Followers

Tuesday, June 10, 2008

சோழவந்தான் பார்ப்பன புளுகரின் பதில் என்ன? 550 கோடியைப் படைத்தது "பிரம்மம்" இல்லையா?

"நான் கடவுளைக் கண்டதில்லை; ஆனாலும் நல்லது கெட்டதுகளில் அதன் செய்கைகளை காண்கிறேன். பிறந்ததிலிருந்தே சுகபோகத்தில் திளைக்கும் சிலர்; ஒரு வேளை உணவுக்கே உழைத்துக் கஷ்டப்படும் பலர் என்கிற நிலை ஏன்? எப்படி இந்த ஏற்றத் தாழ்வு நிலை?

இந்துமதம் மட்டும்தான் இதற்கு விடை கூறுகிறது. இதற்குக் காரணம் கர்ம பலன்?

கீதையில் கிருஷ்ணன் இதைக் கூறுகிறான் கடவுள் ஒரு பட்டயக் கணக்காளர். ஒவ்வொரு மனிதனின் நல்லதையும் கெட்டதையும் சரிவரக் கணக்கு வைத்திருக்கிறது,

கடவுள். கர்ம பலனைத் தீர்க்காமல் இறந்து விட்டால் மீதியுள்ள அடுத்த ஜென்மத்திற்குக் கொண்டு போகப்பட்டு அங்கே அனுபவிக்க வேண்டும் மேற்கண்டவாறு உளறியிருப்பவர் சு.சாமி.

போணியாகாத கட்சி ஒன்றின் தலைவர் என்று கூறிக் கொள்ளும் இவர் அமெரிக்காவில் ஏதோ ஒரு பல்கலைக் கழகத்தில் `விசிட் அடிக்கும் பேராசிரியர் என்றும் கூறிக் கொள்கிறார்.

கடவுள் கணக்குப் பிள்ளை வேலை பார்ப்பதும், (கர்மாவை) வரவு - செலவு செய்து வருவதும் இவர் எப்படிக் கண்டார்? அல்லது உணர்ந்தார்?
வேண்டுதலுக்குப் பலன் கிடைக்குமாம்; வேண்டிக் கொள்ள கடவுளின் இருப்பிடத்துக்குப் போக வேண்டுமாம்; அவை கோயில்களும் ராமன் பாலமுமாம்! ஏனென்றால் இரண்டும் ஆகம சாத்திர முறைப்படி கட்டப்பட்டனவாம்!

இந்தப் புளுகைக் கண்டு எந்த உறுப்பால் சிரிப்பது எனத் தெரியவில்லை.

காசி விசுவநாதன் கோயில் மிகப் பிரசித்தி பெற்றது. மும்பை மகாலட்சுமி கோயில். சென்னை அஷ்டலட்சுமி கோயில். டில்லிலட்சுமி நாராயண் கோயில் போன்ற பலதும் எப்படிக் கட்டப்பட்டன? ஆகம விதிப்படியா?

ஆதாம்பாலம் (ராமன்பாலம்) சுண்ணாம்புக் கல் மண் சேர்ந்த மணல்மேடு. இயற்கையாக உருவானது. யாராலும் கட்டப்பட வில்லை. இப்படியிருக்க, இரண்டும் ஆகம விதிப்படி கட்டப்பட்ட வழிபாட்டு இடங்கள் என்றால் இந்தப் புளுகை என்ன என்பது? இந்தப் புளுகரை என்ன என்பது?

அரசியலில் அவிழ்த்து விடுவதை வாடிக்கையாகக் கொண்டவர், ``ஆன்மீகம் என்று கூறிக் கொண்டு அதையும் நாற அடிக்கிறாரே!

கர்மபலன், மறு ஜென்மம், பிதுர் ஜெனமம் என்ற புருடாக்கள் 550 கோடி மக்களிடம் இல்லையே! இதற்கு என்ன சொல்கிறார்?

கடவுள் கணக்குப் பிள்ளையிடம் 100 கோடிப் பேர்க்கு மட்டும் தான் `பேரேடு இருக்கிறதோ? மீதி மதத்தவர்க்குக் கிடையாதோ?

எல்லாவற்றையும் பிரம்மம்தான் படைத்தது எனும்போது 550 கோடிப் பேர்களை ஒதுக்கலாமோ?சோழவந்தான் பார்ப்பனரின் பதில் என்ன?
- சார்வாகன் . viduthalai.com
---------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: