Followers

Saturday, May 24, 2008

தலையில் தேங்காய் உடைக்கலாமா?

``தேங்காயைக் கையில் உடைக்கும்போது எலும்பு, சதை மட்டும்தான் உடைந்து பாதிப்பு ஏற்படும். ஆனால் தேங்காயை தலையில் உடைக்கும்போது மூளை பாதிக்கும்.

அதனால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. காரத்தே பயிற்சியில். கையில் உடைப்பது, போல் ஏன் செய்யலாமே என்று கேட்கலாம்.

தலையில் உள்ள எலும்புடன் மட்டும் சிக்கல் நிற்காது. உள்ளே மிகவும் மிருதுவான ஜெல்லிமாதிரி இருப்பதுதான் மூளை. ஒரு குழந்தையை குலுக்கினாலே கூட மூளை ஆடலாம். அதனால் பிரச்சினை வரலாம்.

மூளையில் இரண்டு மூன்று வகை உண்டு அதில் நான் சொல்வது அதிர்ச்சி (Concussion), அடுத்து, அடிபட்டு கண்ணிப்போதல், (Contussion), மூன்றாவது Nuronal Damage, Oxonol Damaage. Oxonal என்பதுதான் அடிப்படை செல்.

அதாவது - நரம்புகள் சிதறி போவது: பிய்ந்து போவது. குத்துச் சண்டையில் பத்து அடி அடித்தவுடன் பார்த்தால், அடிவாங்கியவர் தள்ளாடி தள்ளாடிப் போய் குடிகாரன் மாதிரி மயக்கமாகி விழுவார். இதே சூழ்நிலை தேங்காய் உடைக்கும்போதும் வரலாம்.

ஒரு முறை தேங்காய் உடைக்கும்போது தேங்காய் இரண்டாக உடைந்தால் சரி, அப்படிஇல்லாமல் 2,3 தடவை உடைத்தால் தலையில் காயம் ஏற்படும். தலையில் எந்த இடத்தில் உடைக்கிறார்கள் என்பதுதான் மிக முக்கியம்.

தலையின் மேல் பக்கம் புடைத்த மாதிரி உள்ள இடத்தில்தான் தேங்காய் உடைப்பார்கள். அந்த இடம் கனமாக இருக்கும். அப்படி அடிக்கும் போதுகூட தேங்காயைப் பொறுத்து, அடிக்கும் வேகத்தைப் பொறுத்து தலையில் பாதிப்பு ஏற்படலாம்.

இந்த மாதிரி மூன்று விதத்திலும் எது மாதிரியும் உடையலாம். இது பிரைமரி டேமேஜ் ஆகும். இதனால் உள்ளே இருக்கும் ரத்தக் குழாய் உடைந்து கட்டி ஏற்படலாம். இது உடனேயும் நடக்கலாம், தாமதமாகவும் ரத்தக் கட்டி வரலாம். ஹெமட்டோமா மூளையில் உள்ளேயும் இருக்கலாம் வெளியேயும் இருக்கலாம்.

அதன் அழுத்தம் அதிகரித்து மூளை நசுங்க ஆரம்பிக்கும். அதனாலேயும் தொந்தரவு ஏற்படும்.ஒவ்வொரு வருடமும் இதையே அடிக்கடி செய்தாலும் அவர்களுக்கும் உறுதியாக மூளையின் செயல் திறமை மங்கிப் போகும்.

உதாரணம் சொல்ல வேண்டுமானால், குதிரை ஓட்டுபவர்கள் குதித்துக் குதித்து அடிக்கடி கீழே விழுவார்கள். அப்போது அவர்களுக்கு நினைவில்லாமல் மறதி அதிகமாகவும், மூளையின் வேலை திறனும் குறைந்து போகும்.

யாராவது வந்தால் அவர் யார் என்று தெரியாது. ஏதாவது பொருளை வைத்து விட்டு, எங்கே வைத்தது என மறந்து போகும். இதனை நினை வற்ற தன்மை என்று சொல்கிறார்கள். ஒரு விதமான குழப்பம் எனவும் கூறலாம். மூளையின் செயல்திறன் குறைந்து சுருங்கி ஒரு குழந்தை மாதிரி ஆகிவிடுவார்கள்.

இதை குத்துச் சண்டை மற்றும் குதிரை ஓட்டிகளை ஆய்ந்தபோது கண்டறிந்துள்ளார்கள். இந்த ஒரு சூழ்நிலையும் இவர்களுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

காலந் தாழ்ந்த நிலையில், கை, கால் செயல்படாமல் போகலாம். இதற்கு சப்டியூரல் ஹெமட்டோமா SDH, EDH (Extra Dural Hema toma) என்று பெயர். ஒரு உதாரணம் சொல்லுகிறேன். ஒரு வயதானவர் சாலையில் விபத்தில் அடிப்பட்டவர் உடனே எழுந்து விடலாம். ஆனால் ஒரு மாதம், இரண்டு மாதம் கழித்து மருமகள் சாப்பாடு போடும் போது திரு திரு என்று முழிப்பார். சாப்பிட்டுவிட்டு, சாப்பிடவில்லையே என உளறுவார். அப்புறம் நடக்கும்போது கொஞ்சம் இழுத்து நடக்க ஆரம்பிப்பார்.

SDH, EDH இருந்தால் ரத்தக் கசிவு அதிகரித்துப் போய் மூளையின் அழுத்தத்தினாலே கை, கால் விளங்காமல் போகலாம். டிமென்சியாவும் பரவலாம். வலிப்பு வரலாம் (Fits) இந்த மூன்றும் வரலாம், மூன்றில் ஏதாவது ஒன்றும் வரலாம்.

அதுவும் உடனடியாகத் தெரியாது. 3,4 மாதம் கழித்து வரும். இந்த மாதிரி வரும் சமயம் நாங்கள் கேட்பது, கீழே விழுந்தீர்களா?.. தலையில் அடிப்பட்டதா? உங்களை அறியாமல் கீழே விழுந்தது உண்டா? எனக் கேட்போம்.

ஸ்கேன் எடுத்து பார்த்த பிறகுதான் SDH இருப்பது தெரியும். இதனால் காலம் போக போக (பிட்ஸ்) வலிப்பும் வரலாம். SDH, EDH காரணங்களினால் கை, கால் விளங்காமல் போகலாம். வாதம் மாதிரி வரலாம்.

தலையில் தேங்காய் உடைத் துக் கொள்பவர்களை அந்தக் கிராமத்திற்குப் போய் பார்த்து பேசி அழைத்து வந்து CT ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் நன்றாக இது தெரிந்து போகும்.

வயதான பெண்களாக இருப்பவர்கள் தலையில் தேங்காய் உடைத்தால் உடனே எலும்பு உடையும், அபாயம் நேரும். எலும்பு சற்று லேசாக இருந்தாலும் உடனே உடைந்து விடும்.

இதில் உடனடியாக ரத்தக் குழாய் உடைப்பு ஏற்படலாம். மூளை மிகவும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு இரும்புப் பெட்டி (Box) யைப் போல் தலை அமைந்துள்ளது.

இருதயத்திற்குக்கூட இந்தப் பாதுகாப்பு இல்லை! வேறு எந்த ஒரு உறுப்புகளுக்கும் உடலில் இந்த மாதிரி பாது காப்பு கிடையாது. எனவே மூளை உயிர்த்தலம் போன்றது. அதனைப் பாதுகாப்பது அவ சியம் என மருத்துவ ரீதியாக உடல் நலப்பாதிப்பு ஏற்படுவது குறித்து டாக்டர் என். திலோத் தம்மாள் விளக்கினார். நன்றி: 'உண்மை' ஆகஸ்டு 16-31 (2005)

இவ்வளவு விஞ்ஞான ரீதியான மருத்துவ ரீதியான உண்மைகள் இருக்கும்பொழுது பேரையூரில் குழி மாற்றுத் திருவிழாவை நிறுத்தியது போல, கோயில்களில் தேங்காய் உடைக்கும் மூடநம்பிக்கையை மக்கள் நலன் கருதி மக்கள் நல அரசு ஆணை பிறப்பிக்குமா? தமிழ்நாடு அரசின் சமூக சீர்திருத்தத் துறையும் இதனைக் கொஞ்சம் கவனிக்கலாமே! viduthalai.com

No comments: