Followers

Friday, April 4, 2008

இந்துக்கள் மதம் மாறக் கூடாது ஆர்.எஸ்.எஸ்.. ஏழைகளைச் சுரண்டும் மதவாதம்.

இந்துக்கள் மதம் மாறக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணியினர் கூறி வருகின்றனர், எங்கள் ஊர் கிராமங்களில் ஊர் அம்மன் கோயில் உண்டு. அதற்கு வருடா வருடம் கும்பாபி ஷேகம் செய்வார்கள். அதற்கு வரி எவ்வளவு தெரியுமா?

ஒருவர்க்கு வரி ரூ.600 திருமண மாகாதவர்கள் என்றால் அரை வரி. ஒரு வீட்டிற்கு எப்படியும் ஆயிரத்து அய்ந்நூறு ரூபாய் ஆகும். அவனது வருமானமே மாதம் 2000 தான் வரும்.

கண்டிப்பாக வரி கட்டியே ஆக வேண்டும்; இல்லையென்றால் மிரட்டுவார்கள், இதற்கு பயந்து பாடுபட்டு உழைத்த பணத்தை வரிக்கு கொடுத்து விடுவார்கள்.

இவர்கள் இந்த பணத்தை வைத்துக் கொண்டு கும்ப ஆட்டம் என்ற பெயரில் வேசியை கூட்டி வந்து நடனம் ஆட வைப்பது,

வீண் ஆடம்பரங்கள், கேளிக்கைகள் நடத்துவார்கள் - இவர்களுக்கு வேலையே இதுதான்.

மீதிப் பணத்தை தர்ம கர்த்தாக்கள் என்ற போர்வையில் கள்ளக் கணக்கு எழுதி உல்லாசமாக செலவு செய்வார்கள்.

இப்படி ஏழைகளின் உழைப்பை சுரண்டப் போய்தான் அவர்கள் வேறு மதத்துக்கு சென்று விடுகிறார்கள்.

மன்னர் ஆட்சிக் காலத்தில், நீ தீண்டத்தகாதவன்; கோயிலுக்குள் வராதே என்று சொன்ன அதே பார்ப்பனர்கள் தான், இன்று மதம் மாறக்கூடாது என்கிறார்கள்.

புரோகிதத்துவம் இந்தியாவை பிடித்த ஒரு சனியன் என்று சுவாமி விவேகானந்தர் கூறினார்.

கிராமப்புறங்களில் தான் கோயில் தர்மகர்த்தா என்ற போர்வையில் ரவுடிகளே வரி வசூல் பண்ணுகின்றனர்.

இந்து முன்னணி, கோயில் தர்மகர்த்தாக்களே உங்கள் போலி மத ஆசாரங்களையும், கோயில் திருவிழாவுக்காக ஏழைகளிடம் வரி வசூலிப் பதையும் விட்டு விடுங்கள்.
அதுவே சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் சேவையாகும்.
- அ. பார்த்தசாரதி, பேரூரணி -- VIDUTHALAI.COM
---------------------------------------
படித்துவிட்டீர்க‌ளா?
இந்துமதம் -ஆபாசமே- அவர்களின் ஆயுதம். பெண்களின் உடல்களை இரசிப்பதுதான் ஒரு கடவுள் வேலையா ?

அலறும் R.S.S. இந்து மதத்தில் குறைந்து வரும் எண்ணிக்கை பிற மதத்தில் வளர்வதால் ஒவ்வொரு இந்து பெண்ணும் மூன்று பிள்ளைகளை பெறவேண்டும் -ஒழிக நிரோத்!!
---------------------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: