Followers

Monday, May 5, 2008

பா.ஜ. கட்சியின் இரட்டை நாக்கு! செய்தியும் - சிந்தனையும்

40 ஆயிரம் பங்குதாரர்களைக் கொண்டுள்ள ஒரு நிறுவனம் தன் எரிபொருள் தேவைக்காக விண்ணப்பம் செய்ததைப் பரிவுடன் ஆய்ந்து உதவிட வேண்டி மய்ய அமைச்சர் ஒருவர் கூறினாராம். அதற்காக அவர் பதவியிலிருந்து விலக வேண்டுமாம்.

உலகிலேயே ஊழலற்றவர்களின் கட்சியான (?) அதிமுகவின் உறுப்பினர் ஒருவர் பிரச்சினை கிளப்புகிறார். அண்டசராசரம் முழுக்கத் தேடினாலும் அப்பழுக்கற்ற ஒரே கட்சியான (?) பாரதீய ஜனதா கட்சியின் ஒழுக்க சீலர்கள் ஒத்துப்பாடி ரகளையில் ஈடுபட்டனர்.

தம் மாநில மக்களில் 40 ஆயிரம் பேர் சம்பந்தப் பட்ட கோரிக்கைக்குப் பரிந்துரை செய்த பாவம் செய்த அமைச்சர் மீதான குறை என்னவென்றால், அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களில் அமைச்சரின் மகன்களும் அடக்கம் என்பதுதானாம்.

அமைச்சரின் கோரிக்கையை ஏற்று எரிபொருள் வழங்கிடுமாறு தலைமை அமைச்சரின் அலுவலகம் எந்த ஆணையும் வழங்கவில்லை. எரிபொருள் அமைச்சகம் அந்த நிறுவனத்துக்கு எரிபொருள் வழங்கவும் இல்லை. இதனை எரிபொருள் அமைச்சர் அறிக்கையில் தெளிவாகக் கூறிவிட்டார்.

வழங்கப்பட்ட எரிபொருளை நிறுத்தி, ஆணையிட்டது ஒழுக்க சிரோன்மணிகளின் கட்சியான பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி. வாஜ்பேயி அரசு. தி.மு.க. ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொண்ட ஆத்திரத்தில் செய்த அடாவடித்தனம்.இதனை எதிர்த்தும் எரிபொருள் வழங்கக் கோரியும் வழக்கு போட்டுள்ளது தனியார் நிறுவனம். வழக்கு நிலுவையில் உள்ளது. அ

ந்த மாதிரி நிலையில் பிரச்சினையை எழுப்பவே கூடாது என்று அப்போது அடம் பிடித்த அதிமுகவினர், பேசிய பேச்சை அவைக்குறிப்பிலிருந்து அகற்றிய அதிமுகவினர், இப்போது வாய் கிழியப் பேசினர்.

கூட்டு வைத்துக் கொள்ள, மெதுவா, மெதுவா, தொடலாமா என்று நகர்ந்து வரும் பா.ஜ.க. பக்கக் கூச்சல் போட்டு பாராளுமன்றத்தை நடத்த விடாமல் செய்தனர். அவர்களுக்குத் தெரிந்த ஒரே ஜனநாயகக் கடமை அதுதான்!

இந்தப் பின்புலத்தில் இந்தச் செய்தியையும் பாருங்கள். மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு முதலமைச்சர். பிரபஞ்ச யோக்கியவான்களின் கட்சியான பா.ஜ.கட்சிக்காரர். சிவராஜ்சிங் சவுகான் என்பவர். இவருடைய வாழ்க்கைத் துணைவி சாதனா சிங். இவர்கள் இருவரும் (லஞ்சம்) கையூட்டு வாங்கினார்கள் என்று வழக்கு போட்டார் ரமேஷ். கே.சாகு என்னும் வழக்குரைஞர்.

வழக்கை விசாரித்த போபால் மாவட்ட நீதிபதி வழக்கின் உண்மையைத் தெரிந்து, முதலமைச்சர் அவர் மனைவி ஆகிய இருவர் மீதும் லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளில்கீழ் வழக்குப் பதிவு செய்யுமாறு ``லோக் ஆயுக்த காவல் துறைக்கு ஆணை பிறப்பித்தார்.

வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இது நடந்தது கடந்த ஆண்டு அக்டோர் 29 இல். இந்தக் கேவலமான செயலை அரசு அலுவலர் செய்திருந்தால் கைது செய்யப்பட்டுப் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பார். முதலமைச்சரும் அரசு அலுவலர்தான். ஆனாலும் கைது செய்யப்பட வில்லை. பதவி நீக்கம் செய்யப்படவும் இல்லை. யோக்கியக் கட்சியைச் சேர்ந்த அவரும் பதவி விலகவில்லை. பதவி விலகவேண்டும் என்று சட்டமன்றக் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜமுனாதேவி அன்றும் கேட்டார். இன்றும் கேட்கிறார்.

இரண்டாவது, இன்று வந்துள்ள செய்தி. இதே முதலமைச்சர் தம் மனைவிக்காக ஒரு ஊழல் செய்துள்ளார். இதனைக் கண்டித்து, முதலமைச்சர் போட்ட உத்தரவை ரத்து செய்து போபால் உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. இதற்காகவும் முதலமைச்சர் சிவராஜ்சிங்சவுகான் பதவி விலகவேண்டும் என்று ஜமுனா தேவி இரண்டாவது முறையும் கோரியுள்ளார்.

பா.ஜ.க. முதலமைச்சர் இடித்த புளி மூட்டையாகப் பதவி நாற்காலியில் ஒட்டிக் கொண்டே இருக்கிறார்.வழக்கு விவரமும் தீர்ப்பும் இதுதான்: சிமென்ட் ஆலை நிறுவிடவும் சிமென்ட் உற்பத்திக்குத் தேவையான கனிமங்களை வெட்டி எடுத்துக் கொள்ளவும் டால்மியா நிறுவனத்திற்கு சாட்னா மாவட்டத்தில் 1434 எக்டேர் (சுமார் 3585 ஏக்கர்) நிலம் குத்தகைக்கு விடப்பட்டது.

காங்கிரஸ் கட்சி திக்விஜய்சிங் முதலமைச்சராக இருந்தபோது 1995 ஆம் ஆண்டில் ஆணையிடப்பட்டது. 2005 நவம்பர் மாதத்தில் முதலமைச்சரான சிவராஜ்சிங் சவுகான் அதை ரத்து செய்துவிட்டார். அற்ப காரணங்களுக்காக உமாபாரதியை ராஜிநாமா செய்யச் சொல்லி இவரை அமர்த்தியது அந்தக் கட்சி. ஜே.பி. குழும நிறுவனத்திற்கு குத்தகையை மாற்றிவிட்டார். மார்ச் 23 ல் இந்த ஆணையைப் பிறப்பித்தார்.

டால்மியா நிறுவனம் மாநில அரசின் ஆணையை எதிர்த்து மய்ய அரசிடம் முறையிட்டது. பா.ஜ.க. முதலமைச்சரின் முறைகேடான உத்தரவை மய்ய அரசு மாற்றியமைத்து டால்மியா நிறுவனத்திற்கே குத்தகை அளித்தது. ஜே.பி.நிறுவனம் வழக்கு மன்றம் போனது. ரிட் வழக்கைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் முதலமைச்சர் செய்த முறைகேட்டை அம்பலப்படுத்தியுள்ளது.

ஜே.பி. நிறுவனத்துடன் 1990 முதல் வணிகத் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சரின் மனைவி. அவருக்குச் சொந்தமான குப்பை வாரும் எந்திரங்களை இந்நிறுவனம் வாடகைக்குப் பயன்படுத்திக் கொண்டு வருகிறது. அந்தத் தொடர்பின் மூலம் ஜே.பி. நிறுவனம் அரசுச் சலுகைகளைப் பெற்றுக் கொழித்து வருகிறது.

அதன் ஒரு செயலாக, முதலமைச்சர் குத்தகையை மாற்றித் தர முடிவு செய்து அதற்கேற்ற வகையில் அறிக்கை தரும்படி மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் தருகிறார்; அவர் அறிக்கை அனுப்புகிறார். குத்தகையை தன் மனைவிக்கு வேண்டிய நிறுவனத்துக்கு மாற்றி உத்தரவு போட்டு விடுகிறார், முதலமைச்சர்.

பா.ஜ.க.கட்சி முதல் அமைச்சரின் அசிங்க மான நடவடிக்கைகளை உயர்நீதிமன்றம் வெளிப்படுத்தியதோடு நிறுத்தாமல், இதற்குப் பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன என்பது நீதிமன்றத்திற்கும் தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள். இங்கே இரண்டு சூடு கொடுத்தும் கூட . . .முதலமைச்சர் பதவி விலகவேண்டும் என காங்கிரசுக் கட்சி கோருகிறது.

``பா.ஜ.கட்சியின் கைவந்த ஜனநாயகக் கலையான ரகளையில் ஈடுபடவில்லை. எப்படிச் செய்தாலும் நாகரிகமான அரசியல் அணுகுமுறையை அக்கட்சியிலிருந்து எதிர்பார்ப்பதில் அர்த்தம் இல்லை.தாங்களே உலகத்திலும், பிரபஞ்சத்திலும் உயர்வானவர்கள், உத்தமமானவர்கள் என்று மமதை கொள்ளும் (Megalomaniac) பாரதீய ஜனதா கட்சியினர், நெடுஞ்சாலைக் கப்பல் போக்குவரத்துத் துறை, மாண்புமிகு அமைச்சர் மானமிகு டி.ஆர். பாலு பதவி விலகவேண்டும் என்று எந்த அடிப்படையில் கோருகிறார்கள்?

அதற்கான யோக்கியதை இவர்களுக்கு இருக்கிறதா?அமைச்சர் பதவி விலகவேண்டும் என்று தொண்டை கிழியக் கத்தி, வாய் கிழியப் பேசி, கை வலிக்க எழுதும், கோயங்காப் பத்திரிகைகள், கல்கிக்கும்பல்கள், விகடன் கோமாளிகள், துக்ளக் பைத்தியங்கள், ஞாநிகள், தகரப் போணிகள், தேய்ந்த லாடங்கள், செல்லாக் காசுகள் எல்லாமே ஏன் சிவராஜ்சிங்சவுகான் பற்றி வாய் திறக்கவில்லை?போபால் உயர்நீதிமன்றம் சொன்னதைப் போல, காரணம் நமக்கும் தெரிந்ததுதான் Understandable! - அரசு
viduthalai.com/20080505/chennai
பைபிளில் அபத்தங்கள் சில‌ : படிக்க அழுத்தவும் :-

மருத்துவ மனைகளை இடித்து தள்ளிவிட்டு மருத்துவர்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்புங்கள் ? உளறுவது எது ?

கருணையே (கொடூரத்தின்?) வடிவான கர்த்தர் தான் உருவாக்கினாராம்.!!!. ஏன்?

பைபிளில் விஞ்ஞான அறிவிற்கு புறம்பான கூற்றுகள்.!!! சிரிக்கவேண்டாம்.

பைபிள் பூமியிலேயே மிக மிக அபாயகரமான, சிறுவர்களுக்கு கிட்டக்கூடாத, பூட்டி, ஒதுக்கி வைக்கப்பட வேண்டியது..ஏன்? ...

காமத்தையும் பின்பக்க புணர்ச்சியையும் ஒழுக்கக் கேட்டையும் கற்பிப்பது பைபிள் என அம்பலப்படுத்திய ஏடு.

பைபிள்: மகள்கள் தகப்பனுடன் உடலுறவு கொள்ளும் ஒழுக்கக்கேட்டை ஆதரிக்கிறதா?

பைபிள்: மாமனார் தன் மருமகளுடன் உறவு கொள்ளும் ஒழுக்கக்கேட்டை தூக்கிப்பிடித்து ஆத‌ரிக்கிற( து?) தா?

பைபிள்: வேசியிடம் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்…படித்துவிட்டு எதன் வழி சிரிப்பீர்கள் ?

பைபிள்: அவ‌ளை நிர்வாண‌மாக்கி. மானத்தையும் தெரியப்பண்ணி மலத்தையே உங்கள் முகங்களில் இறைப்பேன். -கர்த்தர்.

பைபிள் : குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான். சிசுக்களை சிதறடித்து கர்ப்பிணிகள் கீறப்படட்டும்.-

பைபிள் : ஏசு ( கடவுள் ) வின் குடல், ஆசன வழி வெளியிடும் ஒலி எப்படி தொனிக்குமாம். ?. படித்துவிட்டு வாசகர்கள் எதன் வழி சிரிப்பீர்கள் ?

ஆணுறை இன்றி விதவையுயுடன் கருத்தரிக்காமல் உடலுறவு எப்படி?.

பைபிள் கொடுமை : மாதவிடாய் பெண்களை- தொட்டலோ, படுக்கை, உட்கார்ந்த இருந்த எதையாகிலும் தொட்டவனுக்கு தண்டனை ?
--------------------------------------------------------
நான் ஏன் கிறிஸ்தவனல்ல?பெட்ரண்ட்ரஸல் M.A., F.R.S.,கிடைக்குமிடம்: பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவன வெளியீடு, பெரியார் திடல், 50, ஈ.வெ.கி சம்பத் சாலை,வேப்பேரி, சென்னை ‍ 6000 007.

இந்த புத்தகம் கிடைக்கப் பெறாதவர்கள் எங்கும் கிடைக்கக் கூடிய பைபிள் ஆங்கில பிரதி , தமிழ் பிரதி ஒவ்வொன்று வாங்கி கொண்டு சுட்டிக் காண்பிக்க‌ப்ப‌ட்டிருக்கும் பைபிளின் அதிகார‌ம், அத்தியாய‌ம், வ‌ச‌னம் ஆகிய‌வ‌ற்றை ப‌டித்து பைபிள் எப்ப‌டிப் ப‌ட்ட‌து ( புனிதமா ? அல்லது என்ன? ) என்று ‌ விளங்க‌லாம்.

அப‌த்தங்க‌ளை சுல‌ப‌மாக‌ விள‌ங்கிவிடாத‌படி வார்த்தைகளை அமைத்திரூப்பார்க‌ள்.திரிப்ப‌தில் திறமை பெற்ற‌வர்க‌ள்.
(உதாரணம் :மனுஷனிலிருந்து கழிந்த கஷ்டத்தின் வறட்டிகளால் = மலம்.)
------------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: