Followers

Wednesday, April 2, 2008

ஏப்ரல் 1 மட்டுமா முட்டாள்கள் தினம் ? தமிழர்கள் 365 நாளும் ஏமாறக் கூடாது !

ஏப்ரல் -1 முட்டாள்கள் தினமாம். ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொள்கின்றனர். பகுத்தறிவின் பார்வையில் இது ஒரு விநோதமான, வேடிக்கையான விளையாட்டு.

என்னமோ! இன்று மட்டும்தான் இவர்கள் முட்டாள்கள் போலவும், இன்று மட்டும்தான் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்வது போலவும் தோற்றம் தருகின்றனர்.

ஆண்டு முழுவதும், ஏன் வாழ்நாள் முழுவதும் பல விசயங்களில் நாம் முட்டாள்களாகத்தான் இருக்கிறோம்.

அதேபோல 90 விழுக் காட்டிற்கு மேல், ஒவ்வொரு விசயங்களிலும் பிறர் சொல்லைக் கேட்டு ஏமாந்து போகிறோம்.

தமிழர்கள் எந்தெந்த விசயங்களில் எல்லாம் ஏமாந்து போயுள்ளனர் என்பதைத் தந்தை பெரியார்தான் விலாவாரியாக எடுத்துக் கூறினார்.

அப்படிக் கூறியதோடு மட்டுமின்றி, இனி தமிழர்கள் ஏமாறக்கூடாது என்பதற்காகவே தனி இயக்கம் கண்டார்.

கடவுள், மதம், ஜாதி, அரசியல், இதிகாசங்கள், வேதங்கள், புராணங்கள் என ஏக விசயங்களிலும் நம்மவர்கள் ஏமாந்தே வாழ்க்கையைத் தொலைத்து நிற்கின்றனர்.

அப்படிப்பட்ட மக்கள் ஏப்ரல் 1 ஆம் தேதி மட்டும் முட்டாள்கள் தினம் என்றும், அன்றைய தினத்தில் மட்டும் ஏமாறாமல் இருக்க வேண்டுமென்றும் நினைப்பது பெரும் வேடிக்கை அல்லவா?

தமிழர்கள் 365 நாளும் ஏமாறக் கூடாது. எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். நாமும் ஏமாறாமல், பிறரையும் ஏமாற்றாமல் சிறந்த, மகிழ்ச்சியான வாழ்வை நாம் வாழ வேண்டும்.
http://viduthalai.com/20080401/news12.html

No comments: