Followers

Saturday, April 19, 2008

ஏதோ கூட்டல், கழித்தல் போட்டு கை விரல்களை அப்படியும், இப்படியும் மடக்கி செத்தவருக்கே ஜோதிடம் சொல்லும் அறிவு ஜோதிடர்கள் தலைக்குள்ளே ? விளக்கம் வருமா?

ஜோதிடர்கள் தலைக்கு மேலே ஏதோ ஒரு ஒளி வட்டம் சுற்றி கொண்டிருப்பதைப் போல உலக அறிவு முழுவதும் தங்கள் தலைக்குள்ளே இறங்கிவிட்டதை போல பாவனை செய்கின்றார்கள்.

ஏதோ கூட்டல், கழித்தல் போட்டு கை விரல்களை அப்படியும், இப்படியும் மடக்கி வாய்விட்டுச் சில வார்த்தைகளைச் சொல்லி வாய்க்குள்ளே சில வார்த்தைகளை முனுமுனுத்து ஜோதிடம் கணிப்பதாகக் காடடிக் கொள்கிறார்கள்.

நடந்தது நடப்பது, நடப்பது நடக்க இருப்பது எல்லாம் ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் என்கிறார்கள். நமது அப்பாவி உழைக்கும் மக்கள் ஆவென்று பார்த்து பரவசப்பட்டு, ஜோதிடர்கள் சொல்லும் ஜோதிடம் நடக் கும் என்றெண்ணிக் கேட்டு வந்து கொண்டிருக்கின்றார் கள். ஊடகங்கள் நமது மக்களின் ஏமாறும் தன்மையைப் பயன்படுத்தி பணம் பண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஜோதிடத்தில் ராசி என்கிறார்களே, அதனை எளிமையாக புரிந்து கொள்ள ஓர் எடுத்துக்காட்டு பார்க்கலாம்.

நெல்லையிலிருந்து நெல்லை விரைவு வண்டி (எக்ஸ்பிரஸ்) மாலை 6 மணிக்கு சென் னைக்கு புறப்படுகின்றது. நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை, எழும்பூர் எனப் பன்னிரெண்டு இடங்களைக் கடந்து செல்கின்றது.

கடக்கும் இடங்களை எளிமையாக புரிந்துகொள்ள ஒவ்வொரு ஊருக்கும் ஒரு எண் கொடுங்கள். நெல்லை (1), கோவில் பட்டி (2), விருதுநகர் (3), சென்னை - எழும்பூர் (12) எண் கொடுத்த பிறகு ஒரு படம் போடுங்கள்.

அப்படியே ஊர்களை எண்களை வீடு எனச் சொல்லுங்கள். ஒன்றாவது வீடு நெல்லை, இரண்டாவது வீடு கோவில்பட்டி, மூன்றாவது வீடு விருதுநகர்... 12-ஆவது வீடு சென்னை - எழும்பூர். இப்போது ஜோதிடம் சொல்பவர் நெல்லை ராசி ஆண், கோவில்பட்டி ராசி பெண், நெல்லை ராசிப் பின் காலம், இறந்த காலம், கோவில்பட்டி ராசியின் காலம் நிகழ் காலம் எனச் சொன்னால், நாம் சிரிக்க மாட்டோமா?

சுத்த பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. நெல்லை விரைவு வண்டி கோவில்பட்டியைக் கடந்து போகின்றது. இதில் கோவில்பட்டி நிகழ்காலம், பெண் என்பதெல்லாம் எங்கே வருகின்றது என்று கேட்க மாட்டோமா?

விரைவு வண்டியின் கால அட்டவணையைக் கையில் வைத்துக் கொண்டு மேட்டுப்பாளையத்தில் பிறக்கும் குழந்தைக்கு கோவில்பட்டி ராசி எனவும் திருவனந்தபுரத்தில் பிறக்கும் குழந்தைக்கு விருதுநகர் ராசி என்றும் சொன்னால் நாம் சிரிக்க மாட்டோமா? ஆனால், ராசி என்று சொன்னால் நம்புகிறார்கள்.

இப்போது ராசிக்கு வருவோம். இரயில் பாதை போல வானத்தில் ஒரு கற்பனைப் பாதை போட்டிருக்கின்றார்கள். அதற்கு ஜோடியாக (Zodiac) எனப் பெயர்.

நெல்லை விரைவு வண்டி போல, சந்திரன் அந்தக் கற்பனை பாதை வழியாகச் செல்கின்றது. செல்லும் வழியில் கடந்து செல்லும் ஊர்களைப் போல இருப்பவை ராசிகள். ராசிகள் மொத்தம் 12. நகரும் துணைக் கோளான சந்திரன், நகராத 12 விண்மீன் கூட்டங்களை கடந்து செல்கின்றது.

12 ராசிகளை கட்டம் போட்டு எழுதிவிட்டார்கள்
.மேஷ ராசியின் உருவம் - ஆடு அங்கம் - தலை வலிமை - இரவில் (பகலில் ?) பாலினம் - ஆண் பார்வை - பகல் குருடு குணம் - குரூரம்
நிறம் - சிவப்பு

ரிஷப ராசியின் உருவம் - மாடு (எருது) அங்கம் - முகம்
வலிமை - இரவில் பாலினம் - பகல் குருடு நிறம் - வெண்மை

மிதுன ராசியின் அங்கம் - மார்பு உருவம் - இரட்டையர் (ஆண் பெண்)அகலம் - மார்பு வலிமை - இரவில் பாலினம் - ஆண் பார்வை - இக் குருடு இருப்பிடம் - இடை

கடகராசியின் உருவம் - நண்டு அங்கம் - இதயம் வலிமை - இரவில்
பாலினம் - பெண் பார்வை - இராக்குருடு இருப்பிடம் - வெளியிடம்

சிம்ம ராசியின் உருவம் - சிங்கம் அங்கம் - வயிறு வலிமை - பகலில்
பாலினம் - ஆண் பார்வை - பகல் குருடு இருப்பிடம் - உள்ளிடம்

கன்னி ராசியின் உருவம் - கன்னி அங்கம் - இருப்பு வலிமை - பகலில்
பார்வை - துவிக்குருடு இருப்பிடம் - இடை

ஒன்றைக் கவனியுங்கள். ராசிகளுக்கு பாலினம் சொல்ல வந்தவர்கள் 1,3,5,7,9,11 ஆண் எனச் சொல்லிவிட்டார்கள். 2,4,6,8,10,12 பெண் எனச் சொல்லிவிட்டார்கள். எப்படி ஒற்றைப்படை எண் ராசி எல்லாம் ஆண்கள் எப்படி கண்டுபிடிக்கிறார்கள் எந்த உறுப்பை வைத்து ஆண் ராசி என முடிவெடுத்தார்கள்.

2,4,6,8,10,12 எல்லாம் எப்படி பெண் ராசிகள் என முடிவெடுத்தார்கள்? விளக்கம் சொல்வார்களா?

ராசிகளின் அங்கம் என்று சொல்லி, தலையில் ஆரம்பித்து பாதம் வரை சொல்லி வருகின்றார்கள். துலாம் ராசியில் அங்கம். தொப்புளுக்குக் கீழ் வருச்சிக ராசியின் அங்கம், பாலினக் குறி, தனுஷ் ராசியின் அங்கம் - தொடை, விண்மீன் கூட்டம் - எப்படி தொப்புளுக்குக் கீழ்வரும்? பாலினக் குறிகள் வரும். தொடைக்குள் வரும்?

வலிமை இரவில் பகலில் எனப் பிரித்திருக்கிறார்கள். எப்படி? சிம்மராசிக்கு வலிமை, பகலில் - ஆனால், பார்வை பகல் குருடு, பகலில் வலிமை. ஆனால், பகல் குருடு என்றால் எப்படி?மிதுன ராசி அங்கம் - மார்பு இருப்பிடம் இடை அங்கத்திற்கு இருப்பிடத் திற்கும் என்ன வித்தியாசம்?

இதைப்போல நூற்றுக்கணக்கான கேள்விகளை நாம் எழுப்ப இயலும். இக்கேள் விகளுக்கு என்ன பதில்? விளக்கம் வருமா? ஜோதிடம் விஞ்ஞானம் என்று கொள்பவரிடமிருந்து? - - வா. நேரு

http://viduthalai.com/20080412/snews03.html
மனோரமா ஆச்சி ( நடிகை ) வாழ்க்கையில ஜோசியக்காரன் விளையாடின விபரீத விளையாட்டு. .
---------------------------------------------
செத்தவருக்கே ஜோதிடம் சொல்லும் அபார திறமையை என்னென்று சொல்வது! ஏமாறுகிறவர்கள் இருந்தால் ஏமாற்றுபவரும் இருக்கத்தானே செய்வார்கள்?

அறிவியல் கதிர் ஜோதிடம் அறிவியலா?

குப்பைத் தொட்டிக்குப் போகட்டும் சோதிடம்!

கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் சோதிடர்!

Thanks to : http://vanjoor-vanjoor.blogspot.com/

No comments: