Followers

Saturday, May 31, 2008

ஆபாசத்தை காட்டுவதலில் முதலிடம்... ? வைத்தியநாதய்யரின் " தினமணி " ப் பாம்பு.

சிவனுக்கு என்ன தண்டனை?

சிவபெருமான் சாபம் விட்டானாம். எட்டு பிரம்ம குமாரர்களும் கழுகுகளாகி விட்டனராம்.

ஒரு யுகத்திற்கு இரண்டு பேர் என, கிரேதா யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் ஆகிய மூன்று யுகங்களிலும் 6 பேர் திருக்கழுக்குன்றம் மலையில் உள்ள சிவனை வணங்கி முற்பகல் 11 மணிக்குச் சோறு தின்று வந்தனவாம்.

கலியுகத்தில் பூஷா, விதாதா என்கிற (இரண்டு பிரம்ம குமாரர்கள்) கழுகுகள் சோறு தின்று வந்தனவாம். அவற்றை இப்போது காண முடியவில்லை;

அதற்கு விடை கடவுளுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று - என்று எழுதுகிறது வைத்தியநாதய்யரின் தினமணிப் பாம்பு.
செத்துப் போன காரணத்தினால் கழுகுகளைக் காணவில்லை என்பதைக் கண்டு கொள்ளப் பிரமாதமான வேதாந்த அறிவு தேவைப்படாதே!

கலியுகம் முடிவதற்கு முன்னே கழுகுகளைச் சாகடித்த எமனையும் அவனது எஜமான் சிவனையும் எந்த வகையில் தண்டிப்பது? தினமணி கூறுமா?
---------------------------------------------
முதலிடம்...
நடிகைகளைவிடகோவிலில் உள்ள சிலைகளே முதலிடம் பிடிக்கிறது ஆபாசத்தை காட்டுவதலில்
- அ. குருஷ்ராஜா இனாம் ரெட்டியாபட்டி viduthalai.com
----------------------------------
ஆண் பெண் குறிகளை அயில்வேல் காக்க !!! இந்து மதக் கடவுள் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது? கஷ்டம்தான்

Friday, May 30, 2008

அய்யப்ப மூட பக்தர்களுக்கு இனியாவது புத்தி வருமா?

“மகர விளக்கு மனிதன் ஏற்றுவதுதான் கடவுள் சக்தி ஒன்றும் கிடையாது:”-சபரிமலை தந்திரி ஒப்புதல்.

பொன்னம்பலமேடு பித்தலாட்டம் அம்பலம்!
கேரள மந்திரியும் கூறுகிறார்.

மோசடியை அரசு தடை செய்யுமா?

திருவனந்தபுரம், மே 29- ஆணுக்கும், ஆணுக்கும் பிறந்த அய்யப்பன் பொம்மையை வைத்துக் கோயில் கட்டிக் கும்பிடும் சபரிமலைக்கு சற்றுத் தூரத்தில் பொன்னம்பலமேடு எனும் காட்டுப் பகுதியில் பொங்கல் நாளன்று மூன்று முறை தீ எரிந்து அணையும்.

இதை மகரவிளக்கு என்று கூறி, தெய்வாதீனமாக இது நடப்பதாகப் புளுகி, மக்களை ஏமாற்றி, அவர்களின் கடவுள் நம்பிக் கையை மலிவான முறையில் முதலீடாக்கி சபரிமலை கோயிலும், குருக்களும், கேரள அரசுகளும் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர்.

புத்தியை இழந்து பக்தியில் ஆழ்ந்த, மூட பக்தர்கள் லட்சக்கணக்கில் சபரிமலைக்குச் சென்று வருவதன்மூலம் கேரள தேவஸ்வம் போர்டுக்கும், கேரள அரசுக்கும் கோடிக் கணக்கில் வருமானம் ஆண்டு தோறும் குவிந்து வருகிறது.

இதை இழக்க விரும்பாத இவர்கள், இந்த மோசடியை நீடிக்க அனுமதித்து வந்தார்கள். கேரளப் பகுத்தறிவாளர்களும், நாத்திகர்களும் இந்த மோசடியை அம்பலப்படுத்திய போதெல்லாம் அவர்கள்மீது காவல்துறை அடக்குமுறையும், சட்ட நடவடிக்கைகளையும் எடுத்து வந்தது.

கேரள மின்வாரிய ஊழியர்களின் கூட்டு மோசடியால் பொன்னம்பலமேடு காட்டுப் பகுதியில் நெருப்பைக் கொளுத்தி, மகரவிளக்குப் பித்தலாட்டம் நடந்துவந்த நிலையில், பகுத்தறிவாளர்கள் அதற்கு எதிர்த்திசையில் நெருப்பைக் கொளுத்தி எதிர்நடவடிக் கையில் ஈடுபட்டனர்.

அத்துடன் மட்டுமல்லாது, கேரள மின்வாரிய ஊழியர்கள் நெருப்பைக் கொளுத்துவது, அவர்களின் ஜீப் வண்டி அருகில் நிறுத்தப்பட்டிருப்பது ஆகிய ஒளிப்படங்களையும் வெளியிட்டு உண்மையை நிலை நிறுத்தினர்.

காங்கிரசுக் கட்சி கேரளாவை ஆண்ட காலத்தில், 10 ஆண்டுகளுக்கு முன்பு, சட்ட மன்றத்தில் இதுபற்றிக் கேள்வி வந்தபோது, முதலமைச்சர் கருணாகரன் இதை ஒப்புக் கொண்டார்; மக்களின் மத நம்பிக்கையைப் பாதிக்கும் என்பதால், அரசு ஒன்றும் செய்வதற்கில்லை என்று பூசி மொழுகி விட்டார்.

ஈ.கே. நாயனார் கேரள மாநில முதலமைச்சராக இருந்த போது, கேரள பகுத்தறிவாளர்கள் அவரை நேரில் சந்தித்து விவாதித்தபோது, நீங்கள் சொல்வது உண்மைதான்; மின்வாரியத்தைச் சேர்ந்தவர்கள் தான் செயற்கையாக தீபம் காட்டுகிறார்கள் ஆனாலும், தடை செய்ய முடியாது என்று கூறினார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், மகர விளக்கு தெய்வீகச் செயலல்ல; மனிதனின் செயல் தான் என்று சபரிமலை குருக்களான கண்டரேறு மகேஸ் வரரு ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார்.

கேரள அரசின் அறநிலையத் துறை அமைச்சர் ஜி. சுதாகரன் இதனை ஏற்றுக் கொண்டுள்ளார். கேரள அற நிலையக் குழுமத் தலைவர் சி.கே. குப்தன் என்பவரும் இதை ஒப்புக் கொண்டுள்ளார்.

அரசு இதைத் தடுக்க எதுவும் செய்ய முடியாது; ஏனென்றால், இது கலவரத்திற்கு ஏதுவாகி விடும் என்று மந்திரி கூறுகிறார். மகரவிளக்கைக் கொளுத்திக் காட்டுவதைத் தடை செய்ய முடியாது என்று தேவஸ்வம் போர்டு தலைவரும் கூறுகிறார்.

இவர்கள் இரு வருமே இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியைச் சேர்ந்தவர்கள்.சபரிமலை தந்திரி கண்ட ரேறு மகேஸ்வரரு தன் பெயரன் ராகுல் ஈஸ்வர் மூலம் அளித்த அறிக்கையில் மகர விளக்கு கொளுத்துவது காட்டு மக்களின் பழக்கம் என்பதாகவும், மகரஜோதி என்பது வானில் உள்ள நட்சத்திரம் எனவும் கூறியிருக்கிறார்.

மகர விளக்கு என்பதே பித்தலாட்டம் எனப் பகுத்தறிவாளர்கள் கூறி, அதனைக் கையும், களவுமாகப் பிடிப்போம் என்று அறிவித்து, காட்டுக்குள் நுழையப் போன போது கேரளக் காவல் துறையும், வனத் துறையும் சேர்ந்து கொண்டு அவர்களைத் தடுத்துவிட்ட நிகழ்வும் நடந்துள்ளது.

இதன் மூலம் பித்தாலட்டத்திற்குத் துணைபோன குற்றத்தை அவர்கள் செய்துள்ளனர்.தற்போது சபரிமலை தந்திரியே ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ள நிலையில், பக்தர்களுக்கு அறிவுத் தெளிவைத் தரவேண்டியது மதச் சார்பற்ற மாநில அரசின் கடமை அல்லவா?

ஏமாற்றும் செயலில் ஈடுபடுவதைத் தடுக்கவேண்டியதும் அரசின் கடமையல்லவா? அதைச் செய்வதில் தயக்கம் காட்டக் கூடாது என்பதுதான் பகுத்தறிவாளர்களின் எதிர் பார்ப்பு.viduthalai.news

ஆண் பெண் குறிகளை அயில்வேல் காக்க !!! இந்து மதக் கடவுள் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது? கஷ்டம்தான்

கடவுளுக்குப் பக்தன் வைக்கும் வேலைகள் என்னென்ன தெரியுமா? கந்த சஷ்டி கவசமாம் - பாடலாமா?

நிலை மண்டில ஆசிரியப் பாவால் கந்தனைப் பாடிய தேவராயன் எழுதியது கந்த சஷ்டிக் கவசம் என்கிறார்கள்.
விசாகம் கந்தனின் பிறந்த நாள். 19.5.2008 திங்கள்கிழமை கந்த சஷ்டிக் கவசம் பாடினால் கந்தன் கருணை கண்டிப்பாகக் கிடைக்குமாம்.

`உன் திருவடியை உறுதியென்று எண்ணும் என்னைக் காத்திடுக என்ற வேண்டுகோளை வைத்து இப்பாட்டு உள்ளது.

கடவுளுக்குப் பக்தன் வைக்கும் வேலைகள் என்னென்ன தெரியுமா?

சேர் இளமுலையைத் திருவேல் காக்க...
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க..
நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க...
ஆண் பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்டமிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க..
பனைத் தொடையிரண்டும், பருவேல் காக்க...

இப்படியாகப் போகிறது வேலைப் பட்டியல் (Job Chart)!இந்து மதக் கடவுள் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது? கஷ்டம்தான்

viduthalai./20080517/news05.

Thursday, May 29, 2008

ரத்தம் குடிப்பதும், குடலை உருவுவதும்தான் பக்தியா! ஆத்தா சொன்னதால் கொலை செய்தேன்!

ஆட்டுக்குட்டியை வாயால் கடித்து பலி கொடுக்கும் வழிபாடாம்!

ரத்தம் குடிப்பதும், குடலை உருவுவதும்தான் பக்தியா!

திருவள்ளூர், மே 19- திருவள்ளூரில் மாத்தம்மாள் சாமிக்காக ஆட்டுக்குட்டி ஒன்றை வாயால் கடித்து பலி கொடுக்கும் காட்டுமிராண்டித்தனமான நேர்த்திக் கடன் வழிபாடு நடைபெற்றுள்ளது (17.5.2008).

திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை, திருத்தணி, கே.கே. சத்திரம் போன்ற பகுதிகளில் தெலுங்கு மொழி பேசும் அருந்ததியர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்களது குல தெய்வமான மாத்தம்மாளை வணங்கி வழிபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் அருந்ததியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் தீ மிதி விழா மற்றும் லோகாத்தம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை நடத்தினர்.

இதில் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் ஆட்டுக்குட்டி ஒன்றை வாயால் கடித்து பலி கொடுக்கும் நேர்த்திக் கடன் செய்து மாத்தம்மாளை வழிபட்டனராம்.இதற்காக இரண்டு இளைஞர்கள் வாயில் வேப்பிலை கடித்து அருள் வந்ததாகக் கூறி ஆடினர். பின்னர் பலி கொடுக்கப்படும் ஆட்டுக்குட்டியை சிலர் பிடித்துக் கொள்ள இளைஞர்கள் ஆட்டின் கழுத்தை வாயால் கடித்தனர்.

ஆட்டின் குடலை ஒருவர் வாயால் கவ்வி, வேகமாக ஓடி வலம் வந்தார். மற்றொருவர் கழுத்து வெட்டப்பட்ட ஆட்டை அப்படியே வாயில் கவ்வியபடி வேகமாக ஓடினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கூடி நின்று பார்த்துள்ளனர்.

பக்தி வந்தால் புத்தி போய்விடும், கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்று தந்தை பெரியார் கூறிய மொழிகள் நூற்றுக்கு நூறு உண்மையானவை என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒன்று போதாதா?

ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் முன்னேற வேண்டுமானால், இத்தகைய மூடத்தனங்களிலிருந்து விடுபடவேண்டுமே! viduthalai.com
-------------------------------------------------------------
ஆத்தா சொன்னதால் கொலை செய்தேன்!

கோவில் காவலாளியைக் கொன்றவர் வாக்குமூலம்!

புதுக்கோட்டை, மே.28- புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி துரையரசபுரத்தைச் சேர்ந்தவர் கணபதி (45). இவர் அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் குளத்தில் மீன் குத்தகை காவலாளியாக இருந்து வந்தார்.

இவருக்கும் அவரது பக்கத்து வீட்டுக்காரரான சுந்தரேஸ்வரன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. நிகழ்வன்று கோவில் குளத்தைக் காவல் காப்பதற்காக கணபதி சென்று கொண்டிருந்த போது, சமத்துவபுரம் அருகே வழிமறித்த சுந்தரேஸ்வரன் அரிவாளால் வெட்டி விட்டு ஓடிவிட்டார்.

கணபதி அதே இடத்தில் இறந்துவிட்டார்.சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல்துறை அதிகாரி அதிவீர பாண்டியன் வழக்குப் பதிவு செய்து சுந்தரேஸ்வரனைக் கைது செய்து காவல்நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

மொட்டை தலை, கழுத்து நிறைய உத்திராட்சக் கொட்டை, நெற்றி நிறைய விபூதிப் பட்டையுமாகக் காட்சியளித்த சுந்தரேஸ்வரன் காவல துறையினரிடம் கூறும்போது,

இந்தக் கொலையை நான் செய்யவில்லை. ஆத்தா சொன்னதால் செய்தேன். மேலும் 2 பேரைக் கொலை செய்ய உத்தரவு கொடுத்திருக்கிறாள்.
அவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னதைக் கேட்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். viduthalai.com

Wednesday, May 28, 2008

இது என்ன புதுக்கூத்து? ஸ்கேன் சோதனை - திங்கள்கிழமை என்றால் ஆண் ! வெள்ளிக்கிழமை என்றால் பெண் !

இராமன் மட்டும் சீதை மேல் சந்தேகப் படலாம். சீதை மட்டும் இராமன் மேல் சந்தேகப்படக் கூடாதா?

புதுக்கோட்டை, மே 28- புதுக் கோட்டையில் உள்ள ஜெ.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குடும்ப வன்முறைகளிலிருந்து பாதுகாக்கும் சட்டம் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.
தலைமையுரையாற்றிய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்,
ஆண்கள் நினைத்தபடி யெல்லாம் ஆடுவதற்குப் பெண்கள் ஒன்றும் ஆட்டுக் கல்லு மில்லை, அம்மிக் குழவியுமில்லை.

இராமன் மட்டும் சீதை மேல் சந்தேகப் படலாம். சீதை மட்டும் இராமன் மேல் சந்தேகப்படக் கூடாதா? இதைத்தான் தந்தை பெரியார் கேட்டார்.

பெண்கள் அவசியம் படிக்க வேண்டும் என்றார். இன்று பெண்கள் படித்து எல்லா உயர் பதவிகளிலும் இருக்கிறார்கள் என்று பேசினார்.

இராமாத்தாள் கூறும் போது, தமிழ்நாடு மகளிர் ஆணையம் அமைத்து இது வரை 45 ஆயிரம் பெண்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை ஆய்வு செய்திருக்கிறோம். எங்களிடம் 2 ஆயிரம் புகார்கள் வந்திருக்கின்றன. அவற்றில் 1500 விண்ணப்பங் களுக்குத் தீர்வு சொல்லி இருக்கிறோம். மீதியுள்ள 500 விண்ணப்பங்களைப் பரிசீலித்து வருகிறோம்.

கிராமங்களிலுள்ள தாய்மார்கள் எங்கெல்லாம் போய் ஸ்கேன் செய்து கொள்கிறார்கள்?

அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்தபோது ஆண், பெண் குழந்தைகள் என்று சொல்லக் கூடாது என்று சட்டமிருப்பதால், சோதனைக்கு வந்தவர்களிடம் மண்டே திங்கள் கிழமை வாருங்கள் என்று சொன்னால் அது ஆண் பிள்ளை என்றும், ப்ரைடே வெள்ளிக்கிழமை வாருங்கள் என்று சொன்னால் அது பெண்பிள்ளை என்றும் பொருள் கூறுகிறார்கள் என்பதைத் தெரிந்து, கொண்டு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியவுடன் இப்போது வேறு பெயர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் viduthalai.com
------------------------------------------------------------
சீனாக்காரன் கையில் சிக்கிய சிவபெருமானும் ! சொர்க்க லோகமும் !! எப்போது எப்படி மீட்பது ?

முதல் உடல் உறவு கொள்ள பிராமணர்களுக்கே அழைப்பு!! ??. பார்ப்பனர்கள் கூறும் திருமண மந்திரம்.

சீனாக்காரன் கையில் சிக்கிய சிவபெருமானும் ! சொர்க்க லோகமும் !! எப்போது எப்படி மீட்பது ?

இவ்வளவு அற்புத சக்தி வாய்ந்த இடத்தை அந்நியன் எப்படி ஆக்கிரமித்தான்.? அவன் படை எடுத்துவந்த நேரத்தில் சிவபெருமான் என்ன செய்து கொண்டிருந்தான்?


திருக்கைலயங்கிரி என்ற தமிழ் இலக்கியம் போற்றும் திரிக்கைலாய மலை உள்ள பிரதேசம்தான் பூலோக சொர்க்கம்.

இது திபெத் பகுதியில் உள்ளது. சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்ட எல்லைப் பிராந்தியம்; `கைலாஸ் மானஸரோவர் எனும் இப்பிரதேசம்.

பாரதத்தின் கலை - கலாசார ஆன்மீகத்துறைகளுக்கு ஆதார சக்தியாக விளங்கி வந்திருக்கிறது இந்தப் பூலோக சொர்க்கம்.

இதற்கு பாரதத்தில், வழங்கிய புராதனப் பெயர் `த்ரிவிஷ்டபம் (திப்பெத்). சிருஷ்டியின் தொடக்கம் இப்பிரதேசத்தில் தான் ஏற்பட்டது என்று ரிக் வேதம் கூறுகிறது.

பூமியில் பேரதிர்வு ஏற்பட்டு, இமயமலை எழுந்ததும், கடல்கள் உருவானதும் இப் பகுதியிலிருந்துதான். ரிக் வேதத்தில் இத்தகவலைத் தரும் பல சூக்தங்கள் இருக்கின்றன.

`த்ரய:ஸுபர்ணா உபரஸ்ய மாயூ நாகஸ்ய ப்ருஷ்ட்டே. அதி விஷ்ட பிச்ரிதா:.. என்று தொடங்கும் சூக்தம், இந்தக் கருத்தை வெளியிடுகிறது.

``மூன்று தைவ சக்திகள் - அக்னி இடி மின்னல், சூரியன் இங்கு ஒன்று சேர்ந்து இயங்கியதால் ஜீவராசியின் சிருஷ்டி தொடங்கியது. இதுதான் சொர்க்க லோகம்;

இங்கு அமிர்த சக்தி இருக்கிறது. ஜீவர்கள் இந்த அமுத சக்தியைப் பெற்று வளர்கின்றன. இதனாலேயே இப்பகுதியை `த்ரவிஷ்டபம் (மூன்று தைவ சக்திகள் ஒருமித்த சொர்க்கம்) என்று அழைக்கிறோம்.

மகாபாரதத்தில் வியாச முனிவர் இந்த திப்பெத் பிரதேசத்தை `த்ரதவிஷ்டபம் என்றே குறிப்பிட்டு, ஆர்ய வர்த்தத்தின் நடுப்பகுதி, மிகப் புனிதமான புண்ய பூமி என்று கூறியிருக்கிறார்.

கிம் புருஷவர்ஷம். கின்னரதேசம், கந்தர்வ லோகம் என்றெல்லாம் இப்பகுதியில் உள்ள பிரதேசங்களை வர்ணிக்கிறார்.

கைலாஸ பர்வதத்தை ``ஹேம கூடம் என்று மகாபாரதமும் `கிரௌஞ்ச பர்வதம் என்று வால்மீகி ராமாயணமும் குறிப்பிடுகின்றன.

ஏழாம் நூற்றாண்டில் இங்கு ஆட்சி புரிந்து வந்த ஸோங் வத்ஸன் ஸகம்போ எனும் திப்பெத்திய அரசனின் காலத்திலிருந்து 1954-ல் சீனா இந்நாட்டை ஆக்கிரமித்துக் கொள்வதற்கு முன்பு வரையில் பாரதத்தின் பகுதி போலவ இங்கு இந்திய யாத்திரிகள் போய் வந்து கொண்டிருந்தார்கள்

கைலாஸ் - மானஸரோவர் பகுதியிலுள்ள மகன்ஸர் கிராமத்திலிருந்து பாரதம் 1948-க்கு முன்பு வரைக்கும் கிஸ்தி வசூல் செய்து கொண்டிருந்தது.

1950 வாக்கில் இப்பகுதியுடன் கிட்டத்தட்ட எண்பதாயிரம் சதுர மைல் பரப்புள்ள இந்தியப் பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்துக் கொண்டு விட்டதால் 1962-ல் ஏற்பட்ட சீனப் படையெடுப்பிற்குப் பின் கைலாஸ் மானஸ ரோவர் புனித யாத்திரை தடைப்பட்டு விட்டது.

-திரு. சௌரி எழுதிய `இந்தியாவின் கலையும் கலா சாரமும் என்ற நூல் - பக்கம் 145, 146 (வானதி பதிப்பக வெளியீடு)

நமது கேள்வி இதுதான்

பூலோக சொர்க்கம் என்று போற்றப்படுகின்ற இடம்!சிவபெருமான் உறைவதாகக் கூறப்படுகின்ற இடம்!மூன்று தைவ சக்திகள் ஒன்று கூடுவதாகக் கூறப்படும் இடம்.

இவ்வளவு அற்புத சக்தி வாய்ந்த இடத்தை அந்நியன் எப்படி ஆக்கிரமித்தான் - அதுவும் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகனான சீனாக்காரனால் எப்படி ஆக்கிரமிக்க முடிந்தது?

அவன் படை எடுத்துவந்த நேரத்தில் சிவபெருமான் என்ன செய்து கொண்டிருந்தான்?

திரிபுரத்தை அவன் சிரித்தே அழித்ததாகக் கதை கட்டி இருக்கின்றார்களே - அந்த அபார சக்தி என்ன ஆயிற்று?

உண்மையிலேயே சிவபெருமான் என்று ஒருவன் இருந்து அவன் அபார சக்தி உடையவனாகவும் இருப்பது உண்மையானால், சீனாக்காரன் அந்த இடத்தைக் கைப்பற்றி இருக்க முடியுமா?இதிலிருந்து என்ன தெரிகிறது?

கடவுள் என்ற ஒன்று இல்லை. அவனுக்கு சக்தி இருக்கிறது என்று கூறப் படுவதெல்லாம் அவிழ்த்து விடப்பட்ட பொய் மூட்டைகள் என்பது இதிலிருந்து விளங்கவில்லையா?
viduthalai.news. 26 may 2008

Tuesday, May 27, 2008

முதல் உடல் உறவு கொள்ள பிராமணர்களுக்கே அழைப்பு!! ??. பார்ப்பனர்கள் கூறும் திருமண மந்திரம்.

 அரசர்களும்கூட அவர்களுடைய அரசியருடன் முதல் உடல் உறவு கொள்ள பிராமணர்களுக்கே அழைப்பு விடுத்தார்கள்.


திருமணம் நடத்தி வைக்கும் புரோகிதப் பார்ப்பனர் சமஸ்கிருதமாகிய வடமொழியில் தான் திருமணத்திற்குரிய `மந்திரங்களைக் கூறுவார். அப்படித் திருமணங்களில் கூறப்படும் மந்திரங்களில் ஒன்று.

மணப் பெண்ணைப் பார்த்துக் கூறுவதாவது:
சோமன் (சந்திரன்) முதலில் இவளை அடைந்தான்.
பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான்.
உன்னுடைய மூன்றாம் கணவன் அக்னி.
உன்னுடைய நான்காம் கணவன் மனித ஜாதியில் பிறந்தவன்.
சோமன் உன்னைக் கந்தர்வனுக்குக் கொடுத்தான்.
கந்தர்வன் அக்னிக்குக் கொடுத்தான்.
அக்னி தேவன் இவளுக்குச் செல்வத்தையும் மக்களையும் கொடுத்து,
பிறகு எனக்குத் தந்தான்.

இவ்வாறு அர்த்தம் கொண்ட கீழ்க்காணும் சமஸ்கிருத ஸ்லோகங்களை மணமகனின் சார்பில் புரோகிதர் சொல்லுவார்.

``ஸோம: ப்ரதமோ விவிதே

கந்தர்வோ விவித உத்தர:

த்ருதீயோ அக்நிஷ்டே பதி:

துரீயஸ்தே மநுஷ்யஜா.``ஸோமோ (அ)தத் கந்தர் வாய கந்தர்வோ (அ)தத் அக்நயேர

யிஞ்ச புத்ராகும்ச அதாத்

அக்நிர் மஹ்யமதோ இமாம்

ஓர் ஒப்பீடு!
திருமணமாகின்ற மணப்பெண்ணை பல கடவுள்களுக்கு மனைவியாக்கிடும் ரிக்வேத காலத்து மந்திர சுலோகம் (``சோம ப்ரதமோ... என்று கூறப்படுகிற சமஸ்கிருத சுலோகத்தைப்) போலவே,

ரோமானிகள் கி.பி. 300-400 என்ற கால கட்டத்தில், ரோமானியக் கடவுள்களுக்கு மணப் பெண்ணை மனைவியாக்கித்தான் பிறகு திருமணம் செய்து வைக்கும், நடைமுறை சடங்கு செய்து வந்துள்ளனர்.

இந்த விவரங்கள்

Sex lives of the popes என்ற ஆங்கில நூல், Nigel Cawthorne என்பவரால், பல வரலாற்று ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்டு Prion வெளியீட்டகத்தால் லண்டனில் 1990 வெளி யிடப்பட்ட நூலில் உள்ளது.அதில் உள்ள ஆங்கிலப் பகுதியும் அதன் தமிழாக்கமும் கீழே தரப்படுகிறது.

“Augustine was particularly struck by Roman marriage ceremonies.

These began in the temple of Priapus where the bride had to sit on the god’s enormous,

ugly phallus - though Augustine pointed out that this only robbed the bride of her modesty not her virginity or her fertility.

He was also struck by a number of other gods that were involved in the business of marriage,

all of whom accompanied the newly weds home for the wedding night.

There who the god of marriage, the god was brought the bride to the marriage home and another god to keep here there.

Once the wedding guests had gone, there were a horde of other gods and goddesses who trooped into the marriage chamber for the deflowering.

Augustine marvelled at how a man could be aroused and a virginal, young woman throw off here sexual inhibitions with so many people around” (Page 28).

இதன் தமிழாக்கம்:அகஸ்டின் ரோமானிய மணச் சடங்கு முறைகளால் குறிப்பிடத்தக்க வகையில் மனத்தாக்கத்திற்கு இலக்கானார். பிரியாப்பிஸ் தெய்வத்தின் கோவிலிலே இவை தொடங்கின.

அங்கே மணமகளானவள் கடவுளுடைய வீங்கிப் பெருத்த ஆண் குறியின்மீது அமர வைக்கப்பட்டாள். அகஸ்டின் அந்த வழக்கம் மணமகளின் அடக்க ஒழுக்கத்தினைக் கொள்ளையிடுவதைத் தவிர அவளுடைய கன்னித்தன்மையையோ கருவுறுவளத்தையோ பாதிப்பதில்லை எனச் சுட்டிக் காட்டினார்.

இன்னும் அவர் மண விழாச் சடங்குகளை நடத்துவதில் ஈடுபட்ட பலப்பல கடவுளர்களால் தாக்குண்டார்.

எல்லாத் தெய்வங்களும் புதுமணத் தம்பதியரின் இல்லத்திற்கு மண இரவுச் சடங்குகளை நிறைவேற்றி வைப்பதற்காக உடன் சென்றனர். அங்கு மணவினையை நடத்தி வைத்த தெய்வம் இருந்தது.

மணமகனை வீட்டிற்கு அழைத்து வந்த தெய்வம் இருந்தது. இன்னொரு தெய்வம் அங்கே அவளைக் காக்கவெனக் காத்திருந்தது.மணவிழா விருந்தினர்கள் விடை பெற்றுக் கொண்ட நொடியே, கணக்கற்ற கடவுளர் - கடவுளச்சிகளடங்கிய கும்பல் மந்தையென உட்புகுந்தது. எதற்காக?

மணமகளைக் கன்னி கழிப்புக்கு உட்படுத்துவதற்காக, அகஸ்டினுக்கோ ஓர் ஆடவனின் புலனுணர்ச்சிகள் எவ்வாறு தூண்டப்படுகின்றன என்பதும்,

எப்படி புணர்ச்சிச் செயலில் முன் அறிவு இல்லாத ஓர் இளம் பெண் தன்னைச் சுற்றிலும் அத்தனை பேர் இருக்கும் நிலையில் தன் பாலியல் கூச்சத்தையும் கட்டுப்பாட்டினையும் துறந்துவிட முடியும் என்பதுவும் மாபெரும் விந்தையாக இருந்தது!

அகலிகை - அருந்ததி மற்றொரு சடங்கு அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் என்பதாகும்.

கௌதம முனிவரின் மனைவி அகலிகை இந்திரனிடம் சோரம் போனதால் அவளைக் கல்லாகச் சபித்தார் அம்முனிவர் என்பதை வைத்து, கற்புக்கரசியாக வாழ வேண்டும் என்பதை நினைவூட்டவே அது என்று கூறப்படுகிறது!

கற்பிழந்தவள், சோரம் போனவளை அந்த நாளில் காட்டி, அச்சுறுத்தித்தான் மணப் பெண்ணைக் கற்பு நெறியில் நிற்கச் செய்ய வேண்டும் என்பது மிகவும் விசித்திரமான ஒன்றல்லவா?

அருந்ததி என்பது ஒரு நட்சத்திரம் என்று கூறி அதனைப் பட்டப் பகலில் அதுவும் பந்தலுக்குள் மணமகளை நிறுத்தி `அருந்ததி பார்த்தாயா என்று கேட்பதும், `ஆம் என்று பொய் சொல்லப் பழக்குவதும் மிகவும் வேடிக்கையான ஒன்று அல்லவா?

சூத்திரர்களுக்கு மண உரிமை இல்லை என்பதற்கு மற்றொரு நடைமுறை ஆதாரம் என்னவென்றால், பார்ப்பனப் புரோகிதர் வந்து நடத்தி வைக்கும் வைதீக பழைய திருமணங்களில், மணமகனுக்கு உடம்பில் பூணூல் அணிவித்து பிறகுதான் திருமணத்தை நடத்தி வைப்பார்கள்.

மற்றொரு வேடிக்கை. அத்திருமணத்திற்கு சாட்சி அக்னியும் மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத் தெண்ணாயிரம் ரிஷிகளும் மற்றும் கின்னரர்களும், கிம்புருடர்களும் மணமக்களில் எவருக்காவது ஒரு சிறு விவகாரம் ஏற்பட்டு நீதிமன்றத்துக்கு அவர்கள் சென்றால், இவர்களில் எந்த சாட்சியினர் வருவார்களோ!

``பெண்களைக் கேவலப்படுத்தும் `சம்பந்த திருமண முறையும் ஆரிய ஒழுக்கமும்!

ஆரிய ஒழுக்கத்தைப் படம் பிடித்துக் காட்டும், `பாபா சாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் கருத்துக்கள் கீழே தரப்படுகின்றன.

“Taking the attitude of the people, the person of the Brahmin is sacred. In ancient time, he could not be hanged no matter what offence he committed.

As a sacred person he had immunities and privileges which were denied to the servile class. He was entitled to first fruits.

In Malabar, where the Sambandham marriage prevails to first fruits. In Malabar, where the sambandham marriage prevails, the service classes such as the Nairs regard it an honour to have their females kept as mistresses by Brahmins.

Even kings invited Brahmins to deflower their queens on prima noctis. There was a time when no person of the servile class could take his food without drinking the water in which the toes of the Brahmins were washed.

Sir P.C. Ray once described how in his childhood, rows of children belonging to the servile classes used to stand for hours together in the morning to the roadside in Calcutta with cups of water in their hands waiting for a Brahmin to pass ready to wash his feet and take it to their parents waiting to sip it before taking their food.

Under the British Government and by reason of its equalitraian jurisprudence these rights, immunities and privileges of the Brahmins have ceased to exist.

Nonetheless the advantages they gave still remain and the Brahmin is still pre-eminent and sacred in the eyes of the servile classes and it still addressed by them as ‘Swami’ which means ‘Lord’.(What congress and Gandhi have done to the unthouchables - pp, 205-206)இதன் தமிழாக்கம் வருமாறு:``பிராமணனைப் புனிதமானவனாக மக்கள் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். அவன் எத்தகைய குற்றங்களை இழைத்தாலும் அவனுக்குத் தண்டனை கிடையாது என்பது தான் பழங்காலத்து நிலையாகும். அவன் புனிதமானவன் என்பதால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட பல விதிவிலக்குகளும், உரிமைகளும் அவன் பெற்றிருந்தான். முதல் அனுபவப் பாத்தியதை அவனுக்கு வழங்கப்பட்டிருந்தது.

மலபாரில் `சம்பந்தம் மண முறை நடைமுறையிலிருந்தது. அங்கிருந்த நாயர்கள், அவர்களுடைய மனைவியர் பிராமணர்களால் ஆசை நாயகிகளாக வைத்துக் கொள்ளப்படுவதை அவர்களுக்குக் கிடைத்த பெருமையாகக் கருதினர்.

அரசர்களும்கூட அவர்களுடைய அரசியருடன் முதல் உடல் உறவு கொள்ள பிராமணர்களுக்கே அழைப்பு விடுத்தார்கள்.

பிராமணரின் கால் விரலைக் கழுவிய தண்ணீரைக் குடிக்காமல் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மக்கள் யாரும் உணவு உட்கொள்ளக் கூடாது என்று சொல்லப்பட்ட காலம் ஒன்று இருந்தது.

ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் காலை வேளைகளில் கல்கத்தாவின் சாலை ஓரங்களில் கைகளில் நீர் நிறைந்த குவளைகளை வைத்துக் கொண்டு மணிக் கணக்காகக் காத்து நிற்பார்களாம்.

அந்த வழியாகப் போகின்ற பிராமணரின் காலைக் கழுவிய நீரைக் கொண்டு போய்த் தங்கள் பெற்றோர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று அப்படிக் காத்துக் கிடப்பார்களாம்.

அந்த நீரைக் கொண்டு போய் அவர்களது பெற்றோர்களுக்குக் கொடுப்பார்களாம். பிராமணர் கால் கழுவிய அந்த நீரை ஒரு மடக்குக் குடித்த பிறகே உணவு உண்பார்களாம். இதற்காக அந்தப் பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் சாலை ஓரங்களில் காத்துக் கிடப்பது வழக்கமாம்.

அப்படி அவர்கள் காத்துக் கிடந்ததைத் தம் குழந்தைப் பருவத்தில் பார்த்திருப்பதாக பி.சி. ராய் ஒரு முறை தெரிவித்திருக்கிறார்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், நீதிக்குமுன் அனைவரும் சமம் என்ற அவர்களின் அறிவார்ந்த அணுகுமுறையினால் பிராமணர்களுக்கெனச் சிறப்பாக விதிக்கப்பட்டிருந்த உரிமைகள் விதி விலக்குகள், சலுகைகள் முதலிய பலவும் நிறுத்தப்பட்டன.

இத்தனை அனுகூலங்கள் வழங்கப்பட்டிருந்தும்கூட ஒடுக்கப்பட்ட மக்களின் பார்வையில் பிராமணன் மேலானவன், புனிதமானவன் என்ற நிலை இன்னும் தொடர்கிறது.

அதனால்தான் இன்றும்கூட ஒடுக்கப்பட்ட மக்களால், பிராமணர்கள், பிரபு என்னும் பொருள்பட `ஸ்வாமி என்று அழைக்கப்படுகின்றனர். - கி. வீரமணி

(கி. வீரமணி அவர்கள் எழுதிய சுயமரியாதை திருமணம் தத்துவமும் வரலாறும் - என்ற நூலிலிருந்து)  viduthalai.newsநான் அவளோடு உடலுறவு கொள்ளும் பொழுது ...............திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம்

ஆண்குறி மட்டும் வானத்தின் வழியாக விர்ர்...றென்று பறந்து ஆனந்தமாக உடலுறவு கொண்டு விட்டு திரும்பி விடுகிறது. !!!!

ஆணுடைய உயிர்த்துளிகள் ( இந்திரியம் ) பெண்ணுடைய பாகத்தில் சேராமல் வழிதவறி விழுந்தால்... ?? கவலை வேண்டாம் சுகமே !!!

சிவனுக்குச் காமவெறி உச்சத்தை அடைய.. கூடு முன்பே வழிந்த இந்திரியத்தை கையிலே பிடிக்க.. ஐய்யோ அப்பா!! ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த பிள்ளை.!!

விதவை விரதமிருந்து மரித்த கனவனுடன் சொப்பனத்தில் புணர்ந்து பிள்ளை பெற்றாள்.

இது உனக்கு எத்தனாவது புருஷன் ? பண்பாடும் பண்பாடா? “ தினமணி.”இந்தியப் பண்பாடு என்றால் ஒரு பெண்ணுக்கு அய்ந்து கணவர்கள் என்று தான் உலகம் முழுவதும்!

துண்டைக் காணோம் - வேட்டியைக் காணோம் என்று இந்துத்துவாவாதிகள் ஓட்டம் எடுக்க வேண்டியதுதான்.

இந்தியப் பண்பாடு என்றால் ஒரு பெண்ணுக்கு அய்ந்து கணவர்கள் என்ற முறையில் தான் உலகம் முழுவதும் அறிமுகமாகியிருக்கிறது.

தமிழக பா.ஜ.க., தலைவர் திரு இல. கணேசன் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.,வின் அதிகாரபூர்வமற்ற நாளேடான `தினமணியில் (16.5.2008) நடுபக்க கட்டுரை ஒன்றினைத் தீட்டியுள்ளார். அதன் பெயர் ``பண்பாடும் நமது பண்பாடு என்பதாகும்.

அதில் ஒரு இடம்: ஒரு நாள் கங்கை கரையோரம் சுவாமிகள் (தயானந்த சரஸ்வதி) முகாமிட்டிருந்தபோது அவரைச் சந்திக்க தஞ்சையிலிருந்து ஒரு வயோதிக தம்பதி சுவாமிஜியின் பக்தர்கள் வந்திருந்தனர். அந்தப் பெரியவருக்கு சுமார் 70 வயது இருக்கும். அவரது மனைவிக்கு 65 வயது இருக்கலாம்.

அதே நேரத்தில் சுவாமிஜியைச் சந்திக்க அமெரிக்க நாட்டிலிருந்தும் ஒரு நடுத்தர வயது தம்பதி வந்திருந்தனர். ஒரு புறம் இவர்கள்; மறுபுறம் தஞ்சை தம்பதிகள்.பேசிக்கொண்டிருக்கும் போதே அந்த அமெரிக்கப் பெண், தஞ்சாவூர் பெண்மணி அருகே போய் நின்று காதருகே ஏதோ கேட்க,
தஞ்சாவூர் அம்மையார் கண்களில் கண்ணீர் பொங்கி வழியத் தொடங்கியது.

