Followers

Saturday, April 5, 2008

சின்னாளப்பட்டியில் குரங்கு மருத்துவம் பார்க்கிறதாம்!

சின்னாளப்பட்டியில் குரங்கு மருத்துவம் பார்க்கிறதாம்!

திண்டுக்கல், ஏப். 4- திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் ஒரு ஆஞ்ச நேயர் கோவில் உள்ளது. இங்கு சனிக்கிழமைகளில் பெண்கள் சாரை சாரையாகச் செல்கின்றனர்.

ஏன் என்று கேட்டால் இங்கு உள்ள ஆஞ்சநேயரிடம் வேண்டிக் கொண்டால் குழந்தை இல்லாத பெண்களுக்குக் குழந்தை பிறக்கிறது(?)

பிரிந்த குடும்பங்களைச் சேர்த்து வைக்கின்றார் என்றும் (?)
பக்தர்கள் கூறுகின்றனர். இந்தக் குரங்குபடைத் தலைவனுக்குத் திருமணம் ஆகவில்லை என்றும்,

இலங்கைக்குச் சென்று தமிழர்கள் வாழும் இலங்கையைத் தீ வைத்து அழித்தான் என்றும்,

ஒரு தனியார் நிறுவனத்தின் சரக்கு கொண்டு செல்லும் வாகனத்தின் படங்களில் மட்டும் சஞ்சீவி மலையைத் தூக்கும் குரங்குக்கு ஒரு துளி அளவு கூட சக்தியில்லை என்றும் வரலாறு இருக்கையில்,

இதுபோன்ற மூடநம்பிக்கைகளில் படித்த பெண்களும, திருமணம் ஆகாத பெண்களும் சென்று,சிந்திக்க மறுப்பது வருத்தத்திற்கு உரியதாகும்.

குழந்தை பிறப்பிற்கு மருத்துவர் களை அணுகுவதும், குடும்பப் பிரிவினைக்குப் பேச்சு வார்த்தைமூலம் தீர்வு காணுவதும் அறிவார்ந்த செயல் என்பதைப் பெண்கள் அறியவேண்டும்.
http://viduthalai.com/20080404/news17.html
-----------------------------------------------
மற்ற பதிவுகள்

No comments: