Followers

Monday, June 30, 2008

கணினி வேண்டாம்! கணினியைப் புகுத்தாதே, வேலை வாய்ப்பைப் பறிக்காதே !! ??

1962ஆம் ஆண்டு வாக்கில் நான் விடுதலைக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்ற பொழுது ஒரு சம்பவம் நடைபெற்றது.

வங்கிகளில் அப்பொழுது கணினியைப் புகுத்தினார்கள். வங்கிப் பணிகள் விரைவாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகப் புகுத்தினார்கள். அப்பொழுது நம்முடைய பொதுவுடைமைத் தோழர்கள், முற்போக்குச் சிந்தனைவாதிகள் இவர்களெல்லாம் முதலில் கடுமையாக அதை எதிர்த்தார்கள்.

கணினியைப் புகுத்தாதே, வேலை வாய்ப்பைப் பறிக்காதே என்று சொல்லி எதிர்த்தார்கள். எப்படி காந்தியார் தொழிற் சாலைகளுக்கு எந்திரம் கூடாதென்றாரோ,

அதுபோலவே முற்போக்குச் சிந்தனையாளர்களும் கணினியைக் கடுமையாக எதிர்த்தார்கள். எங்கே பார்த்தாலும் வேலை நிறுத்தம். தந்தை பெரியார் என்னைக் கூப்பிட்டு எதற்காக வேலை நிறுத்தம் செய்கிறார்கள் என்று கேட்டார்.

கணினியைப் புகுத்துவதை எதிர்த்து என்று நான் பதில் சொன்னேன்.

என்ன இது பைத்தியக்காரத்தனம்? நாம் காட்டுமிராண்டிக் காலத்திலிருந்து நாகரிகமுள்ள ஒரு நாட்டைப் போல் முன்னேற விரும்புகிறோம். வெளி நாட்டைப் போல வளர விரும்புகிறோம். எனவே, கணினியை வரவேற்பதுதானே முறை. ஆகவே கணினியை ஆதரித்து எழுதும்படி அய்யா என்னிடம் சொன்னார்.

1962 இல் வெளியான விடுதலைத் தொகுப்பை பார்த்தீர்களேயானால், உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். அதில் நான் ஒரு தலையங்கம் எழுதினேன். கணினி பரவினால் வேலை வாய்ப்பு குறையாது. மாறாக வேலை வாய்ப்புகள் அதிக மாகும் என்று எழுதினேன்.

நான் எழுதியதை அன்றைக்கு ஏற்றுக் கொள்வதற்குக் கஷ்டமாகத்தான் இருந்திருக்கும்.

ஆனால், இன்று எங்கு பார்த்தாலும் கணினி அறிவுபற்றித்தான் பேச்சு. தெருவுக்குத் தெரு கணினி மையம், கணினிப் பயிற்சியகம் என்று வந்து விட்டது. இன்று யாராவது இவைகளை எதிர்த்துச் சொல்கிறார்களா?

மேலும் புதுப்புது வேலை வாய்ப்புகள்தான் அதில் வர வாய்ப்புள்ளது. இன்று கணினி அனைத்துத் துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
( திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் பெரியாரியல் நூல் 2 ஆம் பாகத்திலிருந்து... )தகவல்: இரா.கலைச்செல்வன், திருச்சி.
----------------------------------------

இந்த பதிவை கண்டுவிட்டு
ஒரு கும்மி பதிவு போட்டுக் கும்மியடிக்கிறது பார்ப்பனீயம்.
படியுங்கள்
நம்புவதற்கு கஷ்டமான செய்தி ஒன்றை படித்தேன்

http://dondu.blogspot.com/2008/06/blog-post_30.html

Saturday, June 28, 2008

சங்கராச்சாரியார்கள் மீதான வழக்கை விரைவுப்படுத்தக் கோரி சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் பங்கேற்கிறார்.

சென்னை, தமிழ்நாடெங்கும் நடைபெறும்.தோழர்கள் திரளாக பங்கு ஏற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சங்கராச்சாரியார்கள் மீதான வழக்கை விரைவுப்படுத்தக் கோரி சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் பங்கேற்கிறார்.

நாள்: 1.7.2008 செவ்வாய் காலை 11 மணி;
இடம்: மெமோரியல் ஹால், சென்னை
தலைமை: தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள்

முன்னிலை: அ. குணசீலன், இரா. வில்வநாதன்கழகப் பொருளாளர்: வழக்கறிஞர் கோ. சாமிதுரைபொதுச் செயலாளர்கள்: கலி. பூங்குன்றன், சு. அறிவுக்கரசு, துணைப் பொதுச் செயலாளர்: கு.வெ.கி. ஆசான் ஆகியோர் பங்கு ஏற்பார்கள்வடசென்னை, தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள் திரளாக பங்கு ஏற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பெ. செல்வராசு மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் வட சென்னை
செ.ரெ. பார்த்தசாரதிமாவட்ட திராவிடர்கழகச் செயலாளர் தென் சென்னை.


கொலைக் குற்றவாளிகளான சங்கராச்சாரியார்களின்வழக்குகளை விரைவுபடுத்திடக் கோரி திராவிடர் கழகத்தின் சார்பில்
தமிழ்நாடெங்கும் ஆர்ப்பாட்டம்.


காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகளான சங்கராச்சாரிகளின்மீதான வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்கக் கோரி திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடெங்கும் நடைபெறும்.

ஆர்ப்பாட்டத்தின் விவரம் வருமாறு:

கோபி: 1-7-2008 செவ்வாய் காலை 10 மணி, பேருந்து நிலையம் அருகில், கோபி, தலைமை: இரா. சீனிவாசன் (மாவட்ட தி.க. தலைவர்), முன்னிலை: ந. சிவலிங்கம் (மாவட்ட தி.க. செயலாளர்), விளக்கவுரை: புலவர் க.நா. கருப்பண்ணன் (மாவட்ட ப.க. தலைவர்), சிறப்புரை: கோ. ப. வெங்கிடு (சட்டமன்ற முன்னாள் உறுப்பினர், தி.மு.க., கோபி). -மாவட்ட திராவிடர் கழகம், கோபிநாகர்கோவில்: 1-7-2008 செவ்வாய் காலை 10 மணி; தலைமைத் தபால் நிலையம் முன்பு,

நாகர்கோவில், தலைமை: ப. சங்கரநாராயணன் (மாவட்ட தி.க. தலைவர்), முன்னிலை: மா. மணி (மாவட்ட தி.க. செயலாளர்), ஞா. பிரான்சிஸ் (மாவட்ட தி.க. அமைப்பாளர்), உ. சிவதாணு (மாவட்ட ப.க. தலைவர்), கோ. வெற்றிவேந்தன் (மாவட்ட தி.க. இளைஞரணி தலைவர்)-குமரி மாவட்ட திராவிடர் கழகம்

திருவண்ணாமலை: 1.7.2008 செவ்வாய் காலை 11 மணி, பெரியார் சிலை அருகில், வட்டாட்சியர் அலுவலகம் முன்பு; தலைமை: பி. பட்டாபிராமன் (மாவட்ட தி.க., தலைவர்); முன்னிலை: கோ. சுந்தர் (மாவட்ட தி.க., செயலாளர்); சி. மூர்த்தி (மாவட்ட தி.க., அமைப்பாளர்); ரா. திருமலை (மாவட்ட தி.க.இ. தலைவர். viduthalai.com

Friday, June 27, 2008

13, 8 எண்களை கண்டால் நடுக்கமா? சிரிப்பதா?, அழுவதா ?வாஜ்பேயின் மூட நம்பிக்கை.

கிறித்தவ மதமும் இந்த மூட நம்பிக்கைக்குத் துணை போகக் கூடியதாகும்.

பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல்பிகாரி வாஜ்பேயின் மூட நம்பிக்கைபற்றிய செய்தி ஒன்று அவரைப்பற்றிய மதிப்பீட்டை மிகவும் கீழிறங்கச் செய்து விட்டது.

முன்னாள் பிரதமரான அவருக்குக் குடியிருப்புக்கு டில்லியில் ஒரு வீடு ஒதுக்கப்பட்டு இருந்தது.

அந்த வீட்டின் இலக்கம் எட்டு. எட்டு என்பது ராசியில்லாத எண் என்பது முன்னாள் பிரதமர் வாஜ்பேயின் நம்பிக்கையாம். அதை மாற்றவேண்டும் என்று அவர் விரும்பினாராம். முன்னாள் பிரதமர் அல்லவா - கோப்புகள் மிகவேகமாகப் பறந்து பறந்து சென்றன.எட்டு என்பதற்குப் பதிலாக 6-ஏ என்று அந்த வீட்டின் இலக்கம் மாற்றப்பட்டு விட்டதாம்.

இதை நினைத்தால் சிரிப்பதா, அழுவதா என்றே தெரிய வில்லை. மெத்த படித்தவர் - உலகம் சுற்றியவர் - நாள்தோறும் நிகழ்த்தப்படும் அறிவியல் வித்தைகளை நேரில் கண்டும், ஏடுகளில் படித்தும் அறியக்கூடிய நிலையில் இருக்கக் கூடியவர். அவருக்கு இப்படி ஒரு பைத்தியக்காரத்தனமான மூட நம் பிக்கை இருக்கிறது என்றால், நம் நாட்டின் படிப்புக்கும், அறிவுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று யாராவது நம்ப முடியுமா?

ஒன்று, இரண்டு சொல்லும்போது எட்டு என்று எண்ணும் வருகிறது; அவ்வளவுதானே - அதற்குமேல் என்ன இருக்கிறது?

8 ஆம் எண் வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் நோய் வருமா? மற்ற வீட்டுக்காரர்களுக்கு நோயே வராதா? இந்த எட்டாம் எண் வீட்டுக்கு வருவதற்கு முன் அவருக்குச் சங்கடங்கள் ஏற்பட்டது இல்லையா?
அப்பொழுது ஏன் முழங்கால் வலிக்கு மும்பை சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார்?

எட்டாம் எண் வீட்டில் வசித்தவர்கள் மட்டும்தான் மரணத்தைத் தழுவினார்களா? மற்ற வீடுகளில் குடியிருந்தவர்களுக்கு சாவே நிகழவில்லையா?

இதில் மிகவும் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு என்னவென்றால், வீடு மாறவில்லை. அதே வீடுதான்; அந்த வீட்டின் எண்ணை மட்டும் மாற்றியிருக்கிறார்கள். எண்ணை மாற்றினால் அந்த வீடு மாறிவிடுமா?
தலைப்பாகையை மாற்றினால் தலைவலி போய்விடுமா?
குடிமக்களின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் என்ன சொல்லுகிறது? மக்களிடம் அறிவியல் மனப்பான்மையைத் தூண்டுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று கூறப்பட்டுள்ளதே!

அந்த அரசமைப்புச் சட்டத்துக்குச் சத்தியம் செய்து பதவி ஏற்றுக்கொண்டவர் குடிமகனின் அடிப் படைக் கடமைக்கு மாறாக மூட நம்பிக்கைச் சகதியில் புரளுகிறார்கள் அதுவும் முன்னாள் பிரதமர் ஒருவரே புரள்கிறார் என்றால், இதைவிட வெட்கக்கேடு வேறு ஒன்று இருக்கத்தான் முடியுமா?
எட்டு என்பதுபோல 13 என்ற எண் ராசியில்லாத எண் என்ற நம்பிக்கை உள்ளவர்கள்கூட இருக்கிறார்கள்.

குரோவர் என்ற நீதிபதி டில்லி உயர்நீதிமன்றத்தில் இருந்தார். அவரைக் குற்றவாளி ஒருவன் கத்தியால் குத்திவிட்டான். உடனே, நீதிபதியை டில்லி மருத்துவமனையில் சேர்த்தனர். நீதிபதி கண்விழித்துப் பார்த்தபோது அந்த அறை எண் 13 என்று இருந்தது. அவ்வளவுதான் பெருங்கூச்சல் போட்டார்.

இந்த 13 என்ற எண் எனக்கு இராசி இல்லாத எண்! நான் கத்தியால் குத்தப்பட்ட தேதி 13, நான் விசாரித்த அந்த வழக்கின் எண் 13 - எனவே, அது எனக்கு இராசியில்லாத எண் - உடனே என்னை இந்த அறையிலிருந்து மாற்றுங்கள் என்று குய்யோ முறையோ என்று சத்தம் போட்டார்.

நீதிபதியாயிற்றே - மதிப்புக் கொடுத்துத்தானே ஆகவேண்டும்; என்ன செய்தது மருத்துவ மனையின் நிருவாகம்? அந்த அறையில் இருந்த பழைய 13 என்ற எண் பலகையை எடுத்துவிட்டு, 12-ஏ என்று புதிய பல கையை மாட்டிவிட்டனர்; அப்பாடா என்று பெருமூச்சு விட்டார்.

நீதிபதிகளும், பிரதமர்களும்கூட மூட நம்பிக்கைவாதிகளாக இருந்தால், இந்த நாடு உருப்படுமா? வழிகாட்ட வேண்டிய வர்கள் வழிதவறிச் செல்லுகின்றனரே - அதுவும் வாஜ்பேயி போன்ற மூட நம்பிக்கைவாதிகள் ஒரு நாட்டை ஆண்டது எவ்வளவுப் பெரிய கெட்ட வாய்ப்பு!

இந்து மதத்தையும், மூட நம்பிக்கையையும் பிரிக்க முடியாதுதான். அது வாஜ்பேயியாக இருந்தாலும் சரி, அடுத்த பிரதமர் என்று அவர்கள் அறிவிக்கும் அத்வானியும் சரி எல்லாம் ஒரே குட்டையில் (மூட) ஊறிய மட்டைகள்தான். இவர்களை ஒதுக்கி வைப்பதில் மக்கள் கவனம் செலுத்தவேண்டும்; அப்பொழுதுதான் நாடு உருப்படும் - எச்சரிக்கை!

13, 8அய் கண்டால் நடுக்கமா?
மூட நம்பிக்கைகளில் எத்தனையோ வகை உண்டு. ஆற்று மணலை எண்ணினாலும் எண்ணலாம்; மூடநம்பிக்கைகளின் வகைகளை மட்டும் கணக்கிடவே முடியாது.

நேரம், காலம், நல்ல நாள், கெட்ட நாள், சகுனம், வாஸ்து, எண் ஜோதிடம், இராசிபலன் என்று ஒரு நீண்ட தூரம் மூடத்தனம் பயணித்துக் கொண்டேயிருக்கும்.

எல்லாம் கடவுள் படைப்பு என்றால், இந்த மூடத்தனங்கள் யார் படைப்பு?
அதற்கும் அவன்தான் காரணம் என்றால், அவனைவிட அயோக்கியன், பொறுப்-பில்லாதவன் வேறு ஒருவன் இருக்க முடியுமா?

சிலருக்கு 8 இராசி இல்லாத எண்ணாம்; இன்னும் சிலருக்கு 13 பீடை எண்ணாம். எட்டாம் எண்ணைப் பிடிக்காதவர்கள் 13 அய் ஏற்றுக் கொள்கிறார்கள்; 13 அய் பிடிக்காதவர்கள் எட்டை ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த நிலையில், எந்த எண் யாரைப் பாதிக்கும்?

எட்டும், பதிமூன்றும் கெட்ட சகுனங்கள் என்று யாரும் சேர்த்துச் சொல்லுவதில்லையே!

ஏதோ கண்மூடித்தனமாக எதையோ கிறுக்குத்தனமாக கோணங்கித்தனமாக, மது குடித்தவன் மதி மயங்கி உளறுவதுபோல இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதுதான் உண்மை.சரி, இங்கு மட்டும்தான் முட்டாள்கள் இருக்கிறார்களா? முட்டாள்கள் இந்தியாவுக்கு மட்டுமே தான் சொந்தம் என்று கூற முடியாதுதான்.

13 அய் கெட்ட நாள் என்று கருதக் கூடிய முட்டாள்கள் உலகம் எங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். விஞ்ஞான பூர்வமான நிரூபணம் இதற்கு உண்டா என்று கேள்வி கேட்டால், இது போன்ற பிரச்சினைகளில் எல்லாம் விஞ்ஞானம், பகுத்தறிவு என்ற அளவுகோல்கள் எல்லாம் கூடாது - நம்பிக்கை - அய்தீகம் என்று கூறி ஓட்டமாக ஓடிவிடுவார்கள்.

இலண்டனில் அரசி குடும்பத்தில்கூட இந்த 13 மூட நம்பிக்கை இருந்திருக்கிறது. பிரிட்டீஷ் அரசி இரண்டாம் எலிசபெத்தின் தங்கை இளவரசி 1930 ஆகஸ்ட் 21 இல் பிறந்தார்.ஆனால், பிறந்த அந்தக் குழந்தையை உடனடியாகப் பதிவு செய்யவில்லை. மூன்று நாள்கள் காத்திருந்தனராம். ஏன் தெரியுமா? பிறந்த நாளன்று பதிவு செய்திருந்தால், அந்தக் குழந்தை 13 ஆம் எண் வரிசையில் இடம்பெற நேரிட்டிருக்குமாம்.

அய்ரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகள் விஞ்ஞானத்தில் விண்ணை முட்ட வளர்ந்திருந்தாலும், அங்கும் படித்த மூடர்கள், தன்னம்பிக்கை இல்லாத கோழைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அடுக்குமாடிக் கட்டடங்களைக் கட்டும்போது 12 ஆவது மாடிக்குப் பிறகு 13 என்று குறிப்பிட மாட்டார்களாம். மாறாக 12-ஏ என்றோ 14 என்றேதான் குறிப்பிடுவார்களாம். அறைக்குக்கூட இந்த முறையைத்தான் கடைபிடிப்பார்களாம்.

1965 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அரசி எலிசபெத் ஜெர்மனி சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். ஒரு இடத்தில் இரயில் பயணத்தை மேற்கொள்ளவேண்டியிருந்தது; டூயிஸ்பெர்க் என்பது அந்த ரயில் நிலையத்தின் பெயர்.

ராணியார் பயணம் செய்யவேண்டிய அந்த இரயில் 13 ஆவது பிளாட்பாரத்திலிருந்து புறப்படத் தயாரானது! அவ்வளவுதான் பதிமூன்றா? அய்யோ வேண்டாம் என்று அலறினார்கள். இங்கிலாந்து நாட்டு அரசியாயிற்றே - என்ன செய்தார்கள்? அந்த இரயிலை வேறு பிளாட்பாரத்திலிருந்து புறப்படும்படிச் செய்தனர்.

கிறித்தவ மதமும் இந்த மூட நம்பிக்கைக்குத் துணை போகக் கூடியதாகும்.
12 சீடர்களுடன் 13 ஆவது நபராக ஏசு, இரவு உணவைச் சாப்பிட்டார். அப்போதுதான் அவர் காட்டிக் கொடுக்கப்பட்டார் - சிலுவையிலும் அறையப்பட்டார் - எனவே 13 என்பது மரண எண்ணாம்.

அப்படி என்றால், அவர் மீண்டும் எப்படி உயிர்த்தெழுந்தாராம்?

மத விவகாரங்களில் இதுபோன்ற அறிவார்ந்த வினாக்களுக்கு இடம் கிடையாதே!

மாவீரன் நெப்போலியனுக்குக்கூட 13 ஆம் எண் பயம் இருந்ததுண்டாம். குறிப்பிட்ட விஷயத்தில் வீரனாக இருப்பவன். இன்னொரு விஷயத்தில் கோழையாக, மூடனாக இருக்கக் கூடாதா என்ன?இந்த மூட நம்பிக்கை குளிர் ஜூரத்தை ஓட்டிய பகுத்தறிவுவாதிகளும் அமெரிக்காவில் இருந்திருக்கிறார்கள்.

1882 சனவரி 13 இல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 13 துணிவான பகுத்தறிவுவாதிகள் கூடினார்கள். 1882 சனவரி 13 இல் ஒரு சங்கத்தை நிறுவினார்கள். அதன் பெயரே 13 ஆவது சங்கம்(Thirteenth Club) என்பதாகும்.ஓர் உணவு விடுதியில் 13 ஆவது அறையில் 8.13 பணிக்குத் தொடக்க விழா நடத்தி 13 மணிக்கு (அதாவது 1 மணிக்கு) விழாவினை முடித்தனர்.சங்கத்தில் சேர நுழைவுக் கட்டம் 1.13 டாலர். ஆயுள் சந்தா 13 டாலர்.

ஒவ்வொரு மாதமும் 13 ஆம் தேதி 13 பேரும் கூடி விருந்துண்டு மகிழ்வார்கள். உறுப்பினர்களின் எண்ணிக்கை 1300 ஆக உயர்ந்தது. நாளடைவில் கிளைச் சங்கங்களும் உற்பத்தியாகின. இணையும் சங்கத்திடமிருந்து 13.13 டாலர் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. மூடத்தனத்தை இப்படி சவுக்குக் கொண்டு அடித்தனர்.

சென்னை மாநகராட்சிகூட வீடுகளுக்குக் கதவு இலக்கம் குறிப்பிடும்போது 13 அய் தவிர்ப்பது உண்டு.

அதற்கு விதிவிலக்காக திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் அடையாறு இல்லத்தின் பழைய எண் 13 என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயிக்கு டில்லியில் ஒதுக்கப்பட்ட இல்லத்தின் எண் எட்டாக இருந்தது. அவருக்கு எட்டாம் எண் இராசியில்லாத ஒன்றாம். அந்த எண்ணை மாற்றச் சொல்லி கோரிக்கை வைத்தாராம். உடனே 6-ஏ என்று மாற்றப்பட்டதாம். வீடு மாற்றப்படவில்லை; எண் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.

மனிதனிடம் இருக்கக் கூடிய விலை மதிக்க முடியாத பகுத்தறிவைப் பயன்படுத்த அஞ்சுவதும், தன்னம்பிக்கையைத் தூக்கி எறிவதும், மரணத்தைக் கண்டு மிரளுவதுமான குணங்கள் ஒருவரிடம் இருக்குமேயானால், அந்த மனிதன் எவ்வளவு படித்திருந்தாலும் பயனற்ற பட்டியலிலேயே வைக்கப்படவேண்டியவரே ஆவார்.

பக்தி வந்தால் புத்தி போகும் என்ற தந்தை பெரியாரின் பொன்மொழி ஒவ்வொரு ஊரின் நுழைவு வாயிலிலும் கல்வெட்டாகப் பொறித்து வைக்கவேண்டும். - கவிஞர் கலி.பூங்குன்றன் unmaionline.com
---------------------------------------------
ஜெபம் செய்தால் எல்லாம் வல்ல இயேசு ( கர்த்தர்) உயிர் தருவாரா?

Thursday, June 26, 2008

பார்ப்பனக் கொடுமை.பிராமண போஜனம். பார்ப்பனர்களும் - சீர்திருத்தமும்!

(பிராமணன்) தோஷமென்று மாமிசத்தைப் புசிக்காவிட்டால் அவன் இருபத்தொரு சென்மம் பசுவாய்ப் பிறப்பான்.

ஆயிரம் பல்லுள்ள பாடீசனமென்னும் மச்சமும், சிகப்பு மச்சமும், எக்கியத்திலும், சிரார்த்தத்திலும் விதிக்கப்பட்டிருக்கிறது.
கும்பலோடு சஞ்சரிக்கின்ற மீனும், சிங்கமுக மீனும், முள்ளுமீனும் மற்றக் காலங்களிலுங் கூடுமென்று சொல்லப் படுகிறது.

முள்ளம்பன்றி, சல்லியமிருகம், உடும்பு, காண்டா மிருகம், முயல் இவைகள் அய்ந்து நகங்களுடையவைகளாயிருந்த போதிலும் இவைகளையும், ஒரு பக்கம் பல்லுள்ள மிருகங்களில் ஒட்டகம் நீங்கலாக மற்றவைகளையும் புசிக்கலாம்.

புசிக்கும்படி சொல்லியிருக்கிற மிருகம், பட்சியிவைகளைப் பிராமணர் எக்கியத்திற்காகவும் அல்லது தம் மாதா, பிதா முதலிய போஷிக்க வேண்டியவர்களைக் காப்பாற்றுவதற்காகவும் கொல்லலாம்.

ஒரு பிராமணன் தன்னை மாமிசம் புசிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளும்போது விதிப்படி சிரார்த்தத்தில் வரிக்கப்பட்ட போதும் வேறே ஆதாரமில்லாமல் மாமிசம் புசிக்காவிட்டால் உயிர் போகும்படி நேரிட்ட சமயத்திலும் மந்திரத்தினால் கொல்லப்பட்ட மிருகாதிகள் மாமிசத்தைப் புசிக்கலாம்.

ஏனென்றால், பிரமன் இவ்வுலக முழுவதும் சீவனுக்கு ஆதாரமாக உண்டு பண்ணினார். ஆகையால் நெல் முதலிய தாவரமும், மிருக முதலிய சங்கமமும் சீவனுக்கு ஆதாரமாகவேயிருக்கின்றன.

பிராமணன் புசிக்கத்தகுந்த செந்துகளைத் தினந்தோறும் புசித்தபோதிலும் தோஷத்தையடைய மாட்டான். மாமிசம் கிரயத்திற்கு வாங்கினாலும், தானாகவே சம்பாதித்தாலும், ஒருவன் இஷ்டமாகக் கொடுத்தாலும் அவை தேவர்களுக்கும், பிதுர்களுக்கும் நைவேத்தியஞ்செய்து புசிக்கிறவன் தூஷிக்கப்படமாட்டான்.

சிரார்த்தத்தில் விதிப்படி வரிக்கப்பட்ட தூவி ஜனானவன் (பிராமணன்) தோஷமென்று மாமிசத்தைப் புசிக்காவிட்டால் அவன் இருபத்தொரு சென்மம் பசுவாய்ப் பிறப்பான்.

இங்ஙனம் சீவகாருண்யம் சிறிதுமில்லாது துர்நாற்றத்தை வீசும் மாமிசத்தைக் கொண்டிருந்த பூர்வ ஆரிய வமிசத்தில் வந்த இக்காலத்துச் சாதிவேதியர் தின்னாத தென்னை?

இவர்கள் இக்காலத்தில் தின்னாமலிருப்பரேல் தாங்கள் பெரியோரியற்றிய ஸ்மிருதியை உல்லங்கனம் செய்ததாக வல்லவோ முடியும். அவர்கள் கொள்கைக்கு மாறுபட்ட துரோகிகளாகாரா? என் செய்வர் பாவம்.
இவ்வாரியர் தென்தேயத்திலே குடியேறி ஜீவகாருண்ணியர்களாயிருந்த திராவிடர்களுடன் பழகி மாமிசத்தைத் தின்னும் தங்கள் ஆசாரம் அனாசாரமெனத் தெரிந்து வெட்கித் தின்னாது, விட்டனரென்பதற்குத் தடை யில்லை.

மிருகங்களைக் கொன்று தின்று வயிறு வளர்க்கும்படி எழுதி வைத்த ஸ்மிருதியைப் புத்திமான்கள் மதிப்பார்களா?

``நோன்பென்பது கொன்று தின்னாமை புலையுங் கொலையுங் கனவுந்தவிர் என்ற பூலோக சரஸ்வதியாகிய ஔவைப் பிராட்டியார் திருவாக்குகளுக்கு முன் இந்நூலு மொருநூலா? சிலந்தி நூலேயாம்.

தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தாண்பிறிதின்னுயிர் நீக்கும் வீணை,அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்றினுயிர்செகுத் துண்ணாமை நன்று கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பியெல்லா வுயிருந் தொழும்.தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிதூனுண்பானெங்ஙன மாளு மருள்.
இத்திருகுறள்களைப் படித்த திராவிடர்கள் சாதி பிராமணர்களின் ஸ்மிருதியின் முகத்தை நோக்கவும் எண்ணுவரோ?

தொடவுங் கை கூசாமலிருப்பரோ? அதுவுமொரு நீதி நூலாகுமோ?
அஃதோ ரநீதி நூலென்பதில் ஆட்சேபமுண்டோ? இத்தகைய ஸ்மிருதியை ஆதரவாகக் கொண்டு சாதி பிராமணர்கள் ஒழுகவும், இவர்களால் திராவிடர் சுபாசுபங்களில் காரிய நடத்துதல் அந்தோ! மிக அநியாயம். இவர்கள் திராவிடர் வீட்டுக்களினுழையாதபடி செய்தலே மிக வுத்தமோத்தமமாம்.
- யதீந்தீரர்``திராவிடன், 5.7.1917
viduthalai.com/20080622/news07

சாணி: விவசாயிகள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார் கள்? யாரும் கண்டுபிடிக்காத ஒரு அரிய உண்மையை ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சன் கண்டுபிடித்து விட்டார்.

மாடுகள் எண்ணிக்கை பெருகினால் சாணி போடும் - சாணி அதிகம் கிடைத்தால் உரம் அதிகம் கிடைக்கும் - உரம் அதிகம் கிடைத்தால் விவ சாயம் பெருகும். விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள்.

தூக்கில் தொங்கமாட்டார்கள். மாடுகளை அதிகம் கொல்லுவதால் அதிக சாணி கிடைக்கவில்லை; சாணி அதிகம் கிடைக்காததால் உரம் அதிகம் கிடைக்க வில்லை; உரம் அதிகம் கிடைக்காததால், விவசாயம் செழிக்கவில்லை - எனவே, விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இந்த அரிய கண்டுபிடிப்புக்காக இவருக்கு நோபல் பரிசு கொடுக்க சிபாரிசு செய்கிறோம்.

ஒரு சந்தேகம் - மாடுகள் கொல்லப்படக்கூடாது என்று இப்பொழுது திருவாய் மலர்ந்துள்ளாரே - மாடுகளில் பசு மாட்டைத்தானே கொல்லக் கூடாது என்று இதுவரை கூறி வந்தார்கள் - கோமாதாவைக் கொல்லலாமா என்று கூக்குரல் கொடுத்தார்கள். இப்பொழுது ஏன் சுருதி பேதம்?

சாணியைப் பற்றி கவலைப்பட்டால் நியாயமாக எருமை மாட்டுக்காகத் தானே இவர்கள் வக்காலத்து வாங்கவேண்டும்?

viduthalai.com/20080621/news01


தந்தை பெரியார் அறிவுரைஅஸ்திவாரம் கிடையாது
"பார்ப்பனர்களால் போற்றி வளர்க்கப்படும் இந்து மதம் என்று சொல்லப்படுகிற மதத்துக்கு அஸ்திவாரமே கிடையாது."("விடுதலை", 11.7.1954)
பார்ப்பனர்களும் - சீர்திருத்தமும்!அன்று பிராமணர் கல்வியிலும், ஒழுக்கத்திலும் உயர்வானவர்களே. ஆனால் சீர்திருத்தங்களை வெறுக்கிறவர்கள்.

இவர்கள் தங்கள் வரையில், தங்களது நடையுடை பாவனைகளைப் பிரத்தியேகமாக வகித்துக் கொண்டு மற்றவர்களை ஒதுக்கியாளும் கருத்துடையவர்கள். இத்தகையோர் தங்களருமையான வேதம், சாஸ்திரம் ஆகம முதலிய நூல்களை ஏனையோர் வாசிக்காவண்ணம் வற்புறுத்துவார்கள்.

இவ்வர்ணத்தவர்களுக்குள் மத பேதங்களும், ஆசார பேதங்களும் பலவுள. இவர்களில் சரியான ஒற்றுமையல்லாவிடினும், `பிராமணன் என்ற வாக்கியத்திற்கு மாத்திரம் கௌரவத்தைக் கொடுப்பார்கள்.

இதனால் அவ்வர்ணத்தார்கள் எல்லா விஷயங்களுக்கும் கட்டுப்பட்டு நடப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் சுதந்திரமாக ஆசாரச் சீர்திருத்தத்தைக் கைக்கொள்ளுதல் அருமையே.

இவர்களின் முன்னோர்கள் இத்தென்னிந்தியாவுக்கு வயிற்றுப் பிழைப்புக்காகக் குடியேறியபோது இத்தென்னிந்தியத் திராவிடர்கள் ஜாதி பேதங்களையும், மத பேதங்களையும் கைக்கொள்ளாமல் சுத்த மனமுள்ளவர்களாகவும் நிஷகபடிகளாகவும், பரிசுத்த ஆஸ்திரர்களாகவும், ஒற்றுமையுள்ளவர்களாகவும், அஷ்ட அய்ஸ்வர்யங்களைப் பெற்றவர்களாகவுமிருந்ததற்கிணங்கிய தமிழ் வேதமும், சாத்திரமுமிருப்பதை நன்கறியலாம்.

இவ்வாறு சிறந்தோங்கிய திராவிடர்களிடம் அடைக்கலமடைந்த ஆரியர் கள் நயவார்த்தைகளால் தங்களிடமிருந்த பெரிய மூட்டையை அவிழ்த்து, அதிலுற்ற ஸமஸ்கிருதபாஷா வேதத்தைச் சுட்டியும் அதை மறைத்தும், `பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என்னும் வர்ணங்களை ஏற்றக் குறைச்சலாய்ப் புகன்றதுமன்றியில் சண்மதங்களின் கூற்றுகளை விளக்கலாயினர்.

இவ்விளக்கமானது இத்தென்னிந்தியாவில் பரவ பல தேவாராதனையும், தாசிமார் கூத்துகளையும், பயன்படாச் சடங்குகளையும் இன்னும் பல மனக்கிளர்ச்சிகளைப் போதித்துத் தாங்கள் பிரம்மத்தின் முகத்தினின்று தோன்றிப் பிராமண தேவதையானதால் தங்களையே பூஜித்தும், ஆதரித்தும் வரும்படிக் கட்டாயப்படுத்தி விட்ட பிராமணச் சட்ட திட்டம் இன்றும் விடாது வருத்துகின்றது.

ஆயினும் திராவிடர் அப்போதைக்கப் போது தங்களது ஆசார ஒழுக்கங்களைச் சீர்படுத்திக் கொண்டு வந்தும், சில திராவிடர்கள் ஆரியர்களை விட்டகன்று பிரத்தியேகமாய் விட்டார்கள். அவர்கள் விஸ்வகர்மப் பிராமணரெனவும், சிவாசார வீரசைவர்களெனவும் இன்னும் சில வகுப்பினர்களு மாவர்கள். பிராமண வகுப்பினின்று பிறர் எவ்வித சீர்திருத்தத்தை உள்ளபடி கைக்கொள்ளக் காரணமேற்படவில்லை.

ஆனால், திராவிடச் சீர்திருத்தக்காரர்களிடமிருந்து நடை, யுடை, பாவனைகளை ஆரியர்கள் கற்றுக் கொண்டு நாகரிகமடைந்தேவருகிறார்கள்.

மேலும் ஆரியர்கள் பூர்வத்தில் திராவிட மாதர்களை மணம்புரிந்துள்ளவர்களாய், அம்மாதர்களினால் திராவிடர்களது சீர்திருத்தங்களை அனுஷ்டித்து வந்தார்கள் என்பதற்குச் சரியாக பூர்வ இருஷிகளாகவும், பிரமக்கியானிகளாகவுமிருந்த பராசர், வியாசர் முதலானவர்கள் கீழ்வகுப்பு ஸ்திரீகளையே சேர்ந்து வமிசாபிவிருத்தி செய்ததாக நூல்களினாலறிகிறோம்.

நிற்க, நமது தென்னாட்டரசர்களாகிய பாண்டியன், சோழன் முதலியவர்கள் காலத்தில் ஆரியர்களது கருத்துகள் பிரபலமடையவில்லை. மேலும் மகமதிய அரசாக்ஷியில் ஆரியர்களது வலிவுகுன்றியது. சிறந்த ஆங்கில அரசாக்ஷியில் அவரவர்க்குரிய வைதிக, இலவுகிக விஷயங்கள் அவரவர்களால் அனுஷ்டிக்கப்படலாமென்று சுதந்திரம் அளிக்கப்பட்டமையால் ஆரியர்கள் தங்களுடைய வர்ண பேதங்களையும், மத பேதங்களையும், ஆசாரப் பேதங்களையும் திராவிடர்க்குள் பரவ தந்திரோபாயங்களால் ஊர்ச்சிதப்படுத்தி விட்டார்கள்.

இவ்வேற்பாடுகள் ஒரு நூற்றாண்டாகத் திராவிடர்களை ஆண்டு வரத் துணிவு கொண்டன வென்பதைச் சரித்திரங்களால் ஆராய்ந்தறியலாம். இவ்வாறான ஆரியர்களது மதம், ஜாதி முதலியவற்றை தற்காலத்திய ஆரிய ஸமாஜத்தார்கள் முற்றும் மறுத்து வருவது பிரசித்தம்.

இம்மறுப்பு நூல்களை நாம் கவனித்தால் பிரஸ்தாபப் பிராமணர் ஜாதிகளும், மதங்களும், ஆசாரங்களும் தலைகீழாய்விடும். இச்சந்தர்ப்பத்தில் வர்ணாசிரம சங்கம் ஏற்படினும் நிலைப்பதெங்ஙனம்? ஒருக்காலும் நிலைக்காது. வீண் பிரயாசையே. இவையாவுமறிந்த சில ஆரியர்கள் இங்குத் திராவிடர்களது சகல சீர்திருத்தங்களைப் பெற்றுச் சம்பந்தமடைந்து வருகிறார்கள். இவ்வாறே ஆரியரை அபிமானித்துவரும் திராவிடர்களும் சீர்திருத்தமடையக் காலம் நேர்ந்தது.

இப்போது தோன்றிய `திராவிடன் ஆரியரை மறுக்க வேண்டுமென்னும் அபிப்பிராமயல்ல. ஆரியரது மனக்கோணல்களைச் சரிவரச் செய்ய வேண்டுமென்னும் உதாரத்துவமேயாம்.- திராவிட நேசன்திராவிடன் 20.6.1917பார்ப்பனக் கொடுமைமவுரிய சாம்ராச்சியத்தை முடிவிற்குக் கொண்டு வந்த ஆரிய புஷ்யமித்திரன் என்ன செய்தான்?

புத்தரின் கடவுள் இல்லை என்கின்ற கொள்கை ஒட்டிக் கொண்டிருந்த நெஞ்சங்களை எல்லாம் பிளந்தெறிந்தான்.

அகிம்சை வாதிகளான சமணர்களை எல்லாம் விரட்டி விரட்டிக் கொன்றான். தேடித் தேடி கழுத்தை வெட்டினான்.

ஒளிந்து கொண்டிருந்த சமணர்களை எல்லாம் உருவிய வாளால் உயிர் களைச் சூறையாடினான்.

சேனாதிபதிகளின் ஆரிய புஷ்யமித்திரனுடைய கொடுமையைக் கண்டித்து, மவுரிய அரசர்களின் ஆட்சியின் கீழ் வழிவழியாக வாழ்ந்து வந்த பொது மக்களில் யாரும் எந்த விதமான எதிர்ப்பையும் காட்ட வில்லை.
viduthalai./20080621/sunday_news05.

இமயமலையைக் கெடுக்கிறார்கள். பனி லிங்கம் என்பதே ஒரு புருடா.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மலைப் பகுதியில் அமர்நாத் குகையில் பனி லிங்கம் என்பார்கள். இதைப் பார்க்கப் பெருங்கூட்டமாக இந்துக்கள் போகிறார்கள். இதற்கான ஏற்பாட்டை மதச்சார்பற்ற இந்திய அரசு செய்து தருகிறது. இதற்கு வரும் இந்துக்களைக் கவனித்து அனுப்புவதற்காகத் தனியே ஒரு வாரியம் உள்ளது. சிறீ அமர்நாத் கோயில் வாரியம் (S.A.S.B.) எனப் பெயர். இதன் தலைவர் மாநில ஆளுநர், இப்போதிருப்பவர் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர்.

இந்தப் பனி லிங்கம் என்பதே ஒரு புருடா. சுண்ணாம்புக் கற்களில், குகைகளில், குளிர் காலத்தில் வடியும் நீர் பட்டு இப்படிப்பட்ட பலவகை உருவங்கள் உருவாகும்.

குகைகளின் மேலிருந்து கீழாகவும், தரையில் இருந்து மேல் நோக்கியும் உருவாகும். மேலிருந்து கீழாகக் கூர்முனை உள்ளவை Stalactite என்றும் கீழிருந்து மேலாக வளர்பவை ளுவயடயபஅவைந என்றும் கூறப்படுகின்றன. Iciclelike deposit mounting upwards from the floor of a cave as water containing lime dripping from above என்பதுதான் லிங்கம் எனப்படுகிறது.

அமர்நாத்தில் அறிவியல் அறிவு இல்லாத இந்துக்களை இதைக்காட்டி ஏமாற்றி வயிற்றைக் கழுவுகிறது ஓர் அயோக்கியக் கும்பல். அதற்குத் துணை போனவர் இந்த மாநில ஆளுநர். இது இமயமலையில் மட்டும் இல்லை. நியூசிலாந்தில் இருக்கிறது, கிரீஸில் இருக்கிறது. பல நாடுகளில் உள்ளது.
போன ஆண்டு லிங்கம் வளரவில்லை. என்ன செய்தார் தெரியுமா அந்த ஆர்.எஸ்.எஸ். ஆளுநர்?

குச்சி அய்ஸ் தயாரிப்பதைப் போல, அய்ஸ் கட்டிகளை அப்பி லிங்கத்தை மொத்தமாக்கினார். அதுவும் கூட கரைந்து போய், உள்ளே இந்த எத்தர்கள் உருவாக்கி வைத்த சிமென்ட் கட்டை வெளியே தெரிந்துவிட்டது. ஆக, சிமென்டில் கட்டப்பட்ட உருளைக் கட்டையின் மீது சுண்ணாம்பு நீர் கொட்டி, ஸ்டாலக்மைட் உருவாவதை இவர்கள் பனிலிங்கம் எனப் புளுகி மடமையை வளர்க்கின்றனர்.

போன ஆண்டின் அனுபவத்தை வைத்து இந்த ஆண்டு லிங்கத்தின் உயரத்திற்கும் மேலே இரும்புக் கம்பிக் கூண்டு அமைத்து வைத்துள்ளனர். பக்த கே()டிகள் தொட்டுத் தொட்டு, பனி கரைந்து போய்விட்டது சென்ற ஆண்டு! ஆகவே தடுப்பு வேலி!

அய்யப்பன் மகரவிளக்கு மோசடியை கேரள அரசு ஒத்துக்கொண்டது போல, என்றைக்கு இதைக் காசுமிர் அரசு ஒத்துக் கொள்ளப் போகிறதோ? அந்த நாள் விரைந்து வரட்டும்.

ஆளுநர் மாற்றப்பட்டு விட்டார் புதிய ஆளுநரும் நியமிக்கப்பட்டுவிட்டார். பழைய ஆள் இடத்தைக் காலி செய்யாமல் அழிச்சாட்டியம் செய்கிறார். மய்ய அரசும் மவுனமாக இருக்கிறது. என்னமோ நடக்குது! ஒண்ணுமே புரியலை!

இந்நிலையில் மாநில முதலமைச்சர் குலாம் நபி ஆசாத், பனிலிங்க வாரியத்திற்கு 100 ஏக்கர் நிலம் கொடுத்திருக்கிறார். அது தனியார் நிலமா? இல்லை, அரசு நிலமா? இல்லை. அது காட்டிலாகா நிலம்! அதைக் கொடுப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா? கிடையாது. பின் எப்படிக் கொடுத்தார்?

இந்திய வனச் சட்டத்தின்படி ஒரு ஏக்கர் வனத்துறை இடத்தை எதற்காவது அரசே எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டாலும் இருமடங்கு நிலம் (அதாவது இரண்டு ஏக்கர்) தந்தால்தான் தொடமுடியும். அந்தச் சட்டப்படி, 100 ஏக்கர் நிலத்தைப் பனிலிங்க வாரியத்திற்கு மாநில அரசு தந்தது என்றால், 200 ஏக்கர் அரசு நிலம் வனத்துறைக்குத் தந்திருக்க வேண்டும், தந்தார்களா?காட்டிலாகா நிலங்களையாருக்கும் தரக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவே போட்டிருக்கிறது. மீறி கொடுத்துள்ளனர்.

ராஜா தவறு செய்யமாட்டார்.‘King can do no wrong’ என்று ஒரு சொலவடை இங்கிலாந்தில் இருந்தது. தவறு செய்த ராஜாவைக் கொன்ற நிகழ்ச்சியும் அங்கேயே நடந்தது. ஜனநாயகத்தில் அரசு தவறு செய்தால் அய்ந்தாம் ஆண்டு வரும் வரை காத்திருக்க வேண்டும்.

சென்ற ஆண்டு லிங்கம் வளராமல் போனதற்கான காரணம், பக்தர்கள் கொட்டிய குப்பையும், கொளுத்திய விறகும் சுற்றுச்சூழலைப் பாழ்படுத்தியதால்தான் என்று அறிவியல் கூறியது. இந்நிலையில் அங்கு 100 ஏக்கரில் வீடுகளும் கட்டப்பட்டு, இந்துக்கள் குடியும் குடித்தனமுமாக இருந்தால் - சுற்றுச்சூழல் என்னாவது?

குலாம் நபி ஆஜாத்துக்குக் கவலையில்லை. யாரையோ திருப்திப்படுத்த இமயமலையையே கெடுக்கிறார்.மக்கள் எதிர்க்கிறார்கள், ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள், போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். மாநில அரசு கண்ணீர்ப்புகை வெடித்துத் தடியடி நடத்துகிறது.

போராட்டத்திற்கு மதச் சாயம் பூசி, பா.ஜ. கட்சி எதிர்ப் போராட்டம் என்கிறது.மொத்தத்தில் இமயமலைகெடுக்கப்பட்டுவிட்டது. viduthalai.com

பார்வதியின் “ அது " மட்டும் இற்றுக் கீழே விழுந்து அந்த "அது" மட்டுமே இங்கு வழிபடு கடவுள்.!!!

ராமனை செருப்பால் அடித்தவர்களுக்கா ஓட்டு? - பார்ப்பனர்கள் பிரச்சாரம்

Wednesday, June 25, 2008

ராமனை செருப்பால் அடித்தவர்களுக்கா ஓட்டு? - பார்ப்பனர்கள் பிரச்சாரம்

அதன் பிறகுதான் தி.மு.க. அமோக வெற்றி பெற்றது.
குற்றாலத்தில் பழைய வரலாற்றை விளக்கினார் தமிழர் தலைவர்.

குற்றாலும், ஜூன் 25- ராமனை செருப்பால் அடித்தவர்களுக்கா ஓட்டு? என்று பார்ப்பனர்களும், காங்கிரஸ்காரர்களும் தி.மு.க.வுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார்கள்.

ஆனால், தி.மு.க. அதற்குப் பிறகுதான் மாபெரும் வெற்றியைப் பெற்றது என்று குற்றாலத்தில் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.குற்றாலத்தில் 16-6-2008 அன்று மாணவர்களுக்கு நடத்திய பெரியாரியல் பயிற்சி வகுப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்
செருப்பொன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும் என்று கவிஞர் ஒருவர் பாடினார். இன்றைக்கு கடலூரில் அய்யா சிலை இருக்கிறது.சேலத்தில் அய்யா அவர்கள் ஊர்வல ரதத்தில் வந்துகொண்டிருக்கிறார்.

ஜனசங்கத்துக்காரர்கள் வீசிய செருப்பு அய்யா மீது படாமல் ஊர்வலத்தில் வந்தவர்கள்மீது விழுந்தது.ஊர்வலத்தில் வந்த தோழர் செருப்பை எடுத்தார்ஊர்வலத்தில் வந்த ஒரு தோழர் அந்தச் செருப்பை எடுத்தார். ராமன் பிறப்பு ஆபாச படம் ஓவியமாக வரைந்து ஊர்வலத்தில் எடுத்து வரப்படுகிறது. உடனே நம்மாள் சமயோசிதமாக என்ன செய்தார்?

இந்தப் பசங்களுக்கு அவனை அடித்தால்கூட கோபப்பட மாட்டான். அவன் கடவுள் என்று கும்பிடுகிறான் பாருங்கள் - இதுதான் சந்தர்ப்பம் என்று ராமன் படத்தை செருப்பால் அடித்தார் (கைதட்டல்).

ஏன்டா? எங்கள் தலைவர்மீதா செருப்பை எடுத்து வீசினீர்கள். உன் செருப்பை எடுத்து உன் கடவுள் மேலேயே அடிக்கிறேன் பார் என்று சொல்லி அடித்து விட்டுவிட்டார்.

உடனே சில பத்திரிகைகள் எழுதினஇது சாதாரணமாகப் போய்விட்டது. கொஞ்ச நேரம் பார்த்தார்கள், எல்லோரும் போய்விட்டார்கள். தேர்தலில் தி.மு.க.வை எதிர்ப்பதற்கு எதுவும் கிடைக்கவில்லை என்று நினைத்தான் பாருங்கள்.

ஒரு இரண்டு, மூன்று நாட்கள் கழித்துப் பத்திரிகைகாரன் எல்லாம் சேர்ந்து எழுதினார்கள். தினமணி, துக்ளக் போன்ற பத்திரிகைகள் எல்லாம் எழுதினார்கள்.

இதுதான் சந்தர்ப்பம் என்று பார்த்து ராமனை செருப்பால் அடித்தவர்களுக்கா ஓட்டு என்று கேட்டுவிட்டார்கள்.தி.மு.க.விற்கு இதில் சம்பந்தமே கிடையாதுதி.மு.க.வுக்கும், அதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

தி.மு.க. அமைச்சர்கள் யாரும் அந்த மாநாட்டிற்கு வரவில்லை.சேலத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை நடத்தியவர்கள் பூராவும் திராவிடர் கழகத்துக்காரர்கள். திராவிடர் கழகத் துக்காரன் தேர்தலிலே நிற்காதவன். இப்பொழுதும் தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக தப்புப் பிரச்சாரம் செய்வது சர்வ சாதாரணம். பொய்ப் பிரச்சாரம் செய்வது சர்வ சாதாரணம். ராமனை செருப்பால் அடித்தவர்களுக்கா ஓட்டு?

உடனே என்ன பத்திரிகையில் எழுதினார்கள் என்றால், ராமனை செருப்பால் அடித்தவர்களுக்கா ஓட்டு? என்று கேட்டார்கள். எங்கு பார்த்தாலும் பெரிய அளவுக்குப் பிரச்சாரம் செய்துவிட்டார்கள்.அப்பொழுது எப்படிப்பட்ட பிரச்சாரம் செய்தார்கள் என்றால், கணவன் - மனைவியாக இருப்பவர்களில் ஒருவருக்கு ஒருவர் பிடிக்கவில்லையென்றால், அவர் இன்னொருவரை விரும்பினால் அப்படி அவர் விரும்புவதற்கு உரிமை உண்டு. அவரையே கட்டிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் கிடையாது என்பதற்காக - பெண்ணுரிமைக்காக ஓர் அதிர்ச்சித் தீர்மானத்தைப் போட்டார் தந்தை பெரியார்.

கொக்கைப் பிடிக்க வெண்ணெய்யை வைத்த மாதிரி
இதைக் காட்டி எப்படிப் பிரச்சாரம் செய்தார்கள்? யாரை வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் இழுத்துச் செல்லலாம் என்று பெரியார் சொல்லிவிட்டார் என்று பிரச்சாரம் செய்தார்கள்.

இப்படி பிரச்சாரம் செய்தால் பெண்கள் மத்தியில் தி.மு.க.வுக்கு ஓட்டு வராது. பெரியார் தி.மு.க.வை ஆதரிக்கிறார் என்று இப்படி ஒரு பிரச்சாரம் செய்தார்கள்.

கொக்கைப் பிடிப்பதற்கு வெண்ணெய்யை வைத்த மாதிரி - இது மாதிரி எல்லாம் தப்புப் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்கள். 1971-இல் இதுமாதிரி எல்லாம் பிரச்சாரம் செய்தார்கள்.அப்பொழுது நாம் கேட்டோம், ராமனை செருப்பால் அடித் தார்கள் என்றால், ராமன் எந்தத் தொகுதியில் வேட்பாளராக நின்றான்? என்று கேட்டோம்.

வேட்பாளராக இருந்தால் சொல்லலாம். அது மாதிரி தி.மு.க.வுக்கும், இதற்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்டோம். ஆனால், அதை அப்பொழுது பெரிதாக ஊதினார்கள்.ராஜாஜிக்கு பிறவி எதிரியாக இருந்தவர் காமராசர்காமராசரே எந்த அளவுக்கு கீழே வந்து விட்டார் என்று சொன்னால், ராஜகோபாலாச்சாரியார் கடற்கரையில் கூட்டம் நடத்திய பொழுது ஒன்றை செய்தார். ராஜாஜிக்கு பிறவி எதிரியாக இருந்தவர் காமராசர்.

ராஜகோபாலாச்சாரியாரிடம் காமராசர் நெற்றியைக் காட்டியவுடனே அவருடைய நெற்றியில் ராஜ கோபாலாச்சாரியார் பொட்டு வைத்துவிட்டார். அதையெல்லாம் பத்திரிகைகளில் போட்டார்கள். நம்முடைய விடுதலையில்தான் எழுதினோம்.

காமராசர் அவர்களை நாம் அதிக அளவுக்கு ஆதரித்தாலும், காமராசர் - ராஜாஜி அவர்களுடன் சேர்ந்தார் என்றவுடனே அவரைக் கண்டிக்க நாம் தயங்கவில்லை.என்று தணியும் இந்த அடிமையின் மோகம்!விடுதலையில் ராஜாஜி அவர்கள் காமராசர் நெற்றியில் வைக்கின்ற பொட்டை படமாகப் போட்டு, என்று தணியும் இந்த அடிமையின் மோகம்! என்ற தலைப்பில் எழுதினோம்.

எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வந்த படத்தை எடுத்துப் போட்டோம். அய்யா அவர்கள் கூட வெளியூரில் இருந்து விடுதலையைப் பார்த்தார்.என்று தணியும் இந்த அடிமையின் மோகம்? - இது கேள்வி. இந்தத் தேதிக்குப் பிறகு அது தணியும். அதற்குப் பிறகு விடை கிடைக்கும். இது மக்கள் பதில் என்று எழுதினோம். எல்லா இடங்களிலும் நாம் பிரச்சாரம் செய்தோம். அதனுடைய விளைவு என்ன ஆயிற்று?

ராஜகோபாலாச்சாரியார் - ராமனை செருப்பால் அடித்தவர்களுக்கா ஓட்டு என்று சொன்னார்.துக்ளக் இதழில் படம்அடுத்து சோவினுடைய துக்ளக் இதழ் ஓர் அட்டைப் படத்தைப் போட்டது. ராமன் படத்தை செருப்பால் ஓங்கி அடிக் கிறார் - அதுமாதிரி ஒரு கார்ட்டூன்.

அய்யா அவர்களுக்குப் பக்கத்தில் கலைஞர் கழுத்தில் துண்டைப் போட்டுக் கொண்டு நிற்கின்றார்.பலே பலே நல்லா செய்யுங்கோ பலே, பலே நல்லா செய்யுங்கோ என்று உற்சாகப்படுத்துகிற மாதிரி துக்ளக் அட்டைப் படத்தில் இப்படி கார்ட்டூனாகப் போட்டார்கள். ராமனை செருப்பால் அடித்தவர்களுக்கா ஓட்டு? என்று கேள்வியைப் போட்டிருந்தார்கள்.

கடவுள் ராமன் பிரச்சினையில் தி.மு.க. கை வைத்ததால் நிச்சயம் தி.மு.க. தோற்றுப் போகும் என்று கருதினார்கள்.தேர்தல் நடத்துவதற்கு முதல்நாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக போஸ்டர் அடித்து எல்லா இடங்களிலும் ஒட்டினார்கள்.

ராமனை செருப்பால் அடித்தவர்களுக்கா ஓட்டு?ராமனை செருப்பால் அடித்தவர்களுக்கா ஓட்டு என்று போஸ்டர் மூலம் கேட்டார்கள். நாங்கள் கூட்டங்களில் கேட் டோம், ஏனய்யா ராமனுக்கும், செருப்புக்கும் என்ன சம்பந்தம்?

தி.மு.க.வுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்டோம். ஆனால், கடைசியில் எப்படி ஆனது? மீண்டும் பார்ப்பான் ஆட்சி ஏற்பட வேண்டுமா அல்லது தமிழர் ஆட்சி ஏற்பட வேண்டுமா என்று கேட்பதற்கு நமக்கு வசதியாகப் போய்விட்டது. இதுதான் இப்பொழுதுள்ள பிரச்சினை என்று நாம் பிரச்சாரம் செய்தோம். தி.மு.க.வே பயந்ததுதேர்தல் முடிந்தது. எல்லோரும் பயந்தார்கள்.

தி.மு.க. பயந்தது. போச்சு, போச்சு எங்களுக்கு கொஞ்சம் நஞ்சம் வருகின்ற ஓட்டையும் கெடுத்துவிட்டீர்கள். இந்த நேரத்திலேயா செருப்பால் அடிப்பது என்றெல்லாம் கேட்டார்கள்.நீங்கள் ஒன்றும் பயப்படாதீர்கள், நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் என்று சொன்னோம்.

மிகப் பெரிய அளவுக்கு நாம் பிரச்சாரங்களை எல்லாம் செய்து முடித்தோம். காங்கிரசார் நாற்காலியில் அமரத் தயாராகிவிட்டனர் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் எல்லாம் தேர்தலில் வெற்றி பெற்றுவிடுவோம் என்று உறுதியாகி விட்டார்கள்.

காங்கிரஸ் கட்சி சார்பாக ஆர். வெங்கட்ராமனை முதலமைச்சராக்குவதாக முடிவு செய்துவிட்டார்கள். அவரும் டில்லியிலிருந்து ரெடியாக வந்து உட்கார்ந்துவிட்டார்.எந்த தேதியில் போய் நாற்காலியில் உட்காருவது என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மறுபடியும் தி.மு.க.வுக்குப் பயம். ஓட்டு எண்ணிய அன்றைக்கு கொஞ்சநேரம் கழித்து முடிவு வருகிறது. பார்த்தால் மடமடவென முடிவு வருகிறது.

தேர்தலுக்கு முன்பு - 138; தேர்தலுக்கு பின்பு - 184தேர்தல் வருவதற்கு முன்பு தி.மு.க.வில் 138 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். இதற்குப் பிறகு வந்த தேர்தல் முடிவு - தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 184 பேர் வெற்றி பெற்றார்கள் என்று, தேர்தல் முடிவு வெளியானது (சிரிப்பு - கைதட்டல்).

இது மிகப்பெரிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தி. அய்யா அவர்களுக்கே தயக்கம். நம்மால் எங்கே கெட்டுப் போய்விடுமோ? என்று.. நம்மாலே தி.மு.க.வுக்கு இப்படி ஒரு பழி வந்துவிட்டதே என்று அய்யா அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்.

பெரியார் கலைஞருக்குக் கொடுத்த வாழ்த்துத் தந்திகலைஞர் வெற்றிபெற்றவுடனே அய்யா அவர்கள் வாழ்த்துத் தந்தி ரொம்ப அழகாகக் கொடுத்தார். எனக்கிருந்த பழி நீங்கியது என்று அய்யா சொன்னார்கள்.மறுபடியும் தி.மு.க. ஆட்சி வந்துவிட்டது, ரொம்ப மகிழ்ச்சி, எனக்கு இருந்த பழி நீங்கியது!

நீங்கள் இமாலய வெற்றி பெற்றீர்கள் என்ற அளவில் அய்யா அவர்கள் தந்தியில் குறிப்பிட்ட வாசகங்கள்:1. மகத்தான வெற்றி பெற்றீர்கள்.2. எனக்கு இருந்த பழி நீங்கியது.3. நீங்கள் உலகப் புகழ் பெற்றுவிட்டீர்கள் என்று அய்யா அவர்கள் சொன்னார்.காமராசர் - ராஜாஜி ஒன்று சேர்ந்து பிரச்சாரம்வட நாட்டில் பிளிட்ஸ் என்று ஒரு பத்திரிகை - அந்த பத்திரிகையில் என்ன எழுதினார்கள் என்றால் தமிழ்நாட்டு வாக்காளர்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

ராமனை செருப்பால் அடித்ததால் தி.மு.க. தோற்றுப்போய்விடும் என்று எல்லோரும் எழுதினார்கள்.

காமராசர், ராஜாஜி எல்லோரும் ஒன்று சேர்ந்து பிரச்சாரம் செய்தார்கள். இதற்கு முன்பு 138 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருந்தார்கள். ராமனை செருப்பால் அடித்த பிற்பாடு தி.மு.க. வுக்கு 184 எம்.எல்.ஏ.க்களாக ஆனார்கள்.

எதிர்க்கட்சியே ஒன்றும் இல்லாமல் ஆகிவிட்டதே! எதிர்க்கட்சியாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 50 பேர் என்று இருந்தவர்கள் 15 பேர் என்று ஆகிவிட்டார்களே! இதென்ன இவ்வளவு கொடுமையாக ஆகிவிட்டதே? ஆகவே இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால்,

தமிழ் நாட்டில் ராமனை செருப்பால் அடித்துவிட்டு தேர்தலில் நின்றால் அதிக சீட்டுகள் கிடைக்கும் என்று தெரிகிறது என பிளிட்ஸ் ஏடு எழுதியது (பலத்த கைதட்டல்).

அந்த அளவுக்கு ஒரு பெரிய வரவேற்பு இருந்தது.மீண்டும் கலைஞர் ஆட்சிக்கு வந்தார் மறுபடியும் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டார். ஆட்சிக்கு வந்தவுடனே தமிழகத்தில் ஒரு தனித் தமிழர் ஆட்சியை நடத்தினார். அப்பொழுதுதான் தந்தை பெரியார் அவர்கள் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தச் சொன்னார்.

கலைஞர் அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என தனி இலாகாவை உருவாக் கினார். கலைஞர் அவர்கள் எத்தனையோ சாதனைகளை செய்தார். பெரியார் ஜாதியை ஒழிக்க முடிவெடுத்தார்அப்பொழுதுதான் அய்யா அவர்கள் ஜாதியை ஒழிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தார்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும்; ஜாதி ஒழிய வேண்டும், தீண்டாமை ஒழியவேண்டுமானால், அனைத்து ஜாதியினர் அர்ச்சகராக வேண்டும் தாழ்த்தப்பட்ட மக்கள் அய்.ஏ.எஸ். ஆகிவிட்டார்கள். அய்க்கோர்ட் ஜட்ஜ் ஆகிவிட்டார்கள்.

ஆனால் அர்ச்சகர் ஆக முடியவில்லை. அதுபோல ஜாதியும், தீண்டாமையும் நிலைத்து இருக்கக் கூடிய ஒரு சூழல் ஏற்பட்டுவிட்டது. எனவே அந்த சூழலை நாம் மாற்ற வேண்டும். இதற்குத் தனியாகப் போரட்டம் நடத்த வேண்டும் என்று சொன்னார். கோவில் கருவறைக்குள்ளேயே நாம் நுழைய வேண்டும் என்று அய்யா அவர்கள் சொன்னார்கள்.அய்யா அவர்கள் கிளர்ச்சி நடத்த ஆரம்பித்தார்

நாம் திடீரென்று நுழைந்தால் நகை நட்டெல்லாம் காணோம் என்று சொல்லுவார்கள். ஆகவேதான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று சொல்லுகின்றோம் என்று அய்யா அவர்கள் சொன்னார்கள்.கலைஞர் அவர்கள் பார்த்தார். இந்தச் செய்திகளையெல்லாம் பெரியார் படத்தில் பார்த்திருப்பீர்கள்.

அதனால் உங்களுக்கு அதிகம் விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அய்யா அவர்கள் கூட, நாங்கள் கிளர்ச்சி நடத்துகிறோம். நீங்கள் கைது பண்ணுங்கள் என்று சொன்னார். உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள்கலைஞர் அவர்களும், நாங்கள் எப்படி அய்யா உங்களை கைது செய்துவிட்டு, நாங்கள் வெளியில் இருப்பதா? என்று கண்களில் பொலபொலவென கண்ணீர் வருகிற மாதிரி பண்ணினார். அய்யா அவர்கள், என்ன இப்படி இருக்கிறீர்கள்? என்னுடைய கிளர்ச்சியை நான் நடத்துகின்றேன். நீங்கள் ஆட்சி நடத்துகின்றீர்கள்.

தைரியமாக கைது பண்ணுவதுதானே? உங்களுடைய கடமையை நீங்கள் செய்யவேண்டியதுதானே? நாங்கள் அதைப்பற்றிக் கவலைப்படுவோமா? என்று தெளிவாக வேகமாக எடுத்துச் சொன்னார். இல்லை அய்யா, நாங்கள் ஒரு சட்டம் கொண்டு வரத் தயாராக இருக்கிறோம். நீங்கள் ஏன் கவலைப்படுகின்றீர்கள்? என்று கலைஞர் அவர்கள் அய்யா அவர்களைப் பார்த்து கேட்டார்.

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் ஆக....அய்யா அவர்களுடைய கருத்துப்படி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்கிற ஒரு சட்டத்தை கலைஞர் அவர்கள் கொண்டு வந்தார்.உடனே ஒரு பன்னிரண்டு பார்ப்பனர்களுக்கு மேல் சேர்ந்து உச்சநீதி மன்றத்தில் வழக்குப் போட்டார்கள்.

அந்த வழக்கில் நமது அரசாங்கம் தன்னுடைய கருத்தை எடுத்து சொல்லியது.எதிர் தரப்பினர் நீதிமன்றத்தில் சொன்னார்கள்: இவர்கள் கடவுள் இல்லை என்று சொல்லக்கூடியவர்களை, நாத்திகர்களை எல்லாம் கொண்டு வந்து கோயில் கர்ப்பக் கிரகத்திற்குள் வைக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். இவர்கள் அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகராக வேண்டும் என்று சொல்லுகிறார்கள் ஆகவே இவர்களை விடக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள்

உச்சநீதிமன்றத்தில் வழக்குஅப்பொழுது உடனே இவர்கள் சொன்னார்கள்: இல்லை, இல்லை நாங்கள் கோவிலுக்குள் போகிற இடத்தில் ஜாதி வித்தியாசம் இருக்கக் கூடாது என்று சொல்லுகிறோமே தவிர, நம்பிக்கை இருக்கிறவன் எந்த வழியில் வேண்டுமானாலும் வணங்கிக் கொள்ளலாம் என்று விளக்கம் சொன்ன பிற்பாடு உச்சநீதிமன்றத்தில் அய்ந்து நீதிபதிகளுக்கு மேலே இருந்தார்கள் - தீர்ப்பளித்தார்கள்; தமிழக அரசு கொண்டுவந்த சட்டம் செல்லும்படியாகும் என்று தீர்ப்பளித்தார்கள்.

ராஜகோபாலாச்சாரியார் சொல்லி, சங்கராச்சாரியார்கள் எல்லாம் முயற்சி பண்ணி, அத்தனைப் பார்ப்பனர்களும் ஒன்று சேர்ந்து இதை எதிர்த்தார்கள்.
(தொடரும்) viduthalai./20080625/news15.

பார்வதியின் “ அது " மட்டும் இற்றுக் கீழே விழுந்து அந்த "அது" மட்டுமே இங்கு வழிபடு கடவுள்.!!!

மாதாந்திர ருதுவுக்குப் பதில் கடவுளச்சிக்கு வருடாந்திர ருதுதானாம்!
"காட்டுமிராண்டி" அல்லாமல் வேறு என்ன?

அசாம் மாநிலத்தில் நிலச்சல் மலையில் 'காமாக்யா' கோயில் இருக்கிறது. 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில். சக்தி வாய்ந்த கோயிலாம். அபார சக்தி வாய்ந்த 51 சக்தி பீடங்களில் இது சிறந்ததாம். அந்தக் கோயில் 22.6.2008 முதல் மூன்று நாள்களுக்கு மூடப்படுமாம். 25-ஆம் தேதி திறக்கப்படுமாம். இந்தத் திருவிழா அம்புபாசி விழா எனப்படுகிறது. சாதுக்களும், சன்னியாசிகளும், சன்னியாசினிகளும் உலகெங்கும் இருந்து இங்கே கூடுவார்களாம்.

`அந்த மூன்று நாள்களாம் இந்த மூன்று நாள்களும்! பூஜை, புனஸ்காரம் எதுவும் இந்த மூன்று நாள்களில் கிடையாதாம். பூசாரிகளும் பக்தர்களும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இந்த மூன்று நாள்களில் செவ்வாடைதான் அணிய வேண்டுமாம் (மேல் மருவத்தூர் போல) கடவுளச்சியான `காமாக்யாவும் செவ்வாடை தான் அணியுமாம்.

இது என்ன கோயில்? பார்வதி தீக்குளித்து இறந்து விட்டதால் கோபம் அடைந்த சிவன் அந்த - வெந்த - உடலைத் தூக்கிக் கொண்டு சென்ற போது பார்வதியின் (பெண் குறி) யோனி மட்டும் இற்றுக் கீழே விழுந்து விட்டதாம். அதனால் அந்த யோனி மட்டுமே இங்கு வழிபடு கடவுள். கற்பாறையில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். அந்தப் பாறைப் பகுதியில் நீர் கசிந்து வழிந்து கொண்டிருக்கும்.


இந்த மூன்று நாள்களிலும் அந்த நீரில் சிவப்பு சாயத்தைக் கலக்கிச் சிவப்பு நீர் வழிவது போல ஏற்பாடு செய்கிறார்கள். `ருது ரத்தம் போலக் காட்சியளிக்கச் செய்கிறார்களாம். மாதாந்திர ருதுவுக்குப் பதில் கடவுளச்சிக்கு வருடாந்திர ருதுதானாம்!

ஆரியர் காலக் கலாச்சார (அனாச்சாரமான) வழிபாடாம்! சக்தி வழிபாடு பற்றி விவரமாகத் தெரிந்து கொள்ள `ஞான சூரியன் படிக்கவும்.

இந்த மூன்று நாள்களில் பூமித்தாயின் புனிதத்தைக் காப்பாற்ற வேண்டுமாம். அதற்காக எந்த வேளாண் வேலைகளும் செய்ய மாட்டார்களாம். ஏர் உழுவது பூமித்தாயைப் புண்படுத்துவதாம். மற்ற நாள்களில் டிராக்டர் வைத்து உழும்போது பூமித்தாய்க்குப் புண் ஏற்படாதோ?

கைம்மையர், பிரம்மச்சாரிகள், பார்ப்பனர்கள் இந்த மூன்று நாள்களில் சமைத்த உணவைச் சாப்பிடக் கூடாதாம். திருமணமாகாத பெண்கள் சாப்பிடாமல் இருக்க வேண்டுமாம்.மூன்று நாள்கள் முடிந்ததும் எல்லாரும் வீடுகளைக் கழுவி, துணிகளைத் துவைத்து, ஏனங்களைக் கழவி, வீடு முழுக்க நீர் தெளித்துத் தூய்மைப்படுத்த வேண்டுமாம்.

மூன்றாம் நாள் கடவுளச்சிக்கு `சடங்கு செய்யப்பட்டுக் கழுவிக் குளிப்பாட்டி அதன்பிறகுதான் கோயில் கதவுகள் திறக்கப்படுமாம்.இத்தனை மூடத்தனங்கள் போதாது என்று மூடத்தனத்தின் உச்சமே இனிமேல்தான்.

கடவுளச்சியின் உடல் துணி (அங்க - வஸ்திரம்) பக்தர்களுக்குப் பிரசாதமாக விற்கப்படுமாம். மூன்று நாள்களும் கட்டியிருந்ததால், மிகவும் புனிதமாகக் கருதப்படும் சிவப்புத் துணி மிகமிகப் புனிதமானதாம்.

இதை வாங்கிப் பூஜை செய்து வந்தால் - நினைப்பதெல்லாம் நடந்து விடுமாம்! அதனாலே அதை வாங்க ஏகப்பட்ட போட்டி, நெரிசல்! இந்த மூன்று நாள்களிலும் பத்து லட்சம் பக்தர்கள் அங்கே கூடுவார்களாம். ஆண் சாமி அய்யப்பனுக்கு மகர விளக்கில் 3 கோடி கூடும்போது - பெண் சாமிக்குப் பத்து லட்சம் மிக மிகக் குறைவுதான்.

இப்போது சொல்லுங்கள் - கடவுளை வணங்குகிறவனைக் காட்டுமிராண்டி எனத் தந்தை பெரியார் கூறியதில் என்ன தவறு? அதைவிடக் கடுமையான சொல்லை அல்லவா சொல்ல வேண்டும் என்கிறீர்களா? சொல்லுங்களேன்! அந்தச் சொல்லாலே பக்தர்களைக் குறிப்பிடுவோம்!
viduthalai/20080624/news24.

Tuesday, June 24, 2008

தெகல்கா : அய்யப்பா எல்லாமே பொய்யப்பா! விஸ்வ இந்து பரிஷத் வன்முறை இயக்கமே!

அசிங்கப்பட்டு நிற்பது அய்யப்பன் மட்டும் அல்ல! அரசாங்கமும் தான்!

அய்யப்பன் - கையப்பன் - அரிகரபுத்திரன் - என்ற்லலாம் ஓர் இந்துமதக் கடவுளைச் சொல்லி அது திருமணமாகாத ஆண் கடவுள்; ஆகவே பெண்கள் பார்ப்பதற்கு வரக்கூடாது எனக் கூறி விட்டார்கள்.

பார்த்தால் யாருக்குப் பேதலிக்கும்? கடவுளுக்கா? பெண்களுக்கா? விளக்கம் இல்லை.

ஆனாலும் நடிகை ஜெயமாலா தனது 20 வயதில் கருவறைக்கே போய்க் கடவுளைத் தொட்டுத் தழுவிக் கும்பிட்டதாகச் சேதி. விசாரணை நடக்கிறது.

கடவுளைத் தொட்டுப் பூஜை செய்யும் தலைமைப் பூஜாரி கொச்சியில் விபச்சாரி வீட்டில் பிடிபட்டார். பூஜை செய்யக் கூடாது எனத் தடை.உண்டியல் காசை எண்ணுபவர்கள் வெறும் முண்டு மட்டுமே கட்ட வேண்டும்.

காரணம், உள்ளடையில் ரூபாய் நோட்டுகளைக் கட்டி எடுத்துச் சென்று விட்டனர்.

கடவுளின் கையாலாகாத் தனத்துக்கு வேறு சான்று தேவையில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14-இல் மகர விளக்கு `தானாகத் தெரியும் எனக் கதை. 50 ஆண்டுகளாகக் கட்டிவிடப்பட்ட கதை.

சபரிமலைக் கோயிலின் காப்பாளர் பந்தளம் மகாராஜா குடும்பம். இக்குடும்பத்தின் பி. ரவிவர்மா சொல்கிறார்: எங்கள் வீட்டுப் பெரியவர்கள் மூன்று தடவை கொளுத்த வேண்டும் எனக் கூறி ஆள்களை அனுப்புவார்கள்.

ஆனாலும் கதை கட்டியவர்கள் கூறுவது: முதலில் பரசுராமன் விளக்கை ஏற்றினான். வழிவழியாகத் தொடர்கிறது என்கிறார்கள்.

இந்தியா `விடுதலை பெற்ற பிறகுதான் மோசடிகளே! காட்டு இலாகாவும் மின் துறையும் மோசடியைச் செய்பவர்கள். கர்ப் பூரத்தை மூட்டை மூட்டையாகக் கொட்டிக் கொளுத்தி `மகரவிளக்கு காட்டுகிறார்கள்.

இதற்கானச் சைகை கோயிலிலிருந்து மாலை 6.30-க்கு அனுப்பப்படுகிறது.பொன்னம்பல மோசடியை அம்பலப்படுத்திடப் பகுத்தறிவாளர்கள் முயன்றனர்.

1973-இல் 24 பேர் கொல்லத்திலிருந்து பொன்னம் பலமேடுக்கு வந்து குறிப்பிட்ட நாளில், நேரத்தில் பட்டாசுகளை வெடித்துப் பக்தர்களைக் குழப்பம் தெளிவிக்க முயன்றனர். கைது செய்து வழக்குப் போட்டது அரசு. இந்தியக் குற்றச் சட்டத்தின்படி எந்தக் குற்றமும் செய்யவில்லை என நீதிமன்றம் விடுதலை செய்தது.

1980-இல் திரிச்சூரிலிருந்து பொன்னம்பல மேடு வந்து வழக்கமான திசைக்கு எதிர்த்திசையில் விளக்கைக் கொளுத்திக் காட்டி அம்பலப்படுத்தினர்.1981-இல் வந்த பகுத்தறிவாளர்களை காவலர்கள் காட்டு விலங்காண்டித் தனமாகத் தாக்கினர். காவல்துறையை ஏவி விட்டது அன்றைய சி.பி.எம். ஆட்சி.

சாட்சி சொல்கிறார், தேவஸ்வம்போர்டு தலைவராக இருந்த ராமன் நாயர்: காவல் துறையினரும் தேவஸ்வம் போர்டு அலுவலர்களும் சேர்ந்துதான் பொன்னம்பல மேட்டில் மகரவிளக்கைக் கொளுத்துவார்கள்.

இதற்கு மாநில அரசு ஆணை வழங்கியது.மோசடிக்குத் துணை போனது கேரள அரசு. பகுத்தறிவாளர்களை அடித்தது. வழக்கு போட்டது.

இன்றைய நிலை என்ன?மகர விளக்கை மனிதன் கொளுத்துகிறான் என்கிறார் தலைமைப் பூஜாரி கண்டரேறு மகேஸ்வரரு.

ஆமாம், ஆமாம் என்கிறார் தேவஸ்வம் போர்டு தலைவர் சி.கே. குப்தன். இவர் ஈ.எம்.எஸ். நம்பூதிரி பாடின் மருமகன்.இந்த ஒப்புதல் வாக்கு மூலத்திற்கு அரசு முத்திரை குத்தி ஆமோதிப்பவர் அறநிலையத் துறை அமைச்சர் ஜி. சுதாகரன்.

அசிங்கப்பட்டு நிற்பது அய்யப்பன் மட்டும் அல்ல! அரசாங்கமும் தான்!

ஒப்புதல் வாக்குமூலம் தரும் இதே கட்சி ஆட்சிதான் 1981-இல் அடித்து நொறுக்கியது. சிபிஎம் கட்சியிலும் 27 ஆண்டுகளில் மனமாற்றம்தான்.

எப்படி வந்ததாம், மன மாற்றம்?கேரள சுற்றுலாத் துறை வாரியத் தலைவர் செரியன் பிலிப் அரசுக்குச் சொன்னார். `எல்லா உண்மைகளையும் சொல்லிடுக. அதன் மூலம் மதத்தின் பெயரால் நடக்கும் மோசடிகளுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை எனக் காட்டிடுக.

பொன்னம்பல மேடு மகரவிளக்கு மூடநம்பிக்கைக்கு உடந்தையாக இருந்து கொண்டே சாமியார்கள்மீது நடவடிக்கை எடுத்தால், அரசு நடவடிக்கைகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை வராது என்றே கூறிவிட்டார்.கேரள அரசு உண்மையைத் தெரிவித்து விட்டது.

கேரளப் பகுத்தறிவாளர் (யுக்திவாதி) சங்கத் தலைவர் யு. கலாநாதன் தோலுரித்துக் காட்டியுள்ளார் - பல ஆண்டுகளாக இந்த மோசடியைப்பற்றிய உண்மையைத் தெரிவிக்க நாங்கள் முயன்ற போதெல்லாம் கைது செய்தார்கள், அடித்தார்கள், கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினார்கள்.

நாங்கள் கூறியது மெய் என மக்கள் இப்போது புரிந்து கொண்டார்கள் எனக் குறிப்பிடுகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் மகர விளக்கன்று அரசு ஊழியர்கள் செய்த தடபுடல் சொல்லும் தரமன்று. 1999-இல் மகர விளக்கு கொளுத்தப்படும் நேரத்தில் அதைக் காணத் துடித்த மட பக்தர்கள், நெரிசலில் சிக்கி 53 பேர் இறந்தே போயினர்.

மத நம்பிக்கைக்காரர்கள், கோயில் பெருச்சாளிகள், பக்தர்கள் எல்லாருமே காட்டிய புனிதத்துவம் பொய்த்துப் போய் விட்டது.

பகுத்தறிவாளர்கள் வெற்றி பெற்று விட்டனர்.இனியாவது கடவளை நம்பும் அய்யப்பப் பக்தர்களுக்குப் புத்தி வருமா? புத்தி வரும்படி, காரியங்களைச் செய்யுமா, கேரள அரசு?

செய்யாது. மூன்று கோடிப் பேர் வருவதாகச் சொல்லப்படும் மகர விளக்கு மோசடியால் வரும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருமானத்தை இழக்க அரசு தயாராக இல்லை. அறிவு இழப்புபற்றி அரசுக்குக் கவலையில்லை. ஆனால் பகுத்தறிவாளர்களான நாம் கவலைப்படாமல் இருக்க முடியாதே!
தரவு: `தெகல்கா 21.6.2008
__________________________________________

விஎச்பி - வன்முறை இயக்கமே!

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் பெண்களுக்கான பயிற்சி முகாம் காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் நேற்று நடந்தது. முகாமில் பெண்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது. viduthalai.com
----------------------------------
தந்தையின் உடலுக்கு சடங்குகளின்றி தீ மூட்டிய அல்லிராணி + இந்து மதத்தின் அஸ்திவாரம் கலகலத்து வருகிறது.

துக்ளக் சோ ராமசாமியின் கோமாளித்தனமான விவாதம்.

மசூதிக்கு அருகில் திடீர்ப் பிள்ளையார் !

திராவிடர் இயக்கம் என்றென்றைக்கும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும்.

தந்தையின் உடலுக்கு சடங்குகளின்றி தீ மூட்டிய அல்லிராணி + இந்து மதத்தின் அஸ்திவாரம் கலகலத்து வருகிறது.

மூட நம்பிக்கைகளை கழகம் முறியடிக்கும் விதத்தைப் பாரீர்!

பட்டுக்கோட்டை, ஜூன் 23- பட்டுக் கோட்டை தி.க. மகளிரணி அமைப்பாளர் தோழியர் இ. அல்லிராணியின் தந்தையார் ம. மெய்க்கப்பன் (வயது 84) 30-5-2008 அன்று இயற்கை எய்தினார்.

எவ்வித மூட சடங்குகளின்றி அவரது உடல் எரிக்கப்பட்டது.சுடுகாட்டிற்கு இதுவரை வடசேரியில் அனுமதிக்கப் படாத மறுக்கப்பட்ட பெண்கள் இந்த நிகழ்ச்சியில் உடன் சென்றனர். தோழியர் அல்லி ராணி சுடுகாடு வரை வந்து உடலுக்கு தீ மூட்டினார்.

கழகத் துணைப் பொதுச்செயலாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், மாவட்ட செயலாளர் அத்தி வெட்டி பெ. வீரையன், அமைப்பாளர் கைலை ஊமைத் துரை, இராம. அன்பழகன் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். மறைந்தவரின் படத்திறப்பு நிகழ்ச்சி ஜூன் 14 அன்று நடை பெற்றது. அதன் நினைவாக திருச்சி நாகம் மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ. 1000/- நன்கொடையாக அளிக்கப்பட்டது.
------------------------------------

"தலித் கோவிந்தம்!"

திருப்பதி வெங்கடாசலபதியின் கல்யாணக் (சீனிவாசா கல்யாணம்) காட்சி திருப்பதியில்தான் நடந்து வருவது வழக்கம்.

இவ்வாண்டு சென்னைத் தீவுத் திடலிலேயே அப்படி ஒரு காட்சியை அரங்கேற்றினார்கள்.இப்பொழுது அடுத்த திட்டமாக திருப்பதி ஏழுமலையான் சாமியை சேரிப் பகுதிகளுக்கும், மீனவர்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கும் கொண்டு செல்லப் போகிறார்களாம் - அந்தத் திட்டத்துக்கு முறையே தலித் கோவிந்தா, மச்சய கோவிந்தா என்ற நாமகரணமும் சூட்டியுள்ளார்கள்.

தலித் கோவிந்தா என்றால் தாழ்த்தப்பட்டவர்கள் பகுதிக்கு கோவிந்தனாகிய வெங்கடாசலபதியைக் கொண்டு செல் லுதல்; மச்சய கோவிந்தா என்றால், மீனவர் பகுதிகளுக்கு ஏழுமலையானைக் கொண்டு செல்லும் திட்டமாகும்.

அப்படி அந்தப் பகுதிக்கு ஏழுமலையான் சாமியை கொண்டு போகும்போது, அந்தப் பகுதியில் வாழும் தாழ்த்தப்பட்டவர்களும், மீனவர்களுமே கடவுளுக்கு நேரடியாகப் பூஜைகளை நடத்துவார்களாம். அதற்காக திருப்பதி ஏழுமலையான் கோயில் பயிற்சிகளை அவர்களுக்கு அளிக்கயிருக்கிறதாம்.

என்ன இது? இந்த மதவாதிகள் திடீரென்று சமதர்மவாதிகளாக மாறிவிட்டனரா - ஜாதி ஒழிப்பு வீரர்களாக ஞானோதயம் பெற்றுவிட்டார்களா என்று திடுக்கிட வேண்டாம்.

இந்து மதத்தைப் பரவலாகக் கொண்டு செல்வதுதான் இதன் நோக்கம் என்று திருப்பதிக் கோயில் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் திரு. கருணாகர ரெட்டியார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டோரும் இந்து மதத்தை விட்டு விலகியிருந்து வருகின்றனர் என்றால், இதற்கு அடிப்படைக் காரணம் என்ன?

கோயிலுக்குள் பார்ப்பனர்களின் ஆதிக்கம்தான் கொடிகட்டிப் பறக்கிறது. மற்றவர்கள் ஜாதியின் பெயரால் இழிவுபடுத்தப்படுகின்றனர் என்ற நிலையில், இந்து மதத்தின் அஸ்திவாரம் கலகலத்து வருகிறது.

இதனை முன்னிட்டே மதவாத எண்ணத்தோடு மதத்தைப் பரப்பும் நோக்கத்தோடு இத்தகைய ஒரு திட்டத்தைத் தீட்டியிருக்கின்றனர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கோயில் கருவறைக்குள் பார்ப்பனர்களைத் தவிர அர்ச்சகராக வேறு யாருக்கும் தகுதி கிடையாது; அருகதை கிடையாது. அப்படிச் சென்றால் சாமி சிலை தீட்டுப்பட்டுவிடும்.

அதற்குப் பிறகு பல பிராயச்சித்தங்களைச் செய்யவேண்டி வரும் என்று உச்சநீதிமன்றம் வரை சென்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த வகையறாக்கள் இப்பொழுது, இந்து மதக் கடவுள் சிலைகளை தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பகுதிக்குக் கொண்டு செல்வதும், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களே பூஜை செய்யலாம் என்று அனுமதிப்பதும் காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

இனி ஜாதியைச் சொல்லி ஆதிக்கம் செலுத்த முடியாது; பழைய ஆகமங்களை எடுத்துக் காட்டி மற்றவர்களை வெளியே நிறுத்த முடியாது என்ற நிலைக்கு இந்து மதவாதிகள் தள்ளப்பட்டுவிட்டனர்.
viduthalai.com

Monday, June 23, 2008

மசூதிக்கு அருகில் திடீர்ப் பிள்ளையார் !

ஆதம்பாக்கத்திலும் திடீர்ப் பிள்ளையார்! மசூதிக்கு அருகில் இந்துக் கடவுள் பொம்மை வைத்தவர் கைது .

சென்னை, ஜூன் 22 - சென்னைப் புறநகர் ஆதம்பாக்கம் நகரில் உள்ள மதரசா அல் முபாரக் மசூதிக்கு அருகில் பிள்ளையார் பொம்மையை வைத்துப் பூஜை செய்து மதக் கலவரம் ஏற்படும் நிலையை உருவாக்கிய ஆட்டோ ஓட்டுநர் சுப்பிரமணியம் என்பவர் காவல் துறையால் கைது செய் யப்பட்டுக் காவலில் வைக்கப் பட்டுள்ளார்.

ஆதம்பாக்கம் 11-ஆவது முக்கிய சாலையில் உள்ள மசூதிக்குப் பின்புறத்தில் ஒரு வாசல் உண்டு. இதன் வழியாக முசுலிம் மகளிர் வழிபாட்டுக்கு வருவர். இந்த வழியை அடைத்தாற்போல சுப்பிரமணியம் ஒரு கொட்டகை கட்டிப் பாதையைத் தடுத்துவிட்டார்.

இசுலாமியர்கள் இது பற்றிக் காவல்துறையில் முறையிட்டதன் பேரில் அசம்பாவிதச் சம்பவம் எதுவும் நிகழாமல் தடுப்பதற்காக இரு காவலர்கள் அங்கே நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் அந்த இடத்தில் திடீர்ப் பிள்ளையார் பொம்மை ஒன்று மசூதிக்கு வெகு அருகில் வைக்கப் பட்டு, சுப்பிரமணியம் என்பவர் அதற்குப் பூஜை செய்து வருவது தெரியவந்தது.

இந்துக் கடவுளின் பொம்மை தெருவில் வைக்கப்பட்டு இருந்தபடியால் அதை அகற்றும்படி சுப்பிரமணியத்தைக் கேட்டுக் கொண்டனர். அவர் அதைக் கேட்கவில்லை. மாறாக, இந்து மத அமைப்பைச் சார்ந்த சிலரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்து பிரச்சினை செய்தார்.

காவலர்கள் இதுபற்றி துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அந்த இடத்தைப் பார்வையிட்ட காவல் துறை அதிகாரிகள் பிள்ளையார் பொம்மையை எடுக்கும்படி சுப்பிரமணியத்திடம் சொல்லியும் அவர் கேட்கவில்லை.

சில நாள்களுக்கு பின்பு பொதுப் பாதையை அடைத்து மசூதிக்குச் செல்லவிடாமல் தடுத்து விட்டார். இந்தப் பொம்மையைச் சுற்றிச் செங்கல், சிமென்ட் வைத்துக் கட்டடம் கட்டி மசூதிக்கு எதிலே கோயில் கட்டினார்.

காவல்துறையினர் எச்சரித்தும் அவர் அதனை அப்புறப் படுத்தாமல் தினமும் பூஜைகள் நடத்தி வந்தார்.

இதனால் அந்தப் பகுதியில் இருமதங்களைச் சேர்ந்தவர்களுக் கிடையே மோதல் ஏற்படுத்தும் சூழல் உருவாகுமாதலால் சுப்பிரமணியன் வெள்ளிக் கிழமை கைது செய்யப்பட்டார்.

மத விரோதங்களைத் தூண்டும் வகையில் செயல்படுவது குற்றம் ஆதலால் அவர்மீது இ.பி.கோ. 153-ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நீதிபதி முன்பாக வெள்ளிக்கிழமை அவர் நிறுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப் பட ஆணையிடப்பட்டது. அவர் சிறையில் அடைக்கப் பட்டார்.
viduthalai.com
------------------------------------
திராவிடர் இயக்கம் என்றென்றைக்கும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும்.

Sunday, June 22, 2008

திராவிடர் இயக்கம் என்றென்றைக்கும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும்.

கலைஞர் அவர்களுடைய ஆட்சியை சிக்கெனப் பிடித்துக் கொள்ளுங்கள். திராவிடர் இயக்கம் என்றென்றைக்கும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும்இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் மணிவிழா மாநாட்டில் தமிழர் தலைவர் உணர்ச்சிப் பேருரை

சென்னை, ஜூன் 22- கலைஞர் அவர்களை சிக்கெனப் பிடித்துக் கொள்ளுங்கள். திராவிட இயக்கம் என்றென்றைக்கும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழும் என்று இஸ்லாமியர்கள் மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் விளக்க வுரையாற்றினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநாடு 21-6-2008 அன்று இரவு 7 மணிக்கு சென்னை - தீவுத் திடலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது:

கலைஞர் ஆட்சியை பாதுகாக்க வேண்டிய பொறுப்புநம்முடைய தமிழகத்திலே கலைஞர் அவர்களுடைய பொற் கால ஆட்சி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அவருடைய ஆட்சியைக் பாதுகாக்க வேண்டிய தலையாய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்கள் பேசும்பொழுது, எங்களுக்குப் பாதுகாவலர்களாக இருப்பவர்கள் நீங்கள் என்று சொன்னார்.

திராவிட இயக்கம் என்றைக்கும் உங்களுக்குப் பாதுகாப்பு அரணாகத் திகழும். இந்தியாவில் பாபர் மசூதியை இடித்த நேரத்தில், இந்தியாவில் அமைதிப் பூங்கவாகத் திகழ்ந்த மாநிலம் ஒன்று என்று சொன்னால் அது தமிழ்நாடுதான்.
திராவிட இயக்கம் அந்த அளவுக்கு இந்த மண்ணைப் பக்குவப்படுத்தி இருக்கிறது.பெரியார் பிறந்த மண்ணான இந்த மண்ணில் என்றைக்கும் சிறுபான்மை மக்களுக்கு இஸ்லாமிய மக்களுக்குப் பாதுகாப்பு உண்டு.

ஆனால், காந்தியார் பிறந்த மண்ணான குஜராத்தில் இன்றைக்கும் சிறுபான்மை மக்களான இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு கொடுமையான சூழ்நிலை இருக்கிறது.

மூன்றாவது தலைமுறையாக தொடரும் உறவு காயிதே மில்லத் அதற்கடுத்து சிராஜுல்மில்லத் அதற்கடுத்து இன்றைக்கு மூன்றாவது தலைமுறையாக இந்த உறவு தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

மதத்தில் இஸ்லாமியர்களாக இருந்தாலும் நாம் திராவிடர்கள்.

நீங்கள் கைபர், போலன் கணவாய் வழியாக வந்தவர்கள் அல்ல.

இந்த மண்ணுக்கு தலைமுறை தலைமுறையாக, சொந்தக்காரர்கள் நீங்கள்.

திராவிட இயக்கம் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது. நமது கலைஞர் அவர்களுடைய பொற்கால ஆட்சியில் நீங்கள் கோரிக்கைகளை வைத்து, கேட்டுத்தான் பெறவேண்டும் என்பதில்லை.

கலைஞர் அவர்களுடைய ஆட்சியிலே கேட்காமலேயே செய்யக்கூடிய ஆட்சியாக இந்த ஆட்சி இன்றைக்கு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

1972-இல் சட்டமன்றத்திலே கலைஞர் சொன்னார்முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டைப் பற்றிச் சொன்னார்கள். 1972 லே சட்டமன்றத்திலே கலைஞர் அவர்கள் மிகத் தெளிவாக சொன்னார்கள். இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு சட்டத்தில் இடம் இருக்கிறதோ - இல்லையோ என்னுடைய இதயத்திலே இடமிருக்கிறது என்று சொன்னவர்தான் நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள்.

கலைஞர் ஆட்சியை இந்தியாவே பின்பற்ற வேண்டும்பனத்வாலா அவர்கள் பேசும்போது கலைஞர் அவர்களுடைய ஆட்சி எப்படி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை பெருமையோடு பாராட்டிச் சொன்னார்கள்.

இந்தியாவே கலைஞர் அவர்களுடைய ஆட்சித் திறனைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் சொன்னார். பனத்வாலா அவர்கள் சொன்னதிலே இட ஒதுக்கீடு அடங்கியிருக்கிறது. சமூகநீதி அடங்கியிருக்கிறது.

இனநலம் இருக்கிறது. சமூக பாதுகாப்பு இருக்கிறது. சமூக நல்லிணக்கம் அடங்கியிருக்கிறது என்று சொன்னார்கள். திராவிட இயக்கம் என்றென்றைக்கும் சிறுபான்மை மக்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கும்.

எங்களைப் பார்த்து சிலர் கேட்பதுண்டு. நீங்கள் எப்படி முஸ்லிம் லீக் மாநாட்டில் கலந்துகொள்ளலாம்? என்று.

முஸ்லிம் மதம் மட்டும்தான் இந்த நாட்டை ஆளவேண்டும், மற்ற மதத்தினர் ஆளக்கூடாது என்று சொல்பவர்கள் அல்ல அவர்கள்.

மற்ற மதத்துக்காரர்கள் மாள வேண்டும் என்று சொல்பவர்கள் அல்ல. பெரும்பான்மையினர் ஆள வேண்டும்; சிறுபான்மையினர் வாழ வேண்டும் என்று கருதுபவர்கள் அவர்கள்.

எல்லோருக்கும் எல்லாமும் இருப்பதான இடம் நோக்கி நடக்கட்டும் இந்த வையம் என்று புரட்சிக் கவிஞர் அவர்கள் சொன்னார்கள். அப்படிப்பட்ட ஆட்சியை கலைஞர் அவர்கள் இங்கு நடத்திக் கொண்டு வருகின்றார்கள்.

அவருடைய ஆட்சியை சிக்கெனப் பிடித்துக்கொள்ளுங்கள். இஸ்லாமிய மக்களான உங்களுக்குப் பாதுகாப்பு கலைஞர் அவர்கள்தான். கலைஞர் அவர்களுடைய ஆட்சியை காப்பது உங்களுடைய கடமை. அவருடைய ஆட்சிக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பது உங்களுடைய கடமை.

நம்முடைய கடமை. இன மீட்புக்காக நடைபெறக்கூடிய கலைஞர் ஆட்சியை பாதுகாப்பது நம் எல்லோருடைய கடமை தலையாய கடமையாகும்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தன்னுடைய உரையிலே குறிப்பிட்டார்.

உரையாற்றியோர்இம்மாநாட்டில் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் சையத் சத்தார், பாத்திமா (அப்துல் சமது மகள்), இசைமுரசு நாகூர் அனிஃபா, மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் அகில இந்திய தலைவர் பனாத்வாலா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி, தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் ஆகியோர் உரையாற்றினர்.

முன்னதாக மாநாட்டில் பல தீர்மானங்கள் நிறைவேற்றி, பல பொறுப் பாளர்கள் உரையாற்றினர். சென்னை மாவட்டச் செயலாளர் எம். ஜெய்னுல் ஆபுதீன், நிர்வாகிகள் கமுதி பஷீர், நிஜாமுதீன் ஆகியோர் மாநாட்டிற்கான பணியை முன்னின்று நடத்தினர். பல முக்கிய பிரமுகர்கள் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தனர்.

பிற்பகல் 3 மணிக்கு இஸ்லாமியர்களின் பேரணி தொடங்கி மாலை 6.15 மணிக்கு மாநாடு நடைபெற்ற தீவுத் திடலை வந்தடைந்தது.தீவுத் திடலில் கண்ணுக்கெட்டிய தூரம்வரை இஸ்லாமிய மக்களின் கூட்டம் காணப்பட்டது.
http://viduthalai.com/20080622/news14.html

சாமியாரினி குளித்த ஈரத் துணியுடனேயே அருளாசி வழங்குகிறார். அமெரிக்கர்களுக்கு அறிவு உண்டா?

கேரளாவை எந்தக் கட்சி ஆண்டாலும் இந்திராணி போல ஒரு வாசகம் நிரந்தரமாக இருக்கிறது. ``கடவுளின் சொந்த நாடு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து இழுப்பதற்காக, கடவுள் மடமையைக் கம்யூனிஸ்ட்கள் உள்பட பயன்படுத்திக் கொண்டிருக்கும் அவலம், அங்கே!

படித்தவர்கள் விழுக்காடு அங்கேதான். முதல் இடத்தில் இருக்கிறது. இந்தியா முழுமைக்கும், பெண் கல்வியிலும் அதே நிலை. எவரெஸ்ட் சிகரத்தில் எட்மண்ட் ஹிலாரி ஏறி நின்ற போது `சாய், சாய் என்று ஒரு கேரளக்காரர் தேநீர் விற்றார் என்று கூறுவது உண்டு.

இது உண்மை யல்ல; ஆனாலும் உலகின் எந்த மூலைக்கும் சென்று பிழைத்துக் கொள்ளும் மலையாள மக்களின் தன்னம்பிக்கைக் குணத்திற்கோர் எடுத்துக் காட்டாகும்.

ஆனால் தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கையும் அங்கே தான் அதிகம் என்பது ஒரு நெருடல்.

சமுதாயச் சீர்திருத்தத்தின் எல்லை - பொது உடைமை என்றார் தந்தை பெரியார். அத்தகைய பொது உடைமைக் கொள்கை பூத்துக் குலுங்கி ஆட்சி அமைத்திடும் வாய்ப்பு ஏற்பட்டதும், தொடர்வதும் அங்கேதான்.

கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது என்ற காரணத்தால், சபரிமலை மோசடிகளைக் கண்டு கொண்டும் கண்டிக்கும் நடவடிக்கைகளை எடுக்காமலும் இருக்கும் நிலையும் அங்கேதான்.

முற்போக்குக் கருத்துகள் முகிழ்ந்துள்ள மண்ணில் கடைந்தெடுத்த பிற்போக்குத்தனமான ஜோதிடமும், மாந்திரீகமும், தேவப் பிரஸ்னமும் கொடி கட்டிப் பறப்பதும் அதே மண்ணில்தான்.

இப்படிப் பிற்போக்குக் கருத்துகளும் முரண் பாடுகளும் மொத்தமாகக் குடியிருக்கும் மண்ணாக மலையாள மண் இருப்பது இன்னொரு அவலம்.

இதையெல்லாம் கண்டுதான் விவேகானந்தர் சொன்னார் `பைத்தியக் காரர்களின் நாடு என்று.அந்த நாட்டில் அண்மைக் காலக் கொடுமை சாமியார்களின் செல்வாக்கு பெருகுவதும், அவர்களின் கொடுமைகளுக்கு மக்கள் பக்தியின் பேரால் பலியாவதும்!

கடவுள் நம்பிக்கையை விட மோசமானது கடவுள் மனிதர்களை நம்புவது. ஏற்கெனவே, அமிர்தானந்தமயி எனும் சுதாமணி அம்மையார் தன் மடமை ராஜ்யத்தை இம்மண்ணில் தொடங்கி இந்தியா முழுக்க, அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகளிலும் பரப்பி வருவதையே சகித்துக் கொள்ள முடியாத நிலை

புதுவகை தரிசனம்.
இந்நிலையில், குட்டிச் சாமியார்கள் கிளம்பி குட்டிச் சாத்தான்களாக விளங்கிக் குழப்பி வருகிறார்கள். சுதாமணி கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து `ஆசீர்வாதம் செய்து பேர் பெற்று விட்டார். மேலை நாடுகளில் கட்டி அணைக்கும் சாமியார் (Hugging Swamy) என்றே பெயர்.

இந்த மயிலைப் பார்த்துப் பல வான்கோழிகளும் ஆடத் தொடங்கியுள்ளன.
32 வயது திவ்யா எனும் `சாமியாரினி திருச்சூருக்கு அருகில் உள்ள இரிஞாலகுடா பகுதியில் `ஆசிரமம் நடத்துகிறார். காலையில் பக்தர்களுக்குத் தரிசனம் தருகிறார். ஆசி வழங்குகிறார். எப்படி தெரியுமா?

மெல்லிய மேலாடை மட்டுமே அணிந்து பக்தர்கள் முன்னிலையில் `ஸ்நானம் செய்கிறார். ஈரத் துணியுடனேயே அருளாசி வழங்குகிறார். எல்லாரும் இதைக் காணவே நூற்றுக் கணக்கில் கட்டணம் செலுத்திக் கூடுகின்றனர். பணம் கூடுதலாகக் கட்டித் தரிசனம் செய்பவர்களைத் ``தொட்டு அருளாசி வழங்குவாராம்.

இதற்குப் பணக்காரர்களின் வரிசை பெரிது. பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது.தரிசனம், விசேஷ தரிசனம் பற்றிய விவரங்களை இணைய தளத்தில் வெளியிட பார்த்த வெளிநாட்டுக்காரர்கள் வந்துகூடத் தொடங்கினர். ஆசிரமம் விரிவுபடுத்தப் பட்டது.கூடவே தொழிலும் விரிவானது.

திவ்யாவின் கணவர் ஜோஷி தம் மனைவியுடன் சேர்ந்து கொண்டு நோய்களைக் குணப் படுத்துதல், பேய் ஓட்டுதல் தொழிலைத் தொடங்கி விட்டார். வெளிநாட்டு வேலை, விசாவுக்கு ஏற்பாடு செய்தல் என்று தொழில் எல்லை விரிந்தது.

வந்தது ஆபத்து. இந்த வகையில் ஏமாற்றப்பட்டவர்கள் புகார் செய்தனர். காவல்துறை விசாரணை நடக்கிறது.

விஜயகுமாரி எனும் பெண் சேலை கட்டிக் குளித்து ஈரத் துணியுடனேயே தலையில் கிரீடம் வைத்து `தரிசனம் தந்து ஏமாற்றத் தொடங்கினார். கூலி வேலை செய்து வந்த அவரின் கணவர், ஷாஜிகுமார் ஜதிடர் வேடம் போட்டார். இரண்டு பேருமாகப் பணத்தை அள்ளத் தொடங்கினர்.

ஆசை அதிகமானது. நோய் தீர்க்கும் சக்தி இருப்பதாக விஜயகுமாரி அவிழ்த்து விட்டார். கூட்டம் மேலும் கூடிப் பணம் குவிந்தது. கூடவே ஆபத்தும் வந்தது. நோய் தீராதவர்கள் புகார் செய்தனர்.

காவல்துறை நுழைந்தது. விசாரணையில் காலை தரிசனத்திற்கு வந்து போகும் வி.அய்.பி.களில் ஒருவர் மத்திய மந்திரியாக இருந்தவராம். விசாரணையின் முடிவில் என்னென்ன கிளம்பப் போகின்றனவோ?
(மதுரை `மாலை மலர் 15.6.2008-இல் இதை வெளிப்படுத்தியுள்ளது. சென்னைப் பத்திரிகைகளில் காணோம். யாரைக் காப்பாற்றுகிறார்கள்?)

அமெரிக்கர்களுக்கு அறிவு உண்டா?
அமெரிக்க நாடு அறிவியல், தொழில் நுட்பத் துறைகளில் சிறந்து விளங்குகிறது. அறிவியலாளர்களும் தொழில் நுட்பவியலாளர்களும் தங்கிப் பணியாற்றிட வாய்ப்பு கள் நிரம்பப் பெற்றுள்ள நாடு. ஆராய்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் உலக அளவில் 40 விழுக்காடு செலவழிக்கும் நாடு.

பணக்கார நாடுகளைச் சேர்ந்தவற்றில் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோரில் 37 விழுக்காட்டினரையும் உற்பத்தியாளர்களில் 38 விழுக்காட்டினரையும் பெற்றுச் சிறந்து விளங்கும் நாடு.

நோபல் பரிசு பெற்றோரில் 70 விழுக்காடு பேர்கள் இந்நாட்டில் பணிபுரிகின்றனர். உலகிலேயே மிகச் சிறப்புடன் விளங்கும் விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் 66 விழுக்காடுக்கு மேல் இந்நாட்டில்தான் பணியாற்றுகின்றனர். உலகில் சிறந்த 20 பல்கலைக் கழகங்களில் முக்கால்வாசி இங்கேதான் உண்டு.

இத்தனைக்கும் காரணம் எது? ஆய்வே நடத்தப்பட்டுள்ளது. முடிவு இதுதான்:வெளி நாடுகளில் பிறந்த வளர்ந்த அறிவியலாளர்களும் பொறியாளர்களும் தான் இதற்குக் காரணம் என்று ராண்ட் கார்ப்பரேஷன் எனும் ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்னும்கூடச் சொல்லியிருக்கிறது - சீனாவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வந்திருப்பவர்களால்தான் இந்த உயர்நிலை எட்டப்பட்டிருக்கிறது என்பதையும் கூறியிருக்கிறது.

அமெரிக்காவின் வாழ்க்கை வசதிகள் வெளிநாட்டினரைக் கவர்ந்து அழைத்துப் பணியாற்ற வைத்ததால், அவர்களின் ஆற்றல் அமெரிக்காவின் ஆற்றலாகக் கருதப்பட்டு வருகிறது.

இந்த உயர் நிலைக்கு அமெரிக்கர்களின் அறிவோ, ஆற்றலோ உதவவில்லை என்பதையும் இந்த ஆய்வு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துவிட்டது.

டார்வின் கொள்கையைப் பாடமாகப் போதிப்பதா என்பதற்கு இன்னும் வாக்கெடுப்பு நடத்திக் கொண்டிருக்கும் மூட மதியாளர்கள் நிறைந்த நாடுதானே அமெரிக்கா!

கடவுளை நாங்கள் நம்புகிறோம் என்று டாலர் நோட்டில் அச்சுப் போட்டு மடமையைப் பறைசாற்றும் நாடுதானே அமெரிக்கா! கடவுளோடு கலந்து பேசி விட்டுத்தான் ஈராக் நாட்டுடன் சண்டைக்குப் போனேன் என்று அதிபர் புஷ் பேசினாரே, அதுபோதாதா ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற நிலையில் அமெரிக்கர்களின் அறிவை எடை போடுவதற்கு? சு. அறிவுக்கரசு
viduthalai.com
-----------------------------------------
திராவிடர் இயக்கம் என்றென்றைக்கும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும்.

ஜெபம் செய்தால் எல்லாம் வல்ல இயேசு ( கர்த்தர்) உயிர் தருவாரா?
----------------------------------
மற்ற பதிவுகள்

ஜெபம் செய்தால் எல்லாம் வல்ல இயேசு ( கர்த்தர்) உயிர் தருவாரா?

அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் மாநிலம் மிடில்ஸ் வொர்த் என்ற இடத்தை சேர்ந்தவர் மக்தலீன் ஆல்வீனா (வயது 90) நோய்வாய்ப்பட்டிருந்த இவர் கடந்த 2 மாதத்திற்கு முன்னர் இறந்து போனார்.


தாய்மீது மிகுந்த பாசம் வைத் திருந்த மகள் லீவிஸ் (35) மற்றும் 2 பேத்திகள் உடனடியாக அங்குள்ள சர்ச்சுக்கு சென்று பாதிரியார் `புசே என்பவரிடம் முறையிட்டனர்.

அவர்களிடம் ``எல்லாம் வல்ல இயேசு கிறிஸ்துவை மனம் உருக பிரார்த்தனை செய்யுங்கள். அவர் மக்தலீன் இறந்து போன உடலுக்குள் உயிரை ரட்சித்து தருவார் என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.

இதனையடுத்து மக்தலீன் உடலை வீட்டின் கடைசி அறையில் வைத்து நறுமணம் கமழும் பத்தி வகைகளை பொருத்தி வைத்து ஜெபம் செய்ய ஆரம்பித்தனர்.

இப்படியாக கடந்த 2 மாதங்கள் தனது தாயாரின் பிணத்துடன் லீவிஸ் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் மிடில்ஸ் வொர்த் நகரில் இருந்து 120 கி.மீ. தொலைவில் வாழ்ந்த மக்தலீன் உறவினர் ஒருவர் காவல்துறைக்கு ஒரு தகவல் கொடுத்தார்.என் உறவினர் மக்தலீனைப் பற்றி கடந்த 2 மாதமாக தகவல் எதுவும் இல்லை. அவர் என்ன ஆனார்? என்பதுபற்றி விசாரணை நடத்துங்கள் என்று அவர் கூறினார்.

இதனையடுத்து அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்திய போது மக்தலீன் விடுமுறையில் வெளியூர் போயிருப்பதாக லீவிஸ் கூறினார். இருந்தபோதிலும் காவல் துறையினரின் சந்தேகக் கண்கள் விடுவதாக இல்லை.

வீடு முழுவதும் அதிரடி சோதனையிட்டபோது மக்தலீன் பிணத்தை கண்டு பிடித்தனர்.

முழுக்க, முழுக்க சிதைந்து போன அந்தப் பிணத்தை மீட்டு, புதைத்தனர். பாதிரியார் புசேவையும், லீவிசையும் அவர்கள் கைது செய்தனர்.

viduthalai/20080621/sunday_news03.

Saturday, June 21, 2008

தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றிய திருப்பதி. விபச்சாரம் + கோயிலின் ஜாதிவெறி அம்பலப்படுத்தப்பட்டது.

திருப்பதி- திருமலையிலும் விபச்சாரம்! ஏழுமலையான் "கல்யாண நாடகம்" மோசடி!

திருப்பதி, ஜூன் 19- திருப்பதி கோயிலின் சார்பாக வெங்கடாசலபதி எனும் பொம்மையை ஆந்திராவிலும், தமிழ்நாட்டில் சென்னை தீவுத் திடலிலும் கொண்டு வந்து வைத்து, கல்யாண உற்சவம் என்று வித்தைகாட்டி மக்களை ஏமாற்றிப் பணம் சேர்த்தனர்.

இதே மாதிரி பொம்மையைத் தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதிகளுக்குத் தூக்கிச் சென்று, கடவுள் தாழ்த்தப்பட்ட மக்களைத் தேடி வருகிறார் எனப் பிரச்சாரம் செய்து தலித கோவிந்தம் எனக் கூறிப் பஜகோவிந்தம் பாடினர்.

இது தொடர்பாக திருப்பதிக் கோயில் நிருவாகமும், அர்ச்சகர்ப் பார்ப்பனர்களும் செய்த மோசடி சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

தலித கோவிந்தம் பஜனைக்குப் பயன்படுத்தப்பட்ட வெங்கடாசலபதி உருவப் பொம்மையை எங்கோ ஒரு மூலையில் தூக்கிப் போட்டுவிட்டனர் என்று தெலுங்குத் தொலைக்காட்சி ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

அதுபற்றிய சர்ச்சை நடந்து ஓய்ந்த மாதிரி இருந்தது. இப்போது ஆந்திர மாநில எஸ்.சி., எஸ்.டி., இன ஆணையம் இதுபற்றி ஆய்வுக்குழு ஒன்றை நாகராஜு என்பவர் தலைமையில் நியமித்தது,

அந்தக் குழு கோயில் நிருவாக அதிகாரியையும், தலைமை அர்ச்சகரையும் சந்தித்துப் பேசி விசாரணை நடத்தியுள்ளது. இந்தியக் குடியரசுக் கட்சியின் ஆந்திர மாநிலப் பொறுப்பாளர் அஞ்சையாவும் கோயிலுக்குப் போய் சிறப்பு அலுவலர் ஏ.வி. தர்மாரெட்டி, தலைமை அர்ச்சகர் ஏ.வி. ரமண தீட்சிதலு ஆகியோருடன் பேசினர்.

கடவுள் சிலை மூலையில்தெலுங்கு தொலைக்காட்சி செய்தியின்படி, வேமுடு அரிசன் வாடா எனும் தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்ட வெங்கடாசலபதி பொம்மை, தரிசனம் முடிந்து திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டு வந்து கோயிலின் கருவறைக்குள் வைக்கப்படாமல்,
அர்ச்சக பவனம் கட்டடத்தின் சமையல் கட்டில் மூலையில் போடப்பட்டது என்பது குற்றச்சாற்றாகும். இந்தக் கட்டடம் அர்ச்சகர்கள் பணி நேரத்தில் சாப்பிடவும், ஓய்வெடுக்கவும் பயன்படுகிறது.

உண்மை கண்டறியும் குழு நிருவாக அதிகாரி தர்மா ரெட்டியைக் கேட்டபோது இதை அவர் மறுத்தார். அர்ச்சகர்கள் அந்தப் பொம்மைக்கு தினப்படி தூபதீப நெய்வேத்தியச் சடங்குகளைச் செய்து வருவதாகக் கூறியுள்ளார்.

ஏன் கருவறையில் அந்தப் பொம்மையை வைக்கவில்லை எனக் கேட்டபோது, அங்கே எத்தனை பொம்மைகளை வைக்க வேண்டும் என்பதற்கு ஆகம விதிகளில் உச்சவரம்பு இருக்கிறது என்று தலைமை அர்ச்சகர் கூறினாராம்.ஒதுக்கிடத்தில் கடவுள்தாழ்த்தப்பட்டோரைத் தேடிக் கடவுள் வருகிறது என்று ஏமாற்றும் நாடகம் நடத்தப் போய்த் திருப்பதி கோயில் மாட்டிக் கொண்டு விழிக்கிறது.

தீட்டுப்பட்டு விட்ட பொம்மையைக் கோயிலுக்குள் வைக்காமல் தனியே (தாழ்த்தப்பட்ட மக்களை காலனியில் வைத்திருப்பது போலவே) வைத்திருக்கும் ஜாதி வெறியும், மோசடி நாடகமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. – viduthalai.com

திருப்பதி: திருப்பதி, திருமலைப் பகுதியில் 20 முதல் 25 இடங்களில் விபச்சாரம் கொடி கட்டிப் பறப்பதாகவும், 400க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் ஈடுபடுத்தப்படுவதாகவும் ஆந்திர மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து இந்த கழகத்தின் இயக்குநர் சந்திரவதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருமலைப் பகுதியில் 400க்கும் மேற்பட்ட பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

விபச்சாரம் நடத்துவதற்கு வசதியாக 20 முதல் 25 இடங்களை மையம் போல அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.திருப்பதியில் 3,500 பாலியல் தொழிலாளர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொழிலாகவே அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இப்பகுதிகளுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவதால், எய்ட்ஸ் பரவல் ஆபத்து அதிகமாக உள்ளது.மேலும், தமிழகம் மற்றும் கர்நாடகத்திலிருந்து திருப்பதியில் வேலை பார்க்க வரும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் எய்ட்ஸ் பரவும் ஆபத்து உள்ளது.

மே மாதம் 7064 ஆண்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதில், 268 பேருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

புனித நகரான திருப்பதியை விபச்சார மையமாக மாற்றி வருவது அதிர்ச்சி தருகிறது என்றார் அவர்.இந்தத் தகவல் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்குள்ள டிவி சானல்களில் பெரிய அளவில் செய்திகள் ஒளிபரப்பி வருகின்றன.

இந்த நிலையில், திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி கே.வி.ரமணா சாரி செய்தியாளர்களை அழைத்தார். அவருடன் சந்திரவதனும் இருந்தார்.சந்திரவதன் கூறுகையில், நான் சொன்னதை மீடியாக்கள் தவறாக செய்தி வெளியிட்டு விட்டன. திருப்பதி தேவஸ்தானத்தை உஷார்படுத்தும் நோக்கில்தான் நான் அவ்வாறு கூறினேன் என்றார்.

ஆனால் சந்திரவதன் பேட்டியில் கூறியதை நிருபர்கள் சுட்டிக்காட்டியபோது, அவர் பதில் பேசாமல் எழுந்து போய் விட்டார்.

பின்னர் சாரியிடம் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியபோது, திருமலையில் விபச்சார மையம் எதுவும் இல்லை. பயணிகள் போல வருபவர்கள் சிலர் இதுபோல நடந்திருக்கலாம் என்று மட்டும் பதிலளித்து விட்டு கிளம்பி விட்டார்.இருப்பினும் திருப்பதியிலும், திருமலையிலும் விபச்சாரம் கொட்டி கட்டிப் பறப்பதாகவும், அதை கட்டுப்படுத்தாமல் தேவஸ்தானம் மெளனம் காத்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ---- thatstamil news.
----------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

சென்னை வைணவக் கல்லூரியில் இட ஒதுக்கீடு மோசடி

ஆசிரியர் நியமனத்தில் தமிழருக்கு வேலை வாய்ப்பு மறுப்பு.

சென்னை, ஜூன் 20- சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தி.கோ. வைணவா கல்லூரியில் ஆசிரியர் நியமனம், மாணவர் சேர்க்கையில் மிகப் பெரிய அளவில் இட ஒதுக்கீடு மோசடி நடைபெறுவது தெரிய வந்துள்ளது. இந்த மோசடிக்கு அரசு அதிகாரிகள் சிலரும் துணை போய் இருப்பதாக் கூறப்படுகிறது.

சிறுபான்மைக் கல்லூரி என்ற தகுதியின் அடிப்படையில் இக்கல்லூரி இயங்கி வருகிறது.

1993 ஆம் ஆண்டிற்கு முன்னர் உரிமையியல் நீதிமன்றங்கள் மூலமாகவே மொழிச் சிறுபான்மைத் தகுதியைப் பெற முடியும் என்ற நிலை இருந்ததால், இக் கல்லூரியும் சென்னையில் உள்ள நீதிமன்றம் ஒன்றின் மூலம் இத்தகுதியை, சலுகைகளையும் பெற்று வருகிறது.

ஆனால் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், கல்வி நிறுவனங்களுக்குச் சிறுபான்மை தகுதி வழங்கும் உரிமை மாநில அரசுக்கு மட்டுமே உண்டு என்றும், நீதி மன்றங்கள் மூலம் பெறப்பட்ட சிறுபான்மைத் தகுதி செல்லாது என்றும் அறிவித்தது.

அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நீதிமன்றங்கள் மூலமாகக் கல்வி நிறுவனங்கள் பெற்ற சிறுபான்மைத் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக கடந்த 1998 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி தமிழகக் கல்வித் துறை வெளியிட்ட ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வைணவா கல்லூரியின் மொழிச் சிறுபான்மைத் தகுதியும் நீக்கம் செய்யப்பட்டது.பின்னர் சிறுபான்மைத் தகுதி பெற வைணவா கல்லூரி எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இக்கல்லூரிக்கு சிறுபான்மைத் தகுதி வழங்கி அரசு எந்த ஆணையையும் வெளியிடவில்லை.

தமிழக அரசின் நிதி உதவி பெற்று நடத்தப்படும் இக்கல்லூரியில் 90 விழுக்காடு இடங்கள் அதாவது மொத்தமுள்ள 2 ஆயிரம் இடங்களில் 1800 இடங்களுக்கு இட ஒதுக் கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும்.

ஆனால் தங்களைச் சிறுபான்மைக் கல்லூரி எனக் கூறிக் கொண்டு 50 விழுக்காடு இடங்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுகிறது.
இதனால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களின் இட ஒதுக்கீடு பறிக்கப்படுவதாகக் கல்வியாளர்கள் குற்றம் சாற்றியுள்ளனர்.

ஆசிரியர் நியமனத்திலும் இட ஒதுக்கீடு முறை முற்றிலுமாகக் கடைபிடிக்கப்படுவதில்லை. இதை அந்தக் கல்வி நிறுவனமும் ஒப்புக் கொண்டுள்ளது. இட ஒதுக்கீடு முறை கடைப் பிடிக்கப்படாததால் தமிழர்கள் அல்லாதவர்களே அங்கு ஆசிரியர்களாகப் பணியமர்த்தப்படுகின்றனர்.
--- viduthalai.com

Friday, June 20, 2008

கீதையை திரித்துக் கூறவேண்டிய அவசியமில்லை--- கனிமொழி எம்.பி.

சென்னை, ஜூன் 19- பகவத் கீதையை திரித்துக் கூறவேண் டிய அவசியம் தனக்கு இல்லை என்று நாடாளுமன்ற உறுப் பினர் கவிஞர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை விவரம்:
ஜூன் 17 அன்று வெளியான தினமணி யில் விநாயகர் வி. முரளி என்பவர் கீதையில் இல்லாத கருத்துகளை கடலூரில் நடந்த தி.மு.க. மகளிரணி மாநாட்டில் கனிமொழி பேசியிருக்கிறார். இதுபோன்ற கருத்துகள் பகவத்கீதையில் இல்லை என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதர்மாபி பவாத் க்ருஷ் ணப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய; ஸ்தரீஷீ துஷ்டாஸு வார் ஷனேய ஜாயதே வர்னாஸங் கர

இது கீதையின் முதல் அத்தியாத்தில் 40-ஆவது பாடல். கிருஷ்ணனை நோக்கி சொல்வதாக வருகிறது. விருஷ்ணி குலத்தில் பிறந்தவனே, குடும்பத்தில் அறமின்மை தலையெடுக்கும்போது குடும்பப் பெண்கள் களங்கப்படுகின்றனர்.

பெண் சீரழிந்து கெட்டுப்போவதால்தான் வருணாசிரம தர்மம் அழிந்து தேவையற்ற சந்ததிகள் பிறக்கின்றன என்பது அதன் பொருள்.

இந்தக் கடைசி வரியைத் தான் நான் மாநாட்டில் சுட்டிக்காட்டிப் பேசினேன்.

கீதையை மேற்கோள் காட்டுவதோ, உபநிஷத்தை, மகா பாரதத்தை, ராமாயணத்தை, பைபிளை, குரானை, திருக்குறளை மேற்கோள் காட்டுவதென்பதோ தடை செய்யப்பட்ட ஒன்றல்ல.

கீதையை திரித்துக் கூற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

ஒரு கருத்தாக்கமோ, சமூக வழக்கமோ, அது பாரம் பரியமானதாக இருந்தாலும் கூட அதை இன்றைய கால கட்டத்தோடு பொருத்திப் பார்க்கும்போது அதன் நிறை குறைகளை பாதிப்புகளை ஆராய்ந்து பார்க்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

உலகத்தின் அத்தனை மரபு களும், மதங்களும், கோட்பாடுகளும் இன்று ஒரு மறு வாசிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதை நாம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மதத்தின் பெயரால், பாரம்பரியத்தின் பெயரால் பழம் பெருமையின் பெயரால் பெண்கள் ஒடுக்கப்பட்டது என்பது நிதர்சனம். அதை எதிர்க்கும் குரல்கள் எழும் போது இப்படிப்பட்ட கண்டனங்கள் எழும் என்பதும் நிதர்சனம்.

ஆனால், பகவத் கீதையைக் காக்க கொடி தூக்குபவர்கள், அதில் என்ன இருக்கிறது என்பதைப் படித்துவிட்டு அதைச் செய்வது உத்தமம் என்று அவ்வறிக்கையில் கனி மொழி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவை உள்ளடக்கத்தில் ஓர் இந்துத்துவாவாதிதான். கனிமொழி பேச்சும் - வெங்கைய நாயுடுவின் வினாவும்!
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

ஜெயலலிதாவை உள்ளடக்கத்தில் ஓர் இந்துத்துவாவாதிதான். கனிமொழி பேச்சும் - வெங்கைய நாயுடுவின் வினாவும்!

பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் அகில இந்தியத் தலைவர் திரு. வெங்கைய நாயுடு சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியுள்ளார்.

கடலூர் மாநாட்டில் கனிமொழி பேசும்போது, மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், தமிழகம் இன்னொரு குஜராத் மாநிலமாக மாறிவிடும் என்றார். குஜராத் மாநிலத்தில் அப்படி என்ன குறை உள்ளது? - என்ற வினாவை எழுப்பியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவைப் பொறுத்தவரை - வெளியில் அண்ணா தி.மு.க. என்ற முத் திரையைக் குத்திக் கொண்டு இருந்தாலும் உள்ளடக்கத்தில் ஓர் இந்துத்துவாவாதிதான் என்பதைப் பல நேரங்களில் வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்.

குஜராத் மாநில முதலமைச்சராக நரேந்திர மோடி பதவியேற்றபோது, அந்தப் பதவி ஏற்பு விழாவுக்குச் சென்ற ஒரே ஒரு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாதான்.

அதே நரேந்திரமோடி சென்னை வந்தபோது தன் வீட்டுக்கு அவரை அழைத்து தடபுடலாக விருந்தும் அளித்து தன் இந்துத்துவா விசுவாசத்தைக் காட்டிக் கொண்டவர். அத்தகைய ஒருவர் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு குஜராத் ஆக மாறும் என்று கவிஞர் கனிமொழி கூறியிருப்பதன் பொருள் எளிதாகப் புரிந்துகொள்ளக் கூடியதுதான்.

110 கோடி மக்கள் தொகையுள்ள இந்தியாவில் பல இனம், பல மொழி, பல கலாச்சாரம், பல மதம், மதமற்ற தன்மை என்கிற நிலையில், மக்கள் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர்.பா.ஜ.க.வின் அணுகுமுறை என்ன? அதனைப் பரீட்சார்த்தமாக நரேந்திர மோடி மூலம் குஜராத்தில் அரங்கேற்றி இருக்கின்றனர்.

2002 இல் கோத்ரா இரயில் நிலையத்தில் சபர்மதி இரயிலில் ஏற்பட்ட ஒரு நிகழ்வின் பின்னணியில், நரேந்திர மோடியின் தலைமையில் உள்ள ஓர் அரசால், மக்களை மத வாரியாகப் பிரித்து, இந்துக்களை ஏவிவிட்டு, முஸ்லிம்களைப் பூண்டோடு அழிக்கும் குரூர வன்முறை ஏவிவிடப்பட்டது.

இரண்டாயிரம் முசுலிம்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பொடா சட்டத்தின்கீழ் 287 பேர் கைது செய்யப்பட்டனர் என்றால், அதில் 286 பேர் முசுலிம்கள் - ஒருவர் சீக்கியர். எந்த சிறுபான்மை மக்கள் பாதிப்புக்கு ஆளானார்களோ, அவர்களே பொடாவின் கீழ் கைதும் செய்யப்பட்டனர்.

இதன்மூலம் இந்துக்கள் வாக்கு - முசுலிம்கள் வாக்கு என்று மத அடிப்படையில் வாக்கு வங்கி உருவாக்கப்பட்டது.

இந்த முறையை இந்தியா முழுமையும் அமல்படுத்த வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் திட்டம். அதனை நரேந்திர மோடி வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொடுத்தார் என்பதுதான் அவர்களின் வட்டாரத்தில் அவரைத் தூக்கிப் பேசும் காரணமாகும்.

இந்த நிலை தமிழ்நாட்டுக்கு வந்துவிடக் கூடாது என்பதுதான் கவிஞர் கனிமொழி கடலூர் மாநாட்டில் பேசியதன் கருத்தாகும். இதனைப் புரிந்துகொண்டு இருந்தும், திருவாளர் வெங்கைய நாயுடு குஜராத்தில் அப்படி என்ன குறை? என்று வினா எழுப்பியுள்ளார்.

கனிமொழி அவர்களை நோக்கி திருவாளர் வெங்கையா நாயுடு வினா எழுப்புமுன், அவரை நோக்கி முக்கிய வினா ஒன்று இருக்கிறது.

குஜராத்தில் நடைபெற்ற மதக் கலவரத்திற்குப் பின் அன்றைய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பேயி கூறினாரே நினைவிருக்கிறதா?

எந்த முகத்தோடு நான் வெளிநாடு செல்வேன்? என்றாரே - ஏன் அப்படிச் சொன்னார்? சொல்ல வேண்டிய அவசியம் ஏன் வந்தது? என்ற வினாவுக்கு விடை எதுவோ, அதுவேதான் கவிஞர் கனிமொழி கடலூர் தி.மு.க. மகளிர் மாநாட்டில் ஆற்றிய உரைக்கான பொருளுமாகும்.என்ன புரிகிறதா?
---------------------------------


தந்தை பெரியார் அறிவுரை:-
புலி வேட்டை "பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளனாய் இருக்கும் நாடு கடும் புலி வாழும் காடாகும். ஆதலால், நாங்கள் புலி வேட்டை ஆடுகிறோம். புலி மேலே பாய்ந்தால் ஒருவர், இருவர் கடிபட வேண்டியதுதான்."
("விடுதலை", 20.10.1960)

இந்தக் கல்லூரியின் தலைவர் யார் தெரியுமா? கடவுள் அனுமனாம்?.புண்ணியம்?

அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

Thursday, June 19, 2008

இந்தக் கல்லூரியின் தலைவர் யார் தெரியுமா? கடவுள் அனுமனாம்?.புண்ணியம்?

கைநாட்டு: உத்தரப்பிரதேசம் லக்னோவில் உள்ளது சர்தார் பகத் சிங் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகவியல் கல்லூரி.இந்தக் கல்லூரியின் தலைவர் யார் தெரியுமா? கடவுள் அனுமனாம். இவருக்குத் தனி அறை உண்டாம். தனி நாற்காலி உண்டாம். அந்த நாற்காலியில் அனுமன் உட்கார்ந்திருப்பாராம் (படம்தான்).

நிருவாகக் குழுக் கூட்டத்திற்கு அனுமன்தான் தலைமை வகிப்பாராம். கடிதப் போக்குவரத்து அனைத்தும் கல்லூரித் தலைவர் அனுமன் பெயரில்தான் நடக்குமாம்.

அது சரி, கடிதப் போக்குவரத்தில் கடவுள் அனுமன் கையயொப்பம் போடுவாரா? போர்ஜரியாக வேறு எவராவது போடுவார்களா அல்லது அனுமன் கைநாட்டுப் பேர்வழியா?
----------------------------------------
புண்ணியம்: யமுனா நதியில் கழிவு நீர் கலப்பதால் சாக்கடையாகிவிட்டதாம். சுற்றுலாப் பயணிகளுக்கு நாற்றம் பொறுக்காமல் ஓட்டம் பிடித்தார்களாம்.

அப்படி சொல்லலாமா, புண்ணிய நதி ஆயிற்றே! முழுக்குப் போட்டால் போதும்; மோட்சம் கிடைப்பதாகத்தானே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதுதானே அய்தீகம்? 12 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் கும்பகோணம் மகாமகத்தன்று இந்த புண்ணிய நதிகள் எல்லாம் கும்பகோணம் வருமாமே! அது எப்படி துருநாற்றம் எடுக்கும் நதியாக மாறிற்று?

யமுனை என்ன, கங்கை முதல் எல்லாப் புண்ணிய நதிகளும் இந்தக் கெதியில்தான் உள்ளன. இந்தப் புண்ணிய நதிகளின் நீரை எடுத்து பரிசோதித்தால் கொடுமையான நோய் கிருமிகள்தான் இருக்கும் சாவுலகம்தான் போகவேண்டும். ஓகோ, அதுதான் சொர்க்கமோ!
viduthalai.com.
----------------------------------
இந்த இடத்தில் மட்டும் பக்தர்கள் கொஞ்சம் பகுத்தறிவைப் பயன்படுத்தத்தான் செய்கிறார்கள்.`

இந்த இடத்தில் மட்டும் பக்தர்கள் கொஞ்சம் பகுத்தறிவைப் பயன்படுத்தத்தான் செய்கிறார்கள்.`

முடி: திருத்தணி முருகன் கோயிலுக்குப் பக்தர்கள் காணிக்கையாக அளித்த முடி ரூ.1.15 கோடிக்கு ஏலம் போயிற்றாம்.

முடி என்று கேவலமாகக் கூறப்படுவது கடவுளுக்குக் காணிக்கையாக்கப்படுகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது?

முடியைவிடக் கேவலமாக ஒருவர் இருந்தால்தான் - அதனைக் காணிக்கையாக அளிப்பார்கள் என்பது விளங்கவில்லையா?

பக்தர்கள் ஏமாற்றுக்காரர்களாகவும் இருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

கடவுளிடம் வேண்டுதல் தெரிவிப்பவர்கள் என்ன சொல்லுகிறார்கள்?

என் கையை வெட்டித் தருகிறேன் - குறைந்தபட்சம் ஒரு சுண்டு விரலை வெட்டித் தருகிறேன் என்றா சொல்கிறார்கள்?

எதை மழித்தால் மீண்டும் முளைக்குமோ அந்த முடியைத்தானே காணிக்கையாகத் தருகிறார்கள்?

இந்த இடத்தில் மட்டும் பக்தர்கள் கொஞ்சம் பகுத்தறிவைப் பயன்படுத்தத்தான் செய்கிறார்கள்.` --- viduthalai.com.

`ஆர்.எஸ்.எஸ். நாளேடான ` தினமணி தன் ஆற்றாமை.

அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

Wednesday, June 18, 2008

`ஆர்.எஸ்.எஸ். நாளேடான ` தினமணி தன் ஆற்றாமை.

கோயில் விழாக்களுக்கு தடை வருமா?

கடலூரில் நடைபெற்ற பெண்கள் மாநாடு, பேரணி, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், ஆற்றப்பட்ட சொற்பொழிவுகள் பார்ப்பனர் வட்டாரத்தை பா.ஜ.க., வட்டாரத்தை ஆணிவேர் வரை சென்று தாக்கியுள்ளது என்பது அந்த வட்டாரங்களின் எதிர்வினைகளிலிருந்து நன்கு உணர முடிகிறது.

பொதுக் கூட்டங்கள், மாநாடுகள், பேரணிகளை அரசியல் கட்சிகளும் சரி, சமுதாய இயக்கங்களும் சரி நடத்துவது என்பது வாடிக்கையான ஒன்றே.
மக்கள் நாயகத்தில் தத்தம் கருத்துகளைப் பரப்புவதற்கு, கொள்கைகளை எடுத்துக் கூறுவதற்கு இவை எல்லாம் சிறப்பான அணுகுமுறைகளும், வழிமுறைகளும் ஆகும்.

நீதிமன்றங்கள் இதில் குறுக்கிடுவது ஏன் என்று தெரியவில்லை. நாட்டில் எந்த பிரச்சினைகளுமே இல்லாது ஒழிந்தால் ஒருக்கால் இவர்களுக்கெல்லாம் வசதியாக இருக்கும்போலும்!

சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பினை வைத்துக் கொண்டு `ஆர்.எஸ்.எஸ். நாளேடான `தினமணி தன் ஆற்றாமையைத் தலையங்கத்தின் வாயிலாக வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறது.

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தம் பின்னால் இருக்கிறார்கள் என்பதைக் காட்டிக் கொள்ளவும், தங்களைத் தாங்களே தைரியப்படுத்திக் கொள்ளவும் மாநாடு, பேரணிகளை நடத்தி வருகிறார்கள் என்றும் இதனால் பல லட்சம் ரூபாய்கள் விரயமாக்கப் படுகின்றன என்றும், பல மணி நேரம் உழைப்பு வீணாகிறது என்றும், மிகவும் கவலைப்படுவதுபோல `தினமணி தலையங்கம் தீட்டித் தள்ளியுள்ளது.

திராவிடர் கழகம் - திராவிட இயக்கக் கொள்கைகளை உடைய அமைப்புகள் மொழி, இனம், கலாச்சார, அமைப்புகள் மக்கள் மத்தியிலே கருத்துப் பிரச்சாரம் செய்வதையும் மக்கள் அதற்கு ஆதரவு கொடுத்து வருவதையும் தாங்கிக் கொள்ள முடியாத பார்ப்பன வட்டாரம்,

இதுபோன்ற குரலைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டேதான் வந்திருக்கிறது; கடலூர் மாநாடு என்பதும் அண்மைக் காலத்தில் அவாளுக்கு ஏற்படுத்தியுள்ள அதிர்ச்சியின் விளைவாக இப்பொழுதும் அந்தச் செல்லரித்து போன சங்கதியைத் தூசு தட்டி மறு பதிப்புச் செய்கிறார்கள்.

பேரணிகளிலும், மாநாடுகளிலும் மக்கள் கூடுவது என்பதெல்லாம் வீண் வேலை, விரயம் என்று கூறுகிற இந்தக் கூட்டத்தை நோக்கி நாம் மிக எளிதாக அவர்கள் தொடுத்த அம்புகளையே - நாம் திருப்ப முடியும்.

மகாமகம் என்றும், கும்பமேளா என்றும் மக்களை இலட்சக்கணக்கில் கூட்டுகிறார்களே, மகர ஜோதி மோசடி என்று தெரிந்திருந்தும் அதனை விளம்பரப்படுத்தி மக்களை இழுக்கிறார்களே,

வருடம்தோறும் பிரமோற்சவம் என்ற பெயரிலே கொடியேற்றம், கோயில் திருவிழாக்களை நடத்துகிறார்களே, தேரோட்டம் என்று கூறி 50 கிலோ சிலையை வைத்து 5 டன் எடையுள்ள தேரை உருவாக்கி 5000 பேர்கள் சேர்ந்து இழுக்கிறார்களே –

இவற்றையெல்லாம் இதே கண்ணோட்டத்தில் விமர்சிப்பதற்கு தினமணி வகையறாக்கள் தயார்தானா? இது குறித்தும் நீதிமன்றம்தான் பார்வையைச் செலுத்துமா?

மக்களைக் கூட்டி கருத்துகளை தெரிவிப்பது, கொள்கைகளை முழக்கமாக ஒலிப்பது என்பதில் கருத்துப் பரவல் என்ற நோக்கம் இருக்கிறது.
கோயில் திருவிழா என்று சொல்லி ஆயிரக்கணக்கான டின் நெய்யை நெருப்பில் போட்டு எரிப்பது, யாகம் என்ற பெயரால் உணவுப் பொருள்களை நாசமாக்குவது என்பதில் எல்லாம் பொருள் நட்டம், மனித உழைப்பு விரயம், கால விரயம் என்பவையெல்லாம் இடம் பெறவில்லையா?

இவற்றை எல்லாம்விட புத்தி நாசமாக்கப்படுகிறதே இது எவ்வளவுப் பெரிய கொடுமை!

மதத்தின் பெயரால் எது நடந்தாலும் சரியானது; அறிவின் பெயரால் எது நடந்தாலும் குற்றம் மகா குற்றம் - என்று பேசுவதெல்லாம் எழுதுவதெல்லாம் பிற்போக்குத்தனங்களைப் பாதுகாக்கும் பார்ப்பனீயத்தனம் என்பதை அறிவுள்ளவர்கள் உணரவே செய்வார்கள்.

கோயில் விழாக்களை முதலில் தடை செய்துவிட்டு, அதன்பின் மற்றவற்றையும் பேசினால் அதற்குப் பெயர்தான் அறிவு நாணயம் என்பதாகும். viduthalai.com
---------------------------------
கொலை வெறி தூண்டும் நூலே கீதை! கனிமொழி எம்.பி., கூறியதில் குற்றமென்ன?
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

கொலை வெறி தூண்டும் நூலே கீதை! கனிமொழி எம்.பி., கூறியதில் குற்றமென்ன?

இதோ ஆதாரங்கள்:ஜாதி (வர்ணமதர்ம) பாதுகாப்பு, கொலை வெறி தூண்டும் நூலே கீதை!

கடலூரில் நடைபெற்ற திமுக மகளிரணி மாநாட்டில் தந்தை பெரியார் படத்தினை திறந்து வைத்துப் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி அவர்கள்,

``இந்த தேசத்தில் வருணாசிரமம் தொடங்கிய அந்தக் காலகட்டத்தி லிருந்து, அதற்கான எதிர்ப்புகளும் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஏன், கீதையே கூட அதன் எதிர்ப்பாகத்தான் எழுதப்பட்டது என்று சொல்லப் படுகிறது.

கீதையில் அர்ச்சுனன் கிருஷ்ணனைப் பார்த்துச் சொல்கிறான்;பெண்ணின் துர்புத்தியால் தான்இங்கு வருணாசிரம தர்மம்அழியப் போகிறது என்று!அப்படியானால் உங்களுக்கெல்லாம் இருக்கும் பொறுப்பு என்ன என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் மனமாற்றத்தினால்தான் இந்த ஜாதி அழியும் என்ற பொறுப்பை 4000 ஆண்டுகளுக்கு முன்னால், அர்ஜுனன் நம்மீது ஏற்றி வைத்து விட்டுப் போயிருக்கிறான்.

ஆனால் கீதையே, இப் படி பல இடங்களில் திரும்பத் திரும்ப ஜாதியத்தை வலியுறுத்தி, அது இந்த எதிர்ப்புகளுக்கு எதிர்ப்பான விஷயமாகத்தான் இருந்திருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். என்று சுட்டிக்காட்டியுள்ளார்,

கீதை ஒரு கொலை நூல் என்பதையும் திலகருடைய மேற்கோள் ஒன்றையும்கூட பொருத்தமாகச் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார் கவிஞர் கனிமொழி.

இதை எதிர்த்து விநாயகர் வி. முரளி அறிக்கை ஒன்றை இன்றைய (`தினமணி 17.6.2008) நாளேடு ஒன்றில் விடுத்துள்ளார்.``பகவத் கீதையில் இல்லாததை திரித்துக் கூற வேண்டாம் என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு இந்து இயக்கங்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் விநாயகர் வி. முரளி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கை:`பெண்களால்தான் வருணாசிரம தர்மம் அழியும் என்று கீதையில் அர்ஜூனன் கூறுகிறார் என கடலூரில் நடைபெற்ற தி.மு.க., மகளிரணி மாநாட்டில் கனிமொழி பேசியிருக்கிறார்.

இது போன்ற கருத்துகள் பகவத் கீதையில் இல்லை. இவ்வாறு இல்லாத கருத்துகளை திரித்துக் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது என்று விநாயகர் வி. முரளி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். என்று `தினமணியில் செய்தி வந்துள்ளது.

அப்படி எதுவும் கீதையில் இல்லை; இல்லாததை கனிமொழி கூறியுள்ளார். என்று கூறியுள்ளார். இது உண்மைக்கு மாறான செய்தியாகும்.

திராவிடர் இயக்கப் பேச்சாளர்களோ, எழுத்தாளர்களோ (திருமதி கனிமொழி உட்பட) ஆதாரமில்லாமல் எதையும் பேச மாட்டார்கள்.

கீதையின் முதல் அத்தியாயத்திலேயே உள்ள சுலோகங்களில் உள்ள கருத்தைத் தான் கவிஞர் கனிமொழி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

``கிருஷ்ணா, அதர்மம் சூழ்ந்துவிட்டால், குலப்பெண்கள் கெடுவர்.
பெண்கள் கெட்டால் வர்ணசாங்கரியம். (குலங்களின் கலப்பு) ஏற்பட்டு விடும்.``அதர்மாபிபவாத் க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்திரிய:ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸ்ங்கர:(அத்.1 - சுலோகம் - 41)

இந்த உண்மையைத்தான் ஆதாரப்பூர்வமாக கவிஞர் கனிமொழி கூறியுள்ளார்.கீதையைப் பரப்புபவர்களைவிட எதிர்ப்பவர்கள்தான் உள்ளபடியே படித்து ஆதாரப் பூர்வமாகக் கூறுகிறார்கள் என்பது இதன் மூலம்
விளங்கவில்லையா. - கி. வீரமணி. viduthalai.com.
-------------------------------------------
திராவிடர்களுக்கு மானமும் ரோஷமும் வரவேண்டுமென்பதற்காகவே இதை எழுதுகிறேன்.
----------------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

Tuesday, June 17, 2008

திராவிடர்களுக்கு மானமும் ரோஷமும் வரவேண்டுமென்பதற்காகவே இதை எழுதுகிறேன்.

ராமன் மனிதனே! கம்பன் கடவுளாகக் காட்டினான்!இராவணன் பெரிய வீரன்;சீதையைக் கடத்தவில்லை; அடைக்கலம் கொடுத்தான். தமிழர்கள் எதற்காக இராமனை வணங்குதோ, இராமாயணத்தை ஒரு பக்தி சரித்திரமாகக் கொள்ளுவதோ ஆன காரியம் செய்ய வேண்டும்?

தமிழர்கள் எதற்காக இராமனை வணங்குதோ, இராமாயணத்தை ஒரு பக்தி சரித்திரமாகக் கொள்ளுவதோ ஆன காரியம் செய்ய வேண்டும்?

தமிழன், நாட்டில், கலையில், மொழியில் ஆரியர்களிடமிருந்து வேறுபட்டவன்.
கடவுளிலும், சமயத்திலும், சரித்திர புராண இதிகாசங்களிலும், இலக்கியத்திலும் வேறுபட்டவன். இவை மாத்திரமல்லாமல் சமுதாயத்திலும் இழிவு படுத்தப்பட்டு ஆரியனிலிருந்து தாழ்வு படுத்தப் பட்டவன்.

ஆரியரால் தமிழருக்கு இழி நிலைஇந்த இழிவுக்கும் தாழ்வுக்கும் ஏற்பவே ஆரியன் கடவுள், மத, சாத்திர, தர்ம புராண இதிகாசங்களை அவனது மொழியில் இயற்றிக் கொண்டிருக்கிறான்.

அவற்றை தமிழன் தன் மொழியில் மொழி பெயர்த்து அவற்றிற்கு அடிமையாகி இழிநிலையில் இருப்பதோடு, இழிவை ஏற்றுக் கொள்ளுவதற்கு ஆகவே அவைகளை தன்னுடையது என்று உரிமை கொண்டு ஏற்ற இழிவை உறுதிப்படுத்திக் கொள்வது தமிழனுக்கு அறிவுடைமை யாகுமா? மானமுடையதாகுமா?

இந்திய தீபகற்பம் 53 தேசங்களைக் கொண்ட ஒரு உபகண்டமாய் இருந்த காலத்தில், ஆரியனுக்கும் திராவி டனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாமல் தனித்தனி நாட்டானாகவும் ஒருவனுக்கு ஒருவன் அயல் நாட்டானாகவுமே இருந்து வந்திருக்கிறான்.அப்போது தமிழனுக்கு கடவுள், சமயம் முதலியவை வேறாகவே இருந்திருக்கிறது.

ஆரியத்துக்கு தமிழர் எதிர்ப்பு 2500 ஆண்டுகட்கு பின்பேசுமார் 2500 ஆண்டுகளுக்குப் பின்புதான் ஆரியம் தமிழகத்திற்குள் நுழைந்திருப்பதாகத் தெரிகிறது. ஆரியத்திற்கு எதிர்ப்பும் திராவிடத்தில் பலமாக இருந்திருக்கிற தாகவும் தெரியக் கிடக்கிறது.

நாளாவட்டத்தில் ஆரியம், திராவிடத்தில் சிறப்பாக தமிழ்நாட்டில் வளர்ந்து, அரசர்களின் மடமையால் இரண்டறக் கலந்து திராவிடரை ஆரியம் அடிமை கொண்டுவிட்டது.

ஆரியரை வெறுத்தால்தான் மான வாழ்வுஇன்று ஒரு சிறு அளவாவது ஆரியத்தில் இருந்து திராவிடம், தமிழன் விடுதலையும் உரிமையும் பெற்று வருகிறான் என்றால், அது ஆரிய வெறுப்பினாலும், ஆரிய கடவுள்களையும், சாதி, தர்ம, புராண, இதிகாசங்களின் பகிஷ்காரத்தினாலுமே அல்லாமல் திராவிடனின் அறிவுணர்ச்சியாலோ, சுயமரியாதை உணர்ச்சியாலோ அல்லவே அல்ல.

இனியும் நல்ல அளவுக்கு திராவிடர் - தமிழன் அறிவும் மானமும் பெற்று உலக மக்களைப் போல விடுதலையும் சுதந்திரமும் பெற்று வாழ வேண்டுமானால்,

எந்த அளவுக்கு தமிழன் ஆரியக் கடவுள், மத சாஸ்திர, தர்மபுராண இதிகாச சம்பிரதாயக் கலாசாரத்தில் இருந்து விலகுகிறானோ அந்த அளவுக்குத்தான் நிறை வேறும் என்று துணிந்து கூறுவேன்.

ஆரியத்தை திராவிடர்மீது திணிப்பவர் துரோகிகளேஇன்று மடமையினாலோ, மானமற்ற தன்மையாலோ, சுயநலத்திற்காகவோ, ஆரியத்திற்கு ஆரியனுக்கு அடிமையாகி, ஆரிய கடவுள், மத, சாஸ்திர, தர்ம, கலாச்சார, புராண, இதிகாசங்களுக்கு அடிமையாகியும் திராவிடருக்குள் அவைகளைப் புகுத்தவும் முயலுகிற திராவிடன், திராவிட மந்திரி, திராவிட அதிகாரிகள், திராவிடப் புலவர்கள், திராவிட அரசியல்வாதிகள், திராவிட ஆரிய அடிமைகள் தமிழர்களுக்குக் கேடு செய்யும் பச்சைத் துரோகிகளே ஆவார்கள்.

திராவிட அதிகாரிகளுக்கு மானமும் ரோஷமும் வரவேண்டுமென்பதற்காகவே இதை எழுதுகிறேன்.பெரியார் (விடுதலை 4-5-1972)
--------------------------------------------------------
சிறீலங்கா, வங்காளத் தொன்மை இலக்கியம் கூறுகிறது

கொழும்பு, ஜூன் 16- சிறீலங்காவி லும் மற்றும் வங்காளத்தில் வழங்கப்படும் ராமாயணத்தில், இராவணனைப்பற்றி மிகவும் உயர்வாகக்கூறப்பட்டிருக்கிறது.

இராவணன் சீதையை எடுத்துச் செல்லவில்லை; அதற்கு மாறாக, ராமனும், லட்சுமண னும் சீதையைப் பெருந்தொல்லைக்கு ஆட்படுத்தினார்கள்; ஆகையால், சீதை அடைக்கலம் தேடிச் சென்றாள். அவளுக்கு இராவணன் அடைக்கலம் அளித்தான்.

இவ்வாறு, இலங்கையில் உள்ள ராமாயணம் தெரிவிப்பதாக, பிலியந்தாலா எனும் இடத்தில் உள்ள நாட்டியப் பள்ளியைச் சேர்ந்த பபாலு விஜெகுணவர்தனெ தெரிவித்தார்.

கேரளத்தில் உள்ள கதக்களி நாட்டியத்தில் இராவணன் வில்லனாகக் காட்டப்பட்டாலும், அவனுடைய உயர்ந்த குணங்களும் வெளிப்படுகின்றன; அவனுடைய அறிவுத் திறமும், வீரமும் அதில் வெளிப்படுகின்றன.

மகா ராவணாஆனால், சிறீலங்காவில் தொன்மைக் காலத்தில் இருந்து சொல்லப்படும் கதையில் இராவணன் உயர்ந்த குணம் உடையவனாகச் சொல்லப்படுகிறது. அரிசென் அஹுபுது மற்றும் ஜயந்த்த பதிராரச்சி ஆகிய கற்ற புலவர்களை, விஜெகுண வர்தனெ கலந்து ஆலோசித்தார். பின்பு, லங்கா அவதார சூத்ரா எனும் நூலின் அடிப் படையில் ஒரு நாட்டிய நாடகத்தை உருவாக்கினார்.

அதற்கு மகா ராவணா எனப் பெயர். மே 30 இல் கொழும்புவில் அரங்கம் நிரம்பி வழிய இது அரங் கேற்றப்பட்டது.மகா ராவணா எனும் நாட்டிய நாடகத்தில் ராமனும், ராவணனும் வீரர்களாகவும், நேர்மையாளர்களாகவும் தோன்றுவதில்லை. ஆனால், இராவணன் நேர்மைமிக்க வீரனாகத் திகழ்கிறான்.
மறைக்கப்படும்உண்மைகள்.வாலியும், சுக்ரீவனும் போரி டும்பொழுது, போர் அறத்திற்கு மாறாக, ராமன் பின்புறம் இருந்து அம்பு எய்துவது காட்டப்படுகிறது.

இந்தியாவில் உள்ள இராமாயணத்தில் மறைக்கப்படும் உண்மைகளை தான் உலகத்திற்கு வெளிப்படுத்தியிருப்பதாக, விஜெகுணவர்தனெ கூறினார்
---------------------------------------------------

தண்டகாரண்யத்திற்குப் பக்கத்தில் இலங்கைராமன் மனிதனே! கம்பன் கடவுளாகக் காட்டினான்!

வால்மீகி இராமாயணம் கி.மு. 4 அல்லது 3-ஆம் நூற்றாண்டில் தோன்றியது. தசரத ஜாதகம் முதலான புத்த ஜாதகக் கதைகள் கி.மு. 5-ஆம் நூற்றாண்டிற்கும் கி.மு. முதல் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் தோன்றியவை. எனவே வால்மீகியின் இராமாயணம் ஜாதகக் கதைகளின் அடிப்படையில் இயற்றப்பட்டிருக்கலாம் என்னும் கருத்தைச் சில அறிஞர்கள் முன் வைத்துள்ளனர்.

இராமன், பரதன், சீதை போன்ற தலைமைப் பாத்திரங்களின் ஒழுகலாறுகளுள் அஹிம்சை, சாந்தம் போன்ற, சத்திரியர்களுக்கு ஏலாத பண்புகள் காணப் படுவதால், அவை புத்தமதக் கோட்பாடுகளின் செல்வாக்கால் படைக்கப்பட்டிருக்கலாம் என்னும் கருத்தும் நிலவுகிறது.

வால்மீகியின் காப்பியம் இராமகாதையின் மூலம் அன்று; வால்மீகியின் காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இராம காதைச் செய்திகள் பல்வேறு கதைகளின் மூலமாகவும், நாட்டுப்புற வாய்மொழிக் கதைகளின் மூலமாகவும் இந்தியாவின் பல்வேறு பிராந்தியங்களில் வழங்கி வந்தன;

அவற்றை அடிப்படையாகக் கொண்டு புத்த ஜாதகக் கதைகள், வால்மீகி இராமாயணம், சமணக் கருத்துகளை உட்கொண்ட சிறுசிறு நூல்கள் போன்றவை தோன்றின. இச்செய்தி வால்மீகி இராமாயணம் என்னும் தலைப்பின்கீழ் இந்நூலுள் விளக்கமாகக் கூறப் பெற்றுள்ளது.

புத்த ஜாதகக் கதைகளில் கூறப்படும் இராமாயணச் செய்திகள், உரைநடை வடிவில் பௌத்தக் கோட்பாடுகளை விளக்கும் முகமாகக் கூறப்படுகின்றன. தசரத ஜாதகத்தில் புத்தர் பெருமான், `பண்டைய நாளில் புராண பண்டிதர்கள், (போராணக் பண்டிதர்) தந்தையின் மறைவுக்காகச் சிறிதும் வருந்துவதில்லை எனக் கூறி தசரதன் மறைவுக்காக இராமன் வருந்தாமல் இருந்தமையை உதாரணமாகக் கூறுகிறார் என்னும் செய்தி கூறப்படுகிறது.

எனவே இந்தக் கதைகளுக்கு முன்னரே இராமாயணக் கதை நாட்டில் வழங்கி வந்தமை புலனாகும் (புல்கே. ப. 57).ஜாதகக் கதைகளைப் பொறுத்த வரையில் தசரதனின் தலைநகரம் வாரணாசி; இராமனும் சீதையும் உடன் பிறப்புகள்; வனவாசம் செல்லுமிடம் இமயமலைப் பகுதி; வனவாச காலம் 12 ஆண்டுகள். வால்மீகியின் ஆதிராமாயணத்தில் தலைநகரம் அயோத்தி; இராமனும் சீதையும் தொடக்கம் முதலே கணவன் மனைவியர்; வனவாசம் சென்ற இடம் தண்டகாரண்யம்; வனவாச காலம் 14 ஆண்டுகள்; குப்தர் காலத்திற்குச் சற்று முன்னர் வனவாசம் தண்டகாரணியத்தையும் தாண்டிச் சென்று இராவண வதத்தையும் உள்ளடக்கியதாக வான்மீகம் விரிவடைந்தது.

இத்தகைய வேறுபாடுகளை நோக்க, நாட்டில் பண்டு தொட்டே வழங்கிவந்த இராமாயணம் தொடர்பான கதைகளைக் கருவாகக் கொண்டு பௌத்த நூல்களும், வால்மீகி போன்ற கவிஞர்களும் தத்தம் கோட்பாடுகளுக்கேற்பப் பாத்திரங்களையும் கதை நிகழ்ச்சிகளையும் அமைத்துக் கொண்டனர் எனஅறிகிறோம்.

சில பிற்கால ஜாதகக் கதைகளில் வால்மீகியின் தொடர்களும் கருத்துகளும் ஆங்காங்கே காணப்படுதலின், வான்மீகத்திற்குப் பின்னர் அவை தோன்றி யிருக்கலாம் அல்லது பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அறிஞர்கள் கருதுவர்.

ஜாதகக் கதைகள்பௌத்த மதத்தினர்க்குரிய பழைய இலக்கியம் ஜாதகக் கதைகள் என்னும் பெயரில் வழங்குகிறது. புத்த பகவான் தம்முடைய முற்பிறவிகளில் மனிதனாகவும் விலங்குகளாகவும் அவதரித்து மக்களுக்கு வழிகாட்டியாக வாழ்ந்த வரலாறுகளை இந்த ஜாதகக் கதைகள் கூறுகின்றன.

மக்களிடையே வழங்கி வந்த பல்வேறு கதைகளைப் பயன்படுத்திப் புத்த மதக் கருத்துகளை உபதேசிக்க இக்கதைகள் பயன்படுத்தப் பெற்றன. இத்தகைய பழங்கதைகளுள் இராம காதைச் செய்திகள் பலவும் இடம் பெற்றுள்ளன. எனவே ஜாதகக் கதைகளுக்குள் முற்பட்ட காலத்தில் இருந்தே இராம காதை மக்களிடையே வழங்கி வந்தமை புலனாகிறது.

ஜாதகக் கதையின் அமைப்புதோற்றுவாய், எடுத்துக்காட்டுக் கதை, முடிவுரை என்னும் மூன்று கூறுகளை உடையதாக ஒவ்வொரு ஜாதகக் கதையும் அமைந்துள்ளது. கதை கூறுவதற்குக் காரணமான உடன்கால நிகழ்ச்சிகள் தோற்றுவாய்ப் பகுதியில் கூறப்படுகின்றன.

மானுடச் சிக்கலை மையமிட்ட அந்நிகழ்ச்சிகளுக்குப் பரிகாரமாக அல்லது விளக்கமாகப் புத்த பெருமான் ஒரு கதை கூறுகிறார். அது எடுத்துக்காட்டுக் கதைப் பகுதியில் இடம் பெறுகிறது. அத்தகைய எடுத்துக்காட்டுக் கதையில் முற்பிறவியில் புத்தர் எந்தப் பாத்திரமாகச் செயல்பட்டார் என்னும் விளக்கம் முடிவுரையில் கூறப்படுகிறது.

இம்மூன்று கூறுகளுள் இடையில் அமைந்த கதைப் பகுதிகளில்தான் இராம காதைபற்றிய செய்திகள் இடம் பெறுகின்றன. இக்கதைகள் தசரத ஜாதகம், அனாமகம் ஜாதகம், தசரத சுதானம் என்னும் மூன்று தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் தசரத ஜாதகம் காலத்தால் முற்பட்டதாகவும் மிகவும் சிறப்பானதாகவும் புகழ்ந்து பேசப் பெறுகிறது.

தசரத ஜாதகம்ஜாத கட்ட வண்ணனை என்னும் தொகுப்பில் தசரத ஜாதகம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஜாதகட்ட வண்ணனை கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு சிங்கள நூலிலிருந்து பாலியில் மொழி பெயர்க்கப்பட்டது.

இதில் காணப்படும் கதைகள், பழைய பாலிமொழியில் இயற்றப்பட்ட பாடல்களுக்கு எழுதப்பட்ட உரைவடிவில் இயற்றப்பட்டவை.

அதாவது, பண்டைய பாலி கவிதை இலக்கியத்திற்கு எழுதப் பெற்ற உரைகளில் பல கதைகள் கூறப்பட்டிருந்தன. இவை கி.பி.5-ஆம் நூற்றாண்டளவில் சிங்கள மொழியில் பெயர்க்கப்பட்டு வழங்கி வந்தன.

பின்னர் இக்கதைகள் மீண்டும் புதிய பாலி மொழியில் ஜாத கட்ட வண்ணனை என்னும் பெயரில் பெயர்க்கப்பட்டன. இந்த வடிவம்தான் தற்போது வழக்கில் உள்ளது. பழைய பாலியில் அமைந்த கவிதைகளோ, அவற்றிற் கமைந்த உரைகளோ தற்போது வழக்கில் இல்லை.

எனவே கி.மு.வில் தோன்றிய கதைகள் சிங்களத்திற்கு மொழி பெயர்ந்து கி.பி.யில் மீண்டும் பாலி வடிவம் பெற்றுள்ளன என அறிகிறோம். அதனால் மூலவடிவம் கருதி தசரத ஜாதகம் கி.மு. 5-ஆம் நூற்றாண்டுக்கு உரியது எனச் சில அறிஞர்கள் கருத, பின்னைய வடிவம் கருதிக் கி.பி. 5-ஆம் நூற்றாண்டுக்கு உரியது எனச் சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

அனாமகம் ஜாதகம்கி.பி. 3-ஆம் நூற்றாண்டளவில் அனாமகம் சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. இதற்கடிப்படையான இந்திய நாட்டின் முதல் நூல் இன்னதென அறிய இயலவில்லை. கிடைக்கவும் இல்லை.

மறைந்து போன மூல நூலின் அடிப்படையிலும் தசரத ஜாதகத்தின் சாயலின் அடிப்படையிலும் இந்த நூலும் கி.மு. 5-ஆம் நூற்றாண்டுக்கு உரியது என அறிஞர்கள் கருதுகின்றனர்.இந்த ஜாதகக் கதையில் இராமாயணப் பாத்திரப் பெயர்கள் எவையும் குறிப்பிடப் பெறவில்லை.

ஆனால், இராமன் சீதை இருவரின் வனவாச வாழ்க்கை, சீதையைக் கடத்திச் செல்லுதல், ஜடாயுவின் வாழ்க்கை வரலாறு, வாலி - சுக்ரீவன் போர், சேது பந்தனம், சீதையின் அக்கினி பரீட்சை ஆகிய இராம காதை நிகழச்சிகள் பெயர் குறிப்பிடப் பெறாமல் கூறப் பெறுகின்றன. இவையெல்லாம் போதி சத்துவரின் வாழ்க்கையில் நடைபெறு வனவாகக் காட்டப் பெறுகின்றன.

தசரத சுதானம்கி.பி.2-ஆம் நூற்றாண்டிற்கு உரியதாகக் கருதப்படும் மறைந்து போன இந்திய மூலத்தின் சீன மொழிபெயர்ப்பாகிய (கி.பி. 472) திபிடகத் தொகுப்பில் அடங்கியுள்ள 121 வீரதீரக் கதைகளில் (அவதானங்கள்) தசரத சுதானம் என்னும் கதை காணப்படுகிறது. சீன திபிடகத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள பல கதைகளில் கனிஷ்க மன்னன் தலைமைப் பாத்திரமாக வருவதால் இக் கதைகள் கி.பி.2-ஆம் நூற்றாண்டிற்குரியனவாகக் கருதப்படுகின்றன.

எனினும் பாலி மொழியின் மூலக் கதைதான் சீன மொழியில் பெயர்க்கப் பெற்று பின்னர் மீண்டும் பாலியில் மொழி பெயர்க்கப்பட்டிருத்தலால் முதல் நூல் கி.மு.வில் தோன்றி இருக்கலாம் என்னும் கருத்தும் அறிஞரிடையே நிலவுகிறது.

தசரத சதானத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், இதில் சீதை என்னும் அரசகுமாரியின் பாத்திரமே இடம் பெறாததுதான்.

எனவே, சீதையின் பிறப்பு, திருமணம், வனவாசம், இராவணனால் கடத்தப் பெறல், இராம- இராவணப் போர் என்னும் நிகழ்ச்சிகள் எவையும் இல்லாத ஓர் இராமாயணமாக இக்கதை காணப்படுகிறது.

எல்லா ஜாதகக் ககைளும் இராமனைப் புத்த பகவானின் அவதாரங்களில் ஒன்றாகப் படைத்துக் காட்டுகின்றன. (புல்கே 56-62) - ஆர். பார்த்தசாரதி-தென்னக ஆய்வு மய்யம், சென்னைநன்றி: ``இராம காதையும் இராமாயணங்களும் நூலின் முன்னுரை .viduthalai.com
------------------------------------
கலைஞர் கருணாநிதி -- கங்கையின் காதல்!
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்