Followers

Friday, May 9, 2008

படங்கள்.ஒழுக்கம் கெட்ட மதகுருக்கள்.காலை கழுவி முத்தமிடும் போப்.

அரச குடும்பத்தினர் பில்லியனர்களின் காலை கழுவி முத்தமிடும் போப்.
--------------------------------
ஒழுக்கம் கெட்ட அமெரிக்க மதகுருக்கள் குறித்து வெட்கப்படுகிறேன் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்த போப் பேச்சு

மதகுருக்கள் செய்த மோசடிகள் (பாலர் மீதான பாலியல் வன்முறை, SEX CRIMES ) வெளியாகி வருகின்றன. இது குறித்த வழக்குகளை தீர்த்து வைக்க அமெரிக்க கத்தோலிக்க தேவாலயம் இதுவரை 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளது

வாஷிங்டன், ஏப். 21- தேவாலயத்தின் மதிப்பைக் குலைக்கும் வகையில் நடந்து கொள்ளும் கத்தோலிக்க மதகுருக்களின் நடத்தை குறித்து மிகவும் வெட்கப்படுகிறேன் என்று அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற் கொண்டுள்ள போப் கூறியுள்ளார்.

ஆறுநாள் பயணமாக அமெரிக்கா வந்துள்ள போப், அய்க்கிய நாடுகள் மன்றத்தில் உரையாற்ற உள்ளார். ஆண்ட்ரூஸ் விமான தளத்தில் அவரை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மற்றும் அவரின் மனைவி லாரா வரவேற்றனர்.

கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் மதகுருக்கள் செய்த மோசடிகள் வெளியாகி வருகின்றன. இது குறித்த வழக்குகளை தீர்த்து வைக்க அமெரிக்க கத்தோலிக்க தேவாலயம் இதுவரை 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளது.

இது பற்றி விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போப் கூறியதாவது:தேவாலயத்தின் மதிப்பைக் குறைக்கும் வகையில் அமெரிக்க மத குருக்களின் நடவடிக்கைகள் உள்ளன என் பதை ஒப்புக்

கொள்கிறேன்.

இந்தப் பிரச்சினைகள் மீண்டும் நிகழாவண்ணம் பார்த்துக் கொள்வதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அமெரிக்காவில் உள்ள 6 கோடி கத்தோலிக்க கிறித்துவர்கள் மத்தியிலும் மத நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கைகள் இருக்கும். இவ்வாறு போப் கூறினார்.

viduthalai.com/20080421/news
--------------------------------------------------------
"ஏசு" மோசடி வழக்கு!!!. கிறித்துவத்தைப் பரப்ப முன்பு ஏசு=-“கிருஷ்ணன்" !! நடப்பில் “அல்லா ".? முன்பு பைபிள்=”கீதை” !! நடப்பில்“ "ஈஸா குர் ஆன் “ ?

No comments: