Followers

Monday, April 28, 2008

இரட்டை நாக்கால் பேசும் திருவாளர் சோ அய்யர்வாள்!!! கோட்சே- கொலையைப்பற்றி பேசலாமா?

ஏதோ ஒரு வகையில் ஈழத் தமிழர் சம்பந்தப்பட்டது என்றாலே கொதிக்கும் கொப்பறை எண்ணெய்போல குதிக்கிறார்களே சோ, சு.சாமி வகையறாக்கள், ஏன்?

இயல்பாகவே அவர்கள் உள்ளத்தில் வாழையடி வாழையாக ஊறிக்கிடக்கும் தமிழர் மீதான துவேஷ நஞ்சின் வக்கரிப்புதான் அதற்குக் காரணம்.

தமிழ், பகுத்தறிவு என்கிற சொற்களை அவர்கள் எப்படி - எந்தக் கோணத்தில்- எந்தப் பாணியில் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பார்த்தாலே அவர்களின் சமஸ்கிருத வெறியின் வெளிப்பாடு புரியும்!

வேலூர் சிறைச்சாலையில் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா, நளினியைச் சந்தித்தார். அதில் என்ன பெரிய சட்ட விரோதம் பதுங்கியிருக்கிறது?வேலூர் மத்திய சிறைக்குச் சென்று மனு எழுதிக் கொடுத்து பிரியங்காவால் நளினியைச் சந்தித்து இருக்க முடியாதா?அதன்மூலம் ஒரு பரபரப்பை ஏற்படுத்த பிரியங்கா விரும்பவில்லை என்றுதானே பொருள்?

ஆர்ப்பாட்டம் இல்லாமல், விளம்பரம் இல்லாமல் சந்தித்துச் சென்ற அந்தப் பண்பாட்டைப் பாராட்டும் உள்ளத்தைப் பார்ப்பனர்களிடம் எதிர்பார்க்க முடியாதுதான்!இந்த வார துக்ளக் (30.4.2008) ஏட்டில் அப்படியே பொரிந்து தள்ளியிருக்கிறார்.

பிரியங்கா சந்தித்தது தனிப்பட்ட சந்திப்பு அல்லவாம்! - சொல்லுகிறார் சோ.தனிப்பட்ட சந்திப்பாக இருந்ததால்தான் யாருக்கும் சொல்லாமல் தனிமையில், தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியிருக்கிறார். இதைக்கூடப் புரிந்துகொள்ள முடியாதவர்தான் அக்கிரகாரத்து அறிவாளியாம்.

ராஜீவ் காந்தியைக் கொலை செய்த கொலைகாரக் கூட்டம் இன்னும் தமிழ்நாட்டில் உலவிக் கொண்டு இருக்கிறதே என்று ஆத்திரப்படுகிறார்.

தேசத் தந்தை என்று மக்களால் மதிக்கப்படும் காந்தியார் அவர்களைப் படுகொலை செய்த கொலைகார கூட்டத்திற்காக தம் உயிரைக் கொடுத்து எழுதிக் கொண்டிருக்கும் உஞ்சி விருத்திக் கும்பலுக்கு இதுபோல எழுதுவதற்கு அருகதை கிடையாது.

அந்த ஆர்.எஸ்.எஸை என் ஆன்மா! என்று போற்றும் வாஜ்பேயி, அத்வானிகளைப்பற்றிப் பேசாத நாளையெல்லாம் பிறவா நாளாகக் கருதும் சோக்கள் கொலை பாதகம் பற்றியெல்லாம் பேச யோக்கியதை உண்டா?

வெகுகாலத்துக்குமுன் போவானேன்? மத்தியில் பி.ஜே.பி. ஆண்டுகொண்டு இருந்தபோது, மை நாதுராம் கோட்சே போல்தே! (நான் நாதுராம் கோட்சே பேசுகிறேன்) என்ற பெயரில் சோ தூக்கி இடுப்பில் வைத்துக் கொஞ்சும் பி.ஜே.பி. - ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் நாடகம் போட்டார்களே - காந்தியாரைச் சுட்டுக் கொன்றதற்கு நியாயம் கற்பித்து கீதையை ஆதாரம் காட்டி நடத்தினார்களே!

மும்பையிலும், இந்திய நாட்டின் தலைநகரமான டில்லியிலும்கூட அந்த நாடகத்தினை அரங்கேற்றினார்களே - காந்தியாரை அரக்கன் என்றும், அந்த நாடகத்தில் சித்தரிக்கப்பட்டு இருந்ததே - ஒரே ஒரு வார்த்தை அதைப்பற்றி எல்லாம் எழுதியிருப்பாரா? - திருவாளர் சோ அய்யர்வாள்.

பட்டப்பகலில், காமராசரை புதுடில்லியில் நெருப்பை வைத்துக் கொளுத்த எத்தனித்த எத்தர்கள் யார்?

அந்தக் காமராசரைப் போற்றும் திருவாளர் சோ ராமசாமி, அவரை உயிரோடு கொளுத்த திட்டமிட்டவர்களை எதிர்ப்பதுண்டா?

குஜராத்தில் அரச பயங்கரவாத முறையில் இரண்டாயிரம் முசுலிம்களைக் கொன்று குவித்தாரே - உச்சநீதிமன்றத்தால் நீரோ மன்னன் என்று அடையாளம் காட்டப்பட்ட அந்தக் குஜராத் முதலமைச்சர் நரேந்திரபாய் தாமோதர தாஸை (மோடியை) தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்ததோடு, அவர்தான் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று உச்சிமேல் தூக்கி வைத்துக் கொண்டாடும் பூணூல் கூட்டத்தாரா கொலைக்குற்றம் பற்றியெல்லாம் பேசுவது?

மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி கற்பிக்கும் பரம்பரை இப்படித்தான் இரட்டை நாக்கால் பேசும்.ராஜீவ் காந்தி கொலைபற்றி பிரச்சினை வரும்பொழுதெல்லாம் சு.சாமி சம்பந்தா சம்பந்தமில்லாமல் மிளகாய் கடித்தது மாதிரி பிதற்றுகிறாரே - ஏன்?

குற்ற உணர்வுதானே - எதற்கும் சி.பி.அய். அவரை விசாரிக்க வேண்டிய முறையில் விசாரித்தால் புதிய உண்மைகள் கிடைத்தாலும் கிடைக்கும்.

ஏற்கெனவே ராஜீவ்காந்தி கொலை வழக்குத் தொடர்பாக சந்திராசாமி, சு.சாமிபற்றியெல்லாம் அதிகம் பேசப்பட்டது.ஒவ்வொரு முறையும் ராஜீவ் கொலைபற்றி பிரச்சினை வரும்பொழுது எல்லாம் இந்த ஆசாமிகள் படபடக்கிறார்கள். என்ன காரணம்?

ஏன் உணர்ச்சி வயப்படுகிறார்கள்?எனவே, இவரை மீண்டும் அழுத்தமாக விசாரித்தால் உண்மைகள் வெளிவர வாய்ப்பு உண்டு.-- - ம யி லா ட ன்

viduthalai.com/20080428/news05

No comments: