Followers

Wednesday, June 4, 2008

எத்தனை முறை ஜெயலலிதா ராஜினாமா செய்திருக்க வேண்டும்? போச்சே! போச்சே!' அ.தி.மு.க.வினர் புலம்புகிறார்கள்.


சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி முதல்வர் கலைஞர் முடிவு எடுத்தது குற்றமா?

அக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிடத் தவறலாமா அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்?

முடிவுகளை மாற்றிக் கொண்டதற்கெல்லாம் ராஜினாமா செய்ய வேண்டுமென்றால் - ஜெயலலிதா எத்தனை முறை ராஜினாமா செய்திருக்கவேண்டும்?

ஆற்றுமணல் எடுப்பது தொடர்பான பிரச்சினை குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஆற்றுமணல் எடுத்து விற்பனை செய்வதை தமிழக அரசே தொடர்ந்து மேற்கொள்வது என்று நேற்று (26.5.2008) நடைபெற்ற சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஒருமனதாகக் கூறப்பட்ட முடிவை தமிழக அரசும் ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் அவர்கள் தீர்மானமாக அறிவித்துள்ளார்.

ஆற்று மணலை எடுத்து விற்பனையைத் தொடர்ந்து அரசே மேற்கொள்ளும்; ஒரு லாரியில் மூன்று யூனிட் வரை மணல் ஏற்றிக்கொள்ள அனுமதிக்கப்படும். வெளி மாநிலங்களுக்கு மணல் கொண்டு செல்லுவதைத் தடுக்க தற்போதுள்ள விதிமுறைகளில் திருத்தம் செய்யப்படும்.

மணல் அள்ளுவதில் நடைபெறும் தவறுகளைச் சரி செய்ய தொழில் துறை, பொதுப் பணித் துறை, வருவாய்த் துறை, உள்துறை செயலாளர்களைக் கொண்ட குழு அமைக்கப்படும். இக்குழு குவாரிகள் சம்பந்தப்பட்டவற்றைக் கண்காணித்து அறிக்கை தருவதென்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

தவறுகள் நடக்காமல் இருக்க புதிய முடிவுகள்
ஆற்று மணல் எடுப்பதில் ஆங்காங்கே நடைபெறும் தவறுகளை அதிகாரிகள் போதுமான அளவு சரியாகக் கண்காணித்துத் தடுக்க முடியாத நிலையில், இந்தத் தவறுகள் நடக்காமல் இருக்கப் புதிய முறைகள் தேவை என்று சில தோழமைக் கட்சிகள் உள்பட முன்பு கருத்துகளைக் கூறியதால், டெண்டர்மூலம் ஏலம் விடப்பட்டு நடத்தலாம் என்ற ஒரு யோசனையை (Proposal) தமிழக அரசு எடுத்து வைத்தது.இதை ஒரு முடிந்த முடிவாக அறிவிக்கவில்லை; மற்றவர்கள் கருத்துகளை அறியும் நிலையில்தான் தமிழக முதல்வர் - அரசு இருந்தது.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கை
இந்த ஏலமுறை - டெண்டர் விடுவது கூடாது. அரசே நடத்த வேண்டும் என்று தோழமைக் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் கருத்துகளைக் கூறிய நிலையில், அதுபற்றி அவர்தம் பல்வேறு கருத்துகளையும் கேட்டு பரிசீலித்து முடிவு எடுக்க, முதல்வர் அவர்கள் ஒரு கணம் கூடத் தாமதியாமல், சட்டமன்றக் கட்சித் தலை வர்களின் கூட்டத்தைக் கூட்டி இதுபற்றி அரசு முடிவு செய்யும் என்று கூறி, மக்களாட்சியின் மாண்பும் இதுதான் என்பதை நிரூபித்தார்கள்.

அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஜனநாயகக் கடமை என்ன?
மாறுபட்ட கருத்துக் கூறி, விமர்சனம் செய்த முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய மூன்று கட்சிகளும் அரசு கூட்டும் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம் என்று கூறி, புறக் கணித்து அறிக்கை விட்டது - வாடிக்கையான - வேடிக்கை அரசியல் ஆகும்!அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு இவர்களின் கருத் துகளைச் சொல்லி இருக்க வேண்டாமா?

காங்கிரஸ், பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புரட்சி பாரதம் போன்ற கட்சித் தலைவர்கள் கருத்துகளை எடுத்து வைத்ததுபோல், இவர்களும் தங்களது ஜனநாயகக் கடமையை - பொறுப்பினை ஆற்றியிருக்கவேண்டும்; அதில் தவறிவிட்டனர்.அதன் பிறகு, முடிவுகள் அறிவித்தவுடனேயே, கூட்டத்தில் கலந்துகொள்ளாத இவர்கள், எங்களுக்கு வெற்றி; முதலமைச்சர் பல்டி அடித்துவிட்டார் என்றெல்லாம் அறிக்கை விடுகின்றனர்!

திறந்த மனதோடு பிரச்சினைகளை அணுகுவது குற்றமா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சியின் முதல்வர் - மற்ற கட்சித் தலைவர்களின் கருத்தை ஏற்று, திறந்த மனதோடு இருந்து முடிவு மேற்கொள்வதைவிட சிறப்பான ஜனநாயக நெறிமுறை வேறு உண்டா?

எதிர்க்கட்சிகள் இப்படி வெற்றி, வெற்றி எங்களுக்கு வெற்றி என்று கூறுவதை நியாயப்படுத்த முடியாவிட்டாலும்கூட, இது போன்ற சந்தர்ப்பங்களில் புரிந்துகொள்ள முடியும்!அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்றத்தின் நிதிநிலை அறிக்கை மானியக் கோரிக்கைகள், விவாதங்கள் நடைபெறும் போதுகூடக் கலந்துகொண்டு, தங்களது விமர்சனங்களை எடுத்துக் கூறவேண்டிய அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டார்.

இப்போது முதல்வர் கலைஞர் ராஜினாமா செய்யவேண்டும் என்று கூறி, ஏதேதோ சம்பந்தா சம்பந்தம் இல்லாத காரணங்களை மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதைப்போல் போட்டு அறிக்கை ஒன்றை வெளி யிட்டிருக்கிறார்!

முடிவை மாற்றிக் கொண்டால் ராஜினாமா செய்யவேண்டுமா?
முடிவை மாற்றிக் கொண்டால், அதற்காக இனி அவர் (மேலும் மூன்றாண்டுகள் இருக்கவேண்டிய) நீடிக்காமல் ஆட்சியிலிருந்து ராஜினாமா செய்துவிட வேண்டுமாம்!கலைஞர் ராஜினாமா செய்யவேண்டும் என்ற இந்தக் கீறல் விழுந்த கிராமபோன் தட்டுகளின் குரலை கலைஞர் பதவியேற்ற அடுத்த நாள் முதலே ஜெயலலிதா பாடி வருகிறார்!

இவரது நாளுக்கொரு போராட்டம்பற்றி மக்கள் எப்படி அலட்சியப் படுத்தி வருகிறார்களோ, அதுபோலவேதான் இதையும் லட்சியம் செய்யப்போவதில்லை என்பது அகிலம் அறிந்த ஒன்று!

ஊடகங்களின் போக்கு
ஊடகங்கள் எல்லாம் அவாள் கையில் பெரிதும் உள்ளதால், அவர்களது அறிக்கைகளுக்கு மிகப்பெரிய விளம்பரங்களைத் தருகிறார்கள்.கலைஞரின் ஆட்சி சூத்திர - பஞ்சம மக்களுக்கான ஆட்சி அல்லவா?

அவர்தம் நலனுக்கு அன்றாடம் உழைக்கும் மனுதர்ம அழிப்பு ஆட்சி அல்லவா? எனவே கலைஞர் ஆட்சிக்கு எதிராக துரும்பு கிடைத்தாலும் தூணாக ஆக்கிக் காட்டி மகிழ்கிறார்கள்!மணல் குவாரிபற்றி ஏல டெண்டர் விடுவதை முடிந்த முடிவாக்கி ஆணைகள் ஏதும் போட்டதா அரசு?

இல்லையே! ஒரு யோசனையாகத்தானே முன் வைக்கப்பட்டது. அதனை மாற்றிக் கொண்டால் கூட அதில் தவறு என்ன? வெற்றி - தோல்வி எங்கே?

எத்தனை முறை ஜெயலலிதாராஜினாமா செய்திருக்க வேண்டும்?
2004-இல் நாடாளுமன்றத் தேர்தலுக்குமுன் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, என்னென்ன சட்டங்களைப் போட்டார்!

எப்படியெப்படி எல்லாம் அரசு ஊழியர்கள் உள்பட நடத்தினார்?

மக்களவைத் தேர்தலில் 40 இடங்களிலும் பா.ஜ.க.வுடன் கூட்டுச் சேர்ந்து தோல்வி கண்ட பிறகு - சட்டமன்றத் தேர்தலை மனதிற் கொண்டு எவ்வளவு தலைகீழ் மாற்றம் செய்தார்? நாளுக்கொரு மாற்றங்களை அறிவித்தாரே!

அதற்காக அவர் எத்தனை முறை ராஜினாமா செய்திருக்க வேண்டும்?

ஒரு அரசு முடிவை மாற்றியதால், முதலமைச்சர் பதவி விலகவேண்டும் என்ற தத்துவத்தை அவர் கடைப்பிடித்தாரா?

பகற்கனவு காணுகிறார் - பலிக்காது ஒருபோதும்! கடல் வற்றி, கருவாடு தின்ன, குடல் வற்றக் காத்துக் கொண்டிருந்த கொக்கு கதைதான் அது!
சென்னை27.5.2008. viduthalai.com
------------------------------------------

போச்சே! போச்சே!' என்று புலம்பித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

புலம்பலுக்குக் காரணம், நடந்து முடிந்த கர்நாடகத் தேர்தல். அங்கே தனியாக ஏழு தொகுதிகளில் நின்று, ஏழிலும் டெபாசிட்டை இழந்து விட்டது அ.தி.மு.க..

``அப்போதே பி.ஜே.பி.க்காரர்கள் ஐந்து சீட் தருவதாகச் சொன்னார்கள்.

அதற்கு தலையாட்டி கூட்டணி சேர்ந்து போட்டியிட்டிருந்தால், கர்நாடகத்தில் அ.தி.மு.க.வுக்கு இன்று அமைச்சர் பதவி மட்டுமல்ல,துணை முதல்வர் பதவி கூட கிடைத்திருக்கும். போச்சே போச்சே'' என்று புலம்புகிறார்கள் அவர்கள்.

இதுபற்றி அ.தி.மு.க. புள்ளி ஒருவரைப் பிடித்து வாயைக் கிளறினோம். ``இதற்கெல்லாம் காரணம் `அம்மா'தான்!'' என்று ஆரம்பித்தார் அவர்.

"கர்நாடகாவில் ஒகேனக்கல் பிரச்னையை எடியூரப்பா கிளப்பும் வரை, அங்குள்ள பி.ஜே.பி.யுடன் அ.தி.மு.க. நன்றாகத்தான் நட்பு பாராட்டி வந்தது. தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பி.ஜே.பி.யுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு கணிசமான சீட்டுக்களைப் பிடிக்கவும் அ.தி.மு.க. வசம் யோசனை இருந்தது. அதற்கு ஒத்துழைக்க பி.ஜே.பி.யினரும் தயாராக இருந்தனர்.

கோலார் தங்கவயல், சிவாஜி நகர் ஆகிய தொகுதிகளைத் தருவதாக பி.ஜே.பி.யினர் வெளிப்படையாகவே சொன்னார்கள். அந்தவகையில், பி.ஜே.பி. தலைவர்கள் கார்டனில் உள்ள முக்கியப் பிரமுகர்களுடன் தொலைபேசியில் பேசியும் இருக்கிறார்கள். ஆனால் அம்மாவோ, `ஏழு சீட்டுக்குக் குறைவாகத் தந்தால் கூட்டணி வேண்டாம். அ.தி.மு.க. தனித்தே போட்டியிடும்' என்று தடாலடியாகச் சொல்லி விட்டாராம்.

கடைசியில் இருதரப்பு கட்சி நிர்வாகிகளும் கலந்து பேசியிருக்கிறார்கள். இறுதியில் ஐந்து தொகுதிகள் வரை அ.தி.மு.க.விற்கு விட்டுத்தர பி.ஜே.பி. முன்வந்திருக்கிறது. அதையும் அம்மா ஏற்கவில்லை. அதற்குள் ஒகேனக்கல் பிரச்னையை எடியூரப்பா கிளப்பிவிட, கூட்டணிப் பேச்சு அப்படியே `கோவிந்தா'வாகி விட்டது.

அ.தி.மு.க. ஏழு இடங்களில் தனித்துப் போட்டியிட்டு இப்போது அனைத்திலும் டெபாசிட்டை இழந்திருக்கிறது. இதில் கொடுமையான விஷயம் என்ன தெரியுமா? அ.தி.மு.க.விற்கு விட்டுக்கொடுப்பதாக பி.ஜே.பி. சொன்ன ஐந்து தொகுதிகளிலும், பி.ஜே.பி. தனித்தே போட்டியிட்டு வென்றிருப்பதுதான். இது நமக்குத் தேவைதானா?

பி.ஜே.பி. ஆட்சியமைக்க வெறும் மூன்று சீட்டுகள்தான் தேவைப்பட்டது. அந்தக் கட்சி தருவதாகச் சொன்ன ஐந்து தொகுதிகளில் அவர்களுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு ஜெயித்திருந்தால், இன்று கர்நாடகத்தில் அ.தி.மு.க.வின் கொடி பறந்திருக்கும். எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையில் கூட அ.தி.மு.க. இடம் பெற்றிருக்கலாம். யார் கண்டது?

அம்மாவுக்கு பி.ஜே.பி. தேசியத் தலைவர்களிடம் உள்ள செல்வாக்கை வைத்து ஒருவேளை அ.தி.மு.க.வுக்கு துணை முதல்வர் பதவி கூட வாங்கியிருக்கலாம். எல்லாமே அம்மா எடுத்த தவறான முடிவால் வந்த வினை!'' என்று அலுத்துக் கொண்டவர், கர்நாடகா விஷயத்தை விட்டுவிட்டு ஜெயலலிதா கோடநாட்டில் தங்கியிருப்பது பற்றியும் ஒரு பாட்டம் புலம்பித் தீர்த்தார்.

"அம்மா கோடநாட்டில் குடியேறி இன்றைக்கு வெற்றிகரமாக நாற்பத்தைந்து நாட்களாகி விட்டன. அவர் எப்போது சென்னைக்குத் திரும்புவார்?

சென்னை திரும்புவாரா? அல்லது கோடநாட்டிலேயே தங்கி விடுவாரா என்பதும் தெரியவில்லை. ஏனென்றால், இப்போது கோடநாட்டிலேயே கட்சியின் முக்கியஸ்தர்களை அம்மா பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

அம்மாவின் இரண்டு பி.ஏ.க்களும் அங்கேதான் தங்கியிருக்கிறார்கள். போயஸ் கார்டனுக்கு இப்போது கட்சிக்காரர்கள் போனால், ஏன் என்று கேட்கக்கூட ஆளில்லை. கார்டனில் இரண்டு வாட்ச்மேன்களும், ஒப்புக்கு சப்பாணியாய் ஒரு பி.ஏ.வும் இருக்கிறார்கள். அவர்கள் அங்கே வரும் கடிதங்களைக்கூட வாங்கி ஒழுங்காக அம்மா பார்வைக்கு அனுப்புகிறார்களா என்பது தெரியவில்லை.

பொதுவாக கட்சிக்காரர்கள் அவர்களது குடும்பத்தில் காதுகுத்து, கல்யாணம், வீடு கிரகப்பிரவேசம் என்றால் `அம்மாவின் ஆசியுடன்' என்று அழைப்பிதழில் அச்சடித்து, கார்டனுக்கு அழைப்பிதழைக் கொண்டுபோய் அம்மாவிடம் கொடுத்து வாழ்த்துகளைப் பெற முயற்சிப்பது வழக்கம்.

அங்குள்ள பி.ஏ.வும் அதை வாங்கி, சரியாக விசேஷ நாளின் போது கிடைக்கிற மாதிரி அம்மாவின் அச்சிடப்பட்ட கையொப்பத்துடன் சம்பந்தப்பட்ட கட்சிக்காரருக்கு தபாலில் வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைப்பார். அதைப் பார்த்து கட்சிக்காரர்கள் அகமகிழ்ந்து போவார்கள்.

ஆனால், கடந்த நாற்பத்தைந்து நாட்களாக கோடநாட்டில் இப்படிக் கொடுக்கப்படும் ஆயிரக்கணக்கான அழைப்பிதழ்களுக்கு எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. அப்படி அழைப்பிதழ் கொடுத்த சாதாரண தொண்டர்களுக்கு மட்டுமல்ல, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்குக் கூட அம்மாவின் வாழ்த்து வரவில்லை. நான் கூட பதினைந்து நாள் முன்பு அம்மா எப்படியும் போயஸ் கார்டனுக்குத் திரும்பி விடுவார் என்று எண்ணி சென்னைக்குப் போய் ஒரு வாரம் தங்கியிருந்து ஏமாந்தேன்.

பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சியின்போது கோடைகாலத்தில் அரசு நிர்வாகத்தில் அத்தனை முக்கியமான கோப்புகளும் ஊட்டிக்கு வந்துவிடும். அதிகாரிகளும் ஊட்டியிலேயே தங்கி அலுவல்களைப் பார்ப்பார்கள். அதற்கென ஊட்டியில் ஒரு ராஜ்பவனமே இருந்தது.

இப்போதும் கூட ஜம்மு-காஷ்மீர் மாநில தலைமைச் செயலகம் மழைக்காலங்களில் ஷ்ரீநகரிலும், கோடைகாலத்தில் ஜம்முவிலும் இயங்குகிறது. பேசாமல் அதுபோல அம்மா தன் நிர்வாக வசதியை, கோடையில் கோடநாட்டிலும், மற்ற காலங்களில் கார்டனிலும் மாற்றிக்கொள்ளலாம்!'' என்றார் அவர், கொஞ்சம் நகைச்சுவை நிறைய வேதனையுடன். ஸீ கேயெஸ்வி. kumudam reporter

---------------------------------

பன்றி அய்யர்! சோவுக்குத்தான் ஏகடியம் பேச - எழுதத் தெரியுமா?

இனி பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டாம். நாம் செல்வான்களாக ஆகிறதைப் பாருங்கள்.

----------------------------------

அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: