Followers

Thursday, May 1, 2008

காமத்தையும் பின்பக்க புணர்ச்சியையும் ஒழுக்கக் கேட்டையும் கற்பிப்பது பைபிள் என அம்பலப்படுத்திய ஏடு.

காமத்தையும் பின்பக்க புணர்ச்சியையும் ஒழுக்கக் கேட்டையும் கற்பிப்பது பைபிள் என அம்பலப்படுத்திய ஏடு.

உலக பகுத்தறிவாளர்கள் எனும் வரிசையில் இடம்பெறத் தக்கவர்களில் சார்லஸ் பிராட்லா அவர்களைப்பற்றி எழுதத் தொடங்குவதற்குக் காரணமே அவர் பலவகைகளிலும் தந்தை பெரியார் அவர்களைப் போலவே அமைந்திருந்தார் என்பதே

தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் மாதத்தில்தான் பிராடலாவும் பிறந்தார். ஆனால், 36 ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்தார். 1833 செப்டம்பர் 26-இல் சார்லஸ் பிராட்லா லண்டனுக்குப் பக்கத்தில் ஹாக்ஸ்டன் எனுமிடத்தில் பிறந்தார். அவரின் தந்தை ஓர் ஏழை வக்கீல் குமாஸ்தா.ஏழ்மையின் காரணமாக அதிகம் படிக்க வாய்ப்பில்லாததால் அவருடைய பள்ளிப் படிப்பு 11-ஆம் வயதுடன் முடிந்து விட்டது.

தன் தந்தை பணிபுரிந்த இடத்திலேயே இவரும் எடுபிடி வேலைகள் செய்யும் ஆபீஸ் பாய் ஆகப் பணியில் சேர்ந்தார். சில ஆண்டுகள் கழித்து ஒரு நிலக்கரி நிறுவனத்தில் எழுத்தாளராக பணியில் சேர்ந்தார்.

அதன்பிறகு ஞாயிற்றுக்கிழமை பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார்.ஞாயிற்றுக்கிழமைப் பள்ளி என்பது, கிறித்துவ மதத்தைப்பற்றி சொல்லிக் கொடுக்கும் பள்ளி. பைபிளின் அடிப்படையில், பாடங்கள் தயாரிக்கப்பட்டு அவற்றைச் சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் சொல்லித் தரும் பணி.

உலகத்தில் கிறித்தவர்கள் திங்கள் முதல் சனிவரை கர்த்தரையோ கிறிஸ்துவையோ பற்றி நினைத்துப் பார்ப்பது கிடையாது. ஞாயிற்றுக் கிழமை காலையில் பைபிளைக் கையில் தூக்கிக் கொண்டு ஆலயத்துக்குப் போய் இருவரையும் நினைத்து முணுமுணுப்பர்.

அதுபோலவே ஆறு நாள்கள் அறிவுக்கும் வாழ்க்கைக்கும் பயன்படும் படிப்பை படிப்பவர்கள் ஏழாம் நாள் கடளுக்குப் பயப்படும் படிப்பைக் கற்க வேண்டும் என்பதற்காக இந்தப் பள்ளிகள்.பாதிரியார் ஜான் கிரகாம் பாக்கர் என்பவர் 39 பாடங்களைக் கொடுத்து மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்படி இளைஞரான பிராட்லாவுக்கு அறிவுரை கூறினார்.

பிராட்லாவும் பாடங்களை நடத்தினார்.பைபிளில் இருந்தவற்றிற்கும் ஆங்கிலிகன் சர்ச் எழுதித் தந்துள்ள பாடங்களுக்கும் வேறுபாடுகள் இருந்தன; சிலவற்றில் முரண்பாடுகளும் இருந்தன என்பதை அவர் உணர்ந்தார். தாம் உணர்ந்தவற்றைப் பற்றிப் பாதிரியாரிடம் விளக்கம் கேட்டார். வந்தது வினை!

மத நூல்களில் எழுதப்பட்டிருக்கும் எல்லாவற்றையும் அப்படியே ஏற்க வேண்டும், நம்ப வேண்டும், கடை பிடிக்கவேண்டும். சந்தேகம் எழுந்தாலும் விளக்கம் கேட்டாலும் நாத்திகன், நிரீசுரவாதி என்றெல்லாம் பட்டம் (பழிச்சொல்) சூட்டப்படும்.

இதுதானே மதவாதிகள் இன்னும்கூட கைக் கொள்ளும் நடைமுறை?அந்த அடிப்படையில் பாதிரியார் பிராட்லாவைப் பழி சுமத்தினார். (உண்மையும் அதுதான்).

ஆசிரியர் வேலையிலிருந்து நீக்கிவிட்டார்.வேலையும் போய், மதத்திற்கு எதிரானவன் என்ற பட்டத்தையும் பெற்று வீட்டுக்கு வந்த மகனை தந்தை திட்டினார். மகன், தாம் தவறே செய்யவில்லை என்று வாதிட்டார்.பைபிளின் முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டிப் பேசினார்.

தந்தையின் காதுகளில் அது ஏறவில்லை. பக்தி வந்தால்தான் புத்தி போய்விடும்! மகனின் நியாய வாதங்களை எதிர்கொள்ள மனமும், அறிவும் அற்ற அவரால் செய்ய முடிந்தது ஒன்றுதான்! தன் வீட்டிலிருந்து தம் மகனை வெளியேற்றி விட்டார்.

வீட்டைவிட்டும் குடும்பத்தைவிட்டும் துரத்தப்பட்ட அவரை அரவணைத்துக் கொண்டவர் எலிசபெத் ஷார்ப்ள்ஸ் கார்லைல் எனும் அம்மையார்.இவரின் கணவர் ரிச்சர்டு கார்லைல். அவர் புகழ்பெற்ற பகுத்தறிவாளரான தாமஸ் பெய்னின் ஏஜ் ஆஃப் ரீசன் (Age of Reason) எனும் வெளியீட்டை அச்சிட்டு வழங்கியவர். அதனால் மத நிந்தனைக் குற்றமும் அரசுத் துரோகக் குற்றமும் சுமத்தப்பட்டு 1819-ல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்.

ரிச்சர்டு கார்லைல் இறந்த பிறகும்கூட அவரது துணைவியார் எலிசபெத் அதே பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தவர். அவர் கண்களிலும் காதுகளிலும் சார்லஸ் பிராட்லா எனும் இளைஞனின் செயல்கள் தென்படவே இயல்பான கொள்கைப்பற்றால் ஆதரித்தார். அப்போது அவரின் வயது 16 தான்.1840களில் ஜி.ஜே. ஹோலியோக் (Holy Oake) என்னும் பெயர் கொண்ட பகுத்தறிவாளர் இருந்தார்.

அவர் சவுத் வெல் (South Well) எனும் பகுத்தறிவுச் சிந்தனையாளர் எழுதிய (Oracle of Reason) (காரணியின் குரல்) என்ற ஏட்டின் கருத்துகளால் கவரப்பட்டவர்.

அந்த ஏடு மதத்தைப் பின்னியெடுத்த ஏடு. பைபிளைக் கடுமையாகக் கண்டனம் செய்த ஏடு. வெறுக்கத்தக்க வகையில் யூதர்களால் உருவாக்கப்பட்டது பைபிள் என்று பிரகடனப்படுத்திய ஏடு.

எல்லா வகையிலும் மடத்தனமும் நிறைந்த ஒழுக்கங் கெட்டவர்களை உயர்த்திப்பிடிப்பதால் அறிவுள்ளவர்களால் வெறுக்கத்தக்கதுமானது பைபிள் என்று அறைந்து கூறிய ஏடு.

காமத்தையும் பின்பக்க புணர்ச்சியையும் ஒழுக்கக் கேட்டையும் கற்பிப்பது பைபிள் என அம்பலப்படுத்திய ஏடு.

சும்மா இருக்குமா மதம், மதம் கொண்ட அரசு? சவுத்வெல் கைது செய்யப்பட்டார். மத நிந்தனைக் குற்றம் புரிந்தார் என வழக்கு போடப்பட்டு, ஓர் ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.

ஆனாலும் ஏடு தொடர்ந்து வெளி வந்தது. சிறை தண்டனை அளிக்கப்பட்ட பிறகு இரண்டு, மூன்று இதழ்கள் வெளிவந்தன. அதன்பின் ஹோலியோக் இதழின் ஆசிரியப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.காரணியின் குரலில் கடுமை சற்று குறைந்து வெளிவந்தது.1842-ல் சிறைப்பட்டிருக்கும் சவுத்வெல் வைக்கப்பட்டிருக்கும் பிரிஸ்டல் நகருக்கு நடைப்பயணம் புறப்பட்டார்.

வழியெங்கும் பிரச்சாரம். செல்டன்ஹாம் எனும் ஊரில் மதத்தைப்பற்றியும் கடவுளைப்பற்றியும் உரை நிகழ்த்தியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நாளிதழ் ஒன்று எழுதும் அளவுக்கு அவரது பேச்சு அமைந்திருந்தது.ஹோலியோக் கைது செய்யப்பட்டு குளூசெஸ்டர் நகரின் சிறையில் அடைக்கப்பட்டார்.

சட்டப்படி அவர் சிறைப்படுத்தப்படவில்லை என்று போராட்டங்கள் நடத்தப்பட்ட பின்னர்தான் எதிர் வழக்காடுவதற்காக அவரை விடுவித்தனர்.லண்டனுக்குச் சென்று ரிச்சர்டு, கார்லைலைச் சந்தித்தார். அவர்மூலம் ஒரு வழக்கறிஞரை அமர்த்திக் கொண்டார்.

அவரது வழக்கு விசாரணையின்-போது வாக்குமூலம் எனும் வகையில் தன் தரப்பு வாதங்களை அடுக்கடுக்காக எடுத்துக் கூறினார். ஒன்பது மணிநேரம் பேசினார். அந்தப் பேச்சு அவரை விடுதலை செய்வதற்குப் பயன்படவில்லை;

அவரது வாதத்திலிருந்த காரண காரியங்கள் நீதிபதியை எரிச்சல் அடையச் செய்துவிட்டது.அவரும் மதம், கடவுள் நம்பிக்கை கொண்டவர்தானே!

ஹோலி யோக்குக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை கிடைத்தது.சிறை வாழ்க்கையின்போது அவரின் சின்னஞ்சிறு மகள் இறந்துவிட்ட சோகமும் அவரது குடும்பத்தின் வறுமை வாழ்வும் அவரை வாட்டின. என்றாலும் கடவுள் நம்பிக்கையற்றவராக அவரை முழுமைப்படுத்தியது.

1848 இல் மதத்தின் விளைவான பரந்துபட்ட கொடுமைகளை எடுத்துரைக்கும் சங்கம் ஒன்றைத் தொடங்கினார். லண்டனில் உள்ள அறிவியல் மன்றத்தில் அவருடைய உரையைக் கேட்க 1851-இல் முந்நூறுக்கம் மேற்பட்ட சுதந்திரச் சிந்தனையாளர்கள் கூடினர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மதச்சார்பற்ற சங்கம் (செக்யுலர் சொசைட்டி) தொடங்கினார். மான்செஸ்டர் நகரில் மாநாடு நடத்தினார். 1853-இல் லண்டன் நகர்ச் சங்கம் நடத்திய மாநாட்டில் அவருக்கு 250 பவுண்டு நிதி அளிக்கப்பட்டது.அந்த தொகையில் ப்ளீட் தெருவில் (Fleet Street) கட்டடம் ஒன்று வாங்கிப் பிரசுர நிலையம் அமைத்தார். லண்டன் நகரத்தின் அனைத்துப் பத்திரிகை அலுவலங்களும் அமைந்துள்ள தெருதான் இது.

அங்கேயே இவருக்கும் இடம் கிடைத்தது.பிராட்லாவை ஹோலியோக்கிடம் அறிமுகம் செய்து வைத்தார். எலிசபெத் கார்லைல் பிராட்லா பொதுக்கூட்டத்தில் பேசும் நிகழ்ச்சியை அவர் ஏற்பாடு செய்தார்.அப்போது பிராட்லாவுக்கு வயது 17. முழுமையான நாத்திக உரையை அவர் நிகழ்த்தினார். அதன்பிறகு பிராட்லா ஒரு சிறிய வெளியீட்டை எழுதி வெளியிட்டார்.கிறித்துவர்களைப்-பற்றி சில சொற்கள் (A few words on the Christian Creed) என்ற வெளியீடு அது. என்ன பேசி, என்ன எழுதி என்ன பலன்?

வாழ்க்கைக்குப் பணம் இல்லை. அதன் விளைவு?பிராட்லா போர்ப்படையில் சேர்ந்து விட்டார், சிப்பாயாக! இந்தியாவுக்கு வர வேண்டும், செல்வம் தேட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் சேர்ந்தார்.

ஆனால் அவர் டப்ளின் நகருக்கு அனுப்பப்பட்டார். 1853-இல் போர்ப்படையிலிருந்து விலகி விட்டார். லண்டன் நகருக்கு வந்தார். மீண்டும் எழுதத் தொடங்கினார். சிலை உடைப்பாளன் எனும் பொருள் தரக்கூடிய (Iconoclast) என்ற புனை பெயரில் ஏடுகளுக்குக் கட்டுரைகள் எழுதினார். லண்டன் மதச் சார்பற்றோர் சங்கத்தின் தலைவராக 1858-ல் வந்தார். அப்போது அவருக்கு வயது 25 தான்.--- - சு.அறிவுக்கரசு.
unmaionline.com/20080402/pa-10.
----------------------------------------------
நான் ஏன் கிறிஸ்தவனல்ல?
பெட்ரண்ட்ரஸல் M.A., F.R.S.,

கிடைக்குமிடம் :
பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவன வெளியீடு
பெரியார் திடல், 50, ஈ.வெ.கி சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை ‍ 6000 007
-------------------------------------------
பைபிள்: வேசியிடம் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்…படித்துவிட்டு எதன் வழி சிரிப்பீர்கள் ?

பைபிள்: அவ‌ளை நிர்வாண‌மாக்கி. மானத்தையும் தெரியப்பண்ணி மலத்தையே உங்கள் முகங்களில் இறைப்பேன். -கர்த்தர்.

கிறிஸ்துவ மத நம்பிக்கையால் கொல்லப்பட்ட கோடானு கோடி கோடி மக்கள்கள். வெளிப்பட்ட சில‌ விபரங்கள் மட்டும்.

பைபிள் : குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான். சிசுக்களை சிதறடித்து கர்ப்பிணிகள் கீறப்படட்டும்.-

பைபிள் : ஏசு ( கடவுள் ) வின் குடல், ஆசன வழி வெளியிடும் ஒலி எப்படி தொனிக்குமாம். ?. படித்துவிட்டு வாசகர்கள் எதன் வழி சிரிப்பீர்கள் ?

பைபிள் கொடுமை : மாதவிடாய் பெண்களை- தொட்டலோ, படுக்கை, உட்கார்ந்த இருந்த எதையாகிலும் தொட்டவனுக்கு தண்டனை ?

ஏசு கிறுஸ்து (கடவுள் ) கதறினார் ? சிலுவையில் தன் உயிருக்காக ம‌ட்டும் எப்ப்டி கதறினார் ? பைபிள்

இயற்கைக்கு மாறான புணர்ச்சி என்றால் என்ன? காரணம் இந்துக் கடவுள் ? வெள்ளையர் ? மதமும் இ.பி.கோவும்.

ஆணுறை இன்றி விதவையுயுடன் கருத்தரிக்காமல் உடலுறவு எப்படி?. பைபிளில் வழி.

ஏசு கிறிஸ்துவும் அவரது சீடரும் ஓரின புண்ர்ச்சியில் ஈடுபடுவதாக சித்தரிக்கும் ஓவியம் ‍ அகற்றப்பட்டது

ஓரின புண‌ர்ச்சி ( LESBIAN ) என்ன இங்கிலிஷ்காரா கண்டுபிடிப்பா? எங்க இந்து மதத்தில கிடையாதோ...? யார் சொன்னா?

இயேசு விபச்சாரர்களின் சந்ததியா? ஆபாச வர்ணனைகள் நிறைந்த பைபிள். பைபிளின் குளறுபடி.

கிறித்து பிறந்து 381 ஆண்டுகள் கழித்து தான் அவர் பரமபிதாவின் குழந்தை என்கிற புளுகு பைபிளில் சேர்க்கப்பட்டது. தகிடுதத்தம் செய்வது அவர்களின் வழக்கம்.

ஏசு கடவுள் அல்ல - பைபிள் புரட்டுகள். கிறித்தவ மதத்தில் A to Z வரை பிரிவுகள்:

தானும் த‌ன் மதமும் வாழ சாத்தானை காப்பாற்றிய பாதிரி அகம் பார்த்து கைதட்டி சிரித்த சாத்தான். தோல்வியில் தொங்கிய பாதிரியார் !!!

No comments: