Followers

Tuesday, April 15, 2008

பசு மாடு பெற்ற பிள்ளை + ராமன் பிறந்த நாள்கள். சித்திரை மகத்துவம்.

சித்திரை மாதத்தில் இரண்டு முக்கிய நபர்களின் பிறந்த நாள்கள் வருகின்றனவாம். ஒருவன் சித்திர குப்தன், எமனின் கணக்குப் பிள்ளை.
மற்றவன் ராமன். ராமாயணக் கதாநாயகன்.

இருவருக்கும் ஓர் ஒற்றுமை உள்ளது. இரண்டு பேருமே முறையாகப் பிறக்காதவர்கள்.

சித்திரகுப்தன் பிறப்பைப் பார்ப்போம். இந்திரன் அடிக்கடி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் தேவர்களின் தலைவன். யார் இந்திரனாக வந்தாலும், அவனின் மனைவியாகும் வாய்ப்பைப் பெற்றவள் இந்திராணி. அவள் நிரந்தரமான இந்திரனின் மனைவி.ஓர் இந்திரனுக்குக் குழந்தை வேண்டும் என்கிற ஆசை. கடவுளிடம் கேட்டான்.

கடவுளும் இந்திரனுடைய வாக்காளர்களின் ஒருவன் தானே!

எளிதாகக் கேட்டு விட்டான்.இந்திராணி பலருக்கும் மனைவியாக இருக்கும் பாக்கியத்தைப் பெற்றவள், அவளிடம் உனக்குக் குழந்தை கிடைக்கும் வாய்ப்பு இல்லை எனக் கடவுள் கூறிவிட்டது.

இந்திரன் சோர்ந்து போனான். அவன் வாட்டம் போக்கிடக் கடவுள் ஒரு ஏற்பாடு செய்தது. காமதேனு எனும் பசு மாட்டை இந்திரனுக்கு அனுப்பி வைத்தது. இந்திரன் மகிழ்ச்சியாக மாட்டைப் பெற்றுக் கொண்டான். பசு மாடு ஆயிற்றே!

ஒரு சுபயோக சுபதினத்தில், காமதேனுப் பசு சித்திர குப்தனைப் பெற்றெடுத்தது.

எப்படி இது சாத்தியம் என்று கேட்கக் கூடாது.
கலைக்கோட்டு மகாமுனிவரின் தாய், கலைமான் அதாவது கொம்புடைய மான் என்கிற விசயம் தெரிந்தவர்களுக்கு பசு மாடு தாயானது பெரிய சங்கதியல்ல!

சித்திர புத்திரனுக்குக் கோயில் கட்டிக் கும்பிடும் மக்கள் காஞ்சிபுரத்தில் தான் இருக்கிறார்கள். அவ்வூரின் நெல்லுக்காரத் தெருவில் கோயிலே உண்டு. சித்திரா பவுர்ணமியில் விரதமிருந்து சித்திர குப்தனை வழிபடுகிறார்கள்.

விரதம் இருப்பவர்கள் பசும்பால், மோர் சாப்பிடக் கூடாது. சித்திரகுப்தனின் தாயிடமிருந்து பெறும் பொருள்களல்லவா, அதனால் போலும் தடை!

மற்றொருவன் ராமன். எப்படிப் பிறந்தான்?

இதோ ராஜாஜியே எழுதுகிறார்:``ரிஷ்ய சிருங்கர் வேள்வித் தீயில் ஆகுதி விட்டார். நெய்யைத் தீ விழங்கிற்று. தீயிலிருந்து பொங்கி எழுந்தது கொழுங்கனல் போன்ற ஒரு பெரிய உருவம். அதன் பிரகாசம் சூரியனைப்போல் கண்களைக் கூசச் செய்தது.

``இரு கைகளாலும் ஒரு திவ்விய தங்கப் பாத்திரத்தை ஏந்தி நின்றது. கம்பீரமான துந்துபி ஸ்வரத்தில் சொல்லிற்று, தசரத மகாராஜனே! உன்னுடைய பிரார்த்தனையை ஒப்புக் கொண்டு தேவர்கள் இந்தப் பாயசத்தை உன் மனைவியர்களுக்கென்று அனுப்பியிருக்கிறார்கள். உனக்குப் புத்திரப் பாக்கியம் உண்டாகும்.

இதைப் பெற்றுக் கொண்டு உன் பத்தினிகளுக்குத் தருவாயாக மங்களம் என்றது..பாத்திரத்திலுள்ள பாயசத்தில் பாதி கவுசல்யாதேவி அருந்தினாள். சுமித்திரைக்கு அப்படியே தந்து மிகுதியில் ஒரு பாதியை அவள் அருந்தினான். மிஞ்சிய பாயசத்தில் பாதியை கைகேயி அருந்தினாள். பின்னர் எஞ்சி நின்ற பாயசத்தைத் தசரதன் மறுபடி சுமித்திரைக்குக் கொடுத்தான்.பரம ஏழை ஒருவன் பணம் நிறைந்த பானை ஒன்று புதைத்துக் கிடந்ததைத் திடீர் என்று அடைந்து பெற்ற மகிழ்ச்சியைப் போல் தசரதனுடைய மூன்று மனைவிகளும் மகிழ்ந்து மனம் பூரித்தார்கள்.

எதிர்பார்த்தபடி மூன்று ராஜபத்தினிகளும் கர்ப்பம் தரித்தார்கள் (சக்கரவர்த்தித் திருமகன் - நூல் பக்கம் 8-9).ஆக, பாயத்திற்குப் பிறந்தவன் ராமன்.

இந்த இரண்டு பிறந்த நாள்களால் இந்த மாதம் மகத்துவம் பெறுகிறதாம்.

வாழ்த்து சொல்கிறார்கள், விளக்கேற்றச் சொல்கிறார்கள், மூடநம்பிக்கையின் `மொத்த உருவமும், துரோகத்தின் நெடிய உருவமும்!தமிழ்ச் சமூகம் இவர்களை அடையாளம் காணவேண்டும்!- அரசு
http://viduthalai.com/20080414/news17.html

No comments: