Followers

Thursday, April 10, 2008

காங்கிரஸ் வெளுத்து வாங்கும் R.S.S அத்வானி -- எதையாவது பேசி, எழுதி ( சுயசரிதையால்) சுழலில் மாட்டி, சிக்கி, விழி பிதுங்குகிறார்

காங்கிரஸ் வெளுத்து வாங்கும் R.S.S அத்வானி -- எதையாவது பேசி, எழுதி ( சுயசரிதையால்) சுழலில் மாட்டி, சிக்கி, விழி பிதுங்குகிறார் ..

உள்கட்சியோ முணுமுணுக்கிறது

புதுடில்லி, ஏப். 9- பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதமருக்கான வேட் பாளராக அறிவிக்கப்பட்ட எல்.கே. அத்வானி தாம் எழுதி வெளியிட்ட சுயசரிதையால் சிக்கலில் மாட்டிக் கொண்டு விழி பிதுங்குகிறார்.

மை கன்ட்ரி, மை லைப் என்ற தலைப்பில் அத்வானி தனது சுயசரிதையை புத்தகமாக வெளியிட்டுள்ளார். அந்தப் புத்தகத்தில் உள்ள விவரங்கள் குறித்து மறுப்புகளும், வருத்தம் தெரிவிப்பதுமாக அத்வானி தனது முழு நேரத்தையும் செலவிட்டு வருகிறார்.

பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்து பா.ஜ.க.வினர் தொடங்கிய பிரச்சாரம் பாதியிலே நிறுத்தப் பட்டு, தனது சுயசரிதை குறித்த சர்ச்சைகளுக்கு பதில் சொல்வதில் அத்வானி இறங்கியுள்ளார்.ஏராளமான உண்மைக்குப் புறம்பான தகவல்கள் அந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக பஞ்சாப் மற்றும் காஷ்மீர் பற்றிய விவரங்கள் வரலாற்றைப் பதிவு செய்யும் விதமாக அமையவில்லை.

காந்தஹார் விவகாரத்தில் தனது பங்கு இல்லை என்று காட்டிக் கொள்வதற்காக ஜஸ்வந்த் சிங் சென்றதே தனக்குத் தெரியாது என்று அத்வானி குறிப்பிட்டுள்ளார். (ஜஸ்வந்த் சிங்குக்கும், அத்வானிக்கும் கட்சிக்குள் பனிப் போர் நடந்து வருவதும் இங்குக் கவனிக்கத் தக்கதாகும்).

அத்வானி மீது வாஜ்பேயிக்கு நம்பிக்கை இல்லாததுதான் அதற்குக் காரணமா என்று சில கட்சியினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஆனால் அத்வானிக்கு அந்த விஷயம் நன்றாகத் தெரியும். மத்திய அமைச்சரவை கூடிதான் இந்த முடிவு எடுக் கப்பட்டது என்று தேசிய ஜன நாயகக் கூட்டணியின் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் போட்டு உடைத்துள்ளார்.

மேலும் உயிரோடு இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சத்யபால் டாங் இறந்துவிட்டதாகத் தெரிவித்து உள்ளார்.

இதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் புத்தகம் பற்றிய நம்பகத் தன்மையே போய்விட்டது என்று சொந்தக் கட்சிக்காரர்களே பேசிக் கொள்கின்றனர்.

எதையாவது பேசி, எதையாவது எழுதி மாட்டிக் கொள்வதுதான் இந்தக் கிழவரின் வேலை என்று சொந்தக் கட்சியினரே விமர்சிக்கின்றனர்.

அத்வானி எழுதியுள்ள பல பிரச்சினைகளைக் காங்கிரஸ் எடுத்துக் கொண்டு விளாசுகிறது. சோனியா காந்தியும் தாக்குதல் தொடுத்துள்ளார்.

காந்தஹார் பற்றி எழுதியுள்ள அத்வானி, தீவிரவாதிகளுக்கு ரூ 800 கோடி கொடுத்தது பற்றி ஏன் எழுதவில்லை என்ற கேள்வி எழும்பியுள்ளது.

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் சிலரும் இந்த சர்ச்சை சீக்கிரமாக நிறைவு பெறுவது நல்லது என்று கருதுகிறார்கள்.ஏற்கெனவே கட்சிக்கு உள்ள கெட்ட பெயருடன் இந்த சர்ச்சையும் சேர்ந்து கொண்டுள்ளதால் இரண்டாம், மூன்றாம் மட்ட பா.ஜ.க. தலைவர்கள் முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர்.
http://viduthalai.com/20080409/news01.html
-------------------------------------
படித்துவிட்டீர்க‌ளா?

சிந்திக்க உண்மைகள்.: ஏசு கடவுள் அல்ல - பைபிள் புரட்டுகள். கிறித்தவ மதத்தில் A to Z வரை பிரிவுகள்:

சிந்திக்க உண்மைகள்.: வள்ளுவரிடம் - எந்த விலைமாது சதை விற்று முதலாளி ஆனாள் ?.மகளுக்குக் குபேரன் வீட்டில் சம்பந்தம் பேசினாள்?

: இஸ்லாம் ஏன் ? எதற்காக ? - பெரியார். !!!

புத்தியிருக்கா உனக்கு ? இங்கு உன் பெண்டாட்டியை கூட்டி வர?? மக்களின் மூத்திரம் கலந்தச் சேற்று நீரைத் தெளித்துக் கொண்டு வருகிறாயே!

பன்றியின் ஆண் பெண் குறி அவ்வளவு புனிதம் உருவமே யாகம். -புராணம். இந்து முண்ணனி..சங்பவார சக்திகள் அதை முஸ்லிம்களுக்கெதிராக பயன்ப‌டுத்தும் விதம் காணீர்.
-----------------------------
மற்ற பதிவுகள்

No comments: