Followers

Saturday, April 12, 2008

இல்லாத சரசுவதி நதியை உருவாக்குகிறார்கள் மதவெறி முக்கியமாகிப் போனதால்,

நிருவாகத்தில் இந்து மதவெறி நுழைந்தது

இல்லாத சரசுவதி நதியை உருவாக்குகிறார்கள் மதவெறி முக்கியமாகிப் போனதால், அரியானா அரசின் கோமாளித்தனம்!

சண்டிகர், ஏப். 9- வட இந்தியாவில் அலகாபாத் நகரில் திரிவேணி சங்கமம் என்பார்கள். அந்த இடத்தில் யமுனா நதி கங்கை ஆறுடன் கலக்கும் நிலையில்,

இரண்டுக்குப் பதில் மூன்று நதிகள் கலக்கின்றன எனும் மாயையை உருவாக்கிட இந்து மதவெறிக்காரர்கள் அவ்வாறு அழைக்கின்றனர்.

இதை ஏற்று முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் 5 கோடி ரூபாய்ப் பணம் ஒதுக்கி இந்த ஆற்றின் ஓடு பாதையைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சி செய்தார்கள். மக்கள் பணம் பாழாய்ப் போனதுதான் கண்ட பலன்.

இந்த நிலையில், அரியானா மாநிலத்தில் ஆளும் காங்கிரசுக் கட்சி கோமாளித்தனமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அம்மாநிலத்தின் பாசன அமைச்சர் அஜய் யாதவ் என்பவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பதால், அதி காரப்பூர்வமான அறிவிப்பு இது என்கிறார்கள். இதற்கான அறிவிக்கை அரசிதழில் விரைவில் வெளியிடப்படுமாம்.

அரியானா மாநிலத்தில் உத்தரபாதா முதல் ஜோதிஸர் எனும் இடம் வரை உள்ள 50 கி.மீ. நீள கால்வாயை அகலமும், ஆழமும், படுத்தி ஆறாக மாற்றப் போகிறார்களாம். இதற்கான பணி இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கப்படுமாம்.

சரசுவதி ஆற்றைப்பற்றி மக்களும், அரசு அலுவலர்களும் சிந்திக்கவேண்டும் என்பதற்காக இந்த முயற்சியாம். இந்த ஆறு தொடர்பாக சரித்திரச் சான்றுகளும், புராணச் சான்றுகளும் உள்ளனவாம், அமைச்சர் கூறுகிறார்.

கால்வாய்க்கு சரசுவதி ஆறு எனப் பெயர் வைத்ததே போதும். இந்த மாநிலம் பெரும் வளங்களைப் பெறும் என்று சரசுவதி நதி ஷோத் சன்ஸ்தான் எனும் அமைப்பினர் புளுகித் தள்ளுகின்றனர்.

இந்த நதியில் கழிவு நீர் கலக்காமல் இருப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்களாம். கால்வாயை நதியாக மாற்றிட நிலங்களை விலைக்கு வாங்கப் போகிறார்களாம்.

இந்தத் திட்டத்திற்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 20 ஏக்கர் நிலம் கைய கப்படுத்தப்படவுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் கங்கையுடன் கலக்கும் நதி சரசுவதி என்கிறார்கள்.

ஆனால், வடக்கே அரியானா மாநிலத் தில் 50 கி.மீ. நீளக் கால்வாயை ஆறுபோல் ஆக்கப் போகிறார்கள். வளர்ச்சிக்கு எவ்வளவோ திட்டங்கள் இருக்கும் நிலையில், மதவெறி முக்கியமாகிப் போனதால், மக்கள் பணம் பல வகையிலும் பாழாகிறது!
http://viduthalai.com/20080409/news30.html
----------------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: