Followers

Thursday, May 8, 2008

கலைஞர்: ஜாதியை ஒப்புக்கொண்டால் அது பெரிய அவமானம்!

ஜாதியை ஒப்புக்கொண்டால் அது பெரிய அவமானம்!
சட்டப்பேரவையில் முதலமைச்சர் கலைஞர்

சென்னை, மே 7- ஜாதியை ஒப்புக் கொண்டால் அது பெரிய அவமானம் என்று கூறினார் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள்.

மதுரை மாவட்டம் உத்தபுரம் பகுதியில் இரு ஜாதிப் பிரிவினர்களுக்கிடையே 20 ஆண்டுகளுக்கு முன் கலவரம் உருவானது. தேனைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர் உயர் ஜாதியினர் வாழும் பகுதிக்கு வராமல் தடுப்பதற்காகப் பெரிய சுவர் ஒன்று கட்டப்பட்டது.அந்தச் சுவர் இருப்பது எங்களை இழிவு படுத்துவதாகும் என்று தாழ்த்தப்பட்ட மக்கள் கருதினர்.

அந்தச் சுவரை இடித்துத் தள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் முதல் அமைச்சர் கலைஞர் தலையிட்டு அந்தச் சுவரின் இடையில் பெரிய நிலைவாசல் ஒன்று வைக்கப்பட்டு, யாரும் எங்கும் போய்வரலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டு விட்டது.

முதல் அமைச்சரின் இந்த முயற்சியை அனைவரும் பாராட்டுகிறார்கள்.இது குறித்து சட்டப் பேரவையில் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் பேசிய தாவது:

பாதையும் கொடுங்கள்!பாதுகாப்பும் கொடுங்கள்!
நான் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பாதையும் கொடுங்கள். பாதுகாப்பும் கொடுங்கள் என்று சொன்னேன். பாதையைக் கொடுப்பதற்கு அடையாளமாகத்தான் அந்த நீண்ட உயர்ந்த சுவரில் பெரிய நிலைவாசல் ஒன்றை தோற்றுவித்து அந்த வழியாக யார் வேண்டுமானாலும் போகலாம் - எப்படி இன்று ஆலயங்களில் யார் வேண்டுமானாலும் அர்ச்சனை செய்யலாம்

என்ற சட்டத்தைக் கொண்டு வந்து அதை நிறைவேற்றி நடை முறைப் படுத்தியிருக்கிறோமோ அதைப் போல - பகவான் சன்னிதானத்திற்கே யார் வேண்டுமானாலும் போகலாம் என்றால் ஒரு சுவருடைய பாதையிலா செல்லக் கூடாது.

ஆகவே, யார் வேண்டுமானாலும் அந்தப் பாதையிலே செல்லலாம் என்ற அளவிற்கு ஒரு பாதையை உருவாக்கி, பாதையும் இருக்கட்டும், அந்தச் சுவரும் இருக்கட்டும். பாதுகாப்பிற்கு என்ற முறையில் அங்கே இரு பகுதியிலும் வாழ்கின்ற மக்கள் சகோதரர்களாக உடன் பிறப்புக்களாக வாழட்டும் என்று அவர்களுக்குக் கூறப்பட்டு இருக்கிறது.

நான் கேள்விப்பட்டேன். அதிலே கோபம் கொண்ட உயர் வர்க்கத்தார் என்று தங்களைக் கூறிக் கொள்பவர்கள் - உயர் வர்க்கத்தாரா தாழ்ந்த வர்க்கத்தரா என்பது அவர் களது மனோநிலையைப் பொறுத்ததே தவிர ஜாதியிலே ஒன்றும் - இறைச்சி தோலிலே இலக்கமிட்டு இருக்கிறதா?

என்று சிவவாக்கியர் கேட் டாரே, அதைப் போல யாருடைய உடலிலும் இறைச்சி யிலோ, தோலிலோ இலக்கமிட்டு, இவர் இன்ன ஜாதி, இவர் இன்ன ஜாதியில்லை என்று அடையாளப்படுத் தப்பட்டிருக்கவில்லை.

எல்லோரும் சமம்தான். அந்த நிலையில் இதைக் கடைப் பிடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் அறுதியிட்டு கூறப்பட்ட பிறகு ஆடவர்கள் சில பேர் - உயர் ஜாதிக்காரர்கள் என்று தங்களைக் கருதிக் கொண்டிருக்கின்ற ஆடவர் ள் சில பேர், நாங்கள் இங்கே வசிக்க மாட்டோம். நாங்கள் பக்கத்திலே உள்ள மலைப் பகுதிக்குச் சென்றுவிடுவோம் என்று ரேஷன் கார்டுகளை யெல்லாம் கூட தூக்கி எறிந்து விட்டுப் போய்விட்டார்கள் என்று செய்தி வந்தது.

அது அவர்களுடைய கோபத்தினுடைய அடையாளம் என்று நாம் கருதிக் கொள்ள வேண்டுமே அல்லாமல் அவர்கள் உள்ளபடியே ஜாதி வேண்டும் என்று விரும்புபவர்கள் என்று கருத முடியாது,

எண்ண முடியாது, நினைக்க முடியாது. அவர்கள் மலைப் பகுதியிலே வாழப் போகிறோம் என்று சொல்லி விட்டுப் போனாலும் கூட அந்த வீட்டுப் பெண்மணிகள் யாரும் செல்லவில்லை என்றும் அவர்கள் எல்லாம் அங்கேயே தான் தங்கி இருக்கிறார்கள் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் எனக்கு சற்று முன்பு கூட செய்தி சொன்னார்.

பரவாயில்லை, தமிழ்நாட்டில் பெண்கள் முன்னேறி இருக்கிறார்கள்.பெண்கள் முன்னேற பெரியார் - அண்ணா பட்டபாடுஅந்தக் காலத்திலிருந்து பெரியாரும் அண்ணாவும் மற்றும் பல தலைவர்களும் பட்ட பாட்டின் விளைவாக பெண்கள் முன்னேறியிருக்கிறார்கள்.

ஆண்களும் நிச்சயமாக முன்னேறுவார்கள் என்ற அந்த நம்பிக்கையோடு அங்கே அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறேன். பாதுகாப்புக்கு சுவர் மாத்திரமல்ல, இன்னும் பாதுகாப்பு தேவை என்று உயர்வர்க்கத்தார் என்று கருதிக் கொண்டிருப்பவர்கள் சொல்வார்களேயானால்,

நான் அவர்களுக்கு சொல்வேன். இன்னும் சில மாதங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கக் கூடிய அளவிற்கு இராணுவம் வேண்டுமானால் அங்கே வர வழைத்துத் தருகிறேன் - மத்திய அரசுக்கு எழுதி வரவழைத்து இராணுவத்தை வேண்டுமானால் அங்கே வைப்போம்.

அதைவிட, இராணுவத்தை வரவழைத்து விட்டாயா என்று கேட்கின்ற ஒரு சுடு சொல்லை விட ஒரு அவமானத்தை விட இன்னும் ஜாதி இருக்கிறது என்று நாம் ஒத்துக் கொண்டால், அது பெரிய அவமானம் என்று நான் கருதுகிற காரணத்தினால்தான்,

ஜாதிக் கொடுமை - ஜாதியினால் ஏற்படுகின்ற வேற்றுமை - சாதியினால் ஏற்படுகின்ற பிளவுகள், மோதல்கள், அதனால் வழிகின்ற ரத்தம், இவைகள் எல்லாம் நம்முடைய ரத் ம்தான், நம்முடைய உயிர் தான்.

நம்முடைய மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை எண்ணி அமைதிப் பூங்காவாக தமிழகம் மீண்டும் மலருவதற்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு முதலமைச்சர் கலைஞர் பேசினார்.

viduthalai.com/20080507/chennai_3.
-----------------------------------------
படிக்க அழுத்தவும் :-
25 கிலோ மீட்டர் நீளமான ஒன்று வழிபாட்டுத் தலமாக இருக்க முடியுமா?பூமாதேவி என்பதற்காக அதைத் தோண்டக்கூடாதா?

பைபிள்: ஆண் பெண்களின் இயற்க்கைக்கு புறம்பான‌ , கேடான காம சிந்தைக்கு கர்த்தர் ஏன் ஒப்புக்கொடுத்தார் ?.

பைபிள்: உன் கர்ப்பக்கனியான உன் புத்திரபுத்திரிகளின் மாம்சத்தைத் தின்பாய்!! ?? !! ??
---------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: