Followers

Friday, April 25, 2008

தாலி கட்டவில்லையே ! ! தினமணி "பைத்தியநாதய்யர் " பதில் தேவை

மதுரையில் மீனாட்சிக்குத் திருமணமாம். 18-ஆம் தேதி நடந்து முடிந்துவிட்டது.

இரண்டு பார்ப்பனர்கள் மணமக்களின் பிரதிநிதியாக நின்று கொண்டு திருக்கல்யாணத்தைச் செய்து வைத்தார்கள். அதில் ஒரு பார்ப்பனர் மீனாட்சி அம்மையின் கழுத்தில் தாலி கட்டுகிறார். விவாக சுபமுகூர்த்தம் முடிந்து அன்றிரவு சேயன முகூர்த்தம் அல்லவோ?

விவாக முகூர்த்த காரியத்தைப் பார்ப்பனர் முடித்து வைத்தார். சேயன முகூர்த்த காரியத்தைச் செய்வது யார்? அந்தப் பார்ப்பனரே செய்வாரா? தினமணி பைத்தியநாதய்யர்வாள் எழுதுவாரா? (வடமொழிப்படி எழுதப்பட்டுள்ளது. அம்மொழியில் `வ கிடையாது)

இந்த மாதிரி எக்குத் தப்பான கேள்விகனைத் தவிர்க்கலாம் அல்லவா? உமாதேவிக்கும் சிவபெருமானுக்கும் நடந்த கல்யாணத்தில் தாலி கட்டவில்லையே! பாணிக் கிரகணம் மட்டும்தானே நடக்கிறது.

குறவர் கோமான் தன் மகள் வள்ளியை முருகனின் கையில் வைத்துத் தாரை வார்த்துக் கொடுத்து தாரா முகூர்த்தத்தை முடித்தானே தவிர, தாலி கட்டவில்லையே!

இந்திரனின் மகள் தெய்வானையைத் திருமணம் செய்தபோதுகூட முருகனின் கையோடு தெய்வானை கையைச் சேர்த்து தாரைவார்த்து முடிந்துவிட்டதே!

பிறகு ஒரு கதையைத் திரித்து விட்டார்கள். பிரம்மன் தன் கருத்தினால் ஆக்கிய கயிறைத் தன் கரத்தினால் அளிக்க, அதனை முருகன் தெய்வானைக்கு அளித்தான் என்று கந்தபுராணத்தில் கச்சியப்பப் சிவாச்சாரி எழுதியிருக்கிறார்.

மகன் கல்யாணத்தில்தான் முதன் முதலில் தாலி கட்டப்பட்ட செய்தி வருகிறது. பின் எப்படி தகப்பன் கல்யாணத்தில் தாலி கட்டலாம்?

பகுத்தறிவோடு இந்தக் கேள்வியைக் கேட்டால் பாசிஸம் எனும் பைத்தியநாதய்யர்வாள் என்ன பதில் கூறுவார்?
பாய்ந்து பிராமண்டாமல் பதில் வருமா? - சு. அறிவுக்கரசு
http://viduthalai.com/20080419/snews05.htm
-----------------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: