டாயம் என்கின்றார்கள்.

தேர்வுகளில் கட்டாயமாக பதில் அளிக்க வேண்டியவை என்று சில கேள்விகள் இருக்கும், அதைப்போல சில சாதிகளுக்கு சில கல்யாணப் பொருத்தங்கள் கட்டாயம்.

பார்ப்பனர்களுக்கு தினப் பொருத்தம், சத்திரியர்களுக்கு கணப் பொருத்தம், வைசியர்களுக்கு ராசிப் பொருத்தம், சூத்திரர்களுக்கு யோனிப் பொருத்தம் கட்டாயம் என்கின்றார்கள் ஜோதிடர்கள்.

சரி யோனிப் பொருத்தம் என்றால் என்ன? யோனி என்றால் பெண்குறி.

ஜோதிடர்கள் 27 நட்சத்திரங்களையும் சில மிருகங்களாகப் பிரித்திருக்கின்றார்கள். அசுவனியும் சதயமும் - குதிரை யோனி, பரணி,ரேவதி- யானை யோனி, பூசம்,கார்த்திகை- ஆடு யோனி, ரோகினி,மிருகசீருடம் - சர்ப்பம்(பாம்பு ) யோனி, மூலம்,திருவாதிரை- நாய் யோனி, இப்படியே பிரித்திருக்கின்றார்கள்.

இதிலும் மூலமும் திருவாதிரையும் நாய் யோனி என்றால் முதலில் வரும் மூலம் ஆண் நாய் எனக் கொள்க, இரண்டாவதாக வரும் திருவாதிரை பெண் நாய் எனக் கொள்க. இப்படி இருந்தால் பொருத்தம் இருக்கிறது என்கின்றார்கள்.

சரி,இதோடு விட்டார்களா என்றால் இல்லை. ஒவ்வொரு நட்சத்திர மிருகத்திற்கும் பகை- எதிரி மிருகம் - நட்சத்திரம் வைத்திருக்கின்றார்கள். அசுவனிக்கும் சதயத்திற்கும் எருமை பகை. அசுவனி, சதயத்திற்கு - சுவாதியும் கஸ்தமும் பகை நட்சத்திரங்கள். எனவே பொருந்தாது. அசுவனி,சதயம் சுவாதியும் கஸ்தம் என்கின்றார்கள்.

உலக வழக்கப்படியே பார்த்தால் குதிரையும், எருமையும் பகை மிருகங்களா? ஒன்றையொன்று பார்த்தால் மோதவா செய்கின்றன- சண்டையா போடுகின்றன- எருமை எருமையாக நிற்கின்றது, பார்த்துக் கொண்டே குதிரை ஓடிக்கொண்டிருக்கின்றது.

ஆனால் ஜாதகப் பொருத்தத்தில் அசுவனி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் குதிரை யோனியாம். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், கஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் எருமை யோனியாம். குதிரை யோனியும் எருமை யோனியும் பகையாம். அதனால் ஜாதகம் பொருந்தவில்லையாம் - திருமணம் நடக்கக் கூடாதாம்!

ஜாதகத்தைத் தூக்கிக்கொண்டு பொருத்தம் பார்த்துச் சொல்லுங்கள் என்று எந்த ஜோதிடக்காரனிடமும் போகலாமா?

எப்படி நட்சத்திரத்தையெல்லாம் மிருகங்களாகப் பிரித்தார்கள்.?

குதிரை, யானை, ஆடு, சர்ப்பம், நாய், பூனை, பெருச்சாளி, பசு, எருமை, புலி, மான், குரங்கு, சிங்கம், கீரி என்று 14 மிருகங்களுக்கு 27 நட்சத்திரத்தை பிரித்திருக்கின்றார்கள்.

ஏன் இந்த மிருகங்களில் கடவுள் அவதாரமான பன்றியைக் காணவில்லை, கழுதையைக் காணவில்லை. காளை மாட்டைக் காணவில்லை? ஜோதிடக்காரர்கள் ஒன்றும் செய்வதில்லை. -- வா. நேரு. viduthalai.com
---------------------------------------
மனோரமா ஆச்சி ( நடிகை ) வாழ்க்கையில ஜோசியக்காரன் விளையாடின விபரீத விளையாட்டு. .

ஜோதிடர்களும், கோவில் குருக்களும் . திருமணப் பொருத்தம்.அறியாமையா பித்தலாட்டமா! பிழைக்கும் வழியா!

கம்ப்யூட்டர் ஜாதகம் கணிப்பது எப்படி?

ஏதோ கூட்டல், கழித்தல் போட்டு கை விரல்களை அப்படியும், இப்படியும் மடக்கி செத்தவருக்கே ஜோதிடம் சொல்லும் அறிவு ஜோதிடர்கள் தலைக்குள்ளே ? விளக்கம் வருமா?
---------------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

2 comments:

டி.அருள் எழிலன் said...

அருமை நானும் இதை யோசித்திருக்கிறேன் ஆனால் பிடிபடவில்லை.பெண்ணின் யொனியை விலங்குகளோடு ஒப்பிட்டு வைத்திருக்கும் பார்ப்பான் குஜராத்தின் பெண்ணின் யோனியைத்தானே தன் இந்து மதவெறிப் பாசிசத்துக்கு முதல் பலியாக்குகிறான்.

karikkulam said...

Have a look at the Zodiac, used in the West. That originally comes from Greek thoughts. The Zodiac associates every star with an animal, a thing, or a woman.

Associating such things with another like animal, is common wherever the zodiac is accepted; or people believe the stars have a vital say in the life and career of a person on earth.

Such belief is ok as long as it does not lead to harm to anyone. If it does, as in the case of a Tamil girl born under the star muulam, or kettai etc., not getting a bridegroom, only because such stars are harmful to the man if she marries him, we must not delay a single second to condemn it.

Even if all people give up their belief in Zodiac, after getting repeatedly attacked by people like you, do you think all superstitions will vanish into thin air completely from out of the lives of common man. Certainly Not, my dear.

Have your read today newspapers? You can find in all English national dailies this strange newsitem that a survey, taken recently among the Indian scientists community, has revealed that 90 percent of them believe in Karma, and a higher power that activates such Karma in man.

That clearly goes against scientific temper, doesnt it? Why so, my dear?

Please note: the scientists are not TN based; nor are they all of them Tamil Brahmins; or any Brahmins. They are from across all sections of society, from all States, from all religions.

How come they believe in the superstition called Karma, my dear?

From this, we can understand that the such belief is common; it does not even leave such people as scientists who are supposed to accept only facts that are veriable.

No amount of rationalism can succeed in making man accept only the physical world as a real world. We, on our part, can only concentrate on the harmful effect that can be done by extreme belief in superstitions.

If a man believes that he should not rob others, because it is a sin to do harm to others for which God will punish him, then such supersititions should not be criticised.

If you remove all superstitions that came from Brahminism, there is no guarantee that the void left will not be filled by some other superstitiions that will be created by others.

I am neither for superstititions nor against them. I am just for practical wisdom, which says to me that man will behave as he has done always.