சுவாமிஜி இதைப் பார்த்துவிட்டார். "என்ன பிரச்னை? என்று கேட்டார். தஞ்சாவூர் அம்மையாரால் பேச முடியவில்லை. அமெரிக்கப் பெண்மணிதான் பேசினார் ""நான் சாதாரணமாக ஒரு கேள்வி கேட்டேன். அதற்கு அந்த அம்மையார் ஏன் அழுகிறார் என்று புரியவில்லை'' என்றார். "என்ன கேட்டாய்?' என்றார் சுவாமிஜி.

"இது உனக்கு எத்தனாவது புருஷன்?'' என்று கேட்டேன் என்றார் அப்பாவித்தனமாக. சுவாமிஜிக்கு விஷயம் புரிந்து விட்டது.

அழுதுகொண்டிருந்த அம்மையாரால் அந்தக் கேள்வியைக் கூட திரும்பச் சொல்ல வாய் வராது என்பதால் அவரது கணவரை பேசச் சொன்னார். ""எனக்கு 18 வயசாகிற போது இவளுக்கு 13 வயது. இப்போ எனக்கு 70 அவளுக்கு 65, ஒண்ணா இருக்கோம் பகவானின் புண்ணியத்தில்''. "பிஃப்டி இயர்ஸ்.... ...!'' என்று.

கண்களை அகல விரித்து வியந்தாள் அந்த அமெரிக்கப் பெண்மணி. பிறகுதான் புரிந்தது. அந்த ஆணுக்கு இவள் நான்காவது மனைவி. அவளுக்கு அவன் மூன்றாவது கணவன்.

நம் நாட்டின் பண்பாட்டின் ஆழம் புரிகிறதா? என்று மிகவும் பெரு மிதத்தோடு ஒரு வினாவையும் எழுப்பியுள்ளார் திருவாளர் இல. கணேசன்.
வெளிநாட்டு அம்மையார் அந்த வினாவை ஏன் எழுப்பினார்? எழுப்ப வேண்டிய அவசியம் அவருக்கு ஏன் ஏற்பட்டது என்பதுபற்றி பா.ஜ.க., தலைவர் சிந்திக்க மறந்தது ஏன்?

அதற்கொரு விடை இருக்கிறது. அதுவும் வெளிநாட்டுச் செய்திதான். `ஆனந்தவிகடன் இதழில் திருவாளர் மணியன் தான் சென்ற வெளிநாட்டு அனுபவங்கள் பற்றி எழுதுவது வழக்கம்.அந்த முறையிலே அவர் அந்த இதழில் (9.5.1971) `பாரதப் பத்தினிப் பெண் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதினார்.தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா?

இதோ:``என் பெயர் மணியன் என்றேன் குறுக்கிட்டு.`அயாம் ஸாரி, மிஸ்டர் மணியன்; நான் என் ஹஸ்பென்ட்டோட நிறைய ஊருக்குப் போயிருக் கேன். உங்கள் ஊர் `பாலெ எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.ஒரு தரம் டி.வி.யிலே அந்த ஃபைவ் ஹஸ்பென்ட்ஸ் கதையைப் பார்த்தேன். அதிலே ஒரு சந்தேகம் - என்றார்.

``ஃபைவ் ஹஸ்பென்ட்ஸ் கதையா? என்று புரியாமல் கேட்டேன்.``அதுதான், ஒரு லேடிக்கு அய்ந்து கணவர்கள். அந்தக் கால ராஜா ராணி கதை; சூதாடி கன்ட்ரியை லூஸ் பண்ணிடறாங்க....``ஓ பாரதக்கதையா? யெஸ்.. யெஸ்.. பாஞ்சாலி சபதம்.

அதிலே என்ன சந்தேகம்... என்றேன் - விஷயத்தைப் புரிந்து கொண்டு.``அந்தப் பெண் யாரோ ஒருத்தன் அவள் துணியைப் பிடிச்சு `இழுத்தபோது, அவனைத் தள்ளிவிட்டுத் கதறினா.. அந்தக் கதையைப் பார்த்துக் கொண்டிருந்த என் ஹஸ்பென்ட், `இவள் ஏன் இப்படிப் பண்றா? இவளுக்கு ஏற்கெனவே அஞ்சு ஹஸ்பென்ட்ஸ் இருக்காங்க, அப்படியிருக்க ஆறாவதா அந்த ஆளையும் ஏத்துக்கிட்டா என்ன? ஏன் முரண்டு பண்றா? அஞ்சு கணவரை மானேஜ் பன்றபோது ஆறாவது ஒரு பெரிசா? என்று கேட்டார்.

எனக்கும் அவர் கேட்பது சரியாகத் தோனித்து; அவள் ஏன் அவனோட சண்டை போடணும்? அவனையும் `அலவ் பண்ணியிருக்கலாமே.. என்றார்.

இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் சிறிது நேரம் தயங்கினேன் நான். பாரதக் கதையின் தத்துவத்தைப் புரிந்து கொண்டால், இந்தக் கேள்விக்கு இடமே இல்லை என்பதும் எனக்குப் புரிந்தது. என்னால் முடிந்த அளவு (?) அதை விளக்கினேன்.

`ஓ. . அய்.சி.. என்றார் அந்த அம்மையார். என் விளக்கத்தை கேட்டு.. அந்த அய்ஸியில் `நீங்கள் ஏதோ சொல்கிறீர்கள். என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை என்ற பாவம்தான் தொனித்தது.

``ஆனந்த விகடன் 9.5.1971 வெளிநாட்டுக்காரர்களுக்கெல்லாம் இந்தியப் பெண்ணென்றால் ஏன் இப்படி நினைக்கத் தோன்றுகிறது என்பதை கொஞ்சம் அறிவைச் செலுத்திச் சிந்திக்கக் கூடாதா?

மணியனும் சரி, இல. கணேசனும் சரி - இத்தகைய கசப்பான அனுபவங்களை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன என்பதைக் கண்களைக் கொஞ்சம் துடைத்துக் கொண்டு, சிறிது தேனீரையும் அருந்தி, மண்டையையும் ஒரு குலுக்குக் குலுக்கிக் கொண்டு சிந்திக்க முயற்சித்திருக்க வேண்டாமா!

ரீனாராய் என்ற வடநாட்டு நடிகை தம் கணவருடன் ஒருமுறை ருசியா சென்ற போதும் இதே அனுபவத்தைச் சந்திக்கும்படி நேர்ந்திருக்கிறது. ஒரு கணவருடன் தானே வந்திருக்கிறீர்கள்; உங்களுடைய மற்ற நான்கு கணவன்மார்களை இந்தியாவில் விட்டுவிட்டு வந்திருக்கிறீர்களா? என்று கேட்டு இருக்கின்றனர்.

இந்தியப் பண்பாடு என்றால் ஒரு பெண்ணுக்கு அய்ந்து கணவர்கள் என்ற முறையில் தான் உலகம் முழுவதும் அறிமுகமாகியிருக்கிறது.
அதற்குக் காரணம் வேறு யாருமல்ல.. இதே பார்ப்பனர்கள்தான்; இந்து மதவாதிகள்தாம்.

பாரதக் கலாச்சாரம் என்றாலே மகாபாரதம் தான் என்று சொல்லி உலகம் முழுவதும் கொண்டு சேர்ந்த ``புண்ணியவான்கள் இவர்கள்தானே!
அப்படியிருக்கும்பொழுது வெளிநாட்டுக்காரர்கள் கேள்வி கேட்கும்போது முகத்தைத் தொங்கப் போட்டு என்ன பயன்?

மூக்கால் அழக் கூடிய காரியம்தான் என்ன?

அய்வருக்கும் தேவி அழியாப் (பத்தினி என்று அய்யந்திரிபற சொல்லி வைத்த பிறகு ஒருவருக்கு ஒருத்தி என்பதுகூட குற்றமாகத்தானே படும்?

பாரதக் கலாச்சாரமே பார்ப்பனக் கலாச்சாரம்தான் என்கிற அளவுக்கு அவர்களுக்கு இருக்கிற செல்வாக்கை - விளம்பரச் சாதனங்களைப் பயன்படுத்திப் பிரச்சாரம் செய்து வைத்து விட்டார்களே - அதனுடைய அறுவடைதானே இந்த நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் கேள்விகள்!
அய்வருடன் நின்று விட்டாளா அவாள் கூறும் அந்த அழியாத தர்மப் பத்தினி?
ஆறாவதாக கர்ணன் மீதும் காதல் கணையை வீசினாளாம். அதற்கு அந்த அம்மையார் சொல்லும் காரணம் சாதாரணமானதா?

இதோ அய்வருக்கும் தேவி பேசுகிறார்:எனது முதல் கணவன் தருமன் சதா வேதாந்தம் படிப்பவன். இரண்டாவது கணவன் பீமனோ உடல் பருத்தவன், சதா சாப்பிட்டுக் கொண்டே இருப்பான். மூன்றாவதவன் அர்ச்சுனன்; ஆற்று மணலை எண்ணினாலும் அர்ச்சுனன் மனைவியை எண்ணவே முடியாது.
அடுத்து நகுலனும் சகாதேவனும் எனது பிள்ளைகள் மாதிரி. எனவே கர்ணன் மீது எனக்குக் கொள்ளை ஆசை என்று கூறுகிறார் மகாபாரதத்தின் கதாநாயகி பாஞ்சாலி என்ற துரோபதை

இவ்வளவு சங்கை கெட்டுப் போன பிறகு பா.ஜ.க., தலைவர் திருவாளர் இல. கணேசன் எழுதுகோல் பிடிப்பதில் அர்த்தமுண்டா? அடுத்த நாட்டுக் கலாச்சாரத்தைக் கேலி பேசும் தார்மீக உரிமைதான் உண்டா?

இன்னும் இந்தப் பிரச்சினையை விரிவாக்கினால் துண்டைக் காணோம் - வேட்டியைக் காணோம் என்று இந்துத்துவாவாதிகள் ஓட்டம் எடுக்க வேண்டியதுதான்.

மகாவிஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணனுக்கு காதலிகள் 60 ஆயிரம் என்பதும்,

இன்னொரு அவதாரமான இராமனின் தகப்பனாருக்கு மனைவிமார்கள் அறுபதாயிரத்து மூன்று என்பதும் (அது ஒரு தனி முனிசிபாலிட்டி) எந்தக் கணக்கில் சேர்ந்து எந்தப் பண்பாட்டுத் தங்கத் தட்டில் வைத்துத் தாலாட்டுவது அல்லது பூரிப்பது?

பாரதத்தின் பண்பாடும் பண்பாடு வெளியில் சொல்லிக் கொள்ளும் அளவுக்குத் தரமானதல்ல - வீணாகப் பீற்றிக் கொள்ள வேண்டாம்! ---viduthalai.com

Monday, May 26, 2008

கலைஞர் கவனம் செலுத்திட - இந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட வடக்கு - தெற்கு வேற்றுமை வெடித்துக் கிளம்பும்!

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். தேர்வுகள் அல்லாமல் வேறு பணி களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலம் (Staff Selection Commission) பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

அதற்கான தேர்வு ஆண்டுதோறும் நடத்தப் படுகிறது.இந்தத் தேர்வில் இந்தி, இங்கிலீஷ் ஆகிய இரு மொழிகளில் எந்த மொழியிலாவது எழுதலாம் என்ற நிலை இருந்து வருகிறது.

இதன் காரணமாக, இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் அதிகமான அளவில் தேர்வு செய்யப்படுகின்றனர். தென்னிந்தியா மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மிகமிகக் குறைந்த எண்ணிக்கையில் தேர்வு செய்யப்படும் பரிதாப நிலை இருந்து வருகிறது.

இதுகுறித்து அவ்வப்போது குரல் எழுப்பப்படுகிறது. "விடுதலை" தொடர்ந்து தலையங்கங்களையும் தீட்டி வருகிறது. ஆனால், மத்திய அரசோ இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்தி, இந்தி பேசாத மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள வாய்ப்புக் கேட்டுக்குப் பரிகாரம் தேட முன்வரவில்லை.

இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அவர்கள் தாய்மொழியில் தேர்வு எழுதும்போது, அவர்களின் முழுத் திறனையும் காட்ட வாய்ப்புக் கிடைத்து விடுகிறது.

இந்தியைத் தாய் மொழியாகக் கொள்ளாதவர்கள் ஆங்கிலத்திலேயே எழுதவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது.

சென்னை - நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான வருமான வரித் துறைத் தலைமை அலுவலகத்தில் இவ்வாண்டு பணிக்குச் சேர்ந்த 200 பேர்களில் 160 பேர் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இரயில்வே வாரியம் நடத்தும் தேர்விலும் இதே நிலைதான் நீடிக்கிறது.இதில் வேடிக்கை, வினோதம் என்னவென்றால், மத்திய தேர்வாணையம் நடத்தும் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., தேர்வில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள எந்த மொழியிலும் எழுதலாம் - இதன்மூலம் அவரவர்கள் தாய்மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கப் பட்டுள்ளது.

அய்.ஏ.எஸ்., தேர்வையே தமிழில் எழுத வாய்ப்பு இருக்கும் போது, அதற்குக் குறைந்த தகுதி உள்ள பணிகளுக்கான தேர்வை தமிழில் - தாய்மொழியில் எழுதக் கூடாது என்றால் இது எந்த வகையிலான நியாயமாக இருக்க முடியும்?

இது தொடர்பாக 1999 ஆம் ஆண்டில் சில மாணவர்களால் தொடரப்பட்ட வழக்கில் (OA 1239/1999) சென்னை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் (Central Administrative Tribunal) கீழ்க்காணும் கருத்தினை வெளியிட்டது.மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளில், அரசியல் சட்டத்தின் 8 ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளையும் தேர்வு மொழிகளாக்குவது குறித்து இந்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

இது எளிதில் உணர்ச்சிகளைத் தூண்டக் கூடிய பிரச்சினை. எனவே, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் பல மொழிகள் இடம்பெற்றுள்ளதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு மாநில அரசுகளுடன் விரிவான கருத்து பரிமாற்றங்களை நடத்தி, இப்பிரச்சினையில் ஒரு பொதுக் கருத்தினை எட்ட வேண்டுமென்று இத்தீர்ப்பாயம் கருதுகிறது.

பல மொழிகளில் தேர்வு நடத்துவது ஒரு கடினமான பணியென்று இத்தீர்ப்பாயம் கருதவில்லை. ஏனெனில், இதே நடைமுறை அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., போன்ற உயர்மட்டத் தேர்வுகளில் ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த உரிமை, இத்தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.எனவே, பொதுவான நோக்குடன் அரசு இப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமென்று நாங்கள் நம்புகிறோம் என்று 1999 ஆம் ஆண்டில் சென்னை - மத்திய நிருவாகத் தீர்ப்பாயம் வலியுறுத்திக் கூறியும் மத்திய அரசு கேளாக் காதாக இருப்பது கண்டனத்துக்கு உரியதாகும்.

வடக்கு - தெற்கு என்கிற பிரச்சினை ஆவேசமாக வெடித்துக் கிளம்பக் கூடிய பதற்றமான ஒரு சூழல் உருவாக வாய்ப்பு இருக்கிறது. இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், குறிப்பாக மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்களும் இதில் கவனம் செலுத்திட வேண்டுமாய் வலியுறுத்துகிறோம்.
viduthalai./20080519/news

Sunday, May 25, 2008

பக்தியின் பெயரால் இழைக்கப்படும் தண்டனைக்குரிய குற்றங்கள்

பக்தியின் பெயரால் இழைக்கப்படும் தண்டனைக்குரிய குற்றங்கள்
கடவுள் நம்புதல் என்பது மூடத்தனம், முரட்டுத்தனம் மட்டுமல்ல பிடிவாதமானதும்கூட.

இதற்கு மேற்கொள் தான் அண்மையில் புகைப் படத்துடன் வெளிவந்த தீமிதி நிகழ்வு. ஒருவன் தனது மூன்று குழந்தைகளுடன் தீயில் புரண்டது. அதற்காக முதற்கண் வருந்துகிறோம்.

அடுத்து அநியாயமாக இந்த சமுதாயத்தின் கோரத் திருவிழாக்கள் இப்படிப் புரளவிட்டுவிட்டதே. இது தேவைதானா? என்பது நமது முதற்கவலை. ஆனால் கடவுள் பக்தர்களின் சமாதானம் என்ன தெரியுமா?

உங்களுக்கு நேரடியாக ஆத்தாளிடம் வந்ததாக ஒரு செய்தியைக் குறிப்பிடுவார்கள். அவன் என்ன செய்யக் கூடாததைச் செய்து விட்டு தீக்குழியில் இறங்கினானோ? ஆத்தாளுக்குப் பிடிக்கவில்லை என்பவர் ஒரு புறம்.

மற்றொரு கூட்டம் தீமிதித்தவர் அத்தனை பேருமா அப்படியானார்கள். இவர்கள் அதிமேதாவிகள். இந்த மேதாவிகள் கடவுள் போதையில் திக்கு முக்காடுபவர்கள் ஆவர்.தண்டனைக்குரியது இந்தத் தற்கொலை முயற்சி உயிரைப் பணயம் வைக்கும் நிகழ்வு. இது தண்டனைக்குரியது.

அவனுக்காக மட்டும் நாம் பரிதாபப்படவில்லை. ஏதோ பைத்தியக்காரத்தனமான உந்துதலில் அறியாக் குழவிகள் மூன்றையும் அல்லவா கவலைக்கிடமாக்கிவிட்டான். ஆத்தாள் செயலைப் போல் நிறைய எடுத்துக் காட்டுகள் உண்டு.

வேண்டுதல் என்ற பேரால், ஒருவன் தலை மீது பலர் கூடி தேங்காய் உடைப்பார்கள். இது ஒரு வேண்டுதல். தானே தன் தலையில் தேங்காய் உடைத்துக் கொண்டால் போய்த் தொலைகிறான் என்று விடலாம்.

பலபேர் அல்லவா விளாசுகிறார்கள்; இன்னும் சிலர் இடுப்பில் குழந்தைகள் சுமந்து கொண்டு அவர்கள் நாக்கிலே முருகப் பெருமான் சூளம் குத்தப்பட்டிருக்கும் குங்குமத்துடன், மற்றும் சில குழந்தைகளின் கன்னத்தினைத் துளைத்து முருகப் பெருமான் வேலைக் கழட்டாமல் விளையாடுவார்.

கிராஸ் பார் எது எவனோ! வேண்டிதற்காக நேர்த்திக் கடன். அந்தப் பிள்ளைகள் அழவும் முடியாது. எப்படியெனில் காலைக் கட்டிவிட்டால் எப்படி ஓட முடியும். அதே போல் முருகப் பெருமான் ஆயுதம் நாக்குக்கு மேல் கன்னத்தில் கிராஸ் பார் ஆடுகிறதே. இப்படியான லீலா வினோதங் கள் கோயில் விழாக்களில் நிறைய கண்கொள்ளாக் காட்சியாக நடைபெறும்.

தார்க்குச்சிமுன்பெல்லாம் கிராமப்புறங்களில் இருந்து டவுனுக்கு பாரவண்டி ஓட்டி வரும் வண்டிக்காரர்கள் இரண்டு கம்புகள் மாட்டை ஓட்ட எடுத்து வருவார்கள். நகர்ப்புற எல்லைக்குள் புகுந்ததும் ஒரு கம்பை ஒளித்துவிட்டு, மற்றொன்றை எடுத்து மாட்டை அடித்து விரட்டுவார்கள். அவர் ஒளித்து வைத்த மற்றொரு கம்பின் முனையில் கூரான ஊசி செருகப்பட்டிருக்கும். அதற்குப் பெயர் தார்க்குச்சி என்று சொல்லுவார்கள்.

யாருக்குப் பயந்து நகருக்குள் அந்த தார்க்குச்சியை வண்டிக்குள் ஒளித்து வைப்பார்கள் என்றால் யாருக்குமல்ல. ளு.ஞ.ஊ.ஹ. என்று ஒருவர் இருப்பார். அவருக்குப் பயந்துதான். அதாவது வனவிலங்குகள், வாயில்லாப் பிராணிகள் வதைத் தடுப்புச் சட்ட கண்காணிப்பாளர். அப்போது அந்த சட்டம் மிக நன்கு பயன்படுத்தப்பட்டது. இப்போதும் இருக்கிறது என்று நினைக்கிறோம். அது.

மூன்று வாயில்லாப் பிராணிகளைத் தூக்கிக் கொண்டு போன அங்காளம்மன் பக்தனை ளு.ஞ.ஊ.ஹ. பிடிக்கக்கூடாதா என்ன. மூன்று குழந்தைகளும் அப்பனால் வாயில்லாப் பிராணிகளானார்கள். அப்பனோ, அம்பாளால் வாயில்லா பிராணியாகிவிட்டான்.

இப்போது யாரைத் தண்டிக்க வேண்டும். அதை ஆசிரியர்தான் வழி கூறவேண்டும்; பிராணிகளுக்கு ளு.ஞ.ஊ.ஹ. , அவாள் மொழியில் சொன்னால், இவாளை யெல்லாரையும் அவாள் அப்பிராணியாகத் தானே ஆக்கியிருக்கிறார்கள்.

சமூக சீர்திருத்தக் குழுவின் கவனத்துக்குகாலமாற்றத்தால் பெண்களே மூக்கைத் துளைப்பதை விட்டுவிட்டார்கள். வரவவர காதைத் துளைப்பதையும் விட்டு இதற்கு ஈடாக கழுத்தைச் சுற்றி வலுவாக்கிவிடுவார்களோ என்னவோ.

சமூக சீர்திருத்தக் குழு கவனிக்க வேண்டியது நாக்கில் வேல் குத்துவது, கன்னத்தில் கிராஸ்பாராக வேல் குத்தி வள்ளி வீட்டுக்காரர் விளையாடுவது. இவைகளை நமது வாகிய சமூக சீர்திருத்தக் குழு கடுமையாக தடுத்தாட் கொள்ள வேண்டும்.

இவைகள் எல்லாம் இக்காலங்களில் பிச்சை யெடுப்போர் தொழிலாகிவிட்டது. அலகு காவடி வரை.தாடி வளர்த்தவரெல்லாம் சுருள் முடி வைத்தவரெல்லாம் சாமியார். மன்னிக்கவேண்டும். பெண் சாமியாரிணிகளுக்கு தாடி உண்டா என்று கேட்க வேண்டாம்.

ஒரு பக்கத்தில் சிக்கல். மிகு சுருட்டாய் முடியிருந்தால் அரை பவுன் வரை வேண்டியதை வேண்டி வேண்டும்போது எடுத்துக் கொடுக்க உதவியாக இருக்கும். சிறார்களைக் கொண்டு மரபணு சோதனை மூலம் தாய் தந்தையரைக் கண்டுபிடிப்பது போன்று கண்டுபிடிக்கும் மோதிரங்கள் சாமியார்களை எங்கிருந்து வந்து அண்டியது அல்லது தஞ்சம் புகுந்தது என்பது அறியும் நாள் நெருங்கி விட்டது.

தாடியிருந்தால்தான் சாமியார் என்றால் வருங்காலத்தில் தடியும் தாடியும் சாமியாரிணிகளுக்கும் மாயமாய் வரும் என்பதில் வியப்பேதும் இல்லை.

அப்படி வந்தால் கூட, கண்ணைத் திறந்து பார்த்தால்தானே தாடி பற்றித் தெரியும். பக்த கோடிகள்தான் மெய்மறந்த நிலையில் கண் மூடி நிற்பவர்களாயிற்றே. இங்கேயும் சமூக சீர்திருத்தக் குழு தன் வேலையைக் கச்சிதமாகச் செய்து முடிக்க வேண்டும்.

இப்படி ஒரு குழு வேறு எந்த ஆட்சியிலும் இல்லை. சமூக சீர்திருத்தக் குழு என்பது நாத்திகர்களின் குழு என்பதை மறந்து விடக் கூடாது.

நாசுக்காக இந்தக் குழு இவர்களை ஒடுக்கெடுக்க ஆளாக்க வேண்டும் அரசு துணையுடன்.புராதன காலங்களில்புராதன காலங்களில் சாமி இருளில் இருந்தது. அதற்குப் படையல் போட தீவட்டி கையில் ஏந்தி அந்த சாமியின் முகம் தெரியக் காட்டிக் கொண்டு போன படையலை எடுத்து வந்து எல்லோரும் பகிர்த்துண்பர்.

இப்போது கண்ட கண்ட இடங்களில் எல்லாம் மின்சார விளக்கு வந்து விட்டது. இனிமேல் சாமி கருவறைக்குப் பாதுகாப்பாக உள்ள நிலைக்கதவு ஓரங்களில் அகல் விளக்கு தேவையில்லை. மின்சார விளக்குப் பயன் படுத்தலாம்.

காரணம் எண்ணெய் என்பது உணவுப் பண்டம். எந்தக் காரணத்தைக் கொண்டு மனிதனுக்கு உணவாகப் பயன்படும் பண்டங்கள் வீணடிக்கப் படக்கூடாது. ஒப்புக்காகக் கூறினால், கோயில்களில் தீபம் என்ற பேரால் ஏற்றப்படும் விளக்குகளில் நெய்யோ எண் நெய்யோ ஊற்றி பாழ்படுத்தக்கூடாது.

நல்ல சக்தி வாய்ந்த மின் விளக்குகளையே ஏற்பாடு செய்யலாம். மலை மீது ஏற்றப்படும் விளக்குகள் (தீபங்கள்) எத்தனை சக்தி (ஏடிடவ) வேண்டுமோ லட்சக்கணக்கான வோல்ட் மின்சார ஒளி விளக்காய் பயன்படுத்தலாம்.

எண்ணெய் டின்கள் லட்சக்கணக்கில் பாழ்படுத்துவதைத் தவிர்க்க, அரசு ஆவன செய்யலாம். அறங்காவலர் துறை அரசு வசம்தான் உள்ளது. செருகச் செருக ஒழிக்கப்பார்க்கலாம். தீபம் ஒரு இடத்தில்தான் மலையில் ஏற்றுவார்கள். அடிவாரம் முதல் மலை முகடு வரை எல்லா விடங்களிலும் மின்னொளி விளங்குகளால் ஒளிவிடத்தானே செய்கிறோம்.

வெளிச்சம் தான் முக்கியம். அது எண்ணெயாலோ கருவேல மரத்தாலோ, மின்சார விளக்காகலோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மின்சாரம் இல்லாத காலத்தில் எண்ணெய் விளக்கு ஏற்றப்பட்டதே தவிர. மின்சாரத் துறை வந்த பின் அருணகிரிநாதர் இருந்திருந்தால் அதைத்தான் பயன்படுத்தி யிருப்பார்.

வானவூர்தி வந்தபின் நான் நடந்துதான் வெளிநாடு செல்வேன் என்று அடம் பிடிப்பவர்களுக்கு நாம் என்ன அறிவுரை கூற முடியும்?

எனவே சமூக சீர்திருத்தக் குழு நன்கு முடுக்கி விடப்படவேண்டும், அரசு சட்ட பூர்வ உதவியுடன் என்பது எனது வேண்டுகோள்.

பிராமி கல் வெட்டுக்களில் தமிழ் எழுத்துக்கள் அய்காரமும், அவ்காரமும் தவிர்க்கப்பட்டு உயிர் எழுத்து அய்ந்தே அ இ உ எ ஒ இருந்திருக்கிறது. ஆங்கிலத்தில் எப்படி ஹ நு ஐ டீ ரு உள்ளதோ, அது போலவே உள்ளது. அய்யாவின் எழுத்து சீர்திருத்தத்தில் நிறைய தேவையற்ற எழுத்துக்களை வாய்ப்புக்கேற்ப ஏற்றல் தவிர்த்தல் என்பனவற்றில் ஞ ன ந போன்றவற்றை எடுத்தாண்டிருக்கிறார்கள்.

ஐ கார ஔ கார எழுத்துக்கள் தவிர்க்கப் பட்டுள்ளன. ஐ காரத்தின் சுருக்கமே . இந்த எழுத்துக்களின் வடிவத்தை யகர மெய்யும் (ய்) வகர மெய்யும் (வ்) அ கரம் பின்னேற்று நிரப்புதலறிக. எள்+நெய் = என்பதே எண்ணெய் என்றாயிற்று. அல்வழி இவற்றோடுறழ்வும் என்ற இலக்கணப்படி எ;ளில் உள்ள மெய் ணகரமாக மாறி எண்ணெய் ஆனது காண்க.

எனவே, வாய்க்கும் இடங்களில் வாய்மை என்பது வாய்மெய் என்றும் தாய்மை என்பது தாய்மெய் என்றும் நஞ்சை என்பது நன்செய் என்றும் புஞ்சை என்பது பொன்செய் என்பதே சரியானதாகும். எழுத்துச் சீர்திருத்ததம் சரியாக, முதன் முதலாக, தமிழ்ப் புலவர்கள் அறிமுகப்படுத்துவதற்கு முன்னால் செய்தவர் என்ற பெருமை தந்தை பெரியாரையே சாரும்.
- வழக்கறிஞர் இரா. பெ. பாண்டியதுரை, சென்னை
viduthalai./20080525/news

படித்தவர்கள் செய்யும் மோசடிகள்!

கடந்த சில நாள்களாக வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 50 கோடி ரூபாய்க்குமேலாக சுருட்டிய ஒரு நிறுவனத்தின் பெயர் ஏடுகளில் அடிபட்டுக் கொண்டு இருக்கிறது.

தங்கக் காசு மோசடிச் செய்தி இன்னொரு பக்கம்!

சென்னை அண்ணா நகர், நெற்குன்றம் உள்பட அய்ந்து இடங்களில் விஸ்ப்ரோ டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் அலுவலகங்களைத் திறந்து ஒரு மோசடித் தொழிலை நடத்தியுள்ளனர்.

ஜாவா புரோகிராமர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடமிருந்து பெருந்தொகையைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இந்த மோசடியில் சிக்கியவர்கள் படித்தவர்கள் - அதில் ஒருவர் இராணுவத்தில் கேப்டனாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவராம்.

ஆயிரக்கணக்கில் புகார்கள் குவிந்த நிலையில், இந்த வழக்கு மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.படித்தவர்கள் இப்படி மோசடி வேலைகளில் ஈடுபடுவதும், படித்தவர்கள் இத்தகு மோசடிப் பேர்வழிகளை நம்பி ஏமாறுவதும் நம் நாட்டுப் படிப்பின் தகுதியை எடை போடுவதாக அமைகிறது.

ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரைக்கும் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்று கூறப்படுவது உண்டு. என்றாலும், இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்துபற்றிச் சிந்திப்பதும், செயலாக்கங்களை உருவாக்குவதும் அவசியமாகும்.

ஒரு நிறுவனத்தை உருவாக்குவது, நடத்துவது என்றால், அதற்குமுன் அதன் நம்பகத் தன்மைக்கான உத்தரவாதங்கள் இருந்து தீரவேண்டும்; அதற்குச் சட்ட ரீதியாக சில ஏற்பாடுகளைச் செய்வதுபற்றி அரசு யோசிக்கலாம்.

உலகியல்பற்றி தெரிந்துகொள்ளாத வெறும் காகிதப் படிப்புப் பட்டதாரிகளைத்தான் நம் நாட்டுக் கல்வி நிறுவனங்கள் உற்பத்தி செய்து ஆண்டுதோறும் இலட்சக்கணக்கானவர்களை அனுப்பிக் கொண்டு இருக்கின்றன என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டாகும்.

நம் படிப்பு வெறும் வயிற்றுப் பிழைப்புக்கு லைசென்ஸ் என்று தந்தை பெரியார் கூறியது எத்தகைய துல்லியமான கணிப்பு என்பதும் இதன்மூலம் துல்லியமாக அறிய முடிகிறது.

கல்வி நிறுவனங்களைக் கேளிக்கைக்குரிய இடமாகவும், கல்வி நிறுவன நேரம் போக மீதி நேரம் என்பதெல்லாம் உற்சாகம் பொங்கி வழியும் சமாச்சாரங்களில் குளித்து மூழ்குவது என்பதும் போன்ற போக்குகள் நீடிக்கும்வரை நம் இளைஞர்கள் விழிப் புணர்வு உள்ளவர்களாக இருப்பது என்பது குதிரைக் கொம்பே!

பாடத் திட்டத்தில்கூட விழிப்புணர்வு தொடர்பான பகுதிகள் இருக்க வேண்டும் என்பதை இந்த மோசடிச் சம்பவம் வலியுறுத்துகிறது.ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில் பட்டதாரிகள் வெளியே வந்துகொண்டு இருக்கிறார்கள்.

வேலை வாய்ப்பைத் தேடி அலைந்து திரிகிறார்கள். இந்தச் சூழலை மோசடிப் பேர்வழிகள் நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். கடன் வாங்கிக் கல்வி கற்றுப் பட்டமும் பெற்றவர்கள் வேலைகளைப் பெறுவதற்காகவும், கடனை வாங்கிச் செலுத்தி, எப்படியாவது வேலை கிடைத்தால் சரி என்கிற வெறியில் கருத்தை இழந்தவர்கள் ஆகிறார்கள்.

மோசடிக்காரர்களை விரைவில் பிடித்து சட்டத்தின்முன் நிறுத்தி, கடுமையான தண்டனைகளை வாங்கிக் கொடுப்பதன்மூலம் - அத்தகைய செய்திகள் மக்கள் மத்தியில் பெரும் அளவுக்குப் பரவுவதன்மூலமே, வேலைத் தேடி அலையும் இளைஞர்கள் மத்தியிலே எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்த முடியும்.

மோசடிக்காரர்கள் தம் கையில் சிக்கிக்கொண்டு இருக்கிற பெரும் பணத்தின்மூலம் சட்டத்தின் சந்து, பொந்துகளில் இலகுவாக நுழைந்து தப்பிக்க முயற்சிப்பார்கள். பணம்தான் பாதாளம் வரை பாயும் என்று வேறு சொல்லி வைத்துள்ளனர். இதற்கு இடம்தராமல் காவல்துறை நடந்துகொள்ளவேண்டும்.

பல்கலைக் கழகங்களேகூட போலியாக நடக்கின்றன என்று அத்தகுப் பல்கலைக் கழகங்களின் பட்டியல் ஆண்டுதோறும் வெளியாகின்றன. அந்தப் பல்கலைக் கழகங்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை?

சில குறிப்பிட்ட மோசடிப் பல்கலைக் கழகங்களின் பெயர்கள் ஆண்டுதோறும் வெளிவரவும் செய்கின்றன.அது எப்படி முடிகிறது என்று தெரியவில்லை.

நமது சட்டத்தில் ஏதோ ஓட்டை இருக்கிறது; நடைமுறைக் கண்ணோட்டம் இல்லாத ஏட்டுச் சுரைக்காயாக உள்ளன என்றே நினைக்கத் தோன்றுகிறது.

இவற்றையெல்லாம் அடைத்து, குற்றம் செய்பவர்கள் தப்பிக்கவிடப்படாமல் தக்க தண்டனைகளைப் பெறச் செய்வதன் மூலமாகத்தான் மோசடிகளைத் தடுக்கவும், ஏமாறுபவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடியும்.அரசுகள் சிந்திக்குமாக!
viduthalai./20080514/news

Saturday, May 24, 2008

தலையில் தேங்காய் உடைக்கலாமா?

``தேங்காயைக் கையில் உடைக்கும்போது எலும்பு, சதை மட்டும்தான் உடைந்து பாதிப்பு ஏற்படும். ஆனால் தேங்காயை தலையில் உடைக்கும்போது மூளை பாதிக்கும்.

அதனால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. காரத்தே பயிற்சியில். கையில் உடைப்பது, போல் ஏன் செய்யலாமே என்று கேட்கலாம்.

தலையில் உள்ள எலும்புடன் மட்டும் சிக்கல் நிற்காது. உள்ளே மிகவும் மிருதுவான ஜெல்லிமாதிரி இருப்பதுதான் மூளை. ஒரு குழந்தையை குலுக்கினாலே கூட மூளை ஆடலாம். அதனால் பிரச்சினை வரலாம்.

மூளையில் இரண்டு மூன்று வகை உண்டு அதில் நான் சொல்வது அதிர்ச்சி (Concussion), அடுத்து, அடிபட்டு கண்ணிப்போதல், (Contussion), மூன்றாவது Nuronal Damage, Oxonol Damaage. Oxonal என்பதுதான் அடிப்படை செல்.

அதாவது - நரம்புகள் சிதறி போவது: பிய்ந்து போவது. குத்துச் சண்டையில் பத்து அடி அடித்தவுடன் பார்த்தால், அடிவாங்கியவர் தள்ளாடி தள்ளாடிப் போய் குடிகாரன் மாதிரி மயக்கமாகி விழுவார். இதே சூழ்நிலை தேங்காய் உடைக்கும்போதும் வரலாம்.

ஒரு முறை தேங்காய் உடைக்கும்போது தேங்காய் இரண்டாக உடைந்தால் சரி, அப்படிஇல்லாமல் 2,3 தடவை உடைத்தால் தலையில் காயம் ஏற்படும். தலையில் எந்த இடத்தில் உடைக்கிறார்கள் என்பதுதான் மிக முக்கியம்.

தலையின் மேல் பக்கம் புடைத்த மாதிரி உள்ள இடத்தில்தான் தேங்காய் உடைப்பார்கள். அந்த இடம் கனமாக இருக்கும். அப்படி அடிக்கும் போதுகூட தேங்காயைப் பொறுத்து, அடிக்கும் வேகத்தைப் பொறுத்து தலையில் பாதிப்பு ஏற்படலாம்.

இந்த மாதிரி மூன்று விதத்திலும் எது மாதிரியும் உடையலாம். இது பிரைமரி டேமேஜ் ஆகும். இதனால் உள்ளே இருக்கும் ரத்தக் குழாய் உடைந்து கட்டி ஏற்படலாம். இது உடனேயும் நடக்கலாம், தாமதமாகவும் ரத்தக் கட்டி வரலாம். ஹெமட்டோமா மூளையில் உள்ளேயும் இருக்கலாம் வெளியேயும் இருக்கலாம்.

அதன் அழுத்தம் அதிகரித்து மூளை நசுங்க ஆரம்பிக்கும். அதனாலேயும் தொந்தரவு ஏற்படும்.ஒவ்வொரு வருடமும் இதையே அடிக்கடி செய்தாலும் அவர்களுக்கும் உறுதியாக மூளையின் செயல் திறமை மங்கிப் போகும்.

உதாரணம் சொல்ல வேண்டுமானால், குதிரை ஓட்டுபவர்கள் குதித்துக் குதித்து அடிக்கடி கீழே விழுவார்கள். அப்போது அவர்களுக்கு நினைவில்லாமல் மறதி அதிகமாகவும், மூளையின் வேலை திறனும் குறைந்து போகும்.

யாராவது வந்தால் அவர் யார் என்று தெரியாது. ஏதாவது பொருளை வைத்து விட்டு, எங்கே வைத்தது என மறந்து போகும். இதனை நினை வற்ற தன்மை என்று சொல்கிறார்கள். ஒரு விதமான குழப்பம் எனவும் கூறலாம். மூளையின் செயல்திறன் குறைந்து சுருங்கி ஒரு குழந்தை மாதிரி ஆகிவிடுவார்கள்.

இதை குத்துச் சண்டை மற்றும் குதிரை ஓட்டிகளை ஆய்ந்தபோது கண்டறிந்துள்ளார்கள். இந்த ஒரு சூழ்நிலையும் இவர்களுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

காலந் தாழ்ந்த நிலையில், கை, கால் செயல்படாமல் போகலாம். இதற்கு சப்டியூரல் ஹெமட்டோமா SDH, EDH (Extra Dural Hema toma) என்று பெயர். ஒரு உதாரணம் சொல்லுகிறேன். ஒரு வயதானவர் சாலையில் விபத்தில் அடிப்பட்டவர் உடனே எழுந்து விடலாம். ஆனால் ஒரு மாதம், இரண்டு மாதம் கழித்து மருமகள் சாப்பாடு போடும் போது திரு திரு என்று முழிப்பார். சாப்பிட்டுவிட்டு, சாப்பிடவில்லையே என உளறுவார். அப்புறம் நடக்கும்போது கொஞ்சம் இழுத்து நடக்க ஆரம்பிப்பார்.

SDH, EDH இருந்தால் ரத்தக் கசிவு அதிகரித்துப் போய் மூளையின் அழுத்தத்தினாலே கை, கால் விளங்காமல் போகலாம். டிமென்சியாவும் பரவலாம். வலிப்பு வரலாம் (Fits) இந்த மூன்றும் வரலாம், மூன்றில் ஏதாவது ஒன்றும் வரலாம்.

அதுவும் உடனடியாகத் தெரியாது. 3,4 மாதம் கழித்து வரும். இந்த மாதிரி வரும் சமயம் நாங்கள் கேட்பது, கீழே விழுந்தீர்களா?.. தலையில் அடிப்பட்டதா? உங்களை அறியாமல் கீழே விழுந்தது உண்டா? எனக் கேட்போம்.

ஸ்கேன் எடுத்து பார்த்த பிறகுதான் SDH இருப்பது தெரியும். இதனால் காலம் போக போக (பிட்ஸ்) வலிப்பும் வரலாம். SDH, EDH காரணங்களினால் கை, கால் விளங்காமல் போகலாம். வாதம் மாதிரி வரலாம்.

தலையில் தேங்காய் உடைத் துக் கொள்பவர்களை அந்தக் கிராமத்திற்குப் போய் பார்த்து பேசி அழைத்து வந்து CT ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் நன்றாக இது தெரிந்து போகும்.

வயதான பெண்களாக இருப்பவர்கள் தலையில் தேங்காய் உடைத்தால் உடனே எலும்பு உடையும், அபாயம் நேரும். எலும்பு சற்று லேசாக இருந்தாலும் உடனே உடைந்து விடும்.

இதில் உடனடியாக ரத்தக் குழாய் உடைப்பு ஏற்படலாம். மூளை மிகவும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு இரும்புப் பெட்டி (Box) யைப் போல் தலை அமைந்துள்ளது.

இருதயத்திற்குக்கூட இந்தப் பாதுகாப்பு இல்லை! வேறு எந்த ஒரு உறுப்புகளுக்கும் உடலில் இந்த மாதிரி பாது காப்பு கிடையாது. எனவே மூளை உயிர்த்தலம் போன்றது. அதனைப் பாதுகாப்பது அவ சியம் என மருத்துவ ரீதியாக உடல் நலப்பாதிப்பு ஏற்படுவது குறித்து டாக்டர் என். திலோத் தம்மாள் விளக்கினார். நன்றி: 'உண்மை' ஆகஸ்டு 16-31 (2005)

இவ்வளவு விஞ்ஞான ரீதியான மருத்துவ ரீதியான உண்மைகள் இருக்கும்பொழுது பேரையூரில் குழி மாற்றுத் திருவிழாவை நிறுத்தியது போல, கோயில்களில் தேங்காய் உடைக்கும் மூடநம்பிக்கையை மக்கள் நலன் கருதி மக்கள் நல அரசு ஆணை பிறப்பிக்குமா? தமிழ்நாடு அரசின் சமூக சீர்திருத்தத் துறையும் இதனைக் கொஞ்சம் கவனிக்கலாமே! viduthalai.com

கம்ப்யூட்டர் ஜாதகம் கணிப்பது எப்படி?

மூடநம்பிக்கை -- கம்ப்யூட்டர் ஜாதகம் கணிப்பது எப்படி?

இங்கு ஜோதிடம் பார்க்கப்படும், என்ற பலகையைக் கண்டால் போதும், உடனே கையை நீட்டி விடுவார்கள் தமிழர்கள்!

எதிர்காலத்தைத் தெரிந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம் அவர்களுக்கு!

வாழ்க்கையில் ஏற்படும் ஆசையும், அச்சமுமே ஜோதிடத்திற்குக் காரணம். ஜோதிடம் அறிவியல் பூர்வமானது என இந்து மதத்தினர் கூறுவார்கள்.

மேலோட்டமாகப் பார்த்தால் ஜோதிடம் அறிவியல் போலவே இருக்கும். ஆனால் அது அறிவியல் இல்லை.

வள்ளுவர் சொன்னார், கயவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை, ஏனெனில் அவர்களும் மனிதர்களைப் போலவே இருக்கிறார்கள் என்றும் அதைப் போலத்தான் இந்த ஜோதிடமும்.ஜோதிடத்தைப் பலரும் நம்புகிறார்கள் என்றால் என்ன பொருள்?

எங்களை நாங்கள் நம்பவில்லை, அறிவியலை நாங்கள் நம்பவில்லை, அறிவை நாங்கள் நம்பவில்லை என்றே பொருள். சரி! ஒருவர் ஜாதகம் பார்க்கிறார், அவருக்கு ஜோதிடர் சொன்னது போல நடக்க வில்லை, உடனே அவர் என்ன கருத வேண்டும்?

ஜோதிடர் சொன்னது நடக்கவில்லை, அதனால் அது உண்மையல்ல என்ற முடிவுக்குத் தானே அவர் வரவேண்டும்?

ஒரு செய்தியைப் பகுத்தறிந்து தெரிந்து கொள்வதில் சில சிரமங்கள் உண்டு. அதையே பட்டறிந்தும் தெரியாமல் இருந்தால் அது அறியாமை இல்லையா?

இதோ அதுபோன்ற அறியாமையின் அண்மைக்காலச் சில நிகழ்வுகளை வாசித்துப் பாருங்கள்.திருச்சி, திருவெறும்பூரில் வசிப்பவர் அரசெழிலன். இவர் தம் வீட்டில் கணினி வைத்திருக்கிறார். இவருக்கு இயல்பிலேயே ஜோதிடத்தின் மோசடிகளை அறிவதில் ஆர்வம்.

அந்த வகையில் ஒரு நண்பரின் மூலம் ஜாதகம் குறித்த ஒரு மென் பொருளை (Software) வாங்கியுள்ளார். அந்த மென் பொருளின் பெயர் லைப் ஷைன் (Life sign)..

இந்த ஜாதக மென்பொருளை புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திலுள்ள தமிழ்நாடு கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் தயார் செய்து வருகிறது. இதன் விலை ரூ. 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறதாம்.

இந்த மென்பொருளைக் கணினியில் பொருத்தினால் யார் வேண்டுமானாலும் ஜாதகம் பார்த்துக் கொள்ளலாம். ஒருவரின் பெயர், பிறந்த தேதி, பெற்றோரின் பெயர், ஊர் ஆகியவற்றை கணினியில் பதிவு செய்தால், 36 பக்கங்களைக் கொண்ட ஜோதிடப் பலன்கள்(?) உடனடியாக வெளிவருகின்றன. அதை வைத்துதான் பலரின் பிழைப்பும் இங்கு ஓடிக் கொண்டிருக்கிறது.

இதில் சகித்துக் கொள்ள முடியாத கொடுமை என்னவென்றால், நாங்கள் கணினித் துறையில் புலியாக்கும், சிங்கமாக்கும் எனப் பீற்றிக் கொள்பவர்களும் இதற்குப் பலியாகிறார்கள்.

இந்த நிலையில் அரசெழிலன் தம் விவரத்தைக் கணினியில் பதிவு செய்துள்ளார். வழக்கம் போலவே 36 பக்கங்கள் வந்து விழுந்து விட்டன. பிறகு மீண்டும் புதிய விவரம் ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அதில் தன் பெயர், பெற்றோர் பெயர், ஊர் எல்லாம் சரியாகப் பதிந்து, பிறந்த தேதி என்ற இடத்தில் 31.10.2025 எனக் குறிப்பிட்டுள்ளார்.

உடனே 36 பக்கங்கள் வந்துவிட்டனவாம். 2025 ஆம் ஆண்டு வருவதற்கு இன்னும் 17 ஆண்டுகள் உள்ளன. அதற்கும் ஜோதிட பலன்கள் வந்து விட்டது.

அதேபோல திருச்சி தொடர் வண்டி மைதானத்தில் (ஜி கார்னர்) அண்மையில் ஒரு பொருள்காட்சி நடைபெற்றது. அதில் காகபுஜண்டர் கம்ப் யூட்டர் ஜோதிடம் எனும் பெயரில் ஒருவர் கணினியுடன் ஜோதிடம் பார்த்துள்ளார். நம்மவர்கள்தான் ஏமாறுவதில் கில்லாடிகளாச்சே!

ஏராளமான பேர் வரிசையில் நின்றுள்ளனர். அப்போது இராஜா, மூர்த்தி, சுரேஷ் எனும் மூன்று குறும்புக்கார இளைஞர்களும் கூட்டாக வந்துள்ளனர்.அந்த காகபுஜண்டர் கம்ப்யூட்டர் ஜோதிடத்தின் ஏமாற்று வேலை என்ன தெரியுமா?

முதலில் இரண்டு கைகளையும் தண்ணீரில் மூழ்க வேண்டும். அப்படியே ஈரத்துடன் ஸ்கேனர் போன்ற ஒரு கருவியில் வைக்க வேண்டும். உடனே கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு, அதற்குரிய பலன்கள் கணினி மூலம் வெளியாகின்றன.

அந்தக் குறும்புக்கார இளைஞர்களும் அதேபோன்று செய்து விட்டு, பொருள்-காட்சியின் மற்ற பகுதிகளுக்குச் சென்று விட்டனர். மீண்டும் 30 நிமிடம் கழித்து அவ்விடத்திற்கு வந்து, திரும்பவும் ஜாதகம் பார்த்துள்ளனர்.

முதலில் வெளியான பலனும் ( print out) அடுத்து வந்த பலனும் முற்றிலும் வெவ் வேறாக இருந்துள்ளன. ஜாதகம் உண்மையானால் எத்தனை முறை கைரேகையைப் பதித்தாலும், ஒரே மாதிரி அல்லவா வரவேண்டும்?

அந்த இளைஞர்களும் காகபுஜண்டரிடம் தகராறு செய்துவிட்டு, தலையில் அடித்துக் கொண்டே சென்று விட்டனர்.கணினியை மனிதன்தான் கண்டுபிடித்தான். அதுவும் ஆறாவது அறிவான, பகுத்தறி வைக் கொண்டு கண்டுபிடித்தான். மற்றபடி கணினிக்கு என்று தனிஅறிவு கிடையாது.

வெளி நாட்டுக்காரன் கண்டுபிடிக்கும் விஞ்ஞானத்தை அறிவுக்கும் பயன் படுத்தலாம்; அழிவுக்கும் பயன் படுத்தலாம். நம்மவர்களுக்கு இரண்டாவது-தான் சாத்திய மாகிறது. மகா வெட்கம்! unmaionline.com

Monday, May 19, 2008

பள்ளிகளில் படமெடுக்கும் ஆர்.எஸ்.எஸ்., பாம்பு ! நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதை.

மதவாத நஞ்சை மாண வர்கள் மத்தியில் விதைக்கும் கேடு கெட்ட செயல்தானே? "அரசு விழிக்கட்டும்! ஆரிய விரியன்களை அடக்கட்டும்"

செங்கற்பட்டில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பெண்கள் மேனிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக்காக செங்கற்பட்டு நகராட்சியின் எதிர்ப்பையும் புறந்தள்ளி 1967-இல் தமிழ்நாடு அரசே 5 ஏக்கர் நிலத்தினை இலவசமாக அளித்துள்ளது. (G.O. M.S. No.1461 Revenue Dept dated 24.8.1967).

ஒரு கல்வி நிறுவனம் என்கிற காரணத்தால் அரசு நிலத்தை இனாமாக வழங்கியுள்ளது.ஆனால் ராமகிருஷ்ணர் பெயரில் பள்ளி நடத்தும் அந்த நிருவாகம். அப்பள்ளியை ஆர்.எஸ்.எஸின் பாசறையாக, பயிற்சிக்கூடமாக மாற்றி இருக்கிறது என்பதுதான் பயங்கரம்.

இருபது நாள்கள் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. வீர வாத்ய அணி வகுப்புடன் (17.5.2008) சீருடை அணிந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக அணி வகுப்பும் நடத்தப்படுகின்றது.

இதற்கான துண்டு அறிக்கைகளும் ஆயிரக்கணக்கில் பொது மக்களிடம் விநியோகிக்கவும் பட்டுள்ளன.ஆர்.எஸ்.எஸ் என்பது நான்கு முறை மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பாகும்.

காந்தியாரைப் படுகொலை செய்த பாசிசக் கூட்டமாகும். இந்தியாவில் நடைபெற்றுள்ள பல்வேறு மதக்கலவரங்களுக்கும் சூத்ரதாரியாக இருந்திருக்கிறது என்பதை அரசால் அமைக்கப்பட்ட பல்வேறு ஆணையங்கள் அதிகாரப் பூர்வ அறிக்கைகள் மூலம் அவ்வப்போது வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

1925-இல் ஆர்.எஸ்.எஸ். தோற்றுவிக்கப் பட்டது என்றால் 1927-ஆம் ஆண்டிலேயே நாக்பூரில் வகுப்புக் கலவரத்தை நடத்தத் தொடங்கி விட்டனர்.

கபூர் கமிஷன், டி.பி. மதன் கமிஷன், ரகுபார் தயாள் கமிஷன், ஜெகன்மோகன் கமிஷன், நீதிபதி ஜிதேந்திர, நாராயண் கமிஷன், நீதிபதி பி. வேணுகோபால் கமிஷன் என்று கமிஷன்களின் நீண்ட பட்டியல் உண்டு.இத்தனை ஆணையங்களும் (Commission) ஒன்றுபோல பல்வேறு இடங்களிலும் தூண்டி விடப்பட்ட கலவரங்களுக்குக் காரணகர்த்தாவாக ஆர்.எஸ்.எஸ். இருந்திருக்கிறது என்று திட்டவட்டமாக அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்துள்ளன.

இந்த ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்க் கும்பலுக்கு வெளிநாட்டிலிருந்து ஏராளமான பணம் வந்து குவித்து கொண் டிருக்கிறது.தன்னார்வத் தொண்டு என்ற பெயரில் இந்தியாவைச் சேர்ந்த 30 ஆயிரம் அமைப்புகள் வெளிநாடுகளில் இருக்கின்றன.

இங்கிலாந்தில் பாசிச அமைப்பான இந்த ஆர்.எஸ்.எஸ்., தன்னை ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்து கொண்டுள்ளது. குஜராத் பூகம்பத்தை ஒட்டி இந்தச் சங்பரிவார்; கும்பல் திரட்டிய தொகை பல கோடியாகும்.

பூகம்ப நிவாரணத் துக்காகத் திரட்டப்பட்ட பணம் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போய் சேர்ந்திடவில்லை. மதவெறி வளர்வதற்குத்தான் பயன்படுத்தப்பட்டது.

தென் கிழக்கு ஆசியாவில் செயல்படும் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து கண்காணிக்க ஒரு குழு இருக்கிறது. அதன் பெயர் அசாவ் (Asaw) என்பதாகும்.

அந்தக் குழுவினர் இந்தியா வந்து இங்கிலாந்தில் திரட்டப் பட்ட நிதி எந்த வகையில் செலவு செய்யப்படுகிறது என்பதை ஆய்வு செய்தது.British Charity Hindu Extremism என்ற தலைப்பில் அந்தக் குழுவினர் 80 பக்கங்கள் கொண்ட அறிக்கையினை அளித்தனர். ஆர்.எஸ்.எசும் மற்றும் சங்பரிவர்களும் தொண்டு நிறுவனங்கள் அல்ல இந்துத் தீவிரவாத அமைப்புகள், எனவே அனுமதிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் என்ற பட்டியலிலிருந்து இவை நீக்கப்பட வேண்டும் என்று இங்கிலாந்து நாடாளுமன்றத்திலேயே முழக்கம் கேட்டதுண்டு.

குஜராத் பூகம்பத்துக்கு அளிக்கப்பட்ட நிதி மட்டுமல்ல; 2002-இல் குஜராத்தில் அரசு பயங்கரவாதத்தினால் 2000 இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் அல்லவா?

ஆயிரக்கணக்கானோர் வீடு இழந்த தவிர்த்தனரே - இரண்டு லட்சம் பேர் அகதி முகாம்களில் சரணடைந்தனரே அதற்காக அளிக்கப்பட்ட நிதியையும் ஆர்.எஸ்.எஸ். தவறாகவே பயன்படுத்தியது.

நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதையாயிற்று.

வசூலிக்கப்பட்ட தொகையில் மூன்றில் ஒரு பங்கு ஆர்.எஸ்.எஸ்., பள்ளிகளுக்குச் சென்றது.

இந்தப் பின்னணியைத் தெரிந்து கொண்டால் செங் கற்பட்டில் இராமகிருஷ்ண மடம் நடத்தும் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். முகாம் ஏன் நடக்கிறது என்பதற்கான காரணம் எளிதாகப் புரிந்துவிடும்.

கல்வி நிறுவனங்கள் வளாகங்களில் ஆர்.எஸ்.எஸ். ஷாகா பயிற்சி கூடாது என அரசே சுற்றறிக்கை விட்டதுண்டு.

அதனைக் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்து செங்கற்பட்டில் இராம கிருஷ்ணா பெண்கள் மேல் நிலைப்பள்ளி ஆர்.எஸ்.எஸ். முகாமாக இயங்குகிறதே - எப்படி?

சிறுபான்மையினர் மீது வெறுப்பைக் கற்றுக் கொடுத்து பிள்ளைகளை வன்முறை வெறியர்களாக உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்களா?

5 ஏக்கர் நிலத்தை அரசு கொடுத்தது ஆர்.எஸ்.எஸ். முகாம் அமைக்கத்தானா?

மானமிகு மாண்புமிகு கலைஞர் தலைமையிலான தமிழ்நாடு அரசு இத்தகு பள்ளிகளில் நடவடிக்கைகளைக் கண்காணித்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கல்விக் கூடங்கள் காவி மயமாகிவிடும்.

ராமகிருஷ்ணா விவே கானந்தர், வித்யசாலா பெயர் களில் இயங்கும் பள்ளிகள் கண்காணிக்கப்பட வேண்டும். வன்முறை விளைச்சல் கழனியாக உருவெடுத்துவிடும்.

பிள்ளைகளைப் படிக்க அனுப்புகிறோமா - வன் முறையாளர்களாக ஆவதற்கும் பயிற்சி பெற அனுப்பு கிறோமா?

செங்கற்பட்டு ராம கிருஷ்ண பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு அளிக்கப்பட்ட அய்ந்து ஏக்கர் நிலத்தையும் திரும்பப் பெற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் அரசுக்குச் சொந்தமான பூங்காக்கள் போன்ற இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சிக்கு அனுமதி கிடையாது என்கிற சுற்றறிக்கை மீண்டும் ஒரு முறை அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட வேண்டும்.

எவ்வளவு தைரியம் இருந்தால் ஒரு பள்ளி நிர்வாகம் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பேரணி குறித்து பச்சையாகத் துண்டு அறிக்கை அச்சிட்டுப் பொது மக்களுக்கும் வழங்கும்?

காவல்துறை இதில் கவனம் செலுத்த வேண்டும். ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமுக்குப் பள்ளி நிருவாகம் கொடுத்திருக்கும் தலைப்பு - பண்புப்பயிற்சி முகாமாம்.என்ன அந்தப் பண்பு? இந்துத்துவாதானே?

இந்துக்கள் அல்லாதவர்கள் இந்தியாவில் வாழவே கூடாது என்கிற வக்கிரப்புத்திதானே!

மதவாத நஞ்சை மாணவர்கள் மத்தியில் விதைக்கும் கேடு கெட்ட செயல்தானே?

வடபுலத்திலே ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பள்ளிகளில் புகட்டப்படும் நஞ்சு தமிழ்நாட்டிலும் கடை விரிக்கிறது என்பது வெளிப் படையாகவே தெரிகிறது.

"அரசு விழிக்கட்டும்! ஆரிய விரியன்களை அடக்கட்டும்"

(தகவல் உதவி: திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பினர் பெரியார் பெருந் தொண்டர் மானமிகு கோவிந்தசாமி அவர்கள்- -) மின்சாரம். viduthalai.com

Sunday, May 18, 2008

பார்ப்பனர் வேணுகோபால்--தீர்ப்புகள்: விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல-கி. வீரமணி பேட்டி

வேணுகோபால் விவகாரம் பற்றி கி. வீரமணி பேட்டி.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனராக இருந்த டாக்டர் வேணுகோபால், அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவரைப் பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது.

அது தவறு. எனக்காக ஒரு சட்டத்தை உள் நோக்கத்தோடு கொண்டு வந்து வெளியேற்றுகிறார்கள் என்று டாக்டர் வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார். தீர்ப்பு அவருக்குச் சாதகமாக வந்தது. உடனே பதவியும் ஏற்றார். அது பற்றி திராவிடர் கழகத் தலைவரான கி. வீரமணியிடம் கேட்டோம்.

புதுடெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் (எய்ம்ஸ்) இயக்குனராக டாக்டர் வேணுகோபால் மீண்டும் பதவியேற்றுக் கொண்டுள்ளார். அது தவறு என்கிறீர்கள். அதாவது, வேணுகோபால் உயர் சாதி வகுப்பினர் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே விமர்சிக்கின்றீர்களா?

இல்லை. இந்த விவகாரத்தை முழுவதும் தெரிந்து கொள்ளாதவர்கள் கூறும் வாதம் இது. கடந்த பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியின்போது, இந்த வேணுகோபாலுக்கு அறுபது வயது முடியும் நேரம். அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ், இவரது பதவிக் காலத்தை நீட்டிப்புச் செய்தார்.

பொதுவாக ஓர் அரசு, தனக்கு வேண்டிய, நல்ல செயல் பாட்டில் உள்ள ஒருவருக்குப் பதவிக் காலம் முடிந்த பிறகும் ஓராண்டு முதல் மூன்றாண்டுகள் வரை பதவி நீட்டிப்புக் கொடுப்பது வழக்கம்தான்.

ஆனால், டாக்டர் வேணுகோபால் விஷயத்தில் நடந்ததே வேறு. பா.ஜ.க. ஆட்சியில் அவருக்குப் பதவி நீட்டிப்புக் கொடுப்பதற்காக நிர்வாகக் குழு கூடி கொடுக்கலாம் என முடிவெடுத்தார்கள். ஆனால் மினிட் புத்தகத்தில் ஏதும் எழுதவில்லை.

அதன் பிறகுதான் அவருக்கு ஒரே நேரத்தில் அய்ந்தாண்டுகளுக்குப் பதவி நீட்டிப்பு என கொண்டு வந்தார்கள். நிர்வாகக் குழுவில் உள்ளவர்களுக்கே அது அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. இதற்கு முன்பு யாருக்கும் எந்த மாநிலத்திலும் சரி இப்படி ஒரேயடியாகப் பதவி நீட்டிப்புச் செய்ததில்லை. அதற்கு எந்த முன் மாதிரியும் இல்லை.

அடுத்து, காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைகிறது. பா.ஜ.க. அரசாங்கம் கொண்டு வந்த அதிகார மீறல் உத்தரவு ஒன்று. இந்த காங்கிரஸ் அரசாங்கத்தையும் கட்டுப்படுத்தும் என்றால் எப்படி?

பொதுவாக, ஓர் அரசாங்கம் ஒருவருக்குப் பதவி நீட்டிப்புக் கொடுத்திருந்தாலும் அடுத்த அரசு வந்து அவரை மாற்றுவதற்கு உரிமை இருக்கிறதா? இல்லையா?

சாதாரணமாக அட்வகேட் ஜெனரல், அட்டர்னி ஜெனரல் இந்த மாதிரி துறையிலிருப்பவர்கயெல்லாம் தங்களுக்குச் சாதகமாக இருக்கமாட்டார்கள் என்றால், அவர்களை அனுப்ப உரிமை இருக்கிறது. இது ஒரு வழக்கமான நடைமுறை.

டாக்டர் வேணுகோபால், அடிப்படையிலே தகுதியிழந்தவர் என்கிறீர்கள். அதுதான் எப்படி என்கிற கேள்வி எழுந்துள்ளது?

அந்த விஷயத்திற்கு வருகிறேன்.அப்படி அய்ந்தாண்டு காலம் பதவி நீட்டிப்புப் பெற்று இயக்குனர் பதவியில் நீடித்திருந்த சமயம், அதாவது காங்கிரஸ் தலைமையிலான அரசு வந்து, இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தபோது, எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள உயர் சாதி வகுப்பைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் பெரிய அளவில் போராட்டம் செய்தார்கள்.

அதைத் தூண்டி விட்டதே வேணுகோபால்தான். நோயாளிகளுக்குக் கூட மருத்துவம் பார்க்கமாட்டோம் என்றார்கள். மரணத்தோடு விளையாடினார்கள். இதே நீதிமன்றம், ஏன் நோயாளிகள் பக்கம் செல்லவில்லை என்று அப்போது கேட்டது.

அதன் பிறகுதான் இவர்கள் நோயாளிகளைக் கவனித்தார்கள். போராட்டம் நடத்திய டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னது மேலிடம்.

வேணுகோபாலோ அது முடியாது என மறுத்தர். அதாவது நிர்வாகத்தின் மேலிடம் சொன்னதற்கே எதிராக நடந்தார். இது பணி ஒழுங்கீனம் இல்லையா?

ஆக, பணி நிர்வாக ஒழுங்கீனம் செய்தவர் வேணுகோபால். அதனால்தான் அவரை மாற்ற வேண்டும் என முயற்சித்து அவரை மாற்றினால் உடனே இதற்கு ஓர் உள்நோக்கம் கற்பித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இவருக்கும் ஏதோ தனிப்பட்ட விரோதம், காழ்ப்புணர்ச்சி என்பதைப் போலச் சித்தரித்து விளக்கம் சொல்லி வந்தார்.

இது சம்பந்தமாக ஒருவர் டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்குப் போட்டார். உடனே வேணுகோபால் பதவி நீட்டிப்புப் பிரச்சினையும் வந்தது. அப்போது அவர் என்னை உள்நோக்கத்தோடு வெளியேறச் சொல்கிறார்? என்று அமைச்சர் மீதே குற்றம் சாட்டினார்.

அதற்கு மத்திய நிர்வாகம், அவர் பதவியில் நீடித்தால் நிர்வாகம் கெடும். எய்ம்ஸ் நிறுவனம் வீணாகிவிடும். நோயாளிகள் பெரிதும் பாதிக்கப் படுவார்கள் என்று எடுத்துச் சொன்னது. சொன்னவுடனேயே அந்த வழக்கில் வேணுகோபாலுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வரவில்லை.

அப்போது இந்த மாதிரி ஒரு குழப்பம் எதற்கு. ஒருவருக்கு எத்தனை வயதுவரை பதவி நீட்டிப்புத் தரலாம். எந்த வயது வரை பதவியிலிருக்கலாம் என்ற விதிமுறையை சட்ட ரீதியாகவே கொண்டு வரலாமே.. அது எல்லோருக்கும் ஒரு வழிகாட்டியாகஅமையுமே என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறியது. அதன் பேரில்தான் வேணுகோபாலை பதவியிலிருந்து நீக்க முடிவெடுத்தார்கள்.

இதைத்தானே டாக்டர் அன்புமணி உள்நோக்கத்தோடு செய்தார் என்கிறார் வேணுகோபால்?

இல்லவே இல்லை. டெல்லி உயர்நீதிமன்றம் வயது வரம்பு ஒன்றை நிர்ணயித்து பதவி நீட்டிப்புத் தர சட்டம் கொண்டு வரலாமே என்று உத்தரவிட்டதல்லவா. அதன் பேரில்தான் மத்திய அமைச்சரவை கூடியது. முடிவெடுத்தார்கள்.

அதன் பிறகுதான் 65 வயதுக்கு மேல் இயக்குனர்கள் அந்த மாதிரி பதவியில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்று நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.

அந்த நேரத்தில் வேணுகோபாலுக்கு 65 வயதானது. உடனே அவர் இது எனக்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம் என்று கூறினார். அது எப்படி சரியாகும்?

இன்று அவர் அந்தப் பதவியில் இருப்பார். நாளை வேறொருவர் வரலாம். சட்டம் என வந்து விட்டால், அது எல்லோருக்கும் பொருந்தும்தானே. உச்சநீதி மன்ற நீதிபதிகளுக்கே வயது வரம்பு 65 தான்.

அரசியல் சட்டப்படி அதற்கு மேல் பதவியிலிருக்க முடியாது. அப்படியிருக்கும் போது, சட்டம் வேணுகோபாலுக்கு மட்டுமே என்றால் சரியாகுமா என்றுதான் கேட்கிறேன்.அந்த சட்டம் வேணுகோபாலுக்காகக் கொண்டு வரப்பட்டது. அதனால் செல்லாது என்ற தீர்ப்பைத்தானே உச்சநீதிமன்றம் கொடுத்திருக்கிறது.

அதெப்படி அவர்கள் கொடுக்க முடியும்?

அப்படி கூறுவதிலும் ஒரு சட்டப் பிரச்சினை இருக்கிறது. ஒரு தனி நபருக்கு அல்லது தனியாக ஓர் அமைச்சருக்கு உள்நோக்கம், குரோத உணர்ச்சி இருக்கிறது என்று வேண்டுமானால் கூறலாம்.

ஆனால், ஓர் அமைச்சரவைக்கே இருக்கிறது என்று சொல்ல முடி யாது. சட்டப்படி சொல்லவும் கூடாது. அதுவும் நாடாளுமன்றம் பற்றி அப்படிச் சொல்லக் கூடாது.
நாடாளுமன்றம் என்பது இறையாண்மை உள்ள இடம். அதனால் அந்த நாடாளுமன்றம் ஒரு சட்டம் இயற்றினால் அந்தச் சட்டத்திற்கு கெட்ட எண்ணம் - உள் நோக்கம் இருக்கிறது என்று சொல்ல முடியாது.

அதற்கு ஓர் உதாரணத்தைக் கூறுகிறேன். சென்னை மாநகர மேயராகத் தேர்வானவர் ஸ்டாலின். ஒருவரே இரண்டு பதவிகள் வகிக்க முடியாது என்று தமிழக சட்டமன்றத்தில் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார். ஜெயலலிதா என்ன மாதிரியான உள்நோக்கத்தோடு அப்படி ஒரு சட்டத்தை இயற்றினார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால், சட்டத்தைக் கொண்டு வந்த பிறகு என்ன செய்ய முடியும்? சட்டம் எல்லோருக்கும் பொது வானதுதான் அதனடிப்படையில் மதிப்பளித்துத்தானே ஸ்டாலின் ஒரு பதவியை, அதாவது மேயர் பதவியை ராஜினாமா செய்தார்? இது நடந்த நிதர்சனமாயிற்றே!

சட்டமன்றத்திற்கு உள்ள அதே அதிகாரம்தானே நாடாளுமன்றத்திற்கும் உள்ளது. எப்படி உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சரியாகும்?

அடுத்து இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்தத் தீர்ப்பு வந்த அரைமணி நேரத்திலேயே டாக்டர் வேணு கோபால் மீண்டும் பதவியேற்கும் படம் ஊடகங்களில் வெளியாகிறது. எப்படி சாத்தியம்?

உச்ச நீதிமன்றம் போட்ட உத்தரவின் நகல் அவ்வளவு விரைவில் வேணுகோபால் கைக்கு எப்படிக் கிடைத்தது?

அதே போன்று ஒரு சாதாரண குப்பனுக்கும், சுப்ப னுக்கும் கிடைக்குமா?

குறைந்த பட்சமாகப் பார்த்தாலே உத்தரவு நகல் கிடைக்க 24 மணி நேரமாவது ஆகுமே. அங்கே செல்வாக்கு சங்கிலித் தொடர் மாதிரி இருக்கிறது பாருங்கள்!

அந்தச் செல்வாக்கின் பின்னணி என்ன?

நியாயமாகவே இந்தச் சந்தேகம் ஒருவருக்கு வராதா?ஆக நீங்கள் உச்சநீதி மன்றத்தின் அந்தத் தீர்ப்பையே தவறு என்கிறீர்கள்?

சமூக உணர்வுள்ள, சமூக நீதிக்காகப் பாடுபடக் கூடிய யாராக இருந்தாலும், தவறு செய்தால் - அது நிறுவனங்களாக இருந்தாலும், அதைக் கண்டிக்கக் கூடிய நேர்மையான துணிவு தேவை. எங்களைப் பொறுத்தவரை, அதாவது திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், நாங்கள் கடவுள்களையே இல்லை என்று கூறி மறுக்கக்கூடியவர்கள்.

கடவுளுக்கும் மேற்பட்டவர்கள் என்ற கருத்திலே இருக்கக் கூடியவர்கள் அல்ல இந்த நீதிபதிகள் அவர்களும் மனிதர்கள்தான். அவர்களுடைய முடிவுகளிலும் தவறுகள் ஏற்படுவது உண்டு.

அவர்கள் வழங்கும் தீர்ப்புகள் எல்லாம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல.

தந்தை பெரியார் அவர்கள் சொன்னதை இங்கே நினைவு படுத்த வேண்டும். மேல்முறையீடு (அப்பீல்) செய்வதற்கு அதற்கு மேல் ஒரு கோர்ட் இல்லை என்ற காரணத்தால்தான் அது ஏற்றுக் கொள்ளக் கூடியதே தவிர, மற்றபடி கடைசி அறிவாளி மனிதர் அங்குதான் உட்கார்ந்திருக்கிறார் என்பதல்ல என்று கூறினார்.

நான் சட்டம் படித்தவன் என்கிற முறையில் இன்னொரு கருத்தையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நீதிபதிகளுக்குத்தான் உள் நோக்கம் கற்பிக்கக் கூடாதே தவிர, நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவறு என்று சொல்வதற்கு மக்களுக்கு உரிமை உண்டு.

நீதிபதிகளின் எத்தனையோ தீர்ப்புகள் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக் கின்றன. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியான வி.ஆர். கிருஷ்ணய்யர் பல தீர்ப்புகளை எதிர்த்து விமர்சனம் செய்து அண்மையில் கூட கட்டுரைகள் எழுதி வருகிறார்.

தீர்ப்புக்கு மாறுபட்டு எழுதி வருகிறார்.. இப்படி நிறைய உதாரணங்களைக் கூற முடியும்!.

இப்படி நீதிமன்றத் தீர்ப்பையே தவறு என்று விமர்சிக்கும் உங்கள் மீது நடவடிக்கை பாய்ந்தால் என்ன செய்வீர்கள்?

இப்படி நான் பேசுவதாலேயே என் மீது ஏதாவது சட்ட விளைவுகள் வந்தால் அதற்கு முழுப் பொறுப்பேற்க நான் தயாராக இருக்கிறேன்.

என்னைப் பொறுத்த வரையில் அந்த வாய்ப்பை ஒரு பொன்னான வாய்ப்பாகக் கருதி மேலும் பல விளக்கப்பட வேண்டிய விஷயங்களை நீதிமன்றங்களிலேயே அது உச்ச நீதிமன்றமாக இருந்தாலும், நானே நேரில் சென்று விளக்குவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாகக் கருதுகிறேன்.

இந்த விவகாரத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி பதவி விலக வேண்டும் என்கிற பா.ஜ.க.வின் எதிர்ப்புக் குரல் வலுவாக எழுந்து வருகிறதே?

இதில் டாக்டர் அன்புமணிக்கு என்ன தொடர்பு? அவரை ஏன் பதவி விலகச் சொல்ல வேண்டும்?

இது பார்லிமெண்ட் கொண்டு வந்த சட்டமாயிற்றே. மத்திய சுகாதார அமைச்சராக அன்புமணி இருந்தாலும், அல்லது வேறு யாராவது இருந்தாலும் சட்டம் ஒரே சட்டம்தானே.

பார்லிமெண்ட் கொண்டு வந்த சட்டத்துக்கு அன்புமணி மட்டுமே எப்படிப் பொறுப்பாவார்?

எனவே அவரைப் பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று சொல்வதற்கு உள்நோக்கம் என்னவென்றால், அவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், சமூக நீதியை விடாமல் வற்புறுத்திக் கொண்டு வரக்கூடிய ஓர் அமைச்சர் என்பதாலும், தமிழ்நாட்டிலிருந்து சமூக நீதிக்காகப் போராடக் கூடிய இந்தக் கூட்டணியைச் சார்ந்தவர் என்பதாலும்தான் அவர்களுக்கு அந்தக் காழ்ப்புணர்ச்சி; அவ்வளவுதான்!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும் நீங்களும் தொடர்ந்து விமர்சன மோதலில் இருந்து வருகிறீர்கள். ஒருவருக்கொருவர், நீ மோசம், நான் மோசமில்லை என்று அறிக்கையில் தாக்கிக் கொள்கிறீர்கள். அதை மறந்து விட்டு அன்புமணிக்காக இப்போது வக்காலத்து வாங்குகிறீர்களே?

“நான் ஒவ்வொரு பிரச்சினையையும் தனித் தனியாகப் பார்க்கிறேன். சொந்தக் காழ்ப்புணர்ச்சி, கருத்து மோதல் என நான் பார்ப்பதில்லை. பார்க்கவும் மாட்டேன். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரின் நிலைப்பாட்டிலிருந்து பல விஷயங்களில் இன்னமும், இன்றளவும் நான் மாறு பட்டுத்தான் இருக்கிறேன்.

அவருடைய பல யோசனைகள், அரசின் வளர்ச்சிப் பணிகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்தக் கண்ணோட்டத்தில் அன்புமணி விவகாரத்தைப் பார்க்க முடியாது.

நியாயத்தின் அடிப்படையில்தான் பார்க்க வேண்டியுள்ளது. எதையும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக அணுகாமல் கொள்கை அடிப்படையில் தான் அணுகுவோம் என்பதற்கு இந்த விவகாரமே சாட்சி!.” நன்றி: “குமுதம் ரிப்போர்ட்டர்
------------------------------------------
வேணுகோபால் என்ற பார்ப்பனர்-மந்திரி அன்புமணி கவனிப்பாரா?."தீண்டாமைப் பாம்பின் ஆட்டம்!

கிறித்தவமும் , பைபிளும் அடிபட்டு ஆட்டங்கண்டு செத்தொழிந்து மறையுமே !!

Saturday, May 17, 2008

கிறித்தவமும் , பைபிளும் அடிபட்டு ஆட்டங்கண்டு செத்தொழிந்து மறையுமே !!

கிறித்தவத்திலும் மடமை:

அகிலம் முழுவதும் வியாபித்துப் பரவியுள்ள மிகப் பெரிய மதமான கிறித்துவின் மத நூலான, மறை நூலான, வேத நூலான விவிலியத்தில்-பைபிளில் உலகம் தட்டை என்று கருத்து உரைக்கப் பட்ட நேரத்தில் கிறித்தவ மதத்தில் தோன்றிய அறிவியல் அறிஞர் கலிலியோ என்பவர் உலகம் தட்டை என்பதை மறுத்து உலகம் உருண்டை என்று சொன்னார் என்பதும்,

தன் கருத்தை மிகுந்த எதிர்ப்புகளுக்கிடையே வரலாற்றில் பதித்து நிறுவினார் என்பதும்தானே உண்மை!

உலகம் உருண்டை என்னும் அறிவுபூர்வமான-ஆக்க ரீதியான கலிலியோவின் ஆராய்ச்சி உண்மைக் கருத்தை ஏற்றுக் கொண்டால் ஏசுநாதரும், கிறித்தவ மதமும், பைபிள் என்னும் விவிலியமும் அடிபட்டு ஆட்டங்கண்டு செத்தொழிந்து மறையுமே என்று எண்ணிய கிறித்தவ மத வெறியர்கள் தங்கள் மதக் கருத்துக் கோட்பாட்டைக் காக்கும் பொருட்டு அறிவியல் ஆய்வறிஞன் கலிலியோவை அடித்தே கொன்றார்கள் என்பதை எவரே மறுக்க இயலும்? thanks to: Tamilachi.blogspot.com
--------------------------------------

படிக்க அழுத்தவும் :-

ஏசு கிறுஸ்து (கடவுள் ) கதறினார் ? சிலுவையில் தன் உயிருக்காக ம‌ட்டும் எப்ப்டி கதறினார் ?

கிறித்து பிறந்து 381 ஆண்டுகள் கழித்து தான் அவர் பரமபிதாவின் குழந்தை என்கிற புளுகு பைபிளில் சேர்க்கப்பட்டது. தகிடுதத்தம் செய்வது அவர்களின் வழக்கம்.

கிறிஸ்தவர்கள் முயல், பன்றி இறைச்சி உண்ணக்கூடாது. :பைபிள். பன்றியை தொடவும் கூடாது.

கருணையின் சொருபமாக சித்தரிக்கப்படும் இயேசு ( கர்த்தர்) கொலைகார‌ரா? பைபிள்:ஆமாம்!!! ‍

பைபிள்: கருணையின் வடிவான‌ கர்த்தரை அவமதித்ததால் பூமி தன் வாயைத் திறந்து, இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கி மூடிக்கொண்டது.

பைபிள்: உன் கர்ப்பக்கனியான உன் புத்திரபுத்திரிகளின் மாம்சத்தைத் தின்பாய்!! ?? !! ??

பைபிள்: கருணையின் வடிவாக சித்தரிக்கப்படும் கர்த்தர் தன்னுடைய சந்நிதியிலேயே மக்களை கூட்டமாக தூக்கில் இடக் கூறுகிறாரே ?

பைபிள்: மலத்தை உண்டு மூத்திரத்தையும் குடிக்கவா?

கருணையின் சொருபமாக சித்தரிக்கப்படும் இயேசு ( கர்த்தர்) கொலைகார‌ரா? பைபிள்:ஆமாம்!!! ‍
--------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனக் கருமேனி ! 5% முள்ள ஒரு கூட்டம் மிச்சம் 95 % முள்ள மக்கள் மீது ஆதிக்கம் புரிவதுதானே இந்து மதம்?

எச். ராஜாக்களும் ராம கோபாலன்களும் தயாரா?


5% முள்ள ஒரு கூட்டம் மிச்சம் 95 % முள்ள மக்கள் மீது ஆதிக்கம் புரிவதுதானே இந்து மதம்? இந்த இந்து மதத்தைக் காப்பாற்றுவதற்குத்தானா வைத்திய நாதய்யர்கள் இப்படி அலறித் துடிக்கின்றனர்?


தலைவர்கள் ஜாதியின் அடிப்படையில் கைகளாலும் கால்களாலும் தாக்கிக் கொள்வதும் உதைக்குப் பயந்து கதவைச் சாத்திக் கொண்டு, எழுதிய தீர்மானத்தை மாற்றிக் கொண்டதும் உண்டு.

இவர்களைத் திட்டுவதற்கு ஆர்.எஸ்.எஸ் எச். ராஜாக்களும் ராம கோபாலன்களும் தயாரா? எச். ராஜாக்களும் ராம கோபாலன்களும் சு. சாமிகளும் அந்தக் காலத்திலும் இருந்தார்கள். எதிர்ப்புப் பூச்சாண்டி காட்டினார்கள்.

எச். ராஜா ஏன் கேட்கிறார்?

பாரதீய ஜனதா கட்சி என்று ஒரு கட்சி தமிழ்நாட்டில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதற்கு ஒரு தலைவர்கள் குழு இருப்பதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் பரப்பப்படுவது உண்டு.

இந்தத் தலைவர்கள் ஜாதியின் அடிப்படையில் கைகளாலும் கால்களாலும் தாக்கிக் கொள்வதும் உண்டு. உதைக்குப் பயந்து உள்ளே போய்க் கதவைச் சாத்திக் கொண்டு, எழுதிய தீர்மானத்தை மாற்றிக் கொண்டதும் உண்டு.

அப்பேர்ப்பட்ட தலைவர்களில் ஒரு துணைத் தலைவராம். ஓதலும் ஓது வித்தலும் செய்ய வேண்டிய இந்தப் பார்ப்பனக் கருமேனி, எந்தக் கணக்கை எப்படி எழுதி ஏய்ப்பது என்பதைச் சொல்லிக் கொடுக்கும் தொழிலில் இருப்பவர். அவர் அண்மைக்காலமாக ஒரு கோரிக்கையை வெகு வேகமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்.

உப்புச் சப்பற்ற உதவாக்கரைக் கோரிக்கை என்றாலும், முற்போக்குப் பார்ப்பனர் (எனச் சொல்லிக் கொள்ளும்) என்பவரை ஆசிரியராகக் கொண்ட இங்கிலீசு நாளேடு ஒன்று முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருக்கும் செய்தியாக இருப்பதால் அதைப்பற்றிய பல சேதிகளைத் தெரிவிப்பதற்காக எழுதப்பட நேரிட்டு விட்டது.

மதத்தின் பெயரையே ஏட்டுக்கு வைத்துக் கொண்டுள்ள அண்ணாசாலை ஆபத்பாந்தவன் பெருந் தலைப்பு வைத்து எழுதியுள்ள செய்தி. ஆலயங்களை நிருவகிக்க தன்னாட்சி அமைப்பு ஒன்று வேண்டும் என்பதுதான்.

இந்து அறநிலையங்களைப் பாதுகாக்க துறை ஒன்று தற்போது இயங்கி வருகிறது. 1949-ஆம் ஆண்டிலிருந்து ஏற்கெனவே வாரியமாக இருந்த அமைப்பு மாற்றப்பட்டு அரசுத் துறையாக ஆக்கப்பட்டது. அதற்கு முன்பு 23 ஆண்டுக் காலமாக நீதிக் கட்சி ஆட்சியால் கோயில் நிருவாகம் வாரியம் ஒன்றியம் ஒப்படைக்கப்பட்டது.

அதற்கும் முன்பு பார்ப்பனர்களின் பண்ணயம்.இதன் வரலாறு என்ன?

1925-இல் நீதிக்கட்சி சென்னைப் பெரு மாநிலத்தை ஆண்டபோது இந்து அறநிலையங்களையும் ஆலயங்களையும் சரிவர நிருவகித்துப் பாதுகாக்க வேண்டும் என்கிற கருத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி அதற்கென ஒரு ஆணையர் குழு அமைக்கப்பட்டது.

இதற்கான ஊக்கம் மராத்திய மாநில கோல்ஹாபூர் சமஸ்தான மன்னரான சத்ரபதி சாகு மகராஜ் செய்த செயல்தான். கோயில் இனாம் நிலங்களை நிருவகிக்கும் பொறுப்பை சாகு மகராஜ் வருவாய்த் துறையிடம் ஒப்படைத்தார். கோயில் சொத்துக்களின் வருமானத்தைக் கல்வி வளர்ச்சிக்காகச் செலவு செய்திடலாம் என்றும் ஆணையிட்டார்.

அவர் நாத்திகரல்லர், கடவுள் நம்பிக்கையாளர்தான். ஆனாலும் ஜோதிபா புலேயின் கொள்கை நெறிப்படி நடந்தவர்.

பெரியாரின் ஆதரவுநீதிக்கட்சி 1925-இல் கொண்டு வந்த இந்தச் சட்டத்தை ஆதரித்தவர், அன்றைக்குக் காங்கிரசுக் கட்சியில் இருந்த தந்தை பெரியார். 1917-இல் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் ஒன்று, தஞ்சை மாவட்டத்தில் உள்ள சத்திரம் நிலங்களின் வருமானம் முழுவதும் சமக்கிருதம் கற்பிப்பதற்கே பயன் படுத்தப்படுவதைக் கண்டித்து நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்தின்மீது பேசிய டாக்டர் நாயர், திருப்பதி மடத்தலைவர் (மகந்து) எப்படிக் கோயில் பணத்தைத் தவறான செயல்களுக்குச் செலவு செய்தார் என்பதையும், சமக்கிருதப்பள்ளி தொடங்கினார் என்பதையும் குறிப்பிட்டார்.

பார்ப்பனர்களின் நலனுக்காகவே வருமானம் முழுமையும் செலவிடப்படுகிறது என்பதை ஆதாரங்களோடு எடுத்துக் காட்டினார். கோயில்களின், அவற்றின் சொத்துக்களின் மீதிருக்கும் பார்ப்பனரின் ஆதிக்கத்தை அழித்து ஒழிக்க வேண்டும் என்று கர்ச்சித்தார்.

ஏராளமான சொத்துக்களும் பக்தர்கள் தரும் காணிக்கைகளாலும் பெருஞ்செல்வம் கோயில்களிலும் மடங்களிலும் குவிந்து கிடந்தது (கிடக்கிறது) ஆனால் இந்தச் சொத்துகளும் செல்வங்களும் கோயிலைக் கைப்பற்றிய வைத்திருந்த தனி நபர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் அவர்கள் விருப்பப்படி விரயம் செய்து வந்தனர்.

பணத்திற்கு வரவு செலவுக் கணக்குகள் எதுவும் எழுதப்படாமலே இருந்தது. அதனால் அவற்றைத் தணிக்கை செய்யும் வாய்ப்பே கிடையாது. இவற்றைச் சீர்திருத்தம் செய்திட நீதிக்கட்சி ஆட்சி முன்வந்தது. 1922-இல் இதற்கெனச் சட்டம் கொண்டு வந்தது. நாள் 18.12.1922.

வாரியம் வந்தது

சட்டத்தின்படி தனிவாரியம் அமைக்கப்பட்டு இங்கிலாந்தில் உள்ள அறநிலையக் குழுவின் கண்காணிப்பில் செயல்பட்டு அறநிலைய சொத்துகள் பாதுகாக்கப்பட்டு அறச் செயல்கள் நிறைவேற்றப்படும் என்பது தெளிவாகக் குறிக்கப்பட்டது.

சொத்துக்களிலிருந்து பெறப்படும் வருமானம் பொதுக் காரியங்களுக்குப் பயன்படுத்தப்படும், இந்துமதம் பற்றிய படிப்பு, பக்தர்களுக்குச் சுகாதார வசதிகள் ஏற்படுத்தல் போன்ற அனைத்துத் தரப்பு இந்து மக்களின் நன்மைக்காகச் செலவிடப்படும் என்பதும் சட்டத்தின் நோக்கமாகும்.

எச். ராஜாக்களும் ராம கோபாலன்களும் சு. சாமிகளும் அந்தக் காலத்திலும் இருந்தார்கள். எதிர்ப்புப் பூச்சாண்டி காட்டினார்கள்.

சட்டத்தைக் கைவிடுமாறு ஆளுநரிடம் விண்ணப்பம் கொடுத்தார்கள். ஆனாலும் சட்டமன்றத்தில் விவாதிக்கப் பட்டுச் சட்டம் நிறைவேறியது. ஆனாலும் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என ஆளுநர் குறிப்பிடத் திருப்பி அனுப்பினார்.

அவரது கருத்துப்படி திருத்தங்கள் செய்யப்பட்டுச் சட்டம் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் ஒப்புதல் அளித்து வைஸ்ராய்க்கு அனுப்பினார்.

ஆதிக்கம் பறிக்கப்பட்டதால் அலறிய ஆரியம் வைஸ்ராயிடம் முறையிட்டுப் பார்த்தனர். சட்டத்தை நிராகரிக்கக் காரணம் ஏதுமில்லை என்பதால், வைஸ்ராய் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார். சட்டம் நடைமுறைக்கு வந்தது. அரசாணை எண் 168 நாள் 24.4.1925

சட்டத் (சட்டமன்றம்) துறை ஆணை பிறப்பிக்கப்பட்டது.

1200 திருத்தங்கள்நீதிக்கட்சி ஆட்சியில் எந்தக் கூட்டமும் இதனளவுக்கு விவாதிக்கப்படவில்லை. இந்தச் சட்டம் 85 சட்டமன்றக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டது. 1200 திருத்தங்கள் இந்தச் சட்டத்திற்குத் தரப் பட்டன. அத்தனையும் விவாதிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டன. சில திருத்தங்கள் மட்டுமே ஏற்கப்பட்டன.

இந்தச் சட்டத்தில் 1929-இல் பிப்ரவரி மாதம் 2-ஆம் நாள் கொண்டு வந்த திருத்தத்தின் மூலம் தான் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. ஏன் இந்தச் சட்டத்தைப் பெரியார் 1922-லேயே ஆதரித்தார் என்பதும் பார்ப்பனர்கள் இன்றளவும் எதிர்க்கிறார்கள் என்பதும் விளங்குகிறதல்லவா?

உத்தமர் ஓமாந்தூரார் 28.2.1947-இல் சென்னை மாகாணத்தின் பிரதமராகக் காங்கிரசுக் கட்சிக்காரரான ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1949-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி பிரதமர் பதவியை ராஜிநாமா செய்து விட்டார். இந்த இரண்டு வருடம் இரண்டு மாதம் 6 நாள்களில் அவர் செய்த சாதனைகள் பார்ப்பனர் அல்லாத மக்களின் வாழ்க்கையில் மகத்தான மாறுதல்களைச் செய்தவை. கதர்ச்சட்டை அணிந்த கருப்புச் சட்டைக்காரர் என்றும் தாடியில்லாத ராமசாமி நாயக்கர் என்றும் தூற்றப் (போற்றப்)பட்டவர்.

அவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர். புலால் உணவு உண்ணாதவர். புலால் உண்பவர்களோடு உடன் அமர்ந்து உண்ணாதவர். அப்பேர்ப்பட்ட ஒழுக்கசீலர், உத்தமர் ஓமாந்தூரார், எந்த மக்களுக்காகக் கோயில்களும் மடங்களும் உருவாக்கப் பட்டன (என்று அவர் நம்பிய)வோ அவை, ஒழுங்காக நடக்காமல் சிலருக்காக மட்டுமே பயன்படும் நிறுவனங்களாக மாறி விட்டதனால் தான் நாட்டில் நாத்திகம் பெருகி விட்டது என்று நம்பினார்.

நாத்திகப் பரவலைத் தடுக்கவும் கோயில்களும் மடங்களும் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றவும் அறநிலையச் சட்டம் ஒன்றினைக் கொண்டு வந்தார்.

இந்துக் கோயில்களைப் போலவே ஊழல் நடந்துவந்த சமணக் கோயில்களையும் இந்தச் சட்டத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

எழுத்தறிவில்லாத பார்ப்பன அர்ச்சகர்கள் கோயில்களில் பணியாற்ற அனுமதிக்காமல், படித்தப் பார்ப்பனர்கள் நியமிக்கப்பட வேண்டும் அவர் களுக்கு வேத, சாத்திரப் புலமை அளிக்கப்படும் என்றும் சட்டம் கொண்டு வந்தார்.

எல்லாவற்றையும் விட முக்கியமாக அறநிலைய வாரியம் என்றிருந்ததை முழுமையான அரசுத் துறையாக அற நிலையத் துறையாக மாற்றினார்.

பார்ப்பன அமைச்சர்.

இந்த முயற்சிகளுக்கு உறு துணையாக இருந்தவர் டி.எஸ்.எஸ். ராஜன் எனும் பார்ப்பன அமைச்சர். இவர் 1937-இல் ஆச்சாரியார் மந்திரி சபையில் அறநிலையப் பொறுப்பை ஏற்ற அமைச்சர். அன்றைக்கு இதனை எதிர்த்தவர்கள் என்.எஸ். வரதாச்சாரியும் மதுரை வைத்தியநாத அய்யரும்தான். காங்கிரசுப் பிரதமர் கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்துக் காங்கிரஸ் மேடைகளிலே பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்.

இன்றைக்கும் எதையும் எதிர்த்துக் குதர்க்கம் செய்யும் `கல்கி ஏடு அன்றைக்கும் இந்தச் சட்டத்தை எதிர்த்துக் குதர்க்கம் செய்து தன் சுவ தர்மத்தைக் காட்டிக் கொண்டது. அதனால் தான் புரட்சிக் கவிஞர் பாடினார், `கல்கிக் கூட்டம் கலக்கிய சேறு இது என்று!

இந்தச் சட்டத்தின் நோக்கம், அவசியம், அவசரம் ஆகியவற்றை விளக்கிட மடாதிபதிகள் கூட்டத்தை ஓமாந்தூரார் கூட்டினார். அவர் பேசிய பேச்சு முழுக்க முழுக்க சு.ம. வாடை வீசுவதாகவே அமைந்திருந்தது என்பதைப் பெருமையுடன் குறிப்பிட வேண்டும்.

மோசடிகளின் பட்டியல்

``பாமர மக்களின் சமூக, பொருளாதார அரசியல் நிலைமையை உயர்த்துவதற்காக நடவடிக்கைகள் எடுக்க முற்படும் போதெல்லாம் மதத்துக்கு ஆபத்து என்ற கூக்குரல் துர்ப்பாக்கிய வசமாக நம் நாட்டில் கிளம்புவது சகஜமாகி விட்டது.

உலகம் முன்னேறி வருகிறது. நாமும் துரிதமாக முன்னேற வேண்டும். மதத்தின் பெயரால் நமது முற்போக்கின் வேகத்தைத் தடுக்க முன்வருபவர்கள் தாங்கள் நம்புவதாகக் கூறும் தங்கள் மதத்துக்கே தீமை செய்தவர்கள் ஆவார்கள் இன்றைக்குப் பொருத்திப் பார்த்தாலும் சரியாகவே படுகின்ற சொற்கள், அல்லவா?
``வடக்கே விசாகப்பட்டினத்திலிருந்து தெற்கே திரு நெல்வேலி வரை நடந்துள்ள மோசடிகள் 65-க்கு நான் ஜபிதாவை வைத்திருக்கிறேன்.

இந்த மசோதாவை எதிர்ப்ப வர்கள் மேற்படி புள்ளி விவரங்களைக் காட்டும் என்று ஜபிதாவைப் படித்துப் பார்க்கும்படி நான் கேட்டுக் கொள்கிறேன். அப்பொழுது அவர்கள் உண்மையை உணர்வார்கள் (மேலும் விவரமாகத் தெரிந்து கொள்ள விரும்புவோர் தோழர் ப. திருமாவேலன் எழுதிய `காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும் நூலைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

கோயில்களில் ஊழல்1795-ஆம் ஆண்டிலிருந்து 1848-ஆம் ஆண்டு வரை கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியில் கோயில் விவகாரங்களில் நல்லெண்ணத்தோடு பற்பல தலையீடுகள் செய்யப்பட்டன என்கிறார் ஓமாந்தூரார்.

21 ஜில்லாக்களில் 8292-க்குக் குறையாத கோயில்கள் சர்க்காரின் நேரடி நிருவாகத்தின் கீழ் எடுத்துக் கொள்ளப்பட்டன. அதுகாறும் மூடிக்கிடந்த கோயில்கள் வழிபாட்டுக்குத் திறந்து விடப்பட்டன. பூசைகளும் உற்சவங்களும் தவறாமல் நிறைவேறி வந்தன என்கிறார் ஓமாந்தூரார்.

இத்தனையும் கிறித்துவ ஆங்கிலேயர்கள் ஆட்சியில்! இன்னொரு சேதி மிக முக்கியமானது. ``துர்திர்ஷ்டவசமாய் அன்றைய வெள்ளைக் கிறித்துவப் பாதிரிமார் சிலர் இத்தகைய காரியங்களின் மூலம் தங்கள் மதத்துக்கே ஆபத்து வரும் என்றனர்..

``கோயில் விஷயங்களை நிருவகிக்கும் பாவனையில் 1863-ஆம் வருடத்தில் சட்டம் போதிய பலனை அளிக்கவில்லை. அதனைத் திருத்தி அமைக்க ராமய்யங்கார், சர் முத்துசாமி அய்யர், சென்கல்ராவ் ஆகியோர் 1872, 1889, 1894 ஆண்டுகளில் திருத்த மசோதாக்கள் கொண்டு வந்தனர்.

இவர்களைத் திட்டுவதற்கு எச். ராஜாக்களும் ராம கோபாலன்களும் தயாரா?

சின்னஞ்சிறு கூட்டம் எதிர்க்கிறது
``இனாம்தார், ஜமீன்தார் ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்தபோது எந்தச் சிறு கூட்டம் எதிர்த்ததோ, அதே சின்னஞ்சிறு கும்பலேதான் இப்போதும் இந்த மடாலயத் திருத்த மசோதாவையும் எதிர்க்கிறார்கள் என்றும் `` அய்ந்து சதவிகிதமுள்ள ஒரு கூட்டம் மிச்சம் 95 சதவிகிதமுள்ள மக்கள் மீது ஆதிக்கம் புரிவதுதானே இந்து மதம்?

இந்த இந்து மதத்தைக் காப்பாற்றுவதற்குத்தானா வைத்திய நாதய்யர்கள் இப்படி அலறித் துடிக்கின்றனர்?

என்றும்

``இந்து மதக் கோயில்களும் மடங்களும் இன்று இருக்கும் கேவல நிலைமை நம்மை இந்து மதத்தைவிட்டு விரட்டுவதாகவும் அல்லா விட்டால் எந்த மதமும் தேவையில்லை என்ற முடிவுக்குத் துரத்துவதாகவும் இருக்கிறதே என்பதைக் காண சிறந்த சமயப் பற்றுதல் படைத்த என் உள்ளம் துடிக்கிறது என்றும் சட்டமன்றத்தில் காங்கிரசு உறுப்பினர்களே பேசினர்?

அதே அய்ந்து விழுக்காடு சின்னஞ்சிறு கும்பல்தான் (கூட்டம் அல்ல) இன்றைக்கும் எதிர்க்கிறது. தன் ஜாதி நன்மைக்காகத்தான் எதிர்க்கிறது.

95 விழுக்காடு மக்களுக்காக எதிர்க்கவில்லை. நாய்கள் குரைத்துக் கொண்டே இருந்தாலும் ஒட்டகக்காரவான் நடந்து கொண்டே இருக்கும் என்பதைப்போல அவர்களைப் புறந்தள்ளிவிட்டுப் போய்க் கொண்டே இருப்போம்.

பக்தர்கள்தான்

1922-இல் சட்டம் கொண்டு வந்த பனகல் அரசரும் ஆத்திகர். 1948-இல் திருத்தம் கொண்டு வந்து அரசுத் துறையாக ஆக்கிய உத்தமர் ஓமாந்தூராரும் ஆத்திகர்தாம். அவர்களுடைய கடவுள் பக்தி ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பலின் பக்திக்குக் குறைந்ததல்ல; சுயநல மில்லாத இன நலம் மிக்க, மக்கள்நலம் கருதிய மேம்படுத்தப்பட்ட பக்தியாகும்.

அன்றைய சென்னை மாகாணத்தைச் சேராத, மன்னர் ஆட்சி நிலவிய திருவாங்கூர், கொச்சி, மைசூர் பகுதிகளில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விட்டன. இந்நிலையில் ராமகோபாலன்களும், எச் ராஜாக்களும் அங்கு போய்க் கூக்குரல் எழுப்பினார்களா? எழுப்பத் தயாரா?

கோயில்களில் திருட்டுகள்

60 ஆண்டுகளுக்கு முன்பு, இந்து அற நிலையத்துறை அரசுத் துறையாக ஆவதற்கு முன்னால், வேதாரண்யம் கோயிலுக்கு 45 கிராமங்களில் 16 ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தது. ஆனால் வருமானம் 75 ஆயிரம் மட்டுமே கணக்குப்படி காட்டப்பட்டது. அந்த நிலை மீண்டும் வர வேண்டுமென்று ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் விரும்புகின்றனவா?

உடுப்பியிலிருக்கும் மடம் (அன்றைக்கு சென்னை மாகாணத்தில் இருந்தது) புரோ நோட்டுக் கடனாக ஒரு லட்சம் வாங்கிச் செலவு செய்துள்ளது. அறநிலைய வாரியத்தின் பார்வைக்கு வராமல், அனுமதி பெறாமல் கடன் வாங்கிச் சாப்பிட்டு விட்டார்கள். அதே மாதிரி இப்போதும் ஏப்பம் விட வேண்டும் என்பதற்காக இந்து முன்னணிக்காரர்கள் கூச்சல் போடுகிறார்களா?

வடஆர்க்காடு மாவட்டத்தில் ஒரு கோயில் சொத்து முழுவதும் ஒரு ஜாகிர்தாருக்குக் கொடுத்து கபளீகரம் செய்து விட்டார்கள். தஞ்சாவூர் சொர்க்கபுரம் மடத் தில் ஆயிரக்கணக்கில் கையாடல் செய்ததோடு 26 ஏக்கர் நிலத்தையும் விற்றுக் காசாக்கி விழங்கிவிட்டனர். திருச் செங்கோட்டிலும் வேதாரண்யத்திலும் அர்த்த நாரிசனுடையதும் வேத புரீசுவரனுடையதுமான நகைகளைத் திருடிச் சாப்பிட்டு விட்டனர். ``சிவன் சொத்து குலநாசம் என்று எழுதி வைத்துவிட்டு ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் `அபேஸ் செய்து விட்டார்ள். இதை ஆண்டவனும் கேட்கவில்லை. ஆனால் ஆண்டவர்கள் (ஆட்சியாளர்கள்) கேட்டதால்தான் சட்டமே கொண்டு வந்தனர்.

அதை வேண்டாம் என்றால், காவல்காரனை வேண்டாம் என்கிறார்கள். காவல்காரன் கூடாது என்று திருடன்தானே நினைப்பான்? அப்படியென்றால் இவர்கள் யார்?

ஓமாந்தூரார் கேட்டார்: ``இந்த மாதிரியான அக்கிரமங்களை நம் கண்ணெதிரே பார்த்துக் கொண்டிருந்தும் சர்க்கார் கைகட்டி, வாய் புதைத்து, வாளாவிருக்க முடியுமா என்றுநான் கேட்கிறேன். எந்த நாகரிக சர்க்காரும் பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த ஜன நாயக சர்க்காரும் மக்களின் ஆத்மீக லவுகீக வளர்ச்சியில் சிரத்தை கொண்ட எந்த நேர்மையான சர்க்காரும் இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு கண்மூடி மவுன போல் பாராமுகமாய்ச் சும்மா இருக்க முடியாது.

அதே பதில்தான் இப்போதும். அரசு தன் கடமையை 80 ஆண்டுகளாகச் செய்து வருவதுபோலத் தொடர்ந்து ஆற்றும். இல்லையென்றால், சிதம்பரம் நடராசன் கோயில் நிலங்கள் போய் ஒழிந்தது போல எல்லாக் கோயில் சொத்துக்களும் ஒழிந்து போகும்!

அதைத்தான் எச். ராஜாக்களும் இராம. கோபாலன்களும் விரும்புகிறார்கள். நாம் ஒரு போதும் அனுமதிபோம்!---

சு. அறிவுக்கரசு---VIDUTHALAI.COM

Friday, May 16, 2008

வேணுகோபால் என்ற பார்ப்பனர்-மந்திரி அன்புமணி கவனிப்பாரா?."தீண்டாமைப் பாம்பின் ஆட்டம்!

எய்ம்ஸில்" தீண்டாமைப் பாம்பின் ஆட்டம்!

டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகம் புகழ்பெற்ற ஒன்றாகும். பெரிய பதவியில் உள்ளவர்கள், பிரமுகர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால் உடனடியாக சேர்க்கப்படுவது இந்த மருத்துவமனையில்தான்.

இந்த மருத்துவமனை அண்மைக்காலமாக மக்கள் மத்தியில் மிகக் கடுமையான அவப்பெயரை வாங்கிக் கட்டிக் கொண்டு இருக்கிறது.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை அமல்படுத்தவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிய நிலையில், இந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மிகக் கேவலமான வகையில், அருவருக்கத்தக்க வகையில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

போராட்டங்கள் தடை செய்யப்பட்ட அந்தக் கல்லூரியின் வளாகத்துக்குள்ளேயே கல்லூரியின் மின்சாரம், தளவாட சாமான்களைப் பயன்படுத்திக்கொண்டு சட்ட விரோதமாகப் போராட்டங்களை நடத்தினார்கள். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நோயாளிகளுக்கு மருத்துவம் செய்வதையும் புறக்கணித்தனர்.

அந்த அளவுக்கு "மனிதாபிமானத்துடன்" அவர்கள் நடந்துகொண்டிருக்கின்றனர். அதைவிடப் பெரிய கொடுமை, அவர்கள் வேலை நிறுத்தம் செய்த காலத்திற்குச் சம்பளமும் அளிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதாகும்.

இவ்வளவுக்கும் பின்புலமாக பின்பலமாக இருந்தவர் அந்த நிறுவனத்தின் இயக்குநராக இருந்த டாக்டர் வேணுகோபால் என்ற ஆந்திர மாநிலப் பார்ப்பனர் ஆவார்.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோது பார்ப்பன உணர் வோடு, அவர் ஓய்வுக்குப் பிறகும் 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டவர்.

65 வயதுக்குமேல் இந்தப் பதவியில் நீட்டிக்கக் கூடாது என்று இன்றைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் தனிச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அந்தப் பதவியிலிருந்து டாக்டர் வேணுகோபால் நீக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தின் தாராள உதவியால் மீண்டும் அந்தப் பதவியில் உட்கார்ந்துவிட்டார்.

நம் நாட்டின் நியாயமும், நீதியும், பொது ஒழுக்கமும் எந்தத் தரத்தில் போய்க் கொண்டு இருக்கின்றன என்பதற்கு இவையெல்லாம் கண்கண்ட க(ச)ட்சிகள்.
இப்பொழுது வெளிவந்துள்ள இன்னொரு தகவல் நம் மூச்சையே நிறுத்தக்கூடியதாக உள்ளது.

அந்தக் கல்லூரியில் படிக்கும் தாழ்த்தப்பட்ட, மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் திட்டமிட்ட வகையில் அவமதிக்கப்படுவதாகவும், புறக்கணிக்கப்படுவதாகவும் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளன.

இதுபற்றிய புகார்கள் வந்தபோது பேராசிரியர் எஸ்.கே. தோரட் தலைமையில் அமைக்கப்பட்ட மூவர் கொண்ட விசாரணைக் குழு தன் அறிக்கையைக் கொடுத்துள்ளது.

தாழ்த்தப்பட்ட மாணவர்கள் என்பதற்காக ஆசிரியர் அம்மாணவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பதில்லை; அவர்களின் தேர்வுத் தாள்கள் சரியாகத் திருத்தப்படுவதில்லை;

எதிர்பார்த்த மதிப்பெண்களைவிடக் குறைவாக மதிப்பெண்கள் தரப்படுகின்றன.

தேர்வு அதிகாரிகள் மாணவர்களின் ஜாதிகளைத் தெரிந்துகொண்டு அதன் அடிப்படையில் மதிப்பெண்கள் போடுவதுவரை அங்கே நடைபெற்றுவருகிறது.

வகுப்பு அறைகளிலும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் ஜாதி ரீதியான இழிவுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்கிற தகவல்களையெல்லாம் திரட்டி விசாரணைக் குழு அறிக்கையாகத் தந்துள்ளது.

இதை ஒரு சாதாரண பிரச்சினையாக அரசு அலட்சியம் செய்துவிடக் கூடாது. இது மிகப்பெரிய பிரச்சினையாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17 ஆவது பிரிவு கூறும் - தீண் டாமை ஒழிப்புச் சட்டத்தின்கீழ், இதற்குக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் ஆவார்கள்.

இந்தியாவின் தலைநகரத்திலே - அதுவும் ஒரு மருத்துவக் கல்லூரியிலே இந்த மனித உரிமை மீறல், தீண்டாமைக் கொடுமை என்றால், இதனை எப்படி அனுமதிக்க முடியும்?

இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் பின்னணித் திரையில் இருந்து இயக்கிய ஒருவர்தான் மீண்டும் இயக்குநராக நீதி மன்றத்தால் அமர்த்தப்பட்டுள்ளார் என்பது ஜீரணிக்கப்பட முடியாத ஒன்றாகும்.

இதுபோன்ற அறிக்கைகள் முக்கியத்துவம் பெறாமல் போவது உண்டு. அந்தப் பட்டியலில் இந்த அறிக்கை இடம்பெற்றுவிடக் கூடாது. உரிய தண்டனையிலிருந்து ஒருவர் கூடத் தப்பித்து விடக் கூடாது.

மத்திய அரசு - குறிப்பாக மத்திய மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இதில் முக்கிய கவனம் செலுத்துவார் என்று நம்புகிறோம்.

எய்ம்ஸ் நிறுவனத்தில் பயிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பல்வேறு கொடுமைகள் இழைக்கப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது (ஃபிரன்ட் லைன் 9-5-08).

இந்தியாவில் மிகப்பெரும் மருத்துவக் கல்வி நிறுவனமான அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகம் (எய்ம்ஸ்) தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.

குறிப்பாக பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் 27 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தபோது அதை எதிர்த்து உயர் சாதி மாணவர்கள் தீவிரமாக அணி திரண்டு போராட்டம் நடத்தினர்.

இவர்களின் போராட்டம், எய்ம்ஸ் இயக்குநர் வேணுகோபாலின் தூண்டுதலாலேயே நடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது எய்ம்ஸில் படிக்கும் தாழ்த்தப்பட்ட பழங்குடி மாணவர்களுக்கு பல்வேறு அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளது பற்றி பேராசிரியர் எஸ்.கே. தோரட் தலைமையில் அமைக்கப்பட்ட மூன்றுபேர் கொண்ட விசாரணைக் குழு மேற்கொண்ட ஆய்விலேயே ஜாதியின் பெயரால் செய்யப் பட்டக் கொடுமை அம்பலமாகியுள்ளது.

இங்கு பயிலும் மாணவர்களில் 89 சதவிகிதம் பேர்களுக்கு ஆசிரியர்களிடமிருந்து போதுமான கற்பித்தல் உதவி கிடைக்காமல் இருப்பதும் அதில் மூன்றில் ஒரு பகுதி மாணவர்களை அவர்களின் ஜாதியை முன்னிலைப்படுத்தி விலக்கி வந்திருந்ததும் தெரிய வந்துள்ளது.

மேலும் தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சார்ந்த மாணவர்கள் தங்களின் ஆங்கில மொழித் திறனை வளர்த்துக் கொள்ள வாய்ப்பாக சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

22 சதவிகிதம் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் அவர் களின் வகுப்பு நேரங்களில் ஜாதி ரீதியான இழிவுக்கு ஆளாகியுள்ளனர்.

இதையெல்லாம் விட அவர்களின் தேர்வுத்தாள் கள் சரியாக திருத்தப்படுவதில்லை என்றும், அவர்களுக்குத் தர வேண்டிய மதிப்பெண்களைவிட குறைவாகவே மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் விசாரணைக் கமிஷனிடம் குறிப்பிட்டுள்ளனர்.

இதே போல செய்முறை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு போன்ற வற்றிலும் இந்த நிலைமை இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கு ஒருபடி மேலே போய் தேர்வு அதிகாரிகள் மாணவர்களின் ஜாதிபற்றி விசாரித்ததாக 76 சதவிகித மாணவர்களும் 84 சதவிகித மாணவர்கள் தங்கள் தாழ்த் தப்பட்ட ஜாதியில் பிறந்ததற் காக தங்களது மதிப்பெண் தரம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இட ஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றபோது தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எய்ம்ஸ் விடுதியின் மேல் தளத்திற்கு மாற்றப்பட்டு கீழ் தளத்தில் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள கொடுமையும் அரங்கேறியுள்ளது.

மேல் தளம் முழுவதும் எஸ்.சி.களுக்கு என்றும் தரைத் தளம் உயர் ஜாதிக்காரர்களுக்கென்றும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இத்தனைக் கொடுமைகளுக்கும் பார்ப்பன இயக்குநர் வேணுகோபால்தான் காரணம். பாதிக்கப்பட்ட மாணவர்கள் பற்றி விசாரணைக் கமிஷனிடம் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளது குறித்து கேட்ட போது உயர்ஜாதி மாணவர்களால் இழிவுபடுத்தப்பட்டது.

துஷ்பிரயோகம் செய்யப்பட்டது எல்லாவற்றிற்கும் மேலாக வன்முறையில் ஈடுபட்டதும், தங்களை சக மாணவ நண்பர்கள் மன ரீதியாக காயப்படுத்தியதாக கூறியுள்ளனர்.
இத்தனைக்கும் மேலாக அனைவருக்கும் பொதுவான விடுதி உணவுகளிலும் ஜாதிய ரீதியில் ஒதுக்கி தனிமைப்படுத்தப்பட்ட இழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலை கலாச்சார நிகழ்ச்சிகளிலும் கூட நிலவியதாக தெரிய வந்துள்ளது.
viduthalai.com.
---------------------------
கிறிஸ்தவர்கள் முயல், பன்றி இறைச்சி உண்ணக்கூடாது. :பைபிள். பன்றியை தொடவும் கூடாது.

கருணையின் சொருபமாக சித்தரிக்கப்படும் இயேசு ( கர்த்தர்) கொலைகார‌ரா? பைபிள்:ஆமாம்!!! ‍
-----------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்>

கிறிஸ்தவர்கள் முயல், பன்றி இறைச்சி உண்ணக்கூடாது.: :பைபிள். பன்றியை தொடவும் கூடாது.

இன்று உலகிலேயே கிறிஸ்தவர்கள் தான் பெருமையுடன் அதிக அளவில் பன்றி இறைச்சியை உண்ணுவது மட்டுமின்றி அதன் உடலில் உள்ள அனைத்தையும் பூரணமாக கர்த்தரின் கட்டளைக்கு விரோதமாக பயன்படுத்துகிறார்கள்.

பன்றி மாம்சத்தைப் புசிக்கவும், உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

லேவியராகமம் -11 அதிகாரம்5. குழிமுசலானது அசை போடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

And the coney, because he cheweth the cud, but divideth not the hoof; he is unclean unto you.

6. முயலானது அசை போடுகிறதாயிருந்தும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

And the hare, because he cheweth the cud, but divideth not the hoof; he is unclean unto you.

7. பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.

And the swine, though he divide the hoof, and be clovenfooted, yet he cheweth not the cud; he is unclean to you.

8. இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

SWINE(பன்றி) : The flesh of the swine forbidden _
(a) "Of their flesh (of the swine) shall ye NOT EAT, and their carcass ye shall NOT TOUCH; they are unclean to you " LEVITICUS 11:8
படிக்க அழுத்தவும் :-

பைபிள்: கருணையின் வடிவான‌ கர்த்தரை அவமதித்ததால் பூமி தன் வாயைத் திறந்து, இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கி மூடிக்கொண்டது.

பைபிள்: உன் கர்ப்பக்கனியான உன் புத்திரபுத்திரிகளின் மாம்சத்தைத் தின்பாய்!! ?? !! ??

பைபிள்: கருணையின் வடிவாக சித்தரிக்கப்படும் கர்த்தர் தன்னுடைய சந்நிதியிலேயே மக்களை கூட்டமாக தூக்கில் இடக் கூறுகிறாரே ?

பைபிள்: மலத்தை உண்டு மூத்திரத்தையும் குடிக்கவா?

கருணையின் சொருபமாக சித்தரிக்கப்படும் இயேசு ( கர்த்தர்) கொலைகார‌ரா? பைபிள்:ஆமாம்!!! ‍
--------------------------------------
நான் ஏன் கிறிஸ்தவனல்ல? பெட்ரண்ட்ரஸல் M.A., F.R.S., கிடைக்குமிடம்: பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவன வெளியீடுபெரியார் திடல், 50, ஈ.வெ.கி சம்பத் சாலை,வேப்பேரி, சென்னை ‍ 6000 007

இந்த புத்தகம் கிடைக்கப் பெறாதவர்கள் எங்கும்கிடைக்கக் கூடிய பைபிள் ஆங்கில பிரதி , தமிழ் பிரதி ஒவ்வொன்று வாங்கி கொண்டுசுட்டிக் காண்பிக்க‌ப்ப‌ட்டிருக்கும் பைபிளின் அதிகார‌ம், அத்தியாய‌ம், வ‌ச‌னம் ஆகிய‌வ‌ற்றை ப‌டித்து பைபிள் எப்ப‌டிப் ப‌ட்ட‌து ( புனிதமா ? அல்லது என்ன? ) என்று விளங்க‌லாம்.

அப‌த்தங்க‌ளை சுல‌ப‌மாக‌ விள‌ங்கிவிடாத‌படி வார்த்தைகளை அமைத்திரூப்பார்க‌ள். திரிப்ப‌தில் திறமை பெற்ற‌வர்க‌ள்.உதாரணம் : மனுஷனிலிருந்து கழிந்த கஷ்டத்தின் வறட்டிகளால் = மலம்
-------------------------------------------
பன்றியின் ஆண் பெண் குறி அவ்வளவு புனிதம். -புராணம்

அழுத்தவும் :- மற்ற பதிவுகள்