Followers

Thursday, April 17, 2008

நடுக்கடலில் சாமி கும்பிடுவோர், யார்?பாக். நீரிணையில் உள்ள ஆதம் பாலம் வழிபடும் இடமல்ல: உச்சநீதிமன்றம்

நடுக்கடலில் சாமி கும்பிடுவோர், யார்?
பாக். நீரிணையில் உள்ள ஆதம் பாலம் வழிபடும் இடமல்ல: உச்சநீதிமன்றம்

புதுடில்லி, ஏப். 16- சேதுக்கால்வாய் கப்பல் போக்குவரத்துக்கு ஆழப்படுத்தப்பட வேண்டிய ஆதாம் பாலப் பகுதி வழிபாட்டு இடம் அல்லவே, என உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திரன் குறிப்பிட்டார்.

ஆதாம் பாலத்தை ஆழப் படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையை நீக்கவேண்டும் என்று மய்ய அரசு தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை நேற்று (15.4.2008) நடந்தது.

அப்போது, தனது வழக்கு தொடர்பாக வாதாடிய சுப்பிரமணியம் சாமி என்பவர், ஆதாம் பாலம் வழி பாடு நடத்தும் இடம் என்பதால், அதைச் சேதப்படுத்து பவர் மீது இ.பி.கோ 295 இன் படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பேசினார்.

அப்போது நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் அதை வழிபாட்டிடம் என்று யார் கூறினார்கள்?

நடுக்கடலில் யார் போய்க் கும்பிடுகிறார்கள்? என்ற கேள்விகளைக் கேட்டார்.

மக்கள் அங்கே போய்க் கும்பிடுகிறார்கள் என்று சொல்லாதீர் என்று இந்தியத் தலைமை நீதிபதி சு.சாமியிடம் கூறினார்.

தாம் ஆண்டுதோறும் அங்கு போய்ச் சாமி கும்பிடுவதாக சு.சாமி பதில் கூறினார். நீதிபதிகளுடைய நம்பிக்கை சம்பந்தப்பட்டது அல்ல, இது மக்களுடைய நம்பிக்கை என்றும் அவர் பேசினார். அது இந்துக்களின் வழிபாட்டிடம் என்று எல்லாரும் நினைக்கிறார்கள். என்னுடைய நம்பிக்கை மட்டு மல்ல, நாட்டு மக்களின் நம்பிக்கை என்றார் சு.சாமி.

இந்த நபரைத் தவிர, வழக்கு போட்ட வேறு யாரும் மய்ய அரசின் கோரிக்கை மனுவுக்குப் பதிலுரை தாக்கல் செய்யவில்லை. அதைத் தாக்கல் செய்ய இரண்டு வாரங்கள் அவகாசம் அளித்து, வழக்கு ஏப்ரல் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

மய்ய அரசின் கப்பல் போக் குவரத்து அமைச்சகம் சார்பாக வாதிடும் புகழ்பெற்ற வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் வாதிடுகையில் நிபுணர் குழுவின் அறிக்கையைத் தாக்கல் செய்துவிட்டபடியால் வழக்கு பற்றி வாதா
டத் தயார் எனக் கூறினார்.வருகின்ற 29 ஆம் தேதி வழக்கு இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
http://viduthalai.com/20080416/news26.html
மருத்துவமனையா மடமையின் கூடமா?
2005 ஆம் ஆண்டு தமிழக அரசால் நிறுவப்பட்ட கன்னி யாகுமரி மாவட்ட மருத்துவக் கல்லூரி நாகர்கோவிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆசாரிபள்ளம் என்ற ஊரில் உள்ளது.

தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்துசெல்லும் இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தற்போது மூன்று இந்து கோவில்கள் கட்டப்பட்டு தினமும் பக்த கே()டிகளால் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

அரசு அலுவலகங்களில் கடவுள்கள் படமோ, சிலைகளோ இருக்கக் கூடாது என்று தமிழக அரசின் ஆணை இருந்தும் அரசு இதனை கண்டும் காணாததுபோல் இருக்கிறது.

ஆசாரிப்பள்ளம் பகுதி பொதுமக்கள் மருத்துவக் கல்லூரியில் இந்து கோயில்கள் மூன்று உள்ளதே.

கிறித்துவ கோயில் ஒன்று கட்டினால் என்ன தவறு என்று அவர்கள் மதக் கடவுளை அங்கு திணிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலை நீடிக்கப் படுமானால் அங்கு மதச் சண்டை ஏற்படும் வாய்ப்புள்ளது.தமிழக அரசு இதனை உடனே தடுக்க வேண்டும். தடுத்து இந்த மூன்று கோவில் களையும் அப்புறப்படுத்த குமரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடவேண்டும். இல்லையேல் மாவட்ட மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் கோயில்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் மருத்துவ மனைக்கு செல்வதற்கு (நுழைவதற்கு) இடமே இருக்காது.
http://viduthalai.com/20080416/news18.html
----------------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: