Followers

Sunday, June 1, 2008

தெரியுமா சேதி ! நெசந்தானுங்க...!! நறுக்குகள். !!!

மாட்டுக்கும் அதே மாதிரியா?
காளை மாட்டுக்கும், பசு மாட்டுக்கும் கல்யாணம் பண்ணி வச்சா நல்லதுண்டு யாரோ சொல்ல, மக்கள்லாம் கூடி அப்படியே செஞ்சு வச்சிருக்காங்க. நம்ம அய்யர்வாளும் மணிய ஆட்டிண்டே வந்து பந்து மித்திரர் வாழ்த்த அமர்க்களா மந்திரம் ஓதி கல்யாணம் பண்ணி வச்சு, தனக்கானதை வாங்கிட்டும் கிளம்பிட்டார்.

ஆமா நேக்கு ஒரு டவுட்டு? ஏன் மாமா! மாட்டுக்கும் மந்திரம் ஓதி கல்யாணம் பண்ணி வச்சேளே!
அதென்ன மனுஷாளுக்கு சொல்ற அதே மந்திரம்தானா?

" சோம ப்ரதமோ விவித கந்தர்வோ"...ன்னு வருதே அதுக்கு முதலில் மணப்பெண்ணை சோமனுக்கு கல்யாணம் பண்ணி வச்சு, பிறகு கந்தர்வனுக்கு மனைவியாக்கி, அப்புறம் அக்னிக்கு ஆத்துக்காரியாக்கி, கடைசியா நானும் ஆண்டு அனுபவிச்சு, புத்திர பாக்கியத்தோட மானிடனாகிய உனக்குக் கல்யாணம் பண்ணி வக்கிறேன்னுதானே அர்த்தம்.

மாட்டுக்கும் அதே மாதிரி சோமன், கந்தர்வன், அக்னி, அப்புறம் நீங்க எல்லாம் செஞ்சு சினையாக்கித்தான் காளைக்கும் கட்டிக் கொடுத்தேளா? நீங்க கெட்டிக்காரர் போங்கோ...
பார்ப்பனர்கள் கூறும் திருமண மந்திரம்.

நான் அவளோடு உடலுறவு கொள்ளும் பொழுது ...............திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம்

அமெரிக்காவுல இருக்கிற சுதந்திரதேவி சிலையைப் பத்திச் சொன்னாரு ஒருத்தரு.

அமெரிக்க ஜனநாயகத்தோடு நூறாவது ஆண்டு விழாவுக்கு நான்கு நாடு அன்பளிப்பாக் கொடுத்ததுதானாம் அந்தச் சிலை. அது தலையில இருக்கிற கிரீடத்தில் 7 முனைகள் இருக்கு. அதென்ன 7 முனைனன்னு, கேட்டா 7 கண்டங்களையும், 7 கடல்களையும் அதோடு சுதந்திரத்தையும் குறிக்கிறதாம்.

ஆத்தாடி 7 கண்டத்துக்கும் சுதந்திரமா?
அது அமெரிக்கா கையில வந்தா ஈராக் பாணி சுதந்திர ஜனநாயகம் வரும். எலேய்... இதுக்கு நாங்க இப்படியே இருந்துருவமப்பா!
***

ஞாயிறுகுலத் தோன்றலின் சரிதம் ஞாயிறுதோறும் காலையில் அப்படின்னு அரை மணிக்கொரு முறை விளம்பரம் பண்றாங்க டி.வி.யில ஞாயிறுக்கு ஞாயிறு சரி!

இன்னொரு ஞாயிறும் இருக்கே... அதே அந்த டி.வி.யை தமிழ்ப்படுத்தி ஞாயிறு தொலைக்காட்சின்னு வைங்கன்னு எல்லாரும் கேட்டாங்களே அப்போல்லாம் ஒன்னும் தமிழ் பத்தி தோணலை.

இப்போ மட்டும் சூர்ய வம்சம்கிறதுக்கு ஞாயிறுகுலத் தோன்றல்னு வருதோ?

போகட்டும்... பெயர் மட்டும் தமிழில் இருந்து என்னத்த கிழிக்கப் போகுது அந்த "டி.வி."

ஆனா... காவிக்கூட்டம் ராமன் பாலம்னு சொல்லி எந்த ராமாயணத்தை வச்சு மதப் பிரச்சினையைத் தூண்டி தமிழர்களின் கனவான சேது சமுத்திரத் திட்டத்தைத் தடுக்க நினைக்குதோ - அதுக்கு கைக்கூலி வேலை பார்க்கிற மாதிரி இந்த நேரத்தில ராமாயணத்தைப் போடுறாங்களே!

கொஞ்சம்கூட மண்ணின் மனோபாவமோ, தமிழர்கள்மீது அக்கறையோ கிடையவே கிடையாதா?

இனியுமா நாம் இந்த அக்கிரகாரப் போக்குகளைப் பொறுத்துக்குவது... ஆடி அடங்கியதெல்லாம் பத்தாது போலிருக்கிறது... ஒட்டுமொத்தப் புறக்கணிப்புதானய்யா புத்தி தரும் அவங்களுக்கு!

நறுக்குகள்
குபேர பூமி?: அமெரிக்காவில் 11 பேர்களில் ஒருவருக்கு அரசின் உதவி தேவைப்படுகிறதாம். 2.8 கோடி மக்கள், உணவுக்காக அரசின் உதவியை நாடி நிற்கின்றனர்.

2006 முதல் உணவுப் பொருள்களும், எரிபொருள்களும் விலையேறிவிட்டன. வேலையில்லாத் திண்டாட்டமும் பெருகிவிட்டது.

அமெரிக்காவில் குறைந்த வருவாய் உள்ளவர்களுக்கு சலுகை விலையில் உணவு, மளிகைப் பொருள்கள் வாங்கிட ஏடிஎம் கார்டு வடிவில் புட்ஸ்டாம்ப் வழங்கப்படுகிறதாம்.

பத்தாண்டுகளுக்குமுன் இந்த நிலையில் இருந்தவர்கள் 30 விழுக்காடு; இப்பொழுது அதுவே 41 விழுக்காடாக உயர்ந்துவிட்டது.

குபேர பூமி என்று கருதப்பட்ட இந்த நாட்டுக்கே இந்த நிலை.எல்லாம் இக்கரைக்கு அக்கரைப் பச்சைதான் போலும்!
--------------------------------
தேசியம்!: ஒகேனக்கல் பிரச்சினையில் தமிழக பா.ஜ.க. கருநாடக மாநில பா.ஜ.க. தங்கள் தங்கள் மாநில நலனுக்காகப் போராடுவது தவிர்க்க முடியாதது என்று திருவாய் மலர்ந்துள்ளார் பிரபல வெங்கய்ய நாயுடுகாரு

இப்படிப் பேசுகிறவர் 22 காரட் தேசியவாதி என்பதை மறந்துவிடக் கூடாது. இந்தியாவில் மாநிலங்களே கூடாது - ஒரே இந்தியா என்ற கொள்கை உடைய கட்சியைச் சார்ந்தவர் எப்படி கூறுகிறார்?உண்மை எது? உரிமை எது?
என்பதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் அந்தந்த மாநில நலனுக்கென்று பொத்தாம் பொதுவில் பேசுவதுதான் அரசியலா?

இதில் தந்திரம் இருக்கிறதே தவிர, தார்மீகம் இல்லையே!

போதை: கனடா நாட்டைச் சேர்ந்த ஒரு இணையர் தாம் பெற்ற குழந்தையை விற்க ஆன்லைனில் ஒரு விளம்பரம் செய்திருந்தனர். குழந்தைக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ.4 லட்சம். அதிஷ்டம் உள்ள குழந்தை; மூக்கும், முழியுமாக இருக்கிறது என்றெல்லாம் வருணனை வேறு. காவல் துறை படை எடுத்தது; ஆசாமியைப் பிடித்து விசாரித்ததில், அவர்கள் மதுவின் அடிமைகளாம். போதை தலைக்கேறினால், குழந்தைகூட விற்பனைப் பொருள்தான் - எச்சரிக்கை!

நடை: நடைப் பயிற்சியைப்பற்றி ஏராளமான தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. நீரிழிவு நோயா? நடக்கவேண்டும். ரத்தக் கொதிப்பா? நடைதான் வைத்தியம். உடல் இளைக்க வேண்டுமா?

நடப்பதை நிறுத்தாதீர்கள். இப்பொழுது இன்னொன்று.நாள்தோறும் அரை மணிநேரம் நடந்தால், புற்றுநோயும் அண்டாதாம்! அதுதான் நடக்காதா?

இவ்வளவு நன்மைகள் இருக்கும்பொழுது நடக்கவேண்டியதுதானே!

வீண்: "ஒருவனுக்கு தன் வீடே சிறந்த வாசஸ்தலம். மலை, காடு என்று சுற்றித் திரியத் தேவையில்லை.

வீட்டிலே தெய்வத்தைக் காண திறமையில்லாதவன் மலைச் சிகரத்திற்கே சென்றாலும் கடவுளைக் காண முடியாது" இது பாரதி வாக்கு என்று "ஆன்மீகம் அறிவோமா?" பகுதியில் இன்றைய "தினமலர்" வெளியிட்டுள்ளது.

இதன் பொருள் - கோயில், குளம், மலை என்று தேடி அலைபவர்களால் கடவுளைக் காண முடியாது என்பது தானே...

அது ஒருபுறம் இருக்கட்டும். வீட்டிலேயே தெய்வத்தைக் காணலாம் என்று ஆகிவிட்ட பிறகு,
இந்தக் கோயில்களும், குளங்களும் வீண் குப்பைகள் (Wastage) என்ற பொருளும் இதற்குள் இருக்கிறதா, இல்லையா?

பாரதியைப் பாராட்டும் பக்தர்களின் கண்கள் திறக்குமா?

பிசினஸ்: காளையார்கோயிலில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று சுவர்ண காளீஸ்வரரைத் தரிசித்தால் ஆயிரம் கோயிலைத் தரிசித்த பலன் கிட்டுமாம் - தினமலர் ஆன்மீக மலர் சொல்லுகிறது.

அப்படியென்றால், மற்ற மற்ற சிவன் கோயில்கள் எல்லாம் மட்டமா?

ஒரு சிவன் கோயிலுக்கும், இன்னொரு சிவன் கோயிலுக்கும் சக்தியில் வித்தியாசம் உண்டா?

ஒரு கடவுளுக்கும், இன் னொரு கடவுளுக்கும் சக்தி வேறுபாடு என்று சொல்லி சண்டை போட்டுக் கொண்டவர்கள் உண்டு. இப்பொழுது ஒரு கடவுளுக்குள்ளேயே பிரச் சினையாகி விட்டது.

காளையார் கோயில் சிவன் என்றால், மற்ற ஊர் சிவனை விட ஆயிரம் மடங்கு சக்தி உடையவராக ஆகிவிடுகிறாராம்.

கோயில் என்றால் சிதம்பரம் நடராசர் கோயிலை மட்டுமே குறிக்கும் என்கிறார்களே அது என்னாயிற்றாம்?

தொழில் முறையில் ஒரு கோயிலைப் பிரபலப்படுத்தி, அதன் மூலம் மக்களை இழுக்க வும், சுரண்டவும்தானே இந்த ஏற்பாடு - பக்தி ஒரு பிசினஸ் என்பது விளங்கவில்லையா?

பு(ப)கை: இன்று - உலக புகையிலை எதிர்ப்பு நாள். புகை யிலை உபயோகிப்பதால் ஏற் படும் நோய்கள்பற்றி நாள் தோறும் செய்திகள் வந்த வண்ணமே உள்ளன. குறிப்பாக புற்று நோய் என்ற கொள்ளை நோய் மனித உயிர்களை அள்ளிச் செல்லுகிறது. பக்திப் போதைபோல இந்தப் போதைக்கு ஆளாகிறவர்களும் மீள்வதில்லை என்பது வெட்கக்கேடு.

பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.200 அபராதம் என்பது இனி ரூபாய் ஆயிரமாக மத்திய அரசு உயர்த்தக் கூடும் என்று டில்லி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் யோகானந்த் சாஸ்திரி கூறியுள்ளார். யாருக்காகவோ இந்த அபராதம் அல்ல - நமக்காகத்தான் - நம் நன்மைக்காகத்தான் என்று உணர்தல் நன்று.

பாடம்: பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த மாணவி சுவேதா தொலைக்காட்சி பக்கம் போகமாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

தேர்வில் சிறப்பான வெற்றியை ஈட்டுவதற்கு அறிவியல் கருவியான தொலைக் காட்சி தடையாக உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

மாணவர்கள் பெறும் பாடமும் இதில் இருக்கிறது. தொலைக்காட்சி நடத்து வோர் கற்க வேண்டிய பாடமும் இதில் அடங்கி இருக்கிறது.

தெரியுமா சேதி!
பெண் பார்க்கும் படலத்தில் மாப்பிள்ளையிடம் துணிவாகப் பேசும் இந்தியப் பெண்கள் 5 % மட்டுமே!

ஊட்டச் சத்து இன்மையால் உலகில் ஒவ்வொரு நாளும் 18 ஆயிரம் குழந்தைகள் மரணம்அடைகின்றனர்.
viduthalai.com

No comments: