Followers

Thursday, May 15, 2008

அத்வானி இந்தியாவின் பிரதமரானால், எவ்வாறான ஆட்சியைத் தருவார்?

கேள்வி : அத்வானி இந்தியாவின் பிரதமரானால், எவ்வாறான ஆட்சியைத் தருவார்?

பதில் : ஆட்சியைத் தருவார் என்று நீங்களே நினைப்பது புரிகிறது. இப்போதுள்ள மாதிரி வெறும் காட்சியாக இல்லாமல், ஒரு ஆட்சி கிடைப்பது மேல்தானே! துக்ளக், 14.5.2008

சிந்தனை: ஒரிசாவில் தொழுநோயாளிகள் மத்தியில் தொண்டூழியம் செய்த கிரகாம் ஸ்டூவர்ட் ஸ்டெயின்ஸ் பாதிரியாரையும், அவர்களின் இரு பிள்ளைகளையும் துடிக்கத் துடிக்கக் கொடூரமான முறையில் படுகொலை செய்த சங்பரிவார்க் கும்பலான பஜ்ரங் தள்ளைப் பற்றிக் கூறும்போது,

பஜ்ரங்தள்ளைச் சேர்ந்தவர்கள் மிகவும் நல்லவர்கள்; அவர்கள் இதுபோன்ற காரியங்களை யெல்லாம் செய்யமாட்டார்கள் என்று உள்துறை அமைச்சர் என்கிற பெரிய பொறுப்பில் இருந்தபோதே நற்சான்று பத்திரம் கொடுத்தவராயிற்றே எல்.கே. அத்வானி.

அவர் பிரதமரானால், நல்லவரான பஜ்ரங் தள்ளைச் சேர்ந்த பாதிரியார் கொலையில் தண்டிக்கப் பட்டவரான தாராசிங்கைக் குடியரசுத் தலைவராகக் கூட ஆக்கி, உலக மக்களின் கண்களுக்கெல்லாம் நல்லதோர் காட்சி விருந்தை அளிக்காமலா போய்விடுவார்? viduthalai.com
------------------------
இந்துக்களிடம் பசுமாட்டுக் கொழுப்பல்லவோ? முஸ்லிம்களிடம் பன்றிக் கொழுப்பல்லவோ? பார்ப்பனர்கள் தூண்டி விட்ட கலவரம்.

கருணையின் சொருபமாக சித்தரிக்கப்படும் இயேசு ( கர்த்தர்) கொலைகார‌ரா? பைபிள்:ஆமாம்!!! ‍

ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனரான ' தினமணி' வைத்தியநாதய்யர்- இடர் தரும் ஒதுக்கீடுகளா ?

No comments: