Followers

Saturday, March 29, 2008

நாம் வீதி மன்றங்களுக்குச் சென்று போராடினால்தான் நீதிமன்றங்கள் நம் வழிக்கு வரும்

சென்னை, நவ.28- நாம் நமது உரிமைகளைப் பெற நீதிமன்றங்களைத் திருத்திட வீதி மன்றத்திற்குச் சென்று போராடினால் ஒழிய நீதிமன்றங்கள் வழிக்கு வராது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

கலைஞர் அரசில்தான் முதல் முறையாக வரலாற்றை உருவாக்கிய ஒரு பொற்காலத்தை நாம் அறிந்திருக்கின்றம்.அதுதான் துணிந்து இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமல்ல, சிறுபான்மை சமுதாய மக்களுக்கு இட ஒதுக்கீடு 3.5. ஒரு பக்கத்தில் எதிர்ப்புக் குரல்கள் எல்லாம் ஒலித்தது. அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.

இந்த அரசு மக்களுடைய பிரச்சினைகளைக் கேட்கின்ற காது. இந்த அரசுதான் மக்களுக்கு உதவி புரிகின்ற கரங்கள்.
தட்டாமலேயே திறக்கின்ற அரசு - கலைஞர் அரசுதட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் என்றுதான் கடவுள் நம்பிக்கையாளர்கள், மத நம்பிக்கை யாளர்கள் சொல்லியிருக்கின்றார்கள். அப்படியானால் என்ன அர்த்தம்? கதவு சாத்தியிருந்தால்தான் தட்ட வேண்டும். திறந்திருக்கின்ற இடத்திலே தட்ட வேண்டிய அவசியமே கிடையாது.

ஆனால் ஒரு வித்தியாசம். கலைஞர் அரசு எப்பொழுதுமே கதவைத் திறந்து வைத்திருக்கின்ற அரசு. எனவே கலைஞர் அரசிடம் உங்களுக்குத் தட்டவேண்டிய அவசியமே கிடையாது. தட்டாமலேயே திறந்திருக்கின்ற அரசுதான் கலைஞர் அரசு. இங்கே உரிமைக்கு குரல் கொடுத்திருக்கின்றீர்கள்.

நோய் நாடி நோய் முதல் நாடவேண்டும். அடித்தளத்திற்கே செல்லவேண்டும். ஏனென்றால் இங்கே அமர்ந்திருக்கின்ற எல்லோருமே பேராசிரிய பெருமக்கள். கல்வியை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கக் கூடியவர்கள்.

புரடியூசர்ஸ் குட்ஸ் என்று பொருளாதாரத்திலே ஒரு செய்தியை சொல்லுவார்கள்.

மெசின்களை உருவாக்குகின்ற மெசின்கள் Machines that make Machines. கன்சியூமர் குட்ஸ் என்பது பயனுறு வகையிலே இருக்கக் கூடியது. ஆனால் இங்கே வந்திருக்கின்றவர்கள் கன்சியூமர் குட்ஸ் அல்ல. இங்கே இருக்கிறவர்கள் எல்லாம் புரடியூசர்ஸ் குட்ஸ். இங்கே இருக்கின்ற நீங்கள் பொருள்களை உற்பத்தி செய்யக்கூடிய மெசின்களை உருவாக்கக் கூடிய மெசின்களைப் போன்றவர்கள்.

பேராசிரியர்களாக, சட்ட வல்லுநர்களாக, மருத்துவர்களாக இருக்கக் கூடிய நாம் எல்லோருமே எங்கே சிக்கல் என்பதை நாம் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். அந்த சிக்கல்களை நாம் சரிப்படுத்தி விட்டால் மற்ற கோரிக்கைகள் என்பது சாதாரணமாக எளிதாக இரு அரசு களாலே நிறைவேற்ற முடியும்.

இரண்டு வகை கோரிக்கைகள்பொதுவாக கோரிக்கைகளை இரண்டு வகைகளாகப் பிரிப்பார்கள். ஒன்று நிதி சார்ந்தவை. மற்றொன்று நிதி சாராதவை என்று பிரிப்பார்கள். Financial Commitment.. Non Financial Commitment என்று சொல்லுவார்கள். அந்த வகையிலே இரண்டும் கலந்திருக்கிறது.

மத்திய அரசும் செய்ய வேண்டியதிருக்கிறது. மாநில அரசும் செய்ய வேண்டியது இருக்கிறது. அய்யா அப்துல்லா பாட்சா அவர்களோடு பேசும்பொழுது சற்று நேரத்திற்கு முன்பு கூட சொன்னேன்.

எல்லோரும் போராட வேண்டிய களம்
எல்லோரும் சேர்ந்து போராடவேண்டிய ஒரு களம் இருக்கிறதென்றால் அது நீதித்துறை.

நீதித்துறையிலே ஒடுக்கப்பட்ட மக்களுடைய போதிய பிரதிநிதித்துவம் வந்தாக வேண்டும் (கைதட்டல்). இன்றைக்கு இருக்கின்ற நீதித்துறைதான் நிர்வாகத் துறையையும் சேர்த்து நடத்திக் கொண்டிருக்கின்றது.

நீதித்துறை தடையாக இருக்கிறது
எந்த ஒரு அரசாங்கம் எவ்வளவு பெரிய சட்டத்தைப் போட்டாலும் அங்கிருக்கின்ற நீதிபதிகள் நினைத்தால் அவர்கள் ஒரு சிகப்பு கோடு போட்டுவிட்டால் அதற்குப் பிறகு மக்களாலே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இதுபோன்ற கருத்தரங்கங்கள், மாநாடுகள், நாம் நடத்திய போராட்டங்கள் அதன் விளைவாக விளைந்த விளைச்சல்கள் எல்லாவற்றையும் மேய்ந்து தீர்த்து விடக் கூடிய அளவுக்கு ஒரு ஆபத்து ஏற்படுகிறதென்றால் நீதித் துறை இந்த நாட்டிலே மிகப் பெரிய அளவுக்கு ஒரு தடையாக இருக்கக் கூடிய ஒரு சூழ்நிலை இன்றைக்கு இருக்கின்றது.

எனவேதான் Adequate Representation என்ற வார்த்தையை மிக அழகாகப் பயன்படுத்துகின்றீர்கள். இந்திய அரசியல் சட்டத் திலே இருக்கின்ற உரிமைகளைத்தான் இந்த சமுதாயம் கேட்கின்றதே தவிர இதற்கு அப்பாற்பட்ட உரிமைகளை வழங்குங்கள் என்று கேட்கவில்லை..

அரசியல் சட்டத்தில் உள்ளதை அமல்படுத்துங்கள்அரசியல் சட்டத்திலே எதை வகுத்துக் கொடுத்திருக்கின்றார்களோ அதை அமல்படுத்துங்கள். உண்மையாக செயல்படுத்துங்கள் என்று சொல்வதற்காகத்தான் நாங்கள் வந்திருக்கின்றோம்.

Adequate Representation என்பதை ஹசவஉமந 14 (4), 15 (4) பகுதியிலே சொல்லப்பட்டிருக்கின்றது. பேராசிரிய பெருமக்களுக்குச் சட்ட நிபுணர்களைக் கொண்ட அவைக்கு இவைகளை எல்லாம் விளக்கமாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

Adequate Representation என்றால் என்ன? இதைத்தானே நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதை எல்லா இடங்களிலும் செயல்படுத்த ஆரம்பித்தால் பிரச்சினை கிடையாது.

அனைவர்க்கும் அனைத்தும்
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும் என்பது தந்தை பெரியாரின் சுய மரியாதை இயக்கத்தின் தொடக்கக் கால திட்டம். எல்லாருக்கும், எல்லாமும் கிடைக்கும்பொழுது யாருக்கும் பிரச்சினை இல்லை. யாரும், யாருக்கும் எதிரிகளாக இல்லை. நாங்கள்தான் அனுபவிக்கப் பிறந்தவர்கள். எங்களுக்கு மட்டும்தான் உண்டு. உங்களுக்கெல்லாம் அந்த தகுதி கிடையாது என்று சொல்லக்கூடிய கூட்டம் ஒன்று இருக்கிறது.

அடிக்குவேட்டஸ்Adequate என்ற வார்த்தையே ஒரு லத்தீன் சொல். அடிக்கு வேட்டஸ் என்பதிலிருந்துதான் வந்த உருவான ஒரு சொல் லாகும். அடிக்குவேட்டஸ் என்ற சொல்லுடைய பொருள் என்ன என்பதை நீங்கள் எந்த அகராதியை எடுத்துப் பார்த்தாலும் தெரிந்து கொள்ளலாம்.

அதாவது மனிதர்கள் சமமாக வருகிறவரையிலே என்று அதற்கு பொருள். யாருக்கு உணவு கிடைக்கவில்லையோ எந்த அரசாக இருந்தாலும் யாருக்கு இதுவரை பந்தியிலே உட்காரக் கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லையோ யாருக்கு உணவு கிடைக்கவில்லையோ, யார் பசியாலே வாடிக் கொண்டிருக்கின்றார்களோ அவர்களை முதலிலே பந்தியிலே உட்கார வைத்து அவர்கள் எல்லாம் சாப்பிட்ட பிற்பாடுதான்.

ஏற்கெனவே உண்டு கொழுத்து கொண்டிருக்கின்றார்களே அவர்களைப் பந்தியிலே அமரவைக்க வேண்டும் என்பதுதான் அடிக்குவேட் ரெப்ரசன் டேசனாகும்.

மக்களுக்கு தெளிவும் - துணிவும் இருக்குமேயானால் சமமாக நிறுத்தப்படவேண்டும். நம்முடைய மக்களுக்கு உணர்ச்சி ஏற்பட்டு, தெளிவும், துணிவும் இருக்குமேயானால், மற்றவர்களுக்குச் சமமாக வருகின்ற வரையிலே எங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் என்று கேட்கவேண்டும்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தால் கம்யூனல். ஜி.ஓ. என்ற வகுப்புவாரி உரிமையை முதல் முறையாக தந்த மண் - இந்த மண்.

அதிலே போதிய பிரதி நிதித்துவம் இருந்திருக்கிறது. இடையிலே அந்த உரிமை பறிக்கப்பட்டது. எப்போது பறிக்கப்பட்டது?

நமக்கு சுதந்திரம் வந்தது என்ற காலத்திலேதான் சுதந்திரம் பறி போனது. இதுதான் அடிப்படையாக உள்ள செய்தி. எனவே பயன்பாட்டில் இருந்த ஒன்றை மாற்றினார்கள்.

அரசியல் சட்டத்தில் 15 (4) என்பதை சுட்டிக்காட்டினார்கள். அரசியல் சட்டத்தால் 15 (4) என்பதற்கு யார் காரணம் என்றால், தந்தை பெரியார் அவர்கள்தான் காரணம்.

முதலாவது அரசியல் சட்டத்திருத்தம் என்பதே கூட தமிழ்நாட்டிலே ஏற்பட்ட கிளர்ச்சியினாலேதான் சமூக நீதிக்கு ஒரு பாதுகாப்பு ஏற்பட்டது. அவர்களே சொன்னார்களே, இட ஒதுக்கீடு என்ற வாய்ப்பு ஏற்பட்டது என்று.

எனவே சட்டம் என்பது வியாக்கியானத்தைப் பொறுத்தது. நீதித்துறையிலே போதுமான அளவுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும். எல்லா மக்களுக்கும் வாய்ப்பு கிடைக்கவேண்டும். நீதித்துறை எப்படி நடந்துகொண்டு வருகிறது?

ஆனால், நீதித்துறை எப்படி நடந்துகொண்டிருக்கின்றது? அதிலே சிறுபான்மை சமுதாயத்திற்கு இடம் இருக்கின்றதா?

இங்கே அமைச்சரவர்கள் சொன்னார்களே, ரொம்ப அழகாக ஒரு விளக்கம் சொன்னார்கள். அதிகாரப் பங்களிப்பு சிறுபான்மை என்று சொல்லும்பொழுது வெறும் எண்ணிக்கையைப் பொறுத்ததல்ல. ஜனநாயகத்தில் அதிகாரத்தை பங்குகொள்வது. நம்முடைய பங்களிப்பு என்ன? நம்முடைய பங்கு அதிகாரம் என்ன? அதிகாரப் பங்களிப்பு இருக்கிறதா இந்த சமுதாயத்திற்கு?

இல்லை.உண்மைகளை ஊரறிய - உலகறியஇந்த உண்மைகளை ஊரறிய உலகறியச் செய்ய வேண்டியது உங்களைப் போன்ற, நம்மைப்போன்ற பேராசிரியர் ஆகியோர்களுடைய கடமை. அப்பொழுதுதான் நீங்கள் அரசாங்கத்திடம் வைக்கின்ற கோரிக்கைக்குப் பலன் ஏற்பட முடியும். என்ன நினைக்கின்றார்கள்?

இந்த அரசாங்கம் எப்பொழுதுமே இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருக்கின்ற அரசாங்கம். அதேபோல கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடியவர்கள். சிறுபான்மை சமுதாயத்திற்கு ஆதரவாக இருக்கக்கூடிய அரசாங்கம்.

அஜீரணத்தால் திணறிக் கொண்டிருக்கின்ற கூட்டம் ஏற்கெனவே பந்தியிலே உட்கார்ந்து மூக்கைப்பிடித்து சாப்பிட்டக்கூட்டம் இருக்கின்றதே, அஜீரணத்தால் திணறிக் கொண்டிருக்கின்ற கூட்டம் இருக்கிறதே அந்த கூட்டம்தான் இப்பொழுது வயிறு எரிந்துக் கொண்டிருக்கின்றது.

இதை எப்படியாவது நீதிமன்றங்களுக்குப் போய் அழித்துவிட வேண்டும் என்று நினைக்கின்றார்கள். வீதிமன்றத்திற்குச் சென்று போராடினால் ஒழிய நீதிமன்றங்கள் வழிக்கு வராது (கைதட்டல்).

நான் எதார்த்தமான உண்மையைச் சொல்லுகின்றேன். ஏனென்றால் எல்லா விளைவுகளுக்கும் சேர்த்து தயாராக இருக்கக் கூடியவர்கள் நாங்கள். எங்களைப் போன்று நீங்கள் வாருங்கள் என்று சொல்லமாட்டோம். நீங்கள் இருக்கிற இடத்திலேயே இருந்துகொண்டு உருவாக்கக் கூடிய கருத்துகளை உருவாக்குங்கள். உரிமைகள் கேட்கும்பொழுது என்ன சொல்லுகிறார்கள்?

வாயும் வயிறும் வேறு
நீயும், நானும் அண்ணன் - தம்பிதான், தாயும் பிள்ளையும் ஒன்றாக இருந்தாலும், வாயும் வயிறும் வேறு. என்னதான் ஒருமைப்பாடு பேசிக் கொண்டிருந்தாலும் நாம் எல்லோரும் சமம் என்றாலும் பக்கத்திலே இருப்பவரின் பையிலே கையை விட்டுக் கொண்டிருந்தால், தொடர்ந்து எடுத்துக் கொண்டே இருந்தால் அவர் எவ்வளவு காலத்திற்குத்தான் பொறுமையாக இருப்பது?

பை என்னுடையது - கை உங்களுடையதுஒரு கால கட்டத்திலே அவர் துணிந்து சொல்லுவார். நாமெல்லாம் சகோதரர்கள்தான். ஆனால் பை என்னுடையது, கை உங்களுடையது என்று சொல்லமாட்டாரா? (கைதட்டல்).

http://viduthalai.com/20080328/news20.html
----------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: