Followers

Monday, April 14, 2008

நன்மை தரும் வழக்கில் உள்ள ஏழில் என்ன இருக்கிறது? நான்கு, எட்டு எதற்காகவாம்? அஷ்டபந்தனம் -- எவ்வளவு நயமாக விஷ ஊசியைப் போடுகிறார் பாருங்கள்! கதம்பம்

ஏழில் என்ன இருக்கிறது?

தமிழ்ப் பெயரை, தமிழனின் பெயரைத் தமிழில் எழுதாமல் இங்கிலீசில் எழுதி, அந்த எழுத்துகளுக்கு எண்களை மதிப்பிட்டு, அவற்றைக் கூட்டினால் வரும் தொகை எண்ணின் அடிப்படையில் நல்லது கெட்டது நடக்கும் எனக் கூறி ஏமாற்றி வருகிறார்கள்.

26 எழுத்துகளுக்கு எண்களைக் கொடுத்ததைப் போன்றே 247 எழுத்துகளுக்கும் எண்களைப் பிரித்துக் கொடுத்துத் தமிழ் ஆர்வலர்களின் மூடநம்பிக்கையை மேலும் வளர்க்கலாமா என்பதுபற்றி நேமாலஜிஸ்ட்டுகள் யோசனை செய்ய வேண்டும் என்று லோக க்ஷேமம் கருதிக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் இலக்கியங்களில் ஏழு என்ற எண் மிகுதியாகப் பயிற்சி பெற்றிருக்கிறது எனக் குறிப்பிடுகிறார் ஒரு பேராசிரியர். இந்த எண் நன்மை தரும் எண்ணாகப் பல நாடுகளிலும் வழக்கில் உள்ளது என்று கூறுகிறார்.

ஏழாவதாகப் பிறக்கும் பெண் குழந்தைக்கு நோய்களைக் குணப்படுத்தும் சக்தி இருக்கும் என்று ஸ்காட்லாந்து நாட்டு மக்களின் நம்பிக்கை. மந்திரத்தால் நோய் தீரும் என்ற நம்பிக்கை வாழ்ந்த காலத்தில் இந்த நம்பிக்கையும் இருந்திருக்கிறது. இன்றுமா?

ஏழு நாள்கள்தான் ஒரு வாரத்திற்கு என்கிற கணக்கீடு முறை கிபி. 323-இல் ரோமானிய மன்னர் கான்ஸ்டன்டைன் என்பவரின் காலத்திலிருந்தே பழக்கத்தில் உள்ளது. இதனால் ஏழுக்கு ஒரு மரியாதையைத் தந்து வருகிறார்களோ?

கிரேக்கர்களுக்கு 7 புனிதமான எண்ணாம். அவர்களின் ஞானிகள் ஏழு பேராம். வாரத்தின் நாள்கள் 7 என்பதைப் போலவே கிரகங்களும் 7, உலக அதிசயங்கள் 7, நரகத்திற்குச் செல்லும் வாயில்கள் 7 என்கின்றனர் அவர்கள். கிரகங்களும் நாள்களும் சரி, நரகத்தின் வாயில்கள் 7 என்பது மூடத்தனமல்லவா? நரகத்தை எவன் கண்டான்? அதன் கதவுகளைக் கண்டு திரும்பியவன் எவன்?

ஜப்பானியர்களுக்கு இது கெட்ட எண். நல்லது, கெட்டது என்பது உலகம் முழக்கப் பொதுவாக இருக்க வேண்டாவோ?

நலம் தரும் கடவுள்கள், மகிழ்ச்சியை வாரி வழங்கும் கடவுள்கள் 7 என்று இன்னொரு பக்கத்தில் ஜப்பானியர்களே கூறிக் கொள்கின்றனர்.நம் நாட்டில்கூடத் தெலுங்கர்களுக்கு 7 கெட்ட எண்ணாம்.

தமிழ்நாட்டில் பழங்குடியினரிடம் எல்லாமே ஏழு என்கிற மாதிரி நம்பிக்கை உள்ளது. மணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணின் வீட்டில் ஏழு செம்புகளில் மிளகாய்க் கரைக்கப்பட்ட நீர் வைக்கப்பட்டிருக்குமாம். ஏழு உலகங்களின் நீரைக் குறிப்பதாகுமாம்.

கருவுற்ற பெண்ணுக்கு ஏழாம் மாதத்தில் குடிசையின் முன்பு ஏழு பானைகளை வைத்துச் சோறு சமைக்கின்றனராம். அரிசி வேகும் பக்குவத்தில் சோற்றுப் பானைகளை அப்பிள்ளைத் தாய்ச்சிப் பெண் தொட்டுக் கும்பிட வேண்டுமாம். ஏழு பானைகளும் ஏழு மருத்துவக் கடவுள்களாம்; பேறு காலத்தில் அவனைக் காப்பவர்களாம்.

குழந்தை பிறந்த ஏழாம் நாள் வீட்டைத் தீட்டு நீக்கிக் கழுவுவார்களாம். பிள்ளைக்கு ஏழாம் நாள்தான் பெயர் சூட்டுவார்களாம்.

இறப்பு நேர்ந்தால் 7 நாள் தீட்டும் துக்கமுமாம். நிலத்தில் விளைந்த எதையும் இந்த ஏழு நாள்களில் சாப்பிட மாட்டார்களாம்! வெறும் இறைச்சி, கோழி, மீன் தான் உணவோ?

பார்ப்பனர்களின் திருமணத்தில் நெருப்பை 7 முறை சுற்றி வர வேண்டும் என்று வைத்துள்ளனர்.

கிறித்துவர்கள் இதை முழு எண் என்கின்றனர். 14,21, 28 போன்ற ஏழின் பெருக்குத் தொகை எண்களும் ஏழும் பைபிளில் நிறைய இடங்களில் ஆளப்படுகின்றன என்ற தகவலை ஒரு கட்டுரை கூறுகிறது.

ஒன்று தெரிகிறது, அறிவு வளர்ச்சி இல்லாத ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நம்பிக்கை இது! காட்டுமிராண்டிக்கால நம்பிக்கை 21-ஆம் நூற்றாண்டிலும் இருக்க வேண்டுமா?
-----------------------------------------------
அஷ்டபந்தனக் குடமுழுக்கு

இதே போன்ற மூடநம்பிக்கைதான் கோயில் கட்டி, கும்பிடுதலும் கும்பாபிஷேகம் செய்தலும்! அப்படி இருக்கையில், கும்பாபிஷேகத்தைக் குட முழுக்காக்கி விட்டால் சரியாகி விடுமா?

ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் என்று நடத்தும் போது என்ன செய்வது?

தண்ணீர் ஊற்றிக் கழுவுவதைத் திருமஞ்சனம் என்று சொல்கிறார்கள். நமக்குத் தெரியாத ஒரு மொழியில் எதையாவது சொன்னால், அதில் ``ஏதோ இருக்கிறது என்கிற எண்ணம் ஏற்படுகிற மாதிரி சூழ்நிலைகளை அமைத்து விட்டனர்.இடிந்துபோன, பழைய கோயிலைப் புதுப்பித்துக் காட்டினால் ஜீரணோத்தாரண கும்பாபிஷேகமாம்.

உருக்குலைந்த கோயிலைப் புதுப்பித்தல் என்றால், கொஞ்சம் அறிவுள்ள யாராவது வருவார்களா?

என்னடா இது, கோயிலே இடிந்து போகிறது, கடவுள் என்ன செய்கிறது, அதன் இருப்பிடத்தையாவது காப்பாற்றிக் கொள்ளாதா, இந்த லட்சணத்தில் நமக்கு எங்கே இது நல்லது செய்யப் போகிறது என்கிற எண்ணம் ஏற்படாதா?

அதற்காகவே, இப்படி ஒரு ஏற்பாடு செய்திருப்பார்களோ?சரி, அஷ்ட பந்தனம் என்றால்...?

அஷ்டம் என்றால் எட்டு, பந்தனம் என்றால் கூட்டு! எட்டின் கூட்டு. எட்டுப் பொருள்களின் கூட்டு. எட்டு மூலிகைக் கூட்டு. கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கல்காவி, ஜாதிலிங்கம், செம்பஞ்சு, தேன் மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டுப் பொருள்களின் கூட்டு. இவை எதற்காக?

இவற்றின் கலவை சிமென்ட் கலவையைப் போலப் பயன்படுத்தி அதில் கடவுள் பொம்மையைத் தூக்கி வைத்து நிறுத்துவது. அப்படி நிறுத்தினால்தான் அது நின்று தொலைக்கும். இல்லாவிட்டால் மல்லாந்த வாறோ, குப்புறவோ விழுந்துவிடக் கூடும்.

புதுப் பொம்மை வைத்தாலும் பழம் பொம்மையையே மீண்டும் வைத்தாலும் இதுதான் சாங்கியம். இதுதான் அஷ்ட பந்தனம்.

அஷ்டபந்தனம் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிறது. வாங்கிப் பயன்படுத்தலாம். ஆனால் பொம்மை எவ்வளவு நாள் நிற்கும் எனச் சொல்ல முடியாது. ஏனென்றால் இதில் பெரும்பான்மையாகக் கலக்கப்படுவது செங்கல் தூள்தான். எங்கும் எதிலும் கலப்படம்.

அசல் சரக்கு சேர்த்து இடித்தால் கெட்டித் தன்மை கிடைக்குமாம். ஒருவகை மரப்பிசின் கொம்பரக்கு, பிகாரில் மட்டுமே கிடைக்கும் `கோத்தி என்பதுதான் செம்பஞ்சு. தேனடையில் இருந்து எடுக்கப்படும் தேன் மெழுகு. எருமை வெண்ணெய் தவிர்த்த மீதி ஏழு பொருள்களையும் குறித்த அளவில் சேர்த்து உடலில் போட்டு இடித்து குறித்த அளவில் சேர்த்து உரலில் போட்டு இடித்து (மிக்சியைப் பயன்படுத்த முடியாது) அதுவும் மர உரலில் போட்டு இடித்துப் பிறகு எருமை வெண்ணெய் சேர்த்து இடித்தால், உரலில் ஒட்டாமல் இந்தக் கலவை கிடைக்குமாம்.

அவற்றைச் சாணி உருண்டை பிடிப்பதுபோல் உருண்டை பிடித்து, மீண்டும் உரலில் இட்டு இடிக்க வேண்டும். இரண்டு நாள்கள் இடைவெளி விட்டு மீண்டும் இடிக்க வேண்டும். இப்படியே இடை வெளி விட்டு இடிக்கும் முறை எட்டு முறை செய்யப்பட வேண்டுமாம்.

பிறகு அதனைப் பயன்படுத்த வேண் டுமாம்.எதற்காகவாம்? எட்டுப் பொருள்களிலும் எட்டுச் சக்திகள். எட்டுப் பொருளுக்கும் எட்டு தேவதைகள். உரல் பிரம்மாவாம். உலக்கை விஷ்ணுவாம். சிவ சிவா என்றும் நாராயணா என்றும் எந்தக் கோயிலுக்காக இடிக்கிறோமோ அந்தக் கோயிலின் கட்சி பேரைச் சொல்லி இடிக்க வேண்டுமாம். (கோவிலை இடிப்பதல்ல; அஷ்டபந்தனத்தை இடிப்பது என்பதை சர்வ ஜாக்கிரதையாகப் படிக்க வேண்டும்)

சிவன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு நாராயணன் பேரையோ, பெருமாள் கோயிலுக்குச் சிவன் பெயரையோ சொல்லி விடக் கூடாதாம் (என்ன மோசமாகிவிடும்? அரியும் சிவனும் ஒன்றல்லவோ? இதை அறியாதவன் வாயில் மண்ணல்லவோ?)

இப்படிப் பக்தி சிரத்தையுடன் இடித்தாந்தில் பிடித்து வைத்த பொம்மை 12 ஆண்டுக் காலம் பிடிமானத்துடன் இருக்கும். அதனால்தான் 12 ஆண்டுகள் ஒரு முறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்கிறார்கள். அத்தோடு மட்டுமல்ல, அந்தப்படி செய்யப்பட்ட பொம் மைக்குச் சக்தியே 12 ஆண்டுகள் தானாம்.

இந்த அஷ்டபந்தனத்தில் ஊதுபத்தி செருகி வைக்கக் கூடாது. கர்ப்பூரம் கொளுத்தக் கூடாது. செய்தால், அஷ்டபந்தனம் உருகிக் கடவுளின் அஸ்திவாரம் கலகலத்து விடும். இவ்வளவு பக்குவமான புனிதமான பொருளாக இருக்கிறதே, இதில் துளியுண்டு எடுத்து வந்து நம் `கிருகத்தில் வைத்துக் கொள்ளலாமே என ஆசைப்படக் கூடாது. அது மகாப்பாவம்!இவ்வளவு விசயம் இதில் இருக்கிறது. ``சும்மா குடமுழக்கு என்று தமிழில் சொல்லிவிட்டால் போதுமா?

நான்கு பூதம் தான் பஞ்ச பூதங்களின் சேர்க்கை உடல் என்கிறார்கள். நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகியவை பஞ்சபூதங்கள் என்கிறார்கள். இந்தப் பருப்பொருள்களின் சேர்க்கையில் வானத்தின் பங்கு என்ன?

உடலுக்கும் வானத்துக்கும் என்ன தொடர்பு? விளக்குகிறார் சாமிநாதச் சங்கராச்சாரியார். மகாப் பெரியவரோன்னோ?

மகாப் பெரிய சங்கதிகளையெல்லாம் மகாச் சுலபமாக்கித் தந்திருக் கிறார்.முதலில் சப்தப் பிரபஞ்சம் ஆகாசத்தில் உண்டான பின்தான், நாம். கண்ணால் பார்க்கிற பிரபஞ்சம் உண்டாயிற்று. வெளியில் இருக்கிற ஆகாசம் ஜீவனின் இருதயத்திலும் இருக்கிறது.

யோகிகள் சமாதி நிலையில் இந்த ஹிருதயாகாத்தை அனுபவிக்கிறார்கள் அப்போது உள், வெளி என்ற பேதம் நீங்கி சகலமும் ஒன்றாகி விடுகின்றன. இதய ஆகாசமும் வெளி ஆகாசமும் ஒன்றாகி விடுகின்றன. இந்த நிலையில் யோகிகளுக்கு ஆகாசத்திலுள்ள சப்தங்களைக் கிரகித்து லோகத்துக்குத் தர முடிகிறது.

லோக க்ஷேமார்த்தமான இந்த சப்தக் கோவைகளே வேத மந்திரங்கள் என்பது அவரின் அருள்வாக்கு!எவ்வளவு நயமாக விஷ ஊசியைப் போடுகிறார் பாருங்கள்!

வேதத்தோடு எதையெதையோ முடிச்சுப் போட்டுத் தம் ஜாதி மேலாண்மையைத் தக்க வைத்துக் கொள்ளப் படாதபாடு படுகிறார்.

ஆகாசம் (வானம்) மனித இதயத்தில் இருக்கிறதாம்! எந்த அறிவியல்அறிஞராவது இதை உறுதிப் படுத்தியிருக்கிறார்களா?

வந்த சங்கராச்சாரிகளிலேயே, கொஞ்சம் `சயன்ஸ் படித்த இந்தச் சங்கராச்சாரி தாம் படித்ததை இப்படிப் பயன்படுத்துகிறாரே, வெட்கம் வேண்டாவோ?நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்கு தனிமங்கள் தான். அவற்றின் சேர்க்கைதான் உடலும் உலகமும் என்றார்கள் சார்வாகர்கள்.

அதனை எதிர்த்து வாதிட்டு வெல்ல முடியாத பார்ப்பனர்கள் அவர்களைக் கொன்று விட்டனர். இவர்கள் வானத்தைக் காட்டி.. மனித இதயத்தைக் காட்டி.. சத்தங்களைக் காட்டி.. இதய வானம், வெளி வானம்.. ஒன்றாகிக் கலக்கிறது... யோகிகளால் முடிகிறது. மந்திரங்கள் ஆகாயச் சத்தம் என்றெல்லாம் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டுப் பித்தலாட்டம் செய்ததை அம்பலப் படுத்தியதால் சார்வாகனை அழித்தே போட்டார்கள்!

இப்போது புரிகிறதா?

ராஜராஜன் வாயிற்காவலன்தஞ்சாவூர் பெரிய கோயிலை சோழன் ராஜராஜன் என்பவன் கட்டினான் என்ற பெருமை எனக்கில்லை, என் ஜாதிக்காரன் படிப்பதற்கு எதையும் செய்யாமல் (அவன் கூடப் படிக்காதவனாகத்தான் இருந்திருக்க வேண்டும். அவனுக்கும்தான் பூணூல் கிடையாதே!) பார்ப்பானுக்குக் கொட்டிக் கொடுத்த இனத் துரோகி என்பதால்!

அவன் சிலையை உள்ளே வைக்க அனுமதி கிடைக்காததால் தெருவோரத்தில் வைத்தார் கலைஞர்! இருக்க வேண்டிய இடம்தான்!ஆனால், அவன் சிலைஉள்ளே இருந்ததாம். பஞ்சலோகச் சிலையாம்! நாயக்க மன்னர்கள் அதைக் கிளப்பிப் போய் விற்றுக் காசாக்கி விட்டார்களாம்.

பல கைகள் மாறிக் கடைசியில் குஜராத் அகமதாபாத் கவுதம் சாராபாய் அருங் காட்சியகத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருக்கிறதாம்!

வாசற்படியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறதாம். கை கூப்பிக் கும்பிட்டவாறு சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. ஆரிய அடிமைகளின் சிலைகள் அப்படித்தான் இருக்கும்.

திருப்பதியில் கிருஷ்ண தேவராயன் சிலை, மதுரையில் திருமலை நாயக்கன் சிலை எல்லாமே அப்படித்தான்! அரசனாக இருந்தாலும் ஆரிய அடிமைதானே!

அகமதாபாதில் ராஜ ராஜனின் சிலை அருங்காட்சி யகத்திற்கு வருவோரை வரவேற்கும் வகையில் வைக்கப்பட்டிருக்கிறதாம். பொருத்தம் தான். வருத்தம் ஏதும் கூடாது. கிடையாது.

நட்சத்திர ஓட்டல்களில் வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் வரவேற்பாளர்கூட மன்னர்களைப் போலத்தானே உடையணிந்து நிறுத்தப்படுகிறார்கள்?

அதுபோலவே மாஜி மன்னனும்!மன்னர் நிலையில் இழிந்த கடை தலையினிழிந்த மயிரனையர்தானே! வருத்தம் ஒன்றும் இல்லை--- சு. அறிவுக்கரசு
http://viduthalai.com/20080412/snews08.html
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: