Followers

Thursday, April 17, 2008

குஜராத்தில் டாக்டர்களுக்கு செஞ்சிலுவைக்குப் பதில் ஸ்வஸ்திக் ஆர்.எஸ்.எஸ். கட்டளை

புதுடில்லி, ஏப். 16- செஞ்சிலுவைச் சின்னத்திற்குப் (ரெட்கிராஸ்) பதில் ஹிட்லரின் நாஜிக் கட்சி யின் சின்னமான ஸ்வஸ்திக் சின்னத்தைப் பயன்படுத்தும்படி குஜராத்தில் உள்ள டாக்டர்களுக்கு ஆர்எஸ்எஸ் கட்டளை பிறப்பித்துள்ளது.

ஆர்எஸ்எஸ்-சின் கீழ் இயங்கும் ஆரோக்கியபாரதி என்ற அமைப்புதான் குஜராத்தில் உள்ள டாக்டர்களுக்கு இவ்வாறு கடும் உத்தரவு போட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 25 ஆயிரம் ஸ்வஸ்திக் வடிவச் சின்னத்தை விநியோகிக்க ஆரோக்கிய பாரதி முடிவு செய்துள்ளது.

ஜன அந்தோலன் என்ற பெயரில் நடத்தப்படும் பிரச்சாரத்தின் மூலம் ஆரோக் கியபாரதி டாக்டர்களை பாசி ஸ்ட் மயமாக்க முயற்சிக்கிறது.ஆனால், செஞ்சிலுவைக்குப் பதில் மதச் சின்னமான ஸ்வஸ் திக்கை பயன்படுத்தும் டாக்டர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய மருத்துவர் சங்கம் (ஐஎம்ஏ) அறிவித்துள்ளது.

ஆனால் ஐஎம்ஏவின் எச்சரிக்கையைப் பொருட்படுத்த ஆரோக்கிய பாரதி தயாரில்லை.குஜராத்தில் 18,000 அலோபதி டாக்டர்களில் 10 ஆயிரம் பேர் செஞ்சிலுவை சின்னத்திற்குப் பதில் ஸ்வஸ்திக் சின்னத்தை அணிய முன்வந்திருப் தாக ஆரோக்கியபாரதி தலைவர் பிரவீன் பவாஸர் கூறினார்.

ஆர்எஸ்எஸ்-சின் கீழ் இயங்கும் அலோபதி, ஹோமி யோபதி, ஆயுர்வேத மற்றும் யுனானி டாக்டர்களின் அமைப்பாகும் ஆரோக்கிய பாரதி.1920இல் நடந்த நாஜிக் கட்சியின் சால்பர்க் மாநாட்டில் தான் ஸ்வஸ்திக் அதிகாரப்பூர்வ சின்னமாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.

ஜெர்மனியில் நாஜிகள் யூதர்களை கூட்டம் கூட்டமாக கொலை செய்த காலத்தில் ஸ்வஸ்திக் பயங்கர ஆட்சியின் சின்னமாகவும் மாறியது.

ஹிட்லரின் ராணுவச் சீருடையிலும் நாஜிக் கட்சியின் கொடியிலும், சிவப்புப் பின்னணியில் வெள்ளை நிற வட்டத்திற்குள் வலது பக்கம் சுற்றும் ஸ்வஸ்திக் பொறிக்கப்பட்டிருந்தது.

இப்போது ஜெர்மனியில் நவ நாஜிகளின் சின்னமும் இது தான்.நாஜி ஜெர்மனியில் யூத இனத்தவர்களை ஒழித்துக் கட்டுவதற்காக அவர்களைக் கூட்டம் கூட்டமாக கொன்று குவித்ததுபோல குஜராத்தில் இனப் படுகொலையை ஆர்எஸ் எஸ் அரங்கேற்றியது.

ஸ்வஸ்திக் சின்னத்தைப் பயன்படுத்தும்படி டாக்டர் களுக்கு கட்டளை பிறப்பித்ததன் மூலம் ஆர்எஸ்எஸ் பரி வாரம் நாஜிக் கட்சியின் மீது தனக்குள்ள பற்றுதலை மீண்டும் பறை சாற்றியுள்ளது.உலகம் முழுவதும் உள்ள மருத்துவத் துறையினரின் அடையாளமாக விளங்கும் செஞ்சிலுவை, குஜராத்தில் ஒழித்துக் கட்டப்படுமோ என்ற கவலை எழுந்துள்ளது.
http://viduthalai.com/20080416/news07.html
----------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: