Followers

Sunday, March 30, 2008

சன் டி.வி?? சங் டி.வி?? "வீடு பற்றியெறியும் போது அதில் பீடிபற்ற வைக்கும்'' நல்ல (?) உள்ளங்கள் மீடியாவிலும் உண்டல்லவா?

சங் டி.வி ( சன் டி.வி.) யின் சேவை!.

""வீடு பற்றியெறியும் போது அதில் பீடிபற்ற வைக்கும்'' நல்ல (?) உள்ளங்கள் மீடியாவிலும் உண்டல்லவா?

சேது சமுத்திரத் திட்டத்தை ராமாயணத்தின் பேரால் மதவெறிக் கும்பல் முடக்கிப்போட முயலும்போது அவர்களுக்கு மேலும் ஊக்கமூட்டுவது போல, ராமாயணம் தொடரை ஒளிபரப்பி வருகிறது, இன்னும் அறிவாலயத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் சன் டி.வி.

தி.மு.க. தொண்டர்களை மட்டுமின்றி திராவிட உணர்வாளர்கள் அனைவரையும், இந்த துரோகம் கொதிப்படைய வைத்துள்ளது. பாபரி மஸ்ஜித் பிரச்சினை சூடுபிடித்தபோது, அத்வானி ர(த்)த யாத்திரை கிளம்பினார்.

தூர்தர்ஷன் ராமாயணத்தை ஒளிபரப்பி மதவெறி நெருப்பில் பெட்ரோல் ஊற்றியது. இறுதியில் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது.

இப்போது சேதுக் கால்வாய் பிரச்சினை பற்றியெரியும் போது ராமாயணத்தை ஆரம்பித்துள்ளது சன் டி.வி. திராவிட இயக்கத்தின் தோள்களில் ஏறி சிகரம் தொட்டதற்கு நன்றிக் கடனல்லவா இது?

""வேப்பமர உச்சியின் நின்று பேயொன்று ஆடுதுன்னு விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க - உன் வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க...'' என்று அக்காலத்தில் திரைப்படப் பாடல்கள் வாயிலாகப் பகுத்தறிவு பரப்பப்பட்டது.

பகுத்தறிவுப் பாதையில் வந்த திமுக வின் தோள்களில் பயணித்த சன் டி.வி., மூடநம்பிக்கைகளை பரப்பும் போட்டியில் முதல் பரிசு பெற்றது.

ராசிபலன், மாயமந்திரத் தொடர்கள், குடும்ப உறவுகளை சீரழிக்கும் தொடர்கள் என சகல தீமைகளையும் வளர்த்துவந்த சன் டி.வி., ராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்று இயக்கம் நடத்திய அண்ணாவின் பெயரில் அமைந்துள்ள அறிவாலயத்தில் அமர்ந்து கொண்டு ராமாயணத்தைப் பரப்புகிறது சன் டி.வி.

தீட்டிய மரத்தில் கூர் பார்ப்பது என்று பழமொழி உண்டு. சவாரி செய்த முதுகிலேயே சரமாரி குத்திப் பார்க்கிறதோ சன் டி.வி? ---கவின் முஹம்மது.
http://www.tmmkonline.org/tml/others/108572.htm
---------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: