Followers

Monday, April 7, 2008

இராமகிருஷ்ணப் பரமஹம்சர் தம் மலத்தைத் தானே தின்றார். உண்மைதானா? "நாயர் பிடித்த புலி வால் என்றால் என்ன?" ஆசிரியர் விடையளிக்கிறார்.

ஆசிரியர் விடையளிக்கிறார்

"நாயர் பிடித்த புலி வால் என்றால் என்ன?"

கேள்வி: நீதிபதிகளின் ஓய்வு வயதை மேலும் மூன்று ஆண்டுகள் உயர்த்துவதுபற்றி மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ் கூறியுள்ளாரே?

பதில்: பரத்வாஜ் போன்ற நவீன மனுக்களுக்கு புதியவர்கள் நியமனம் சமூகநீதி அடிப்படையில் நடக்காமல் இருக்க இதுதான் புதிய யுக்தி!

ஓய்வு பெற்றுப் போக வேண்டியவர்கள் உயர்ஜாதியினர்கள், அவர்களுக்கு இப்படி ஒரு `பரிசு கொடுத்தால் நீதி சாம்ராஜ்யம் அவாளிடமே இருக்குமல்லவா?

கேள்வி: ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகளில் தேசிய விடுமுறை நாள்களைக் குறைந்துள்ளனர்; அதே நேரத்தில் மத விடுமுறை நாள்களைக் குறைக்கவில்லையே? - நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

பதில்: அவர்களுக்குத் தெளிவோ, துணிவோ இல்லை - காரணம் பயமும் பக்தியும்தான்!

கேள்வி: சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றியுள் ளனர் - பாராட்டத்தக்கதே! - ஆனால் கோயில்கள் மட்டும் கம்பீரமாக அப்படியே நிற்கின்றனவே? - வே. ஏகாம்பரன், சென்னை-3

பதில்: சென்னை மேயரிடமும் கூறியுள்ளோம். என்ன செய்கிறார் என் பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் உயர்நீதிமன்ற தீர்ப்புகள் ஆதரவாக உள்ளன. அவருக்கு ஏனோ தயக்கம்?

கேள்வி: `தலாக் சொல்வதன் மூலம் மனைவியை விவாகரத்து செய்யும் முறையை எதிர்த்து அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனி நபர் சட்ட வாரியம் குரல் கொடுத்துள்ளதுபற்றி... - எம்.எம். பேகம், சென்னை-6

பதில்: சட்டமும் தீர்ப்புகளும் அப்பெண்கள் பக்கம் நிற்கும் காலம் கனிந்து விட்டதைக் காட்டுகிறது!

கேள்வி: தனியீழத்துக்கு எங்கள் ஆதரவு கிடையாது என்று சிபிஅய் (எம்) மாநாட்டில் கருத்துக் கூறப்பட்டுள்ளதே? - வி.து. இராகவன், சூலூர், கோவை

பதில்: ஆரம்பத்திலிருந்தே அவர்கள் நிலைப்பாடு அதுதான். அதிசயம் ஒன்றுமில்லை. `திபெத் பிரச்சினை உள்ளதே!

கேள்வி: அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முதல் குற்றவாளி என்கிற இடத்தில் இருக்கும் எல்.கே. அத்வானி பிரதமர் பதவிக்கான பா.ஜ.க.வின் வேட்பாளர் என்பது எப்படி? - அ. அலிகான், பாளையங்கோட்டை

பதில்: 43 தடவை கால நீடிப்பு வாங்கி 92-லிருந்து இன்று வரை பல கோடி ரூபாய்களை விழுங்கும் நீதிபதி லிபரான் கமிஷனின் குற்றவாளி என்று தீர்ப்பு வரத் தாமதிப்பதால் இந்நிலை!

கேள்வி: குஜராத்தில் நடந்த கலவரத்தின்போது அம்மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடி, இராணுவத்தை அழைத்தார் என்பதே பெரிய சாதனை என்பதுபோல `துக்ளக் `சோ ராமசாமி `கல்கி இதழுக்குப் பேட்டி கொடுத்துள்ளாரே? - இர. தமிழ்வாணன், பண்ருட்டி

பதில்: `அவாள் எதையும் இரட்டை நாக்குடன் தான் பேசுவாள்!மோடி இராணுவத்தை அழைக்கவில்லை; மத்திய அரசால் - இராணுவம் - அனுப்பப்பட்டது அப்படியே இருப்பினும், அதையே மற்ற மாநிலம் செய்தால் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. உடனே டிஸ்மிஸ் செய்யுங்கள் என்றுதானே கூக்குரல் போட்டிருக்கும் இதே பூணூல் ஏடுகள்?

கேள்வி: இராமகிருஷ்ணப் பரமஹம்சர் என்பவர் தம் மலத்தைத் தானே தின்றார். அது உச்ச கட்டமான யோக நிலை என்று கூறுகிறார்களே? உண்மைதானா? - ஆ.க. அரசி, திருவண்ணாமலை

பதில்: ஓகோ, இதுமாதிரி பைத்தியக்காரதனத்திற்கு பெயர்தான் உச்சக் கட்ட யோக நிலைபோலும்! அட முண்டங்களா?

கேள்வி: நாயர் பிடித்த புலிவால் என்று தாங்கள் அடிக்கடி பயன்படுத்து கிறீர்களே - அதற்கு விளக்கம் என்ன? - வே. செல்வராசன், சென்னை-19

பதில்: இப்படியும் போக முடியாமல் அப்படியும் செய்ய முடியாத சிக்கலான நடைமுறை.ஒருநாயர் புலியின் வாலைப் பிடித்துவிட்டார்; விட்டாலும் ஆபத்து, விடா விட்டாலும் தாங்க முடியாத துன்பம் என்ற கதையையொட்டியதே அச்சொலவடை!

கேள்வி: தமிழால் பிழைக்கும் பார்ப்பன எழுத்தாளர்களுக்குக்கூட சமஸ்கிருதத்தின்மீது தான் பக்தி அதிகமாகயிருப்பது - ஏன்? - மா. துரைமுருகன், மதுரை - 2

பதில்: ஒவ்வொரு பார்ப்பனருக்கும் சமஸ்கிருதத்தின்மீது தான் பற்று; `தமிழ்த் தாத்தா என்று கொண்டாடுகிறார்களே அவாளுக்கே `சோறு பிடிக்காது; `சாதம்தான் பிடிக்கும். தண்ணீர் கூடாது `ஜலம் தான் வேண்டும் - புரிகிறதோ!
http://viduthalai.com/20080405/snews12.html
--------------------------------------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: