Followers

Friday, April 18, 2008

ஓரின புண‌ர்ச்சி ( LESBIAN ) என்ன இங்கிலிஷ்காரா கண்டுபிடிப்பா? எங்க இந்து மதத்தில கிடையாதோ...? யார் சொன்னா?

ஓரின புண‌ர்ச்சி ( LESBIAN ) என்ன இங்கிலிஷ்காரா கண்டுபிடிப்பா? எங்க இந்து மதத்தில கிடையாதோ...? யார் சொன்னா?

இந்து மதத்தில இல்லாததா என்ன? ஹெ... ஹெ.... ஹெ....
இரண்டு பெண்களின் உடலிலிருந்து எடுக்கப்படும் திசுக்களை வச்சுகிட்டே குழந்தையை உருவாக்க முடியும்னு இப்போ வந்திருக்கும் அறிவியல் கண்டுபிடிப்பைப் பத்தியும் லெஸ்பியன்னு சொல்லப்படுகிற ஓரினச் சேர்க்கை பற்றியும் விவாதம் தமிழ் - தளம் ஒண்ணுல நடந்தது. அடடே!

இதென்ன விசேசம்... அணுகுண்டு தொழில்நுட்பம், க்வாண்ட்டம் தியரி, பேரண்டத்தைப் பற்றி விளக்கும் பிக்பாங்-னு எந்த அறிவியல் கண்டுபிடிப்பு வந்தாலும் இது எங்க இந்து மதத்தில இல்லாததான்னு கச்சை கட்டிண்டு... மன்னிக்கணும் பஞ்ச கச்சம் கட்டிண்டு களத்தில இறங்கி ஆதாரம் காட்டுறதுக்குன்னே சுஜாதா உள்ளிட்ட க்ரூப் இருக்குமே. எங்க அவாளயெல்லாம் காணோம்?.

.. சரி போறது. நாமளே சொல்லிவிடுவோம்னு கிளம்பியாச்சு... அய்யப்பன், கிருஷ்ணன் - நாரதன்னு ஹோமோ பத்தி மட்டும் தான் இந்து மதத்தில இருக்கா? (( இத்தள‌ம் சென்று படியுங்கள்

அய்யோ ஆபாசமே!இதுதான் தமிழ் வருடப் பிறப்பா?
-------------------------------------------
இந்த இதழ் குமுதத்தில் அரசு பதில்கள் பகுதியில் கீழ் கண்ட பதில் போட்டிருந்தார்கள்.

தமிழ் வருடங்கள் அறுபது பிறந்த கதையைத் தெரிந்தால் சொல்லுங்களேன்?

கேட்கவே காதுகள் கூசும் அந்த ஆபாசக் கதையை பெரியார் துவைத்துக் காயப்போட்டிருக்கிறாரே. அதை நான் வேறு சொல்ல வேண்டுமா?

நாரதருக்கும், விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளைகளா தமிழ் வருடங்கள்? முதலமைச்சர் கலைஞர்.

-----------------------------

லெஸ்பியன் என்ன இங்கிலிஷ்காரா கண்டுபிடிப்பா? எங்க இந்து மதத்தில கிடையாதோ...? யார் சொன்னா?

பசீரதப் பிரயத்தனம் பண்ணி கங்கையை இமய மலையிலிருந்து கொண்டு வந்த பகீரதன் இருக்கானோல்யோ... அவனோட தங்கைகள் ரெண்டு பேரும் சேர்ந்து கசகசப்பில் உண்டான வியர்வையில் குழந்தை பிறந்ததா நம்ம புராணம் சொல்றது வோய். புரியறதா...

லெஸ்பியனும் சரி, பொம்மனாட்டிகளே சேர்ந்து குழந்தை பெக்கிறதும் சரி! இந்து மதத்தில இல்லாததா என்ன? ஹெ... ஹெ.... ஹெ....- பவானந்தி
- unmaionline.com 2008 03 01 -----------------


அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

1 comment:

கீதா said...

சுஜாதா இறந்து ரொம்ப நாளாச்சுங்க