Followers

Friday, May 16, 2008

தங்கக் காசு மோசடி:500 திருப்பதி கோயில் ஊழியர்களும் ஏமாந்தனர்.பேராசை பெருநஷ்டம்!

சென்னை, மே 15- சென்னை சேத்துப்பட்டில் உள்ள குவெஸ்ட் நெட் நிறுவனம் லட்சக்கணக்கான பேரிடம் தங்கக் காசு மோசடி செய்துள்ளது. இந் நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர்.

இவ்வழக்கில் குவெஸ்ட் நெட் நிறுவனத்தின் இயக்குநர் புஷ்பம் உள்பட 7 பேர் கைது செய்யப் பட்டனர். இவர்களை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

புஷ்பத்தையும், அகஸ்டினையும் மேலும் 10 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க காவல்துறையினர் அனுமதி கோரினர். ஆனால் கூடுதலாக 4 நாள் மட்டுமே காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்தது. மற்ற 5 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிறுவனத்தில் திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 500 பேர் தங்கக் காசு வாங்கி ஏமாந்து உள்ளனர். நாளிதழ்களில் வந்த செய்தியைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூறியதாவது:

திருப்பதி கோயில் ஊழியர்களாகிய நீங்களும் குறுகிய காலத்தில் பணக்காரர்களாக ஆவதற்காக இத்திட்டத்தில் சேரவேண்டும் என்று குவெஸ்ட் நெட் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் எங்களிடம் கூறினார்கள்.

இந்தத் தங்கக்காசு மிகவும் சக்தி வாய்ந்தது. அதைத் திறந்து பார்த்தால் அதில் பொறிக்கப்பட்டுள்ள ரகசிய எண்கள் அழிந்துவிடும் என்று அவர்கள் கூறினர். நாங்களும் அதை வாங்கிய பிறகு திறந்து பார்க்கவில்லை.

2 நாள்களுக்கு முன்பு அந்தத் தங்கக் காசுகளை வெளியில் எடுத்துப் பார்த்தபோதுதான் அவை அனைத்தும் போலி என்பதை அறிந்து அதிர்ச்சிய டைந்தோம்.

இந்த நிறுவனத்தில் பணத்தை இழந்த 500 கோயில் ஊழியர்களும் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர்.

அய்தராபாத்திலும் இந்த நிறுவனம் ரூ 150 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது. காவல் துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளதால், தங்கக்காசு நிறுவனத்தின் ஏஜெண்டுகளாக செயல்பட்ட சில தொழில் அதிபர்கள் தலை மறைவாகிவிட்டனர்.
அத்வானி இந்தியாவின் பிரதமரானால், எவ்வாறான ஆட்சியைத் தருவார்?

கருணையின் சொருபமாக சித்தரிக்கப்படும் இயேசு ( கர்த்தர்) கொலைகார‌ரா? பைபிள்:ஆமாம்!!! ‍

ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனரான ' தினமணி' வைத்தியநாதய்யர்- இடர் தரும் ஒதுக்கீடுகளா ?

No comments: