Followers

Tuesday, May 13, 2008

இதுதான் பார்ப்பனீயம். -துரும்பைத் தூணாக்கும் கல்கி ?கல்கியின் பதில் என்ன?

குஜராத்தை கொலைக் களமாக்கிய மோடியின் பிரச்சார பீரங்கியாகவே கல்கி ஆகிவிட்டது.

மதவெறியை, மனிதக் கொலைகளை எளிதில் மறந்து விட்டு குஜராத்தை பொன் விளையும் பூமியாகச் சித்திரித்து கல்கி சிறப்பிதழ் போட்டுள்ளது. லஞ்ச ஊழல் இல்லையாம் சிண்டு சிலிர்க்க சிலாகிக்கிறது கல்கி.

மின்வெட்டு இல்லையாம்; ஆர்க்காட்டார் போய்ப் பார்த்து வரவேண்டுமாம். விவசாயிகளுக்கு 1 யூனிட் 50 காசுக்கு மின்சாரம் தரப்படுகிறதாம். தாம்... தூம்... எனக்குதிக்கிறது குடுமி.

சர்ச்சைகளையும் குற்றச் சாட்டுகளையும் மீறி நற்பெயர் பெற்று மோடி குஜராத்தில் வென்றுவிட்டாராம்!

பார்ப்பனீயத்தைக் காப்பாற்றிக் கொள்ள இந்துத்துவாவுக்குக் கிடைத்த சூத்திர மோடியைக் கொண்டாடும் பார்ப்பனீயப் புத்திதான் இத்தகைய புகழ்பாடுதலுக்குக் காரணம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆனால், குஜராத்தில் பா.ஜ.க.வின் வெற்றி என்பது நூலிழை வெற்றியே தவிர பிரம்மாண்ட வாக்குகள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியல்ல. காங்கிரசின் பலவீனம்; சரியான மாநிலத் தலைமை இல்லாத நிலை; மாயாவதியை அரவணைத்து மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கத் தவறியது; மாநில வளர்ச்சியில் காங்கிரஸ் ஆண்டபோது போதிய கவனம் செலுத்தாத போக்கு ஆகியவையே அங்கு காங்கிரஸ் தோற்றதற்கான காரணம்.

ஆனாலும் பா.ஜ.க.வுக்கு ஒரு சதவிகித வாக்கு குறைந்தும், காங்கிரசுக்கு வாக்கு சதவிகிதம் உயர்ந்தும் இருந்து, சீட் எண்ணிக்கை தலைகீழானது என்பது ஜனநாயக தேர்தல் முறை விசித்திரம்.

தனக்குக் கிடைத்த துரும்பைத் தூணாக்கிக் காட்டும் தந்திரம் பார்ப்பனீயத்திற்கே உரியது. அதைத்தான் குஜராத் வெற்றியில் கல்கியும் துக்ளக்கும் செய்கிறது.

அப்படியே நேர்மாறாக தனக்கு எதிரான கலைஞரின் ஆட்சியில் தூண் அளவு வளர்ச்சியை துரும்பு அளவுகூட மதிக்காத காழ்ப்புணர்வை இந்தப் பார்ப்பன இதழ்கள் வெளிப்படுத்துகின்றன.

ஒப்பீட்டளவில் எடுத்துக் கொண்டால் இந்தியாவின் பிற மாநிலங்களைவிட கடந்த ஒன்றே முக்கால் ஆண்டில் பன் மடங்கு தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது என்பது பார்ப்பன ஏடுகளுக்குத் தெரியாமல் இல்லை.

கொடுத்த வாக்குறுதிகளை 80 சதவிகிதத்துக்கு மேல் நிறைவேற்றிய ஆட்சி கலைஞர் ஆட்சிதான்.
இது பற்றி ஓரிரு வரியாவது இந்த ஏடுகள் எழுதியிருக்குமா?

விவசாயிகளுக்கு 50 காசுக்கு மின்சாரம் தரும் மோடியைப் பாராட்டும் கல்கி, அதே விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை கலைஞர் தருகிறாரே அதைப் பற்றி எழுதியதுண்டா?

வெளிமார்க்கெட்டில் 25 ரூபாய்க்கு விற்கும் அரிசியை 2 ரூபாய்க்கு ஏழை எளியோருக்கு கலைஞர் தருகிறாரே கல்கி வாய் திறந்ததுண்டா?

லஞ்ச - ஊழல் இல்லையாம் குஜராத்தில், தமிழ்நாட்டிலும் லஞ்சஊழல் குற்றச்சாட்டு இல்லையே. கல்கி பாராட்டியிருக்குமா?

சட்டம் ஒழுங்கு பிரச்சினையில்லாமல், அனைவரும் உறவினராக, எல்லா மத, இன, ஜாதியினரும் ஒற்றுமையாக நல்லிணக்கத்தோடு கலைஞர் ஆட்சியில் தமிழகத்தில் வாழுகிறார்கள்.

ஆர்காட்டாரை குஜராத் போய் பார்த்து வரச் சொல்லும் கல்கி, மோடியைத் தமிழ்நாடு வரச் செய்து அமைதியாக பூசல் இன்றி எப்படி வாழ்கிறீர்கள்? என்று கேட்டுச் செல்ல வரவழைக்குமா?

குஜராத்தில் மோடியின் அரசு இஸ்லாமியர்களைக் கொன்றொழித்ததே, அதை டெகல்கா அம்பலப்படுத்தியதே, மனித உரிமையை மீறிய மோடி, மாநிலத்தை ஆளும் தார்மீகத் தகுதி படைத்தவர்தானா என்கிற கேள்விக்கு கல்கியின் பதில் என்ன?- பெரியாரிடி UNMAI ONLINE.COM
-----------------------------------
பைபிள்: மலத்தை உண்டு மூத்திரத்தையும் குடிக்கவா

No comments: