Followers

Thursday, April 24, 2008

ராமன் பாதம்!! ??? கோயிலை ஏப்பம் விட பார்ப்பனரின் முயற்சி.உயர்நீதிமன்றம் நிராகரித்து நீதி வழங்கியது

கோயிலை ஏப்பம்விட பார்ப்பனரின் முயற்சிஉயர்நீதிமன்றம் நிராகரித்து நீதி வழங்கியது

மதுரை, ஏப்.23- நாமநாதபுரத்திற்கு அருகில் ராமன் பாதம் என இரண்டு அடிக்குமேல் நீளத்தில் கருங்கல்லில் செதுக்கிய ஒன்றைக் காட்டி வழிபடும் மூடத்தனம் ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது.

சிறீகண்டமன பர்வதம் என்றும் அழைக்கப்படும் இந்த இடத்தில் கோயில் மாதிரியான வழிபாட்டு இடம் ஒன்று 500 ஆண்டு காலமாக இருப்பதாகக் கூறுகிறார்கள். இந்த இடம் சாமி கோயிலுக்குச் சொந்தமானது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் தீர்ப்பு கூறியுள்ளது.

இந்த இடம் தங்களுக்குச் சொந்தம் என்று உரிமை கொண்டாடி, நீலகண்ட அய்யர் என்னும் தம் மூதாதையரின் வாரிசுகள் எனக் கூறிக் கொள்ளும் ராமச்சந்திரன், பிஎன் ஜோஷி, ராமநாதன் மற்றும் உதயகுமார் என்போர் வழக்கு தொடர்ந்தனர். இதன் அர்ச்சகர்களாகவும் அறங்காவலர்களாகவும் தங்கள் பரம்பரையினர் இருந்து வந்ததாகவும் சொந்தம் கொண்டாடினர்.

இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையினர் இவர்களுக்கு அறிவிப்பு கொடுத்தனர். அதன்படி நீலகண்ட அய்யர் என்பர் இந்த வழிபாட்டு இடத்தில் மிராசுதார் ஆக மட்டுமே இருந்ததாகவும் அறங்காவலராக இருந்ததில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அதைவிட மேலாக இந்த வழிபாட்டிடம் தனியார்க்குச் சொந்தமல்ல என்றும் பொது வழிபாட்டிடம் என்றும் எடுத்துக் கூறப்பட்டது.

இதனை எதிர்த்துப் பார்ப்பனர்கள் ராமநாதபுரம் சார்பு நீதிமன்றத்தில் 1987இல் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பிறகு இந்து அறநிலைய ஆணையரிடம் முறையிட்டனர். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் சார்பு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

பார்ப்பனர்களின் பேராசை மீண்டும் வழக்கு மன்றத்துக்குப் போனது. உயர் நீதிமன்ற மதுரை பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழிபாட்டிடத்தைப் பழுது பார்த்துச் சீரமைக்க இந்து சமய அறநிலையத் துறை ஏராளமாகச் செலவிட்டுள்ளது என்பதை எண்பிக்கும் ஏராளமான ஆவணங்களை அறநிலையத் துறை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

தங்களுக்குச் சொந்தம் எனச் சொல்லும் பார்ப்பனர்கள் ஆவண ஆதாரத்தைக் காட்டட்டும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.வழக்குப் போட்ட பார்ப்பனர்கள் தரப்பில் தரப்பட்ட ஒரே ஆவணமும் பார்ப்பனர்களின் பங்காளிச் சண்டை பற்றியதுதானே தவிர வேறில்லை.

எனவே நீதிபதி ராஜசூரியா, தமது தீர்ப்பில் ராமன் பாதம் எனும் இடம் ராமநாதசாமி கோயிலுக்குத்தான் சொந்தம் என்றும் பார்ப்பனர்களுக்குச் சொந்தம் எனக் கூறுவதற்கான ஆதாரம் எதையும் வழக்குதாரர்கள் தரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிதம்பரம் கோயில் தங்களுக்குச் சொந்தம் என்று பார்ப்பனர்கள் வழக்காடி வருவதைப் போலவே ராமன் பாதத்தைச் சொந்தம் கொண்ட ஒரு பார்ப்பனக் குடும்பம் நடத்திய பொய் வழக்கு தோற்றுப் போய்ப் பார்ப்பனரின் ஆசை நிறைவேறாமல் போய்விட்டது.
http://www.viduthalai.com/20080423/news27.html

1 comment:

மாசிலா said...

அடப்படுபாவிங்களா! இவனுங்களை திருத்தவே முடியாதா?

இவனுங்களை இப்படியே விட்டுவிட்டா, நாளைக்கு வீதி ஓரத்தில் அன்னாந்து படுத்துறங்கி கிசுகிசு கனவு காணும் சாதாரண சாமானியனின் விறைப்பேறி இருக்கும் அந்தரங்க உறுப்பைக்கூட லிங்கம்டான்னு மாலை போட்டு உக்காந்து ஓத‌ ஆரம்பிச்சுடுவாங்க! கற்பூரம் ஏத்தாம இருந்தா லாபம்தான் போங்க. இலவசத்துக்கு வர்ர கனாவுக்கு வந்துடுச்சிடா வேட்டு! இப்போதிருந்தே எல்லோரும் கம்முனு கவிழ்ந்தடிச்சு படுக்க கத்துங்கப்பா!

பன்னாடைகளுக்கு பைத்தியம் முத்தி போச்சுப்பா!