Followers

Wednesday, May 7, 2008

25 கிலோ மீட்டர் நீளமான ஒன்று வழிபாட்டுத் தலமாக இருக்க முடியுமா?பூமாதேவி என்பதற்காக அதைத் தோண்டக்கூடாதா?

சேது சமுத்திரம் - “ராமன் பாலம்” சர்ச்சை:
25 கிலோ மீட்டர் நீளமான ஒன்று வழிபாட்டுத் தலமாக இருக்க முடியுமா?பூமாதேவி என்பதற்காக அதைத் தோண்டக்கூடாதா?

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சரமாரியான கேள்விகள்

புதுடெல்லி, மே 7- 25 கிலோ மீட்டர் நீளமான ஒன்று வழிபாட்டு தலமாக இருக்க முடியுமா? என்று ராமன் பாலம் பற்றிய வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ராமன் பாலத்தை இடிக்கக் கூடாது என்று கோரியும் ராமன் பாலத்தை தேசிய புராதனச் சின்னமாக அறிவிக்கவேண்டும் என்று கோரியும் இந்து அமைப் புகள் சார்பில் உச்சநீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டது.ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோரும் இதே போன்று மனுக்களைத் தாக்கல் செய்தனர்.கடந்த 1 ஆம் தேதி சேது சமுத்திர வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை தொடங்கியது.

இந்த வழக்கு உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஜே.எம்.பன் சால் ஆகியோர் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சோலி சொராப்ஜி, கே.பராசரன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.சொராப்ஜியின் விவாதம்மக்கள் தாங்கள் கொண்டிருக்கும் மத நம்பிக்கையை தங்களது விருப்பப்படி தொடர்வதற்கும், பிரச்சாரம் செய்வதற்கும் உரிமை உண்டு.

அவர்கள் கொண்டுள்ள எந்தவொரு நம்பிக்கையையும் தடுப்பது அரசியல் சட்டத்தின் 25 ஆவது பிரிவை மீறுவதாகும்

.ராமன் பாலம் மனிதனால் கட்டப்பட்டதா? அது இயற்கையாக உருவானதா? என்பது இதில் முக்கியமல்ல.

இந்திய சமூகத்தைச் சேர்ந்த பெரும் பான்மை மக்கள் ராமன் பாலம் ராமனால் கட்டப்பட்டது என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் வழி படும் பகுதியை அழிக்கவோ, இடிக்கவோ முயற்சிப்பது அவர்களின் வழிபாட்டு உரிமையைப் பறிப்பதாகும்.மேலும் ராமன் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டதா? இல்லையா? என்பதை நிரூபிக்க அறிவியல் மற்றும் வரலாற்று ஆதாரங்களை ஆராய்வது போன்ற பிரச்சினைகளில் நுழைவது உச்சநீதிமன்றத்தின் வேலையல்ல.மேற்கண்டவாறு சோலி சொராப்ஜி வாதிட்டார்.

ராம. கோபாலன்சார்பில்...
ராம. கோபாலன் சார்பில் வாதிட்ட பராசரன் கூறும் போது, `பாபர் மசூதி இடிக் கப்பட்டபோது மக்களின் மனதில் ஏற்பட்ட காயத்தின் ஆழமான வடு இன்னும் உள்ளது. அந்தக் காயம் ஆறிவிட்டாலும் கூட வடு மறைய வில்லை.

அதேபோல் ராமன் பாலம் இடிக்கப்பட்டாலும் அது நிரந்தர வடுவை உருவாக்கும். ராமன் பால விஷயத்தில் இது தவிர்க்கப்படவேண்டும். ஏனெனில் ராமன் பாலம் மீது இந்துக்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர்` என்றார்.
நீதிபதிகளின் கேள்விக் கணைகள்

அப்போது நீதிபதிகள் ரவீந் திரன், பன்சால் குறுக்கிட்டு, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம் சரமாரியாக பல்வேறு கேள்வி களை கேட்டனர்.

அவர்கள் கூறியதாவது:-நாம் பூமித் தாயை வணங்குகிறோம், அதற்காக பூமியை நாம் தொடக்கூடாது என்று அர்த்தமா?

... நாம் இமயமலை யைக் கூட வணங்குகிறோம். அதற்காக இமயமலையைத் தொடக் கூடாது என்று அர்த்த மாகி விடுமா?...

இதே போல் மதுராவில் உள்ள கோவர்த்தன மலையை வழிபடுகிறோம். அதற்காக கோவர்த்தன மலையில் எதையுமே செய்யக் கூடாது என்று ஆகிவிடுமா?...

மக்கள் புனிதமாகக் கருது வதால் அங்கு கட்டுமானப் பணிகள் எதையும் மேற்கொள்ளக் கூடாதா?

25 கிலோ மீட் டர் நீளமான ஒன்று வழி பாட்டு தலமாக இருக்க முடியுமா?

ராமன் கோவில் உள்ள இடத்தில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து வேறு இடத்தில் வைத்தால் அதன் புனிதம் கெட்டு விடுமா?

இவ்வாறு அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் கேட்டனர்

பதில் சொல்ல முடியாது என்று வழக்கறிஞர்கள் ஒப்புதல்!
இதற்கு பதில் அளித்த மூத்த வழக்கறிஞர் பராசரன் கூறும் போது, `இவையெல்லாம் பதில் அளிப்பதற்கு கடுமையான கேள்விகள் ஆகும். இந்தக் கேள்விகளுக்கு நீதிபதிகள் கூட பதில் அளிப்பது சிரமம்' என்றார்.

சோலி சொராப்ஜி கூறுகையில், `மலைகள், நதிகள், மரங்கள் போன்ற உதாரணங்கள்பற்றி நாங்கள் கவலைப் படவில்லை. ராமன் பாலம் பற்றியே கவலை கொள்கிறோம்` என்று தெரிவித்தார்.

`வளர்ச்சிப் பணிகளுக்காக 300 மீட்டர் நீள பகுதியை இடிக்க கூடாதா?... என்பதை அறிய நீதிமன்றம் விரும்புகிறது' என நீதிபதிகள் கூறியபோது, அதற்கு மனுதாரர் தரப்பில் வாதிட்ட சொராப்ஜி, `இடிக்கக் கூடாது' என்று மறுத்தார்.

பராசரன் வாதிடுகையில், `6 ஆவது வழித் தடத்தில் அமைந்துள்ள ராமன் பாலத்திற்கு எந்த சேதமும் ஏற்படுத்தாமல் சேது சமுத்திர திட்டத்தை நான் காவது வழித் தடத்தில் செயல் படுத்த தங்களுக்கு ஆட்சேபம் இல்லை' என்று தெரிவித்தார்.

இதே கருத்தை ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமியும் ஆமோதித்தார்.மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்த, மத்திய அரசின் மூத்த தலைமை வழக்கறிஞர் நாரிமன், `4 ஆவது மற்றும் 5 ஆவது வழித்தடத்தில் சேதுக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற இயலாது என்றும் சுற்றுப்பாதையில் அமைந்துள்ள அப்பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கு சரியான வசதியை ஏற்படுத்த முடியாது' என்றும் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் இன்று (புதன் கிழமை) ஒத்தி வைத்தனர்.

viduthalai./20080507/
--------------------------------------------
பைபிள்: ஆண் பெண்களின் இயற்க்கைக்கு புறம்பான‌ , கேடான காம சிந்தைக்கு கர்த்தர் ஏன் ஒப்புக்கொடுத்தார் ?.

2 comments:

roshini said...

Nice Post !
You should use a Tamil social bookmarking widget like PrachaarThis to let your users easily bookmark your blog posts.

Thamizhan said...

உலகே சிரிக்கும் இந்தக் கோமாளித் தனத்தைக் கேட்டு.
சந்திரனைத் தெய்வமாகக் கொண்டாடியது போய் அங்கே காலூன்றி,தோண்டி எடுத்து வந்து ஆராய்ச்சி செய்தாகி விட்டது.
ஒரு அறிவு அதுவும் ஹார்வேர்டு அற்பம் கேட்டிருக்கிறது.சூரியனைக் கும்ம்பிடுகிறோம் அங்கு சென்றா, செல்ல முடியுமா என்று.அட அல்பமே சூரியனுக்கே அனுப்பி ஆராய திட்டமுள்ளது நோக்குத் தெரியாதோடா!
ஏண்டா இந்தியாவின் மடத்தனத்தை
மதமென்று சொல்லி மானத்தை வாங்குகிறீர்கள்.