Followers

Sunday, April 6, 2008

கிறித்து பிறந்து 381 ஆண்டுகள் கழித்து தான் அவர் பரமபிதாவின் குழந்தை என்கிற புளுகு பைபிளில் சேர்க்கப்பட்டது. தகிடுதத்தம் செய்வது அவர்களின் வழக்கம்.

கிறித்து பிறந்து 381 ஆண்டுகள் கழித்து தான் அவர் பரமபிதாவின் குழந்தை என்கிற புளுகு பைபிளில் சேர்க்கப்பட்டது.

20 ஆண்டுகள் கழித்து ஏசுவுக்கு இரண்டு பெரும் சக்திகள் உண்டு என்று இடைச் செருகல் செய்தார்கள்.

காலதேச வர்த்தமானத்திற்குத் தகுந்தவாறு, தகிடுதத்தம் செய்வது அவர்களின் வழக்கம் தான். சு. அறிவுக்கரசு.

இப்படித்தான் அப்போதும் நடந்தது! பைபிளில் உள்ள கதை களைத் தற்காலத்திற்கேற்ப மாற்றி எழுதுகிறார்கள்.

லண்டனில் ஹில்லிங்டன் எனுமிடத்தில் உள்ள தூய ஜான் ஆலயத்தின் பாதிரி ராபர்ட் ஹாரிசன் என்பார் அம்மாதிரி 10 கதைகளை மாற்றி எழுதியிருக்கிறார்.

பைபிளில் உள்ள கதைகளை நீங்களும் மாற்றி எழுதுங்கள் என்று பிறர்க்கும் கோரிக்கை விடுத்துள்ளார். அப்படி எழுதினால்தான் எதிர்காலச் சந்ததியினரும் கதைகளைப் படிப்பதற்கு வாய்ப்பாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.

செய்பவர்களும் சொல்பவர்களும் பகுத்தறிவாளர்கள் அன்று, நம்பிக்கைவாதிகள் தான்.டேவிடும் கோலியாத்தும் என்கிற கதையை மாற்றியுள்ளார்.

பெருங்குடிகாரனான கோலியாத் குடிமயக்கத்தில் இருந்தபோது, டேவிட் (தாவீது) அவனை வென்று விடுவதாகக் கதை எழுதியுள்ளார். ஆதாம் ஏவான் கதையைத் தலைகீழாக மாற்றி விட்டார்கள். ஆதாமை ஏவாள் கெட்ட காரியம் செய்யத் தூண்டினாள் என்ற கதைக்குப் பதில் ஏவாளின் அழகிய உடலைக் கண்டு பரவசமுற்று ஆதாம் சில வற்றைச் செய்தான் என்று எழுதியுள்ளனர்.

இம்மாதிரிச் செய்வது அந்த மதத்திற்கு ஒன்றும் புதிதல்ல.

பைபிளே அப்படி எழுதப்பட்டதுதான்.

கிறித்து பிறந்து 381 ஆண்டுகள் கழித்து தான் அவர் பரமபிதாவின் குழந்தை என்கிற புளுகு பைபிளில் சேர்க்கப்பட்டது.

அதற்கு 50 ஆண்டுகள் கழித்து தான் அவர் தாய் மேரி, கன்னித்தாய் என்று எழுதிச் சேர்த்தார்கள்.

20 ஆண்டுகள் கழித்து ஏசுவுக்கு இரண்டு பெரும் சக்திகள் உண்டு என்று இடைச் செருகல் செய்தார்கள். காலதேச வர்த்தமானத்திற்குத் தகுந்தவாறு, தகிடுதத்தம் செய்வது அவர்களின் வழக்கம் தான்.
>> சு. அறிவுக்கரசு.
http://viduthalai.com/20080405/snews06.html
----------------------------------------------
படிக்கவும்:
ஏசு கடவுள் அல்ல - பைபிள் புரட்டுகள். கிறித்தவ மதத்தில் A to Z வரை பிரிவுகள்:

பைபிளின் 20,000 to 50,000பிழைகள். சில பகுதிகள் உண்மையல்ல ஆதலால் பைபிளின் மீது ஆணையாக சத்தியம் கூடாது.> கத்தோலிக்க திருச்சபை.

பைபிளின் வகைகள்-- பைபிளில் அக்கிரமஙகள் ஆபாச, காம அபத்தஙகள் ஒழுக்க எதிர்மறைகள், பெண் இழிவு

பைபிளில்- பெண்களின் இழி நிலை .என்ன கொடுமை.
---------------------
மற்ற பதிவுகளுக்கு:- சிந்திக்க உண்மைகள்

1 comment:

நாய் குட்டி said...

This is possible.

See here also.

http://dogkutty.blogspot.com