Followers

Monday, April 7, 2008

காமாட்சி அம்மன் கண் திறந்ததாக கோமாளிகள் கூத்து!

மூடநம்பிக்கையின் விளைவு

திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவில் 6 மாத கைக் குழந்தையுடன் தீக்குண்டத்தில் இறங்கிய பெண் பரிதாபமாக தவறி விழுந்து தீக்காயமடைந்தார். அவர்களைக் காப்பாற்ற தீயணைப்புத் துறையினர் விரைகின்றனர். மூடநம்பிக்கையின் விளைவை இன்னமும் அறியாமல் உள்ளனரே என்பதுதான் நமது வேதனை
http://viduthalai.com/20080406/news08.html
----------------------------------------------------------
காமாட்சி அம்மன் கண் திறந்ததாக கோமாளிகள் கூத்து!

மயிலாடுதுறை, ஏப்.6- பிள்ளை யார் சிலை பால் குடித்தது, அம்மன் படத்திலிருந்து குங்குமம் கொட்டியது,

பழங்களில் கடவுள் உருவம் தோன்றியது,

மாதா கண்ணில் இரத்தம் வடிந்தது

என்று பக்தி பரவச(?) சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாக உள்ளது. தற்போது மயிலாடுதுறை அருகே அம்மன் சிலை கண் திறந்தது என்று பர பரப்பை ஏற்படுத்தி உள்ளார்கள்.

இந்தப் பகுதியில் உள்ள மாப்பிள்ளை படுகை கிராமத்தில் சொர்ணசாது காமாட்சி அம்மன் எனும் கோவில் உள்ளது. 150 ஆண்டு காலப் பழைமை வாய்ந்த இந்தக் கோவில், முன்பு புற்றுக்கோவிலாக இருந்தது. கருவப்பிள்ளை என்பவர் கனவில் அம்மன் தோன்றி, புற்றில் தான் குடிகொண்டு இருப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து, கோவில் எழுப்பி பக்தர்கள் வழி பட்டு வருவதாக இந்தப் பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

தற்போது இந்தக் கோவிலில் அய்ம் பொன்னில் சொர்ண சாது காமாட்சி அம்மன் சிலை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கீதா என்ற பெண் இராகு கால பூஜை செய்வதற்காக இந்தக் கோவிலுக்கு வந்தார். அவர் சாமி கும்பிட்ட போது அம்மன் இரண்டு கண் களையும் திறந்து பார்த்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் பரவசம் அடைந்த கீதா இந்தத் தகவலை ஊரில் கூற ஊரே கோவிலில் திரண்டு விட்டது. (வேறு வேலை ?) காலை 11.30 மணியி லிருந்து பகல் 1.00 மணி வரை அம்மன் கண்கள் திறந்து இருந்த தாக பக்தர்கள் கூறியுள்ளார்கள்.

பிறகு அம்மன் கண்ணை மூடிவிட்டதாம். யாரோ ஒரு ஏமாற்றுப் பேர்வழியின் உளறல்களை அப்படியே நம்பும் இந்தப் படித்த (?) நாகரிக (?) மனிதர் களைக் கோமாளிகள் என்று அழைத்தால் தவறில்லைதானே!
http://viduthalai.com/20080406/news15.html
-----------------------------------------------------
படித்துவிட்டீர்க‌ளா?
எலுமிச்சையில் அம்மன் தோன்றி கண்ணீர் வடிக்க, கெட்டிக்கார ஆர்.எஸ்.எஸ் க்கு போட்டியாக ஆரோக்கியமாதா சிலை திரும்ப !!! எம்.ஜி.ஆர் காளை மாட்டுக் கண்ணில்!!!கல்கி பகவான் படத்தில் குங்குமம் கசிகிறதாம்.பக்தியின் பெயரால் மோசடி செய்யும் சாமியார்களைத் தோலுரிக்க....-----------------------------------------------------
சின்னாளப்பட்டியில் குரங்கு மருத்துவம் பார்க்கிறதாம்!

தங்கத்திலான மாரியம்மன் சிலை எழுந்ததாம். கடவுள் சிலை கிளம்பியதாகப் பித்தலாட்டம்! முறியடித்த திராவிடர் கழகத் தோழர்கள் ‘
-------------------------------------------
மற்ற பதிவுகள்

No comments: