Followers

Wednesday, April 23, 2008

பசு மாட்டுக்காகக் காலித்தனத்தில் இறங்கும் சங்பரிவார்கள் ` பாஜக தந்த ஊக்கம். பார்ப்பனர்களே பசு மாமிசத்திற்காக நாயாய் அலைந்ததை….

பசு மாட்டுக்காகக் காலித்தனத்தில் இறங்கும் பழக்கத்தை சங்பரிவார்கள் இன்னும் விடவில்லை.

43 ஆண்டுகளுக்கு முன்பு காமராசரைக் கொல்ல முயன்ற கும்பல், 30 ஆண்டுகளுக்குமுன் எம்.ஜி.ஆரைத் தாக்க வந்த கும்பல் தன் சுபாவத்தை இன்னமும் மாற்றிக் கொள்ளவில்லை.

மார்ச் மாதம் 4-ஆம் தேதியன்றுகூட கருநாடகத்தில் இரண்டு பேரைத் தாக்கியிருக்கிறார்கள். அவர்கள் செய்த `பாவம் கசாப்புக் கடையில் இறைச்சிக்காக மாட்டை அறுத்ததுதான்.

இது ஒன்றும் ``குற்றம் கிடையாது கருநாடகச் சட்டப்படி! 1964-இல் நிறைவேற்றப்பட்ட பசு கால் நடை பாதுகாப்புச் சட்டத்தின் படி 12 ஆண்டுகளுக்கு மேல் வயதான பசுக்களை வெட்டலாம்; பால் மரத்துப் போனவற்றையும், ஊனமாகிப் போனவற்றையும் வெட்டலாம் என்று உள்ளது.

அதன்படி உள்ள பசு மாட்டை இறைச்சிக்காக வெட்டுவது சட்டப்படி குற்றமல்ல என்கிறபோது பஜ்ரங்தள் ஆள்கள் ஏன் தாக்குகிறார்கள்?

பசுவை இறைச்சிக்காக கொல்வது மத உணர்வைப் புண்படுத்துகிறது என்றால்... எந்த மதத்துக்காரன் தாக்குகிறானோ, அந்த மதக்காரனே பசுவின் கறியைச் சாப்பிடுகிறானே!

மாட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதைத் தடை செய்து சட்டம் இருந்தது. அந்தத் தடையை நீக்கத் தாராளமாக ஏற்றுமதி செய்திட ஆணையிட்டது யார்?

வாஜ்பேயி ஆட்சியில்தானே மாட்டு இறைச்சி ஏற்றுமதி செய்யப் பச்சைக் கொடி காட்டப்பட்டது!

2002-இல் சட்டம் போட்டது சங்பரிவார் ஆட்சிதானே! அத்தோடு விட்டுவிடாமல், மாடுகளை நவீனமாக வெட்டுவதற்கும் சுத்தமாக்கப்பட்ட இறைச்சி கிடைப்பதற்கும் வாய்ப்பாக மாடு வெட்டும் கூடங்களை `மாடர்ன் ஆக்கிட வேண்டி 5 ஆயிரத்து 137 கோடி ரூபாய் ஒதுக்கியதும் கோமாதா புத்திரர்களின் ஆட்சிதானே!

பின் ஏன் இரட்டை போடம் போடுகிறார்கள்? இந்தப் பார்ப்பனர்களே பசு மாமிசத்திற்காக நாயாய் அலைந்ததை அம்பலப்படுத்துகிறதே `புனிதப் பசு நூல். 2001-இல் வெளிவந்த இந்நூலை அறிவு நாணயத்தோடு எந்த ஆர்.எஸ்.எஸ்.காரராவது மறுத்தது உண்டா? மறுக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை என்பதுதானே உண்மை? - சு. அறிவுக்கரசு
http://viduthalai.com/20080419/snews05.html

மாட்டு மூத்திரத்தைக் குடிக்கச் சொல்லுவது.....பார்ப்பான் நம்மை சுரண்ட அளக்கும் தர்மா மீட்டர். பசுக் காலடியில் மிதிபடும் கோமாதா விழா!.தன் மலத்தையே.....

இராமன் மது, மாமிசம் இவைகளை உட்கொண்டவனே!

சிறிதளவு சாணி பட்டு விட்டால் கழுவியவன்.. சாணியை ....???

1 comment:

periyar said...

அய்யரே . . .
உங்கள் கருத்து முழுக்க முழுக்க சரியே . .

பார்ப்பனர்கள் சரியில்லை என்பதற்கு இதை விட சரியான விளக்கம் அய்யரே உங்களைத் தவிர வேறு யாரால் தர முடியும் . .

சபாஷ் . .