Followers

Saturday, April 26, 2008

இயற்கைக்கு மாறான புணர்ச்சி என்றால் என்ன? காரணம் இந்துக் கடவுள் ? வெள்ளையர் ? மதமும் இ.பி.கோவும்.

மதமும் இ.பி.கோவும்
இந்தியக் குற்றவியல் சட்டம் (இபிகோ) 377 ஆம் பிரிவில் ஒரு குற்றத்திற்கான தண்டனை குறிக்கப்பட்டிருக்கிறது. இயற்கைக்கு, மாறான புணர்ச்சி குற்றமாக்கப்பட்டு அதற்கான தண்டனையும் எழுதப்பட்டுள்ளது.

இயற்கைக்கு மாறான புணர்ச்சி என்றால் என்ன என்பது பற்றிச் சட்டத்தில் விளக்கம் இல்லை. ஆனாலும் ஓரினப் புணர்ச்சி என்கிறார்கள். அதில் ஈடுபடுபவர்களை இந்தப் பிரிவில்தான் வழக்குப் பதிவு செய்கிறார்கள்; தண்டிக் கிறார்கள்.

இயற்கைக்கு மாறான வழிகளில் உயிர் உற்பத்திக்கு வாய்ப்பில்லாமல் நடத்தப்படும் கலவி ஆணுடனோ, பெண்ணுடனோ, மிருகங்களுடனோ நடந்தால் அது குற்றமாகக் கருதப்பட்டு ஆயுள் தண்டனைகூட விதிக்கப் படலாம் அல்லது 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் அத்துடன் தண்டனைத் தொகையும் விதிக்கப்படலாம் எனச் சட்டம் கூறுகிறது.

இந்தச் சட்டத்தை இந்தியாவில் இன்னமும் வைத்துக் கொண்டிருப்பது ஏன் என்கிற கேள்வி சில நாள்களுக்கு முன்பு ஜெனிவாவில் நடந்த பன்னாட்டு மனித உரிமை மாநாட்டில் பல நாட்டவராலும் எழுப்பப்பட்டுள்ளது.

நம் நாட்டின் சார்பாகக் கலந்து கொண்டு இந்தியக் கூடுதல் தலைமை வழக்குரைஞர் வாகனவதி சங்கடத்துடன் பதில்அளித்திருக்கிறார். இந்திய சட்டக் கமிஷன் இப்பிரிவை நீக்க வேண்டும் என்று ஏற்கெனவே எழுதியிருக்கிறது அண்மையில் திட்டக் குழுகூட இந்தப் பிரிவை சட்டத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறது.

வெள்ளையர் காரணம்
நம்முடைய வழக்கறிஞர் இது தொடர்பாக ஒருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டதையும் அது தொடர்பானச் சாதகமான தீர்ப்பையும் சுட்டிக்காட்டிப் பேசிவிட்டு, இப்பிரிவு இடம் பெற்ற வரலாறு இதுதான் என்று ஒன்றைக் குறிப்பிட்டிருக்கிறார்.

பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவில் கால் ஊன்றிப் போர்ப் படை வீரர்களை பிரிட்டினிலிருந்து வரவழைத்துப் பணியில் அமர்த்தினார்கள்; பெண் துணை இன்றி நீண்ட காலம் இந்தியாவில் இருக்க நேரிட்டவர்கள் கைக் கொண்ட அல்லது கைக் கொள்ளக் கூடும் எனக் கருதப்பட்ட குற்றத்தைச் சட்டத்தில் சேர்த்து விட்டார்கள் எனக் கூறிச் சமாளித்தார்.இது உண்மையோ, என்னவோ?

இந்தப் பழக்கம் இந்தியர்களிடையே இருந்ததால் சட்டப் பிரிவுகளைச் சேர்த்திருப்பார்களோ? இந்தச் சந்தேகம் நியாயமானதுதானே!

இந்துக் கடவுள் காரணம்
அய்யப்பன் பிறப்பு ஓரினச் சேர்க்கையின் விளைவுதானே! அறுபது ஆண்டுப் பிறப்பும் ஓரினச் சேர்க்கையால் தானே! கண்ணன் காட்டிய வழியம்மா என்று பாடிக் கொண்டே 377-இல் குறிக்கப்பட்ட குற்றத்தைச் செய்திருக்க மாட்டார்களா? அதைத் தண்டிப்பதற்காக எழுதிச் சேர்த்து இருக்கலாம் அல்லவா?

தவளையுடன் கலவி செய்ததால் பிறந்தவன் மாண்டவ்யன்,
மானுடன் கூடியதால் பிறந்தவன் கலைக்கோட்டு முனி,
பாம்புப் புற்றில் வால்மீகி,
கரடியுடன் புணர்ந்ததால் ஜாம்பவான் என்று இந்திய ரிஷிகள் விலங்குகளுடன் உறவு வைத்துக் கொண்டதால் பல ரிஷிப் புத்திரர்கள் பிறந்த கதைகளைக் கேட்ட காரணத்தால் மெக்காலே, இந்தியப் பீனல் கோடில் இந்தப் பிரிவைச் சேர்த்திருப்பாரோ?

எப்படியோ, இந்து மதமானம் காற்றில் பறக்க வேண்டாம் என்று கருதியோ, என்னவோ செத்துச் சுண்ணாம்பாகிப் போன வெள்ளைச் சிப்பாய்களை நோக்கிக் கையைக் காட்டி விட்டார் வாகனவதி!

முதல் பாவத்தை ஆதமும் ஏவாளும் செய்ததால் (குழந்தை உற்பத்திக்குக் காரணச் செயலான கலவி செய்ததால்) தானே கர்த்தர் சபித்தார் என்கிறார்கள். அந்த மதத்துக்காரர்கள் குழந்தை வராமல் இருக்கத்தானே ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள்!

அதை ஏன் குற்றமாக அந்த மதக்காரர்களே எழுதி விட்டார்கள்?ஜெனிவா மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்வியை மட்டும் அல்ல, பதிலையும் கேள்வி கேட்க வேண்டும்.

http://viduthalai.com/20080426/snews05.html

1 comment:

G.Muthukumar said...

உங்கள் பதிவை படித்தேன். அழுத்தமாக எழுதியுள்ளீர்கள். இந்த சட்டம் நீக்கபடவேண்டும் என்ற கோரிக்கை - மெல்ல மெல்ல வலுபெற்று வருகிறது. காரணங்கள் பலவாக இருந்தாலும் - இது ஒருவகை மனித உரிமையாகவே கருதபடுகிறது. மீடியாக்களும் கவர்ச்சி போர்வையில் இதனை அணுகாமல் - ஒரு உண்மையான பிரச்சனையை பார்க்கும் கோணத்தை கையாளவேண்டும்.