Followers

Sunday, May 25, 2008

பக்தியின் பெயரால் இழைக்கப்படும் தண்டனைக்குரிய குற்றங்கள்

பக்தியின் பெயரால் இழைக்கப்படும் தண்டனைக்குரிய குற்றங்கள்
கடவுள் நம்புதல் என்பது மூடத்தனம், முரட்டுத்தனம் மட்டுமல்ல பிடிவாதமானதும்கூட.

இதற்கு மேற்கொள் தான் அண்மையில் புகைப் படத்துடன் வெளிவந்த தீமிதி நிகழ்வு. ஒருவன் தனது மூன்று குழந்தைகளுடன் தீயில் புரண்டது. அதற்காக முதற்கண் வருந்துகிறோம்.

அடுத்து அநியாயமாக இந்த சமுதாயத்தின் கோரத் திருவிழாக்கள் இப்படிப் புரளவிட்டுவிட்டதே. இது தேவைதானா? என்பது நமது முதற்கவலை. ஆனால் கடவுள் பக்தர்களின் சமாதானம் என்ன தெரியுமா?

உங்களுக்கு நேரடியாக ஆத்தாளிடம் வந்ததாக ஒரு செய்தியைக் குறிப்பிடுவார்கள். அவன் என்ன செய்யக் கூடாததைச் செய்து விட்டு தீக்குழியில் இறங்கினானோ? ஆத்தாளுக்குப் பிடிக்கவில்லை என்பவர் ஒரு புறம்.

மற்றொரு கூட்டம் தீமிதித்தவர் அத்தனை பேருமா அப்படியானார்கள். இவர்கள் அதிமேதாவிகள். இந்த மேதாவிகள் கடவுள் போதையில் திக்கு முக்காடுபவர்கள் ஆவர்.தண்டனைக்குரியது இந்தத் தற்கொலை முயற்சி உயிரைப் பணயம் வைக்கும் நிகழ்வு. இது தண்டனைக்குரியது.

அவனுக்காக மட்டும் நாம் பரிதாபப்படவில்லை. ஏதோ பைத்தியக்காரத்தனமான உந்துதலில் அறியாக் குழவிகள் மூன்றையும் அல்லவா கவலைக்கிடமாக்கிவிட்டான். ஆத்தாள் செயலைப் போல் நிறைய எடுத்துக் காட்டுகள் உண்டு.

வேண்டுதல் என்ற பேரால், ஒருவன் தலை மீது பலர் கூடி தேங்காய் உடைப்பார்கள். இது ஒரு வேண்டுதல். தானே தன் தலையில் தேங்காய் உடைத்துக் கொண்டால் போய்த் தொலைகிறான் என்று விடலாம்.

பலபேர் அல்லவா விளாசுகிறார்கள்; இன்னும் சிலர் இடுப்பில் குழந்தைகள் சுமந்து கொண்டு அவர்கள் நாக்கிலே முருகப் பெருமான் சூளம் குத்தப்பட்டிருக்கும் குங்குமத்துடன், மற்றும் சில குழந்தைகளின் கன்னத்தினைத் துளைத்து முருகப் பெருமான் வேலைக் கழட்டாமல் விளையாடுவார்.

கிராஸ் பார் எது எவனோ! வேண்டிதற்காக நேர்த்திக் கடன். அந்தப் பிள்ளைகள் அழவும் முடியாது. எப்படியெனில் காலைக் கட்டிவிட்டால் எப்படி ஓட முடியும். அதே போல் முருகப் பெருமான் ஆயுதம் நாக்குக்கு மேல் கன்னத்தில் கிராஸ் பார் ஆடுகிறதே. இப்படியான லீலா வினோதங் கள் கோயில் விழாக்களில் நிறைய கண்கொள்ளாக் காட்சியாக நடைபெறும்.

தார்க்குச்சிமுன்பெல்லாம் கிராமப்புறங்களில் இருந்து டவுனுக்கு பாரவண்டி ஓட்டி வரும் வண்டிக்காரர்கள் இரண்டு கம்புகள் மாட்டை ஓட்ட எடுத்து வருவார்கள். நகர்ப்புற எல்லைக்குள் புகுந்ததும் ஒரு கம்பை ஒளித்துவிட்டு, மற்றொன்றை எடுத்து மாட்டை அடித்து விரட்டுவார்கள். அவர் ஒளித்து வைத்த மற்றொரு கம்பின் முனையில் கூரான ஊசி செருகப்பட்டிருக்கும். அதற்குப் பெயர் தார்க்குச்சி என்று சொல்லுவார்கள்.

யாருக்குப் பயந்து நகருக்குள் அந்த தார்க்குச்சியை வண்டிக்குள் ஒளித்து வைப்பார்கள் என்றால் யாருக்குமல்ல. ளு.ஞ.ஊ.ஹ. என்று ஒருவர் இருப்பார். அவருக்குப் பயந்துதான். அதாவது வனவிலங்குகள், வாயில்லாப் பிராணிகள் வதைத் தடுப்புச் சட்ட கண்காணிப்பாளர். அப்போது அந்த சட்டம் மிக நன்கு பயன்படுத்தப்பட்டது. இப்போதும் இருக்கிறது என்று நினைக்கிறோம். அது.

மூன்று வாயில்லாப் பிராணிகளைத் தூக்கிக் கொண்டு போன அங்காளம்மன் பக்தனை ளு.ஞ.ஊ.ஹ. பிடிக்கக்கூடாதா என்ன. மூன்று குழந்தைகளும் அப்பனால் வாயில்லாப் பிராணிகளானார்கள். அப்பனோ, அம்பாளால் வாயில்லா பிராணியாகிவிட்டான்.

இப்போது யாரைத் தண்டிக்க வேண்டும். அதை ஆசிரியர்தான் வழி கூறவேண்டும்; பிராணிகளுக்கு ளு.ஞ.ஊ.ஹ. , அவாள் மொழியில் சொன்னால், இவாளை யெல்லாரையும் அவாள் அப்பிராணியாகத் தானே ஆக்கியிருக்கிறார்கள்.

சமூக சீர்திருத்தக் குழுவின் கவனத்துக்குகாலமாற்றத்தால் பெண்களே மூக்கைத் துளைப்பதை விட்டுவிட்டார்கள். வரவவர காதைத் துளைப்பதையும் விட்டு இதற்கு ஈடாக கழுத்தைச் சுற்றி வலுவாக்கிவிடுவார்களோ என்னவோ.

சமூக சீர்திருத்தக் குழு கவனிக்க வேண்டியது நாக்கில் வேல் குத்துவது, கன்னத்தில் கிராஸ்பாராக வேல் குத்தி வள்ளி வீட்டுக்காரர் விளையாடுவது. இவைகளை நமது வாகிய சமூக சீர்திருத்தக் குழு கடுமையாக தடுத்தாட் கொள்ள வேண்டும்.

இவைகள் எல்லாம் இக்காலங்களில் பிச்சை யெடுப்போர் தொழிலாகிவிட்டது. அலகு காவடி வரை.தாடி வளர்த்தவரெல்லாம் சுருள் முடி வைத்தவரெல்லாம் சாமியார். மன்னிக்கவேண்டும். பெண் சாமியாரிணிகளுக்கு தாடி உண்டா என்று கேட்க வேண்டாம்.

ஒரு பக்கத்தில் சிக்கல். மிகு சுருட்டாய் முடியிருந்தால் அரை பவுன் வரை வேண்டியதை வேண்டி வேண்டும்போது எடுத்துக் கொடுக்க உதவியாக இருக்கும். சிறார்களைக் கொண்டு மரபணு சோதனை மூலம் தாய் தந்தையரைக் கண்டுபிடிப்பது போன்று கண்டுபிடிக்கும் மோதிரங்கள் சாமியார்களை எங்கிருந்து வந்து அண்டியது அல்லது தஞ்சம் புகுந்தது என்பது அறியும் நாள் நெருங்கி விட்டது.

தாடியிருந்தால்தான் சாமியார் என்றால் வருங்காலத்தில் தடியும் தாடியும் சாமியாரிணிகளுக்கும் மாயமாய் வரும் என்பதில் வியப்பேதும் இல்லை.

அப்படி வந்தால் கூட, கண்ணைத் திறந்து பார்த்தால்தானே தாடி பற்றித் தெரியும். பக்த கோடிகள்தான் மெய்மறந்த நிலையில் கண் மூடி நிற்பவர்களாயிற்றே. இங்கேயும் சமூக சீர்திருத்தக் குழு தன் வேலையைக் கச்சிதமாகச் செய்து முடிக்க வேண்டும்.

இப்படி ஒரு குழு வேறு எந்த ஆட்சியிலும் இல்லை. சமூக சீர்திருத்தக் குழு என்பது நாத்திகர்களின் குழு என்பதை மறந்து விடக் கூடாது.

நாசுக்காக இந்தக் குழு இவர்களை ஒடுக்கெடுக்க ஆளாக்க வேண்டும் அரசு துணையுடன்.புராதன காலங்களில்புராதன காலங்களில் சாமி இருளில் இருந்தது. அதற்குப் படையல் போட தீவட்டி கையில் ஏந்தி அந்த சாமியின் முகம் தெரியக் காட்டிக் கொண்டு போன படையலை எடுத்து வந்து எல்லோரும் பகிர்த்துண்பர்.

இப்போது கண்ட கண்ட இடங்களில் எல்லாம் மின்சார விளக்கு வந்து விட்டது. இனிமேல் சாமி கருவறைக்குப் பாதுகாப்பாக உள்ள நிலைக்கதவு ஓரங்களில் அகல் விளக்கு தேவையில்லை. மின்சார விளக்குப் பயன் படுத்தலாம்.

காரணம் எண்ணெய் என்பது உணவுப் பண்டம். எந்தக் காரணத்தைக் கொண்டு மனிதனுக்கு உணவாகப் பயன்படும் பண்டங்கள் வீணடிக்கப் படக்கூடாது. ஒப்புக்காகக் கூறினால், கோயில்களில் தீபம் என்ற பேரால் ஏற்றப்படும் விளக்குகளில் நெய்யோ எண் நெய்யோ ஊற்றி பாழ்படுத்தக்கூடாது.

நல்ல சக்தி வாய்ந்த மின் விளக்குகளையே ஏற்பாடு செய்யலாம். மலை மீது ஏற்றப்படும் விளக்குகள் (தீபங்கள்) எத்தனை சக்தி (ஏடிடவ) வேண்டுமோ லட்சக்கணக்கான வோல்ட் மின்சார ஒளி விளக்காய் பயன்படுத்தலாம்.

எண்ணெய் டின்கள் லட்சக்கணக்கில் பாழ்படுத்துவதைத் தவிர்க்க, அரசு ஆவன செய்யலாம். அறங்காவலர் துறை அரசு வசம்தான் உள்ளது. செருகச் செருக ஒழிக்கப்பார்க்கலாம். தீபம் ஒரு இடத்தில்தான் மலையில் ஏற்றுவார்கள். அடிவாரம் முதல் மலை முகடு வரை எல்லா விடங்களிலும் மின்னொளி விளங்குகளால் ஒளிவிடத்தானே செய்கிறோம்.

வெளிச்சம் தான் முக்கியம். அது எண்ணெயாலோ கருவேல மரத்தாலோ, மின்சார விளக்காகலோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மின்சாரம் இல்லாத காலத்தில் எண்ணெய் விளக்கு ஏற்றப்பட்டதே தவிர. மின்சாரத் துறை வந்த பின் அருணகிரிநாதர் இருந்திருந்தால் அதைத்தான் பயன்படுத்தி யிருப்பார்.

வானவூர்தி வந்தபின் நான் நடந்துதான் வெளிநாடு செல்வேன் என்று அடம் பிடிப்பவர்களுக்கு நாம் என்ன அறிவுரை கூற முடியும்?

எனவே சமூக சீர்திருத்தக் குழு நன்கு முடுக்கி விடப்படவேண்டும், அரசு சட்ட பூர்வ உதவியுடன் என்பது எனது வேண்டுகோள்.

பிராமி கல் வெட்டுக்களில் தமிழ் எழுத்துக்கள் அய்காரமும், அவ்காரமும் தவிர்க்கப்பட்டு உயிர் எழுத்து அய்ந்தே அ இ உ எ ஒ இருந்திருக்கிறது. ஆங்கிலத்தில் எப்படி ஹ நு ஐ டீ ரு உள்ளதோ, அது போலவே உள்ளது. அய்யாவின் எழுத்து சீர்திருத்தத்தில் நிறைய தேவையற்ற எழுத்துக்களை வாய்ப்புக்கேற்ப ஏற்றல் தவிர்த்தல் என்பனவற்றில் ஞ ன ந போன்றவற்றை எடுத்தாண்டிருக்கிறார்கள்.

ஐ கார ஔ கார எழுத்துக்கள் தவிர்க்கப் பட்டுள்ளன. ஐ காரத்தின் சுருக்கமே . இந்த எழுத்துக்களின் வடிவத்தை யகர மெய்யும் (ய்) வகர மெய்யும் (வ்) அ கரம் பின்னேற்று நிரப்புதலறிக. எள்+நெய் = என்பதே எண்ணெய் என்றாயிற்று. அல்வழி இவற்றோடுறழ்வும் என்ற இலக்கணப்படி எ;ளில் உள்ள மெய் ணகரமாக மாறி எண்ணெய் ஆனது காண்க.

எனவே, வாய்க்கும் இடங்களில் வாய்மை என்பது வாய்மெய் என்றும் தாய்மை என்பது தாய்மெய் என்றும் நஞ்சை என்பது நன்செய் என்றும் புஞ்சை என்பது பொன்செய் என்பதே சரியானதாகும். எழுத்துச் சீர்திருத்ததம் சரியாக, முதன் முதலாக, தமிழ்ப் புலவர்கள் அறிமுகப்படுத்துவதற்கு முன்னால் செய்தவர் என்ற பெருமை தந்தை பெரியாரையே சாரும்.
- வழக்கறிஞர் இரா. பெ. பாண்டியதுரை, சென்னை
viduthalai./20080525/news

No comments: