Followers

Friday, April 11, 2008

கல்லூரியில் காவி உடை அணியவேண்டுமாம்! கட்டளை பிறப்பிக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

இராஜஸ்தான் மாநிலத்தில் காவி தர்பார்!

ஜெய்ப்பூர், ஏப். 5- கல்லூரி ஆசிரியர்களும், மாணவர்களும் காவி நிறத்தில் சீருடை அணிய வேண்டும் என்று அஜ்மீரில் உள்ள கல்லூரியில் கட்டாயப் படுத்தப்படுகின்றனர்.

இதனால் கல்லூரியில் பதற்றம் உருவாகி யுள்ளது. இந்த சீருடை விசயத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைச்சர் பின்னணியில் இருக்கிறார்.மகரிஷி தயானந்த சரசுவதி பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்ட இந்தக் கல்லூரி இருபாலரும் படிக்கும் நிலையமாகும். இதில் பணி யாற்றும் 225 ஆசிரியர்களில் 100 பேர் பெண்கள். இவர்கள் சேலைதான் கட்டி வரவேண்டும் என்றும், அந்தச் சேலை காவி நிறத்தில் இருக்கவேண்டும் என்றும் அறிவிப்பு கல்லூரி நிருவாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

ஜீன்ஸ், டி-சர்ட் அணியக்கூடாது என்று ஆண் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கி, பைஜாமாவும், குர்தாவும் அணியவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அது போலவே, மாணவ, மாணவியர்க்கும் வரைமுறை விதிக்கப் பட்டுள்ளது.

இது நடந்த மூன்றாம் நாள், சீருடையை அவர்கள் விருப்பத்திற்கு அணிந்து வரவில்லை எனக் காரணம் காட்டி 4 ஆசிரியர்களை பாடம் எடுக்க அனுமதிக்காமல், கல்லூரியை விட்டு வெளியேற்றிவிட்டனர்.

பா.ஜ. கட்சி அரசாங்கம் கல்வியைக் காவி மயமாக்கும் முயற்சி இது என ராஜஸ்தான் மாநில இடைநிலைக் கல்வி வாரியத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் வியாஸ் கண்டித்துள்ளார். இதன்மூலம் முஸ்லிம் ஆசிரியர்களுக்குச் சங்கடம் தந்து தொல்லைப்படுத்தும் நோக்கம் இருக்கிறது என்று முஸ்லிம் மக்கள் அமைப்பின் தலைவர் கூறுகிறார்.

ராஜஸ்தான் மாநிலக் கல்வி அமைச்சராக இருக்கும் வாசு தேவ் தேவ்நானி தீவிரமான ஆர்.எஸ்.எஸ்.காரர். அவரது தூண்டுதலின் பேரில்தான் சீருடை கொண்டுவரப்பட்டுள்ளது என்று தெரிகிறது. வழக்கம்போல், கல்லூரி முதல்வர் அப்படியெல்லாம் கிடையாது என்று மறுக்கிறார்.
http://viduthalai.com/20080405/news04.html

No comments: