Followers

Monday, June 2, 2008

"பிராமணர்கள் கொழுத்துத் தங்கள் பெண்டு பிள்ளைகளுடன் சுகமாக வாழவோ தரும சத்திரங்கட்டி அன்னதானஞ் செய்வது?"

ஆதிகாலமுதல் இந்நாள் வரையில் தென்னாட்டிலே சிறந்த தருமம் செய்து வருபவர்கள் திராவிடர்களே.
சிவாலயம் விஷ்ணுவாலயங்களைப் பிரதிஷ்டித்திருப்பவர்கள் திராவிடர்களே. அவ்வாலயங்கட்கு ஏராளமான மூல திரவியங்களும் பூமிகளும் வைத்திருப்பவர்கள் திராவிடர்களே.

அவ்வாலயங்களில் தேர், வாகனம், விமானம் முதலாயின செய்து வைப்பவர்கள் திராவிடர்களே. திருக்குளம் வெட்டி வைப்பவர்கள் திராவிடர்களே. நூற்றுக்கணக்காகச் சத்திரங்களை உண்டாக்கி யிருப்பவர் திராவிடர்களே.

இத்தருமங்களால் சுகமனுபவிப்பவர்கள் சாதி பிராமணரே.

திருமயிலாப்பூரில் திருக்குளத்துக் கருங்கல் படிக்கு எத்தனை பிராமணர்கள் உதவி செய் திருக்கிறார்கள் என்பதை விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம்.

அக்குளத்தின் சுகத்தை அனுபவிப்பவர்கள் பெரும்பாலும் பிராமணரே.

திராவிடர் கட்டி வைத்த ஆலயங்களில், வேதத்திலோ ஓர் எழுத்தும் தெரியாது 108 மந்திரங்களை மாத்திரம் கற்றுக் கொண்டிருக்கிற சாதிப் பிராமணர் பிரவேசித்தபின், அவ்வாலயத்திலுள்ள சாமி பிராமண சாமியாக வெண்ணிக் கொண்டு தாங்கள் என்ன குற்றம் செய்தாலும் தங்கள் சாமி கவனிக்க மாட்டாரெனக் கருதிக் கொண்டு, அவர்கள் செய்யும் அக்கிரமங்கட்குக் கணக்கேயில்லை.

தருமகர்த்தர் கொடுக்கும் நைவேத்திய அரிசியை மூட்டை கட்டி வைத்து விட்டுச் செங்கல்லினை அடுப்பிற் சுட்டுத் தாம்பாளத்தில் வைத்து ஈரத் துணியைப் போட்டு மூடிப்புகை கிளம்பும்படி சுவாமிக்கு நைவேத்தியஞ் செய்துவிடுவர்.

அத்தட்டில் என்ன திருப்பதெனப் பார்க்கத் தருமகர்த்தருக்கு முடியாது. பாக்கப்புகின், அந்தணர் நைவேத்தியம் தாங்கள் சாப்பிட யோக்கிய மில்லாமற் போய்விடுமென்பர்.

சோற்றுக்கடை, மிட்டாய் கடை, கட்டைக்கடை விற்கின்ற பிராமணனாகவிருந்தாலும், கற்பழிந்த பிராமணத்தியாக விருந்தாலும் அவர்களை அந்தரானம் வரையில் அழைப்பித்துப் பிரசாத முதலாயின முதலில் கொடுப்பர்,

ஒழுக்கத்திற் சிறந்த வேதவித்தாக விருந்தாலும் திராவிடராயின் அவர்களை வெகு தூரத்தில் நிற்க வைத்து அருமையுடன் தாட்சணயத்திற்கான மரியாதை செய்வார்.

நிற்க, திராவிடர்கள் தரும சத்திரங் கட்டித் தினந்தோறும் இத்தனை பிராமணர்க்குப் போஜனமென வேற்பாடு செய்திருக்கின்றனர்.

ஆரிய சாதிப் பிராமணர்கள் அச்சத்திரங்களில் புகுந்தது அடுத்த நாள் வரையில் பசியெடாதபடி கிருதருன பாயசத்துடன் விலா விம்மவுண்பர்,

பகல் முழுதும் சீட்டாடிக் களிப்பர். இரவில் தாசிலோலராய்த் திரிவர்.

திராவிடர் வீட்டுகளிற் சென்று தமது மனைவிக்குச் சீமந்தமென்றும், பிள்ளைக்குப் பூணூல் கலியாணமென்றும், காசி யாத்திரைப் போக வேண்டுமென்றும் பல பொய்ப் பேசிப் பணஞ் சம்பாதித்துத் தங்கள் கிராமங்களிற் சென்று நிலம் வாங்கி ஆஸ்தி சேர்த்துக் கொள்வர்.

இடையிடையே கருமாத்திரத் துறைகளில் அரிசி, பருப்பு, புளி பதார்த்தம் முதலாயின வாங்கி விற்றுப் பணஞ் சேகரிப்பர்.

திராவிடர் வீட்டுக்களிற் சென்று சுபாசுபங்களில் மடத் தொழில் செய்து பணம் சம்பாதித்து மூடிப்பர்.

அந்தோ! அந்தோ! இத்தகைய சாதி பிராமணர்கள் கொழுத்துத் தங்கள் பெண்டு பிள்ளைகளுடன் சுகமாக வாழவோ தருமசத்திரங்கட்டி அன்னதானஞ்செய்வது?

அநியாயம்! அநியாயம்! திராவிடர்களே! குருடர், செவிடர், மொண்டு, முடம், நோயாளி ஆகிய ஏழைகட்கு அன்னமிடப் படாதா? இங்ஙனம் செய்வதல்லலோ தருமம்,

இதனாலன்றோ புண்ணியமுண்டாகும்? கொத்தவாற்சாவடி மாடுகளைப் போலத் தெருத்தெருவாய்த் திரிந்து, எழுத்துவாசனையேயில்லாது, ஒழுக்கம் சிறிதும் பேணாது, மதோன்மத்தாராய், தெய்வமின்ன தென்றுந் தெரியாத சாதி பிராமணர்கட்கு அன்னங்கொட்டிக் கொழுக்க வைப்பதினால் ஏதாவது சிறிது புண்ணியமுண்டா?

புருஷார்த்தமுண்டா? இனியேனும் சாக்கிரதையாயிருங்கள். சென்னையில் ஒரு தருமசத்திரத்தில் ஒரு பிராமண பிள்ளை சாப்பிட்டுக் கொண்டும்,

திராவிடரிடத்துப் பிச்சையெடுத்துப் பள்ளிக்கூட சம்பளம் கொடுத்துக் கொண்டும் வந்து பி.ஏ., பரிட்சையில் தேறி 60 ரூபாய் சம்பளத்தில் உத்தியோகமர்ந்த பின்னரும் மேற்படி சத்திரத்திலேயே சாப்பிட்டு கொண்டு வந்தனன்.

அவன் சம்பளத்தைத் தனது தாய் தந்தையருக்கு அனுப்பி வைத்தனன். இங்ஙனம் திராவிடரை ஏமாற்றி ஜீவனம் செய்துவரும் சாதி பிராமணர்கள் அனேகர்.

இம்மோசம் பண்டைய நாள் தொட்டு வந்திருக்கிறதாகத் தெரிய வருகிறது. இது பற்றியே பல்லாயிரமாண்டுகட்கு முந்தியே திருமூலநாயனார்.

`அகரமாயிர மந்தணர்க்கீயிலென்சிகரமாயிரஞ் செய்து முடிக்கிலென்பகருஞானி பகலூண் பலத்துக்குநிகரிலை யென்பது நிச்சயந்தானே என்றனர்.

ஆகவே எந்த வகையிலும் சாதி பிராமணர்கட்கு உதவி செய்ய முன்னிடாதேயுங்கள்.

அங்ஙனம் செய்வதினால் பாவத்திற்கு உட்படுவீர்களே யொழிய வேறில்லை. ஏழைகட்கு அன்னமிடுங்கள், ஏழைகளைக் காப்பாற்றுங்கள்.

இதனால் அபார புண்ணியமுண்டாகும். திராவிடர்கள் சேகரித்து வைத்திருக்கும் திரவியங்களையெல்லாம் சாதி பிராமணர்களே கொள்ளையடித்தார்கள்.

கொள்ளையடிக்கிறார்கள், கொள்ளை யடிப்பார்கள்.

திருநெல்வேலி ஜில்லா திருக்குறுங்குடித் திராவிடர் தரும சத்திரத்தின் பணத்தைச் சாதி பிராமணர் கொள்ளை கொண்டு உயிரற்ற பாடை (Dead Language) உபயோகப்படுத்தி விட்டதாகத் தெரியவருகிறது.

அச்ஜில்லாவிலுள்ள திராவிடர்கள் ஒருங்கு கூடி இவ்வநியாயத்தை நமது காருண்ணிய இராஜா ங்கத்தாருக்குத் தெரிவிக்க வேண்டியது.

சில சாதி பிராமணர் தாட்சண்யத்திற்குட்பட்டு இப்போது சும்மாயிருந்து விட்டால் மேன்மேலும் இங்ஙனமே கொள்ளையடிப்பர், ஜாக்கிரதை! ஜாக்கிரதை!! `
திராவிடன் 20.6.1917 viduthalai.com

படிக்க அழுத்தவும் :-
தெரியுமா சேதி ! நெசந்தானுங்க...!! நறுக்குகள். !!!

அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: