Followers

Thursday, March 27, 2008

மோ(ச)டி அரசுக்கு உச்சநீதிமன்றம் மொத்து!

குஜராத் படுகொலைகள் மீண்டும் விசாரிக்க ஆணை.

புதுடில்லி, மார்ச் 26- இரண்டாயிரம் இசுலாமியர்களுக்கு மேல் கொலை செய்யப்பட்ட, திட்டமிட்ட கோத்ரா கலவரங்கள் தொடர்பாக குஜராத் மாநில பா.ஜ.க. அரசு நடத்திய விசாரணை சரியில்லை என்றும் புதியதாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குஜராத் மாநில அரசின் விசாரணை முறையாக நடத்தப்படவில்லை என மனித உரிமைக் குழு தெரிவித்ததை உச்சநீதி மன்றம் ஏற்றுக் கொண்டது.

புதிதாக விசாரணை செய்யப் படுவதற்கான 5 பேர் கொண்ட விசாரணைக் குழு ஒன்றை உச்ச நீதிமன்றமே நியமித்துள்ளது.

இந்து இருதய சாம்ராட் என்று மதவெறிக் கட்சிகளால் வருணிக்கப்படும் குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடியின் கட்டளைக்கேற்பவே அம்மாநிலக் காவல் துறை செயல்பட்டு நூற்றுக் கணக்கான வழக்குகளை மூடி மறைத்துவிட்டது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவு பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்கான வழிவகைகளைக் காணும் என்று எதிர்பார்க்கலாம்.மூன்று மாதங்களில் சிறப்புப் புலனாய்வுக் குழு தன் அறிக்கையைத் தரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதைக்கப்பட்ட பல கொலைகளையும் மனித எலும்புக் கூடுகளையும் புதிய புலனாய்வு வெளியே கொண்டு வரும். சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று பயந்து கொண்டிருந்த நரேந்திர மோடிக்கு ஆறுதலாகவும் இது அமைந்துள்ளது.

அய்ந்துபேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று அய்.பி.எஸ். அதிகாரிகளும் ஓய்வு பெற்ற சி.பி.அய். இயக்குநர் ஒருவரும் உத்தரப் பிரதேசக் காவல்துறை அலுவலர் ஒருவரும் உள்ளனர். குஜராத் மாநிலக் காவல்துறை அதிகாரிகளின் பெயர்களை நரேந்திர மோடியே பரிந்துரைத்துள்ளாராம்.சிறப்புப் புலனாய்வுக் குழு 10 கலவரங்கள் தொடர்பான வழக்குகளைப் புலனாய்வு செய்யும். ஏற்கெனவே, பாதிக்கப்பட்டவர்களும், கலவரத்தில் இந்து மத வெறியர்களால் திட்டமிட்டுக் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும் கொடுத்த புகார் மனுக்கள் காவல்துறையினரால் பதிவு செய்யப்படவே இல்லை.

இந் நிலையில் உச்சநீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து ஆணைகளை இன்று (புதன்) பிறப்பிக்கும். அதன் பிறகு தம் கருத்தைக் கூறுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.
http://viduthalai.com/20080326/news04.html

1 comment:

Thamizhan said...

நான் அடிக்கிற மாதிரி நடிக்கிறேன்.

நீ அழுவது மாதிரி நடி. என்றுள்ளது

உச்ச அநீதி மன்றம்.இந்த பெஞ்சின் மூத்த நீதி பதியின் மத வெறி நன்கு அறியப் பட்டதுதான்.கூட இரண்டு பேர் அதிலும் ஒரு தமிழர் சேர்ந்துள்ளது மூத்த நீதிபதிகளின் ஆதிக்கத்தைக் காண்பிக்கிறது. குஜராத்தில் நியாயமா?