Followers

Tuesday, April 22, 2008

பெண்களுக்கு நகை மாட்டியது ஏன்? புது கப்சா அட்சய திருதியையில் யோகமா? நட்டமா? வாஸ்து. வளம் தந்ததா?

அட்சய திரிதியை நாளன்று தங்கம் வாங்கினால் ஆயுள் முழுவதும் வாங்கிக் கொண்டிருக்கலாம் என்கிறார்கள்! பணம் கொடுத்து தானே தங்கம் வாங்க முடியும்? பணத்துக்கு எங்கே போவது? பவுன் பத்து ஆயிரம் என்கிற போது எவ்வளவு பணம் வேண்டும்?

இந்தப் பித்தலாட்ட வியாபாரத் தந்திரம், அதற்குச் செய்யப்படும் விளம்பரம் பத்துப் பதினைந்து ஆண்டு களாகத்தான் தோன்றியிருக்கிறது. தங்க வியாபார முதலைகள் மக்களின் மத நம்பிக்கைகளைத் தங்கம் சுயநலத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளும் முறைகெட்ட செயல்!

எல்லாத மதக்காரர்களும் தங்க நகை வணிகத்தில் உள்ளனர். வித்தியாசமின்றி எல்லாருமே ஏமாற்றுகின்றனர். சரி, இந்த அட்சய திரிதியை என்பதற்கான கதை தான் என்ன? இவை போன்றவை எல்லாமே புராணங்களில் புளுகப்பட்ட கதை களின் அடிப்படைதானே! கிருஷ்ணன் குசேலன் சந்திப்பு நடந்த நாள் தான் அட்சய திரிதியை நாள்.

துவாரகையை கண்ணன் என்பவன் ஆண்டானாம். ஆமாம், சேலை திருடிய கண்ணக் கடவுள்தான். அப்போது அவனைப் பார்க்க வருபவர்களுக்குப் பரிசு கொடுத்து அனுப்புகிறான் என்று பெண்கள் பேசிக் கொண்டது சுசீலா என்பவனின் காதுகளிலும் விழுந்தது. குலேசன் என்ற பார்ப்பனப் பரதேசியின் மனைவி சுசீலா. இவர்களுக்கு 27 குழந்தைகள். தடிப்பையன்களும் வயது வந்த பெண்களும் அடக்கம்தான். ஆனால் ஒன்றுக்கும் சம்பாதிக்கும் துப்பில்லை. பார்ப்பான் உடலுழைப்பில் ஈடுபடக்கூடாதல் லவா? அதனால் குடும்பமே பட்டினி.

காதில் விழுந்த செய்தியைக் கணவன் காதில் போட்டுக் கண்ணனைப் பார்த்து வர அனுப்பினாள். குலேசனும் போனான். இவனும் கண்ணனும் ஒரே குருகுலத்தில் படித்தவர்கள். இவனைக் கண்டதும் கண்ணனே ஓடிவந்து அழைத்துப் போய் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தான். தான் கொண்டு போயிருந்த அவல் பொட்டலத்தைக் கண்ணனிடம் கொடுக்க அவன் அதைப் பிரித்துக் கொஞ்சம் அவலை வாயில் போட்டு மென்று தின்று கொண்டே `அட்சய என்றானாம்.

அட்சய என்றால் வளரட்டும் எனப் பொருளாம். அதற்கேற்ப குலேசன் வீட்டில் எல்லாம் வளர்ந்த தாம். தரித்திர குலேசன் குபேர கம்பத்தை அடைந்தானாம்.
இதை நம்புகிறவர்களின் வீட்டிலும் எல்லாம் வளர வேண்டும் என்றால் அட்சய என்று கண்ணன் அல்லவா சொல்ல வேண்டும்?

கண்ணன்தான் வேடனின் அம்பால் காலில் அடிபட்டு டெடனஸ் நேயால் விரைத் துப் பிணமாகி விட்டானே! இப்போது சொல்ல முடியதே! பின் எப்படி வளரும்?நகை வியாபாரிகள் வளர் வார்கள்! நகை வாங்குபவர்கள் வளர வாய்ப்பே இல்லை! http://viduthalai.com/20080419/snews07.html
-----------------------------------------
அட்சய திருதியையில் யோகமா? நட்டமா?
அட்சய திருதியை புராணக் கதைகளின்படி தானத்தை வலியுறுத்துகிறது. அன்றைய நாளில் தானம் தருபவர்களின் வீட்டில் செல்வம் கொழிக்கும் என்று எழுதி வைத்துத் தம் தொப்பையை வளர்க்கும் வழியைக் கண்டனர், பார்ப்பனர்!

அன்றைய நாளில் தங்கம் வாங்கினால் தாங்க முடியாத அளவுக்குச் செல்வம் பெருகும் என்று சமீப காலமாக ஒரு கதையைக் கட்டி, பெரும் கொள்ளை லாபத்தைப் பார்க்கின்றனர், நகை வணிகர்கள்! நேற்று ஒரு நாள் மட்டும் 40 டன் தங்கம் விற்றிருக்கிறதாம்!

வணிகர்கள் காட்டில் கொழுத்த வருமானம்தான்!நகைக்கடைக்காரர்கள் கொள்ளையடிப்பது என்பது எப்போது நடக்கும்? வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி ஏழை எளிய மக்கள் கால் பவுன், அரை பவுன் நகை வாங்கினால்தான் நகை வியாபாரிக்குச் செல்வம் சேரும்.தமிழர் தலைவர் கேட்டது போல, போன ஆண்டு பவுன் வாங்கியவர்களின் வீடு கொள்ளாத அய்ஸ்வர்யத்தை ஆண்டு அனுபவிக்கிறார்களா? காழியூர், கோழியூர் அட்சய திருதியைப் புரோக்கர்கள் பதில் கூறுவார்களா?http://viduthalai.com/20070422/news09.htm------அட்சய திருதியை நாளில் நகை வணிகர்களின் மோசடி
நூறுக்கு மேற்பட்ட கடைகளின்மீது வழக்குதரக்குறைவு, எடை குறைவு, விலை கூடுதல் மோசடி!
அய்தராபாத், ஏப்.22- அட்சய திருதியையில் பொன் நகை வாங்குபவர் வீடுகளில் செல்வம் பொங்கிப் பெருகும் என்று பிரச்சாரம் செய்து கோடிக்கணக்கில் அவர்கள் கொள்ளை லாபம் அடித்து விட்டனர்.

பேராசையால் தூண்டப்பட்ட மக்கள் இதை அறியாமல் உள்ளனர்.200 மடங்கு வணிகம் அதிகமாக நடைபெற்றுள்ளது. இதில் மோசடி வணிகமே பெரும்பாலும் நடந்துள்ளதுபெரும்பாலான மோசடி எடை குறைவு ஆகும்.

விலைச் சீட்டில் குறிக்கப்பட்ட எடையை விட நகைகள் எடை குறைவாகவே இருந்துள்ளன. விலையும் கூடுதலாகப் பெறப்பட்டுள்ளது. நகைக் கடைக்காரர்கள் பயன்படுத்திய எடை போடும் தராசு பழுதானது; அரசு முத்திரை பெறாதவை.நகைக்கடைகள் பயன்படுத்தும் மின்னணு எடைத் தராசுகள் தப்பான எடை காட்டுகின்றன. இதனால் நகைக் கடைக்காரர்கள் கூடுதல் லாபம் அடைந்துள்ளனர்.

இரண்டு கிராம் எடை குறைவாக நகை விற்றுக் கூடுதல் விலை வாங்கிய கடைக்காரர் ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 50 மில்லி கிராம் எடை நகையில் 30 மில்லி கிராம் எடை குறைவாக இருந்தது என்றால் மோசடியின் அளவைத் தெரிந்து கொள்ளலாம்.

நகை வணிகர்கள் கொள்ளை லாபம் அடிக்கக் குறுக்கு வழியைக் கண்டுபிடித்து அட்சய திருதியை என ஆசை காட்டியுள்ளனர். இதற்குப் பரம்பரைப் பித்தலாட்டத் தொழிலான ஜோசியம் பார்ப்பவர்கள் உடந்தையாக இருந்து செயல்படுகின்றனர். மக்கள் அறிவு பெறுவது என்றைக்கு? நகை மோகத்தைப் பெண்களும் ஆண்களும் விட்டு ஒழிப்பது எந்நாளோ?http://viduthalai.com/20070422/news19
-------------------------------------
`அட்சய திருதியை’ ஒரு புது கப்சா-அத்துடன் புதிதாய் வந்த `வாஸ்து சாஸ்திரம்’ என்ற மூடத்தன வியாபாரம்!
அட்சய திருதியை ஒட்டி நகை வாங்கினால் செல்வம் சேருமா?சென்ற ஆண்டு நகை வாங்கியவர்களுக்கு எவ்வளவு செல்வம் சேர்ந்தது?

மக்களிடையே மூட நம்பிக்கை வளர்ந்தால் தான் தங்களது பக்தி பிழைப்பு - சுரண்டல் நீடிக்கும் என்று கருதி, அதனைப் பரப்புவதில் குறியாய் உள்ளனர், மதவாதிகளும், பார்ப்பனர்களும்.நம் நாட்டு ஊடகங்கள் - அவை தமிழர்களால் நடத்தப் பட்டால்கூட, `நாய் விற்ற காசு குரைக்காது’ என்பதற்கேற்ப, இந்த மூட நம்பிக்கையினை நாள்தோறும் பரப்பி, காசு, பணம் சேர்ப்பதில் குறியாய் இருக்கிறார்கள்.

உழைக்காமல், குறுக்கு வழிகளில் திடீர் பணக்காரர் ஆக வேண்டும் என்ற பேராசையால் மக்கள் அறிவைப் பாழ்படுத்துகிறோமே என்று அவர்கள் ஒரு சிறிதும் எண்ணிப் பார்ப்பதில்லை.

ஏடுகளுக்கு ஜோதிட பலன், புது வருட பலன், சனிப் பெயர்ச்சி பலன், குரு பெயர்ச்சியின் பலன், இத்தியாதி, இத்தியாதி!

`அட்சய திருதியை’ ஒரு புது கப்சா அத்துடன் புதிதாய் வந்த `வாஸ்து சாஸ்திரம்’ என்ற மூடத்தன வியாபாரம்!

இப்போது `அட்சய திருதியை’ ஏராளம்! அதுவும் இந்த வருடம் இரண்டு நாளாம்! அட்சய திருதியை நாளில் நகை வாங்கினால் செல்வம் குவியுமாம்! இப்படி ஒரு கப்சா.

இதைப் படித்த பாமரர்களும், பெண்களும் நம்பி, கூட்டம் கூட்டமாய் தங்க நகைக் கடைகளின்முன் படையெடுத்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி விடுகிறார்கள்.தங்க வியாபாரிகளுக்குத் தங்கத்தை விற்க இதைவிட நல்ல வாய்ப்பு வேறு இல்லை என்று நினைத்து இதுபற்றி ஏராளமாய், தாராளமாய் விளம்பரப்படுத்தி விடுகின்றனர்!இதைவிட மகாவெட்கக்கேடான செய்தி வேறு உண்டா?
சென்ற ஆண்டு தங்கம் வாங்கிய வீடுகளில் எவ்வளவு செல்வம் சேர்ந்தது?

இந்நாள்களில் தங்கம் சென்ற ஆண்டில் வாங்கினார்களே அவர்களது வீடுகளில் செல்வம் எவ்வளவு கூடுதலாக (இதனால் குவிந்தது) என்று புள்ளி விவரம் உண்டா?

அப்படியானால் மற்ற நாள்களில் தங்கம் வாங்காமல் இருக்கவேண்டுமே!அப்படி நடந்தால் தங்கம் விற்கும் கடைகளில் உள்ளோர் `ஈ’ ஓட்டிக் கொண்டு அல்லவா இருக்க வேண்டியதாயிருக்கும்?

யாரோ கிளப்பிவிட்டால், தொத்து நோய்க் கிருமிகளைவிட மிக வேகமாக இந்த மூட நம்பிக்கைக் கிருமிகள் பரவிவிடுகின்றனவே! தங்க மோக மூட நம்பிக்கைப் பைத்தியங்கள்!

தங்கம் காரணமாக கொலைகளும், கொள்ளைகளும் நாட்டில் அன்றாடச் சம்பவங்களாகி காவல்துறைக்கு மிகப்பெரும் சவாலாக ஆகி வருவது ஓர்புறம்; இப்படிப்பட்ட மூட நம்பிக்கையால் தங்க மோகமும், பைத்தியமும் பெருகி வருவது மற்றொருபுறம் என்றால், மிகமிக வெட்கமாக இல்லையா?

பெண்கள் தங்கள் புன்னகையை விட பொன்னகைக்கு அதிக மதிப்பளிப்பதால் தான் இந்த கொடுமையான மூட நம்பிக்கை வியாபாரம்!

அனைத்துக் கட்சிகளும் தத்தம் ஏடுகளில், மேடைகளில் படித்துப் பதவியில் உள்ள பெண்களையும், இந்தத் தங்க நகை மோகம் விட்டபாடில்லை என்பது மேலும் வேதனையான விஷயம் ஆகும்!

என்று தணியும் இந்த நகை அடிமையின் மோகம்? திராவிடர் கழகம், பகுத்தறிவாளர்கள், முற்போக்குச் சிந்தனையுள்ள அனைத்துக் கட்சியினரும் இந்த மூடத்தனத்தை தத்தம் ஏடுகளில், மேடைகளில் பிரச்சாரம் செய்ய முன்வரவேண்டும் என்பது நமது அன்பான வேண்டுகோள் ஆகும்! http://viduthalai.com/20070420/news03.htm

மூடநம்பிக்கை - வாஸ்து வளம் தந்ததா?புலவர் கொண்டல்சாமி

ககண்டி முனிவருக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவர்தான் வாஸ்து புருஷன் என்று புராணப்புளுகு கூறுகிறது.

வாஸ்து புருஷன் கண்விழிக்கும் நேரம்தான் பூமிபூசைக்கு உத்தமமான நேரம் என்கின்றனர்! அதுவும் ஒன்றரை மணி நேரம்தான் கண் விழிப்பாராம். மாதம் 30 நாட்களில் (30 ஒ 24 ஸ்ரீ 720 மணி) 718ழூ மணி நேரம் தூங்கிக் கழிக்கும் உலக மகாசோம்பேறி.

இப்படிப்பட்ட சோம்பேறியை நினைத்து வழிபட்டு பூமிபூசை போட்டால் பூமிதான் விளங்குமா?

வீடும் நாடும்தான் விளங்குமா?தமிழக கட்டடக்கலை, சிற்பக்கலை மரபின் கருத்தாணையராகத் திகழ்பவர் திரு. கணபதி ஸ்தபதி அவர்கள். உலகம் வியக்கும் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையும், சென்னை வள்ளுவர் கோட்டமும் இவர் கைவண்ணத்தால் உருவானவையே.

இவர் வாஸ்து பற்றிக் கூறும்போது, 'எல்லாமே பொய், ஏமாற்று வேலை' என்கிறார்.வாஸ்துபடி கட்டிய கட்டடங்களில்தான், வளமும் செல்வமும் குவியும் என்ற கருத்துக்கு சான்று உண்டா? வாஸ்து சாஸ்திரம் உருவான காலத்திலாவது, இதிகாச காலங்களிலாவது சான்றுகள் உண்டா?

இதிகாச காலத்தில் வாழ்ந்த மாபெரும் கட்டடக் கலைஞர் மாயா என்பவர். அவர்தான் அந்நாட்களில் வாஸ்துபடி அரண்மனைகள், மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் கட்டியவர். மகாபாரதத்தில் வரும் அஸ்தினாபுரத்தில் அரண்மனை கட்டியவர் அவர்தான். பாண்டவர்களும், கவுரவர்களும் அமைதியாக, இன்பமாக வாழ்வதற்காக அரண்மனை கட்டினார்.

அரண்மனை கட்டி முடித்து பாண்டவர்கள் ஒரு மாதம் கூட அங்கு வாழவில்லை. வனவாசம் சென்றனர். கவுரவர்களும் குருசேத்திர யுத்தத்தில் அரண்மனையில் வாழ்ந்த அத்தனை பெரியவர்களும் போரில் மாண்டு போனார்கள். வாஸ்துபடி மாயா கட்டிய மாளிகையில் பாண்டவர்களும் கவுரவர்களும் வாழ முடியவில்லை.]

அயோத்தி மாநகரமும் மாயா உருவாக்கியதுதான். அதில் ராமர் பட்டாபிசேகத்திற்கு என ஒரு மாளிகை கட்டினார். அந்த மாளிகையில் ராமர் ஒரு மணி நேரம் கூட தங்க முடியவில்லை. ராமருக்கு 14 வருடம் வனவாசம்தான் கிட்டியது.

மாயா மகள்தான் மண்டோதரி; ராவணன் மனைவி; அவளுக்கு மாயாதான் இலங்கையில் மாபெரும் அரண்மனை கட்டித் தந்தார். அந்த மாவீரன் இராவணனும் தோற்று மண்ணோடு மண் ஆனான்.

ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவ் 2-வது முறையாக முதல்வராக ஆகிவிட எண்ணினார். முதல்வர் மாளிகைக்குச் செல்லும் பாதையை வாஸ்துபடி மாற்றி அமைத்தார். ரூ. 1 கோடி செலவு. ஒரு வாரத்திலேயே முதல்வர் பதவி பறிபோனது.

பெங்களூரில் வாஸ்து மேதை பி.என்.ரெட்டி என்பவர் பல அடுக்கு மாளிகைகளை பல கோடி செலவில் கட்டி முடித்தார். திறப்பு விழா நடப்பதற்கு முன்பே அக்கட்டடமம் தரை மட்டம் ஆனது.

இந்திய முன்னாள் பிரதமர் தேவகவுடா பிரதமர் ஆன பின்பு, தொடர்ந்து பதவியில் நீடிக்க ஆசைப்பட்டார். வாஸ்து மேதை அறிவுரைப்படி வீட்டுப் படியை மாற்றி அமைத்தார். அடுத்த மாதமே அவருக்கு பிரதமர் பதவி பறிபோனது.

இன்றைய சமூகத்தின் முதுகெலும்பான உழைக்கும் மக்கள் எங்கு மனையிடம் இருக்கின்றதோ மனைப்பட்டா இலவசமாக கிடைக்கின்றதோ அங்கு இரவோடு இரவாகக் குடியேறுகின்றனர்.

வாஸ்து பூசை போடாததால் யாரும் கெட்டழிந்து விடவில்லை.இதிகாச காலம் தொட்டு இன்றுவரை வாஸ்துவை நம்பி கெட்டுப் போனவர்களின் பட்டியல் சொன்னால் அது விதிப் பயன் யாராலும் தடுக்க முடியாது என்கின்றனர்.

வாஸ்துவை விட விதி கர்மாதான் வலுவானது என்றால் வாஸ்துவை நாடி ஏன் போக வேண்டும்?வாஸ்துபடி பரிகாரம் காண-முடியும் என்ற மாய்மாலம் பேசுவது ஏன்? வாஸ்து வழிமுறைகள் நம்மை வாழ வைக்குமா?

சோதிடர்களை மட்டுமே வாழ வைக்கும்.நல்ல காற்றோட்டம், நல்ல சூரிய வெளிச்சம், போதுமான தண்ணீர் வசதி, போதுமான கழிவு வெளியேற்றும் வசதி இவற்றிற்கு ஏற்ற வகையில் மனை அமைய வேண்டும். இன்றைய நகராட்சி, பேரூராட்சி கட்டட விதிகள் அனைத்தும் அறிவியல் முறையில் கட்டடங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதை விளக்குகின்றனர்.

வீட்டுமனையில் மனையைச் சுற்றிலும் கால இடம் விட வேண்டும். முன்புறம் 10 அடி காலி இடம், பின்புறம் 15 அடி காலியிடம். இருபுறமும் 5 அடி காலியிடம். இப்படி அமைந்தால்தான் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடிப்படை ஆகும்.

மக்களின் பயத்தையும், பலவீனத்தையும், மூடநம்பிக்கையையும், அறிவீனத்தையும் பயன்படுத்திக் கொள்ளும் வாஸ்து மேதைகளால் சீரழிவது தனிமனிதர் மட்டுமல்ல, ஒட்டு மொத்த சமுதாயமே என்பதை நாம் புரிந்து அறிவியல் சார்ந்த பகுத்தறிவோடு சிந்தித்து செயல்பட வேண்டும்.சமுதாய மாற்றத்தை விரும்பும் எவரும் சோதிட, தியான, வாஸ்து மயக்கங்களை தங்கள் மனத்திலிருந்து முதலில் அகற்றியாக வேண்டும். மக்கள் மனதிலிருந்தும் அகற்றிட முயன்றிட வேண்டும். இதைச் செய்தால் மாற்றங்கள் மலரும்.

பெண்களுக்கு நகை மாட்டியது ஏன்?
"ஆதியில் பெண்களுக்கு நகைகள் உண்டாக்கப்பட்டதன் கருத்தே பெண்களை அடிமையாக்கவும், அடக்கிப் பயன்படுத்தி வைக்கவும் செய்த தந்திரமேயாகும்.

காது, மூக்கு முதலிய நுட்பமான இடங்களில் ஓட்டைகளைப் போட்டு அவைகளில் உலோகங்களை மாட்டி வைத்ததானது மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போட்டால் அது எப்படி இழுத்துக்கொண்டு ஓடாமல்,

எதிர்க்காமல் இருக்கப் பயன்படுகிறதோ அதுபோல் பெண்கள் காதில், மூக்கில் ஓட்டைகளைப் போட்டு, ஆணிகள் திருகி இருப்பதால் ஆண்கள் பெண்களைப் பார்த்து கை ஓங்கினால் எதிர்த்து அடிக்க வராமல், எங்கு காது போய்விடுகிறதோ, மூக்கறுந்து போய்விடுகிறதோ என்று தலைகுனிந்து முதுகை அடிக்கத் தயாராக இருப்பதற்காக அது உதவுகிறது.

அன்றியும் நிறைய நகைகளை மாட்டிவிட்டால், மாடுகளுக்கு தொழுக்கட்டை கட்டிய மாதிரி வீட்டை விட்டு எங்கும் தனியே போக மாட்டார்கள். நகை போய்விடும் என்று வீட்டோடு கிடப்பார்கள்."
- தந்தை பெரியார்
http://unmaionline.com/20080301/pa-19.html
--------------------------------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: