Followers

Sunday, June 1, 2008

சென்னையின் விபரீத தொழில்-ஆண் விபச்சாரம். - `எவ்வளவு சம்பாதிப்பீர்கள் ஒரு இரவுக்கு?'

கிகோலோஸ்' தமிழ்நாட்டுக்கு புதிய வார்த்தை. இதன் கொச்சையான அர்த்தம் ஆண் விபச்சாரம்.

இலைமறைவு காயாக மிகப் பணக்காரப் பெண்களுக்கு மட்டும் தேவைப்பட்டுக் கொண்டிருந்த இந்த சமாச்சாரம் இப்போது சென்னையில் காலூன்றிவிட்டது.

பெண்ணுக்கு மசாஜ் செய்வதாக கூறிக்கொண்டு, தப்புக் காரியங்களில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். செக்ஸ் விஷயத்துக்கு ஆண்கள் கைது செய்யப்படுவது சென்னையில் இது முதல்முறை.

இந்த இரண்டு இளைஞர்களுமே படித்துப் பட்டம் பெற்றவர்கள். நாளிதழ்களில் `பெண்களுக்கு வீட்டுக்கு வந்து மசாஜ் செய்து தரப்படும்' என்று விளம்பரம் செய்ய வேண்டியது. அந்த விளம்பரத்தைப் பார்த்து அழைக்கும் பெண்ணிடம் `கிளுகிளு' மசாஜ் செய்து பணத்தை கறக்க வேண்டியது. இவர்களை அழைக்கும் பெண்களுக்கும் தெரியும், அது வெறும் ஆயில் மசாஜ் அல்ல, ஆயகலை மசாஜ் என்று.

பெங்களூர், மும்பை, டெல்லி போன்ற நகரங்களில்தான் இந்த கிகோலோக்கள் அதிகம் என்று முன்பு சொல்வார்கள். இப்போது சென்னையிலும் அதிகரித்துவிட்டதாக ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறுகிறார். இவர்களை பிடிப்பது அத்தனை லேசுப்பட்ட காரியமல்ல. ஏனென்றால், இந்த கிகோலோக்கள் இயங்குவது ரகசியமாக.

``இப்போது பிடிபட்டவர்கள் இருவரும் அதிகம் அனுபவமில்லாத கிகோலோக்கள். ஆனால் இவர்களை வைத்து பெரிய கிகோலோக்களைப் பிடிக்க முடியும்'' என்கிறார் அந்த மூத்த அதிகாரி.

முன்பெல்லாம் மிகப் பணக்காரப் பெண்கள் மட்டுமே இதுபோன்ற ஆண் விபச்சாரிகளை நாடிச் சென்றார்களாம். ஆனால், இப்போது நன்றாக சம்பாதிக்கும் பெண்கள்கூட இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்களாம்.

சமீபத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலை பண்ணை வீட்டில் ஒரு பார்ட்டி. கலந்துகொண்ட பெண்கள் அனைவரும் கார்ப்பரேட் கம்பெனிகளில் நல்ல சம்பளத்தில் இருப்பவர்கள். இந்த பார்ட்டியில் என்ன விசேஷம் தெரியுமா? ஆண்களின் காபரே நடனம்.

இதற்காகவே கட்டுமஸ்தான இரண்டு ஆண்களை இந்த பார்ட்டிக்கு வரவழைத்திருந்தார்கள். மது மயக்கத்தில், அதிரும் இசையின் உற்சாகத்தில் அந்த இரண்டு இளைஞர்களும் உடலை வளைத்து ஆடி ஒவ்வொரு ஆடையாக கழற்ற இந்த இளம் பெண்களுக்கு கிளுகிளுப்பு. அன்று இரவு முழுவதும் அந்த ஆண்கள்தான் அந்தப் பெண்களுக்குத் துணை.

இவையெல்லாம் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நடக்கிறது என்பது நம்பமுடியாத, அதிர்ச்சியான தகவல். இந்த நடன இளைஞர்களுக்கு ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை ஒரு இரவுக்குச் சம்பளம்.

மகேஷுக்கு இருபத்தாறு வயதாகிறது.கால் சென்டரில் வேலை பார்க்கிறான். அவன் மேல் அவனுடைய மேலதிகாரியாக இருந்த பெண்ணுக்கு ஒரு கண். வலையை விரித்தார். விழுந்தான் மகேஷ். புதுசுகம். புதுப்பணம். அந்தப் பெண் அதிகாரி மூலம் வேறு சில பெண்களிடம் தொடர்பு ஏற்பட, கால்சென்டர் வேலையை விட்டான்.

`கால்பாய்'யாக மாறி விட்டான். ஆனால் அதைப் பற்றி அவன் வருத்தப்படவில்லை. `ஈஸி மணி. ஈஸி கேர்ள்ஸ்' என்கிறான்.

செல்ஃபோன், இன்டர்நெட் இவைதான் பல கிகோலோக் களின் தொடர்பு சாதனங்கள். இண்டர்நெட்டில் பல கிகோலோக்கள் தங்களுக்கென்று வலைப்பக்கங்களை வைத்திருக்கிறார்கள். இவர்கள் யாரும் முன்பின் தெரியாத பெண்களை அணுகுவதில்லை.

ஒரு பெண் மூலம் இன்னொரு பெண் என்றுதான் இவர்களுக்கு படுக்கைத் தொடர்புகள் ஏற்படுகின்றன. ஐந்து நட்சத்திர ஓட்டல்கள், மெரீனா கடற்கரை, குறிப்பிட்ட சில பூங்காக்கள் போன்றவை இவர்கள் `தொழில்' உறவு ஏற்படுத்திக் கொள்ளும் இடங்கள்.

அண்ணாநகரில் ஒரு பணக்காரப் பெண்மணி. கணவருக்குப் பணம் தேடுவதே வாழ்க்கையின் லட்சியம். மனைவியை கவனிக்கவில்லை. அதனால் அந்தப் பணக்கார மனைவி மற்ற ஆண்களை கவனிக்கத் துவங்கிவிட்டாள்.

அவள் வலையில் விழுந்தால் படுக்கையும் பணமும் நிறைய கிடைக்கும். ஒருமுறை அவள் வலையில் வீழ்ந்துவிட்டால் பிறகு மீள்வது கடினம். அவளிடம் சிக்கும் இளைஞர்கள் அவளுக்கு மட்டுமல்லாமல் அவளது நெருங்கிய தோழிகளுக்கும்.

சென்னையில் பெரிய கட்டடங்கள் வைத்திருக்கும் ஒரு பெரிய செல்வந்தர், அவரால் மனைவியை திருப்தி செய்ய இயலவில்லை. அதனால் அவரே மனைவிக்கு கிகோலோக்களை அறிமுகம் செய்து வைத்தாராம். மனைவி கிகோலோக்களுடன் இன்பம் காண்பதில் இவருக்கு சுகமாம்.

கிகோலோக்களைப் பற்றி விசாரிக்கையில் இப்படி பலவிதமான கதைகள், அனுபவங்கள் வெளிவந்து நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. நாம் இருப்பது தமிழ்நாட்டில்தானா என்று யோசிக்க வைக்கின்றன.
இவை எங்கு போய் முடியுமோ? நினைத்தாலே பயமாக இருக்கிறது. - திருவேங்கிமலை சரவணன்

ஒரு பணக்கார `கிகோலோ'வின் கதை!
அந்த இளைஞனைப் பார்த்தால் யாரும் `அந்த'த் தொழில் செய்யும் இளைஞன் என்று சொல்லமாட்டார்கள். நடிகன், மாடல், ஒரு பணக்காரக் குடும்பத்தின் வாரிசு இப்படி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் ஒரு நாளுக்கு இருபத்தைந்தாயிரம் கட்டணம் வசூலிக்கிற உயர்தர ஆண் விபச்சாரி என்று யாராலும் சொல்ல இயலாது.

நுனி நாக்கு ஆங்கிலம், உயர்தர ஆடைகள், ஸ்டீரியோ அலறும் ஸ்விஃப்ட் கார் என வந்தவனிடம் ஒரு அலட்சியம் இருந்தது. பெயர் கைலாசம். ஐந்து நட்சத்திர ஓட்டல். காபி ஜாப்பில் அவனை சந்தித்தோம். ஐந்து நட்சத்திர ஓட்டலின் இயக்கம் அவனுக்கு அத்துப்படியாக இருக்கிறது.

``எப்படி இந்தத் தொழிலில்...?''
``நடிகனாக ஆசைப்பட்டேன். மாடலாக சில காலம் இருந்தேன். எதிலும் வாய்ப்பு சரியாகக் கிடைக்கவில்லை. ஒரு முறை பெங்களூர் போயிருந்தேன். அங்கே ஒரு தொழிலதிபரின் மனைவியின் அறிமுகம் கிடைத்தது. அப்போது எனக்கு இருபத்தோரு வயது. அவருக்கு முப்பத்தைந்து வயதுக்கு மேல். என் முதல் செக்ஸ் அனுபவம் அவருடன்தான். நிறைய பணம் கொடுத்தார்.

பிறகு, மாதத்துக்கு இரண்டு மூன்று தடவை பெங்களூருக்கு அழைப்பார். அவருடன் தங்கி விட்டு வருவேன். அதன் பிறகு அவருடைய தோழிகள் இருவர் என்னை விரும்பினார்கள். அதில் ஒருவர் சென்னையில் இருக்கிறார். இவர் மூலம் மேலும் சில பணக்காரப் பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. சுகத்துக்கு சுகம், பணத்துக்குப் பணம்'' கண்ணடித்துச் சிரிக்கிறார் கைலாசம்.

`உங்களுடைய கஸ்டமர்கள் எல்லோரும் பணக்காரப் பெண்கள்தானா?'
``ஆமாம். முதல் சில வருடங்கள் நான்கைந்து பெண்கள்தான் என் வாடிக்கையாளர்களாக இருந்தார்கள். ஆனால், அந்தப் பெண்கள் மூலம் எனக்கு இப்போது இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். எல்லோரும் நம்பிக்கையானவர்கள். ஒருவர் மூலம் ஒருவர் தொடர்பானவர்கள். எல்லோருமே திருமணமானவர்கள்.''

`அந்தப் பெண்களுக்கு உங்களிடம் அப்படி என்ன பிடித்திருக்கிறது?'
``என் ஸ்மார்ட்நெஸ் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. ஒருமுறை அலுவலக விஜயமாக ஒரு பெண் சென்னை வந்தார். இன்னொரு பெண் மூலமாக அவரை பார்க்கச் சென்றேன். ஒரே ஒரு இரவு மட்டும் அவர் சென்னையில் தங்க வேண்டிய வேலை அவருக்கு. அந்த இரவு அவருடன் இருந்தேன்.

அதன் பிறகு எனக்காகவே அவர் சென்னை வந்து போகிறார். அத்தனை சுகம்'' கண்ணடிக்கிறார்.
`எவ்வளவு சம்பாதிப்பீர்கள் ஒரு இரவுக்கு?'

``இருபதாயிரத்திலிருந்து இருபத்தைந்தாயிரம் வரை. ஆனால், மாதத்தில் பத்து நாட்கள் மட்டுமே என் தொழில்.அதற்கு மேல் ஏற்றுக் கொள்வதில்லை.''
THANKS TO : kumudam.com

7 comments:

G.Ragavan said...

எனக்கு ஒரு விஷயம் புரியலை! ரொம்ப காலமா பெண் விபச்சாரம்னு ஒன்னு இருக்குதே! அதுக்கு இந்த அளவுக்கு யாரும் அதிர்ச்சி அடைஞ்சாப்புல தெரியலையே! மனைவியிடம் திருப்தி இல்லாதவங்க அங்க போற மாதிரி கணவனிடம் திருப்தி இல்லாதவங்க இங்கன்னு வெச்சுக்கிற வேண்டியதுதானே. அப்படிக் கணவனால முடியலைன்னா அந்தப் பொண்ணு பத்தினியா சும்மாயிருக்கனுமா என்ன? தெரிஞ்சிக்கிறதுக்காகக் கேட்டேன்.

ஸ்ரீசரண் said...

ராகவன் கேட்டது சரியான கேள்வி

சுல்தான் said...

ஆண்களுக்காக பெண்கள் இருக்கும்போது பெண்களுக்காக ஆண்கள் இருப்பதில் தவறில்லை என்கிறீர்களா?
அல்லது இரண்டுமே தண்டிக்கப்படவும் கண்டித்து தடுக்கப்படவும் வேண்டியவை என்கிறீர்களா?
ஒன்னுமே புரியவில்லை ஜி.ராகவன் ஸ்ரீசரன் ஐயா மார்களே.

M Poovannan said...

டைம்ஸ் ஆப் இண்டியா வில் வெளிவந்ததை அழகு தமிழில் மொழியாக்கம் செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்

Joe said...

How do you folks type in Tamil?
Can some1 mail me abt it? Because I don't see a IME, which can be used to convert transliterated text in English to Tamil? (I have used Japanese IME to write in Japanese earlier!)

abt this post, I'm not really shocked as Gigolos have always been available in Chennai, for the past decade as far as I know.

I believe prostitution must be legalised as it has been in many other countries (I'm sure I'll be whipped by right wing folks for such a comment, "it is not suitable for our culture, blah blah blah")

சிந்திக்க உண்மைகள். said...

DEAR JOE,

LOG INTO THE FOLOWING SITE.
http://tamileditor.org/

ONCE THE SITE IS OPENED
ON THE MENU BAR
CLICK “FILE “ AND CLICK “ SAVE AS “

file name
தமிழ் எழுதி ‍ யுனிகோடு கொண்டு எழுதுவோம்

Save as type : Webpage, HMTL only(*htm:*html)

SAVE IT IN WHEREVER CONVENIENT FOR YOU.
----------------------
LATER YOU CLICK THE SAVED “LOGO”

YOU NEED NOT BE CONNECTED TO INTERNET.

TAMILWRITTER WILL OPEN.

On the Screen if a question appears on top as to allow blocked contents.
Allow it .

On the first few times it may appears not working well
Do not be disheartened and and try again and again,.


ON THE SCREEN YOU TYPE IN ENGLISH “AMMA “ IT WILL
APPEAR IN TAMIL “அம்மா”

After typing your matter on the screen copy and paste it wherever you want.

There might a question will be asked “ to allow access “ click yes.

REGARDS.

ஸ்ரீசரண் said...

கண்டிப்பதாலும் தண்டிப்பதாலும் ஒரு விசயத்தை முற்றிலும் ஒழித்துவிட முடியுமா என்ன?

ஆண் படி தாண்டினால் பெண்ணும் தாண்டட்டும்

விபச்சாரம் என்பது பெண்களின் இனத் தொழிலா என்ன

ஆண்களும் தான் அதை செய்யட்டுமே

என்னைப் பொருத்த வரை விபச்சாரம் என்பது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் அல்ல