Followers

Sunday, May 11, 2008

சுப்பிரமணிய சுவாமியின் பட்டியலும், ராமர் பட்டாபிஷேக விபரீதங்களும் ! ! !

உச்சநீதிமன்றத்தில் சேது சமுத்திரத் திட்டத்துக்கு எதிராக வாதிட்ட சுப்பிரமணியசாமி - நீதிபதிகளிடம் கீழ்க்கண்ட தகவல்களைக் கூறி இருக்கிறார்.

ராமர் பாலத்தை இடிக்க முயன்றதால்தான் டச்சு நாட்டு கம்பெனியின் எந்திரம் உடைந்தது. அதை மீட்க வந்த கிரேனும் உடைந்தது. அது செயல்படவே இல்லை. இதையடுத்து ரஷிய நிபுணர் ஒருவரை வரவழைத்தனர். அவர் வந்தார். அவரது இரண்டு கால்களும் உடைந்துவிட்டன. அதன் பிறகுதான் முறைப்படி பூஜைகள் நடத்தினர்.

அந்தப் பூஜை நடத்திய ஒரு எம்.எல்.ஏ. மறுநாளே மாரடைப்பால் இறந்துவிட்டார். இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததற்கும் இந்த சேது சமுத்திரத் திட்டம்தான் காரணம்- என்று முழு நீளத்திற்கு மூட நம்பிக்கைகளைப் பட்டியலிட்டிருக்கிறார்.

இவர் எந்த ராமருக்காக இப்படியெல்லாம் வாய் நீளம் காட்டுகிறாரோ, அந்த ராமன் கதையின் லட்சணம்தான் என்ன?

ராமருக்குப் பட்டாபிஷேகம் என்று தசரச மகாராஜா அறிவித்தார்.கைகேயி இரண்டு வரங்களின் பெயரால் ராமரைக் காட்டுக்கே அனுப்பிவிட்டாள்.

14 வருட கால வனவாச தண்டனை பெற்றார் ராமர். தசரத மகாராஜனின் உயிரையே பலி வாங்கிவிட்டது ராம பட்டாபிஷேகம்!

சீதை கடத்தப்பட்டாள். அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டாள். ராம - ராவண யுத்தம் முடிந்து - சீதை, ராமனை சந்திக்க வந்தபோது சீதையின் கற்பின் மீது ராமன் சந்தேகப்பட்டான். சீதையை கற்பை நிரூபிக்க நெருப்புக் குண்டத்தில் இறங்கச் சொன்னான்.

சீதை தீக்குளித்தாள். ஊர் திரும்பியதும் ராமன் பட்டாபிஷேகம் செய்து கொண்டான்.சீதை கர்ப்பமடைந்தாள்.

சீதையின் கர்ப்பத்தில் சந்தேகம் கொண்ட ராமன் அவளை கர்ப்பிணி என்றும் பாராமல் காடு கடத்தி விட்டான்.

சீதை காட்டில்தான் லவன், குசன் என்று இரண்டு பிள்ளைகளைப் பெற்றாள்.
இத்தனைக்கும் காரணமானராமனின் இறுதிக் காலம் எப்படி அமைந்தது?


சரயூ நதியில் வீழ்ந்துஉயிரை மாய்ந்துக் கொண்டான் ராமன்!

ராமனுக்குப் பட்டாபிஷேகம் என்று அறிவித்ததால்தான் இத்தனை விபரீதங்களும் நடந்தன. அதற்காக ராமனைக் கும்பிடாமல் இருக்கிறாரா, சுப்பிரமணிய சுவாமி?

சேது சமுத்திரத் திட்டம் போன்றதோர் பிரம்மாண்டத் திட்டத்தை நிறைவேற்ற முற்படும் போது சில அசம்பாவிதங்கள் நிகழத்தான் செய்யும்!

இதோ இந்த மாதத்தில்கூட கட்டடம் கட்டும்போது இடிந்து விழுந்து பலி, பாலம் கட்டும் போது இடிந்து உயிர்ப்பலி என்று செய்திகள் வந்த வண்ணம்தானே இருக்கின்றன.

சுப்பிரமணிய சாமியின் அரசியல் தோழி ஜெயலலிதா அய்தராபாத் தோட்ட பங்களாவைக் கட்டியபோது கூட ஒருவர் மின்சாரம் தாக்கி மாண்டதாகச் செய்தி வந்ததே! நன்றி: `முரசொலி 10.5.2008
---------------------------------------------
காமத்தையும் பின்பக்க புணர்ச்சியையும் ஒழுக்கக் கேட்டையும் கற்பிப்பது பைபிள் என அம்பலப்படுத்திய ஏடு.

No comments: