Followers

Monday, March 31, 2008

பாஸ்வேர்டு திருடும் பார்ப்பன தீவிரவாதிகள் !!!! ?????.

பாஸ்வேர்டு திருடும் பார்ப்பன தீவிரவாதிகள் !!!! ?????.

( தகவல் சுருக்கப்பட்டுள்ளது.)
Hello members and friends,Actually our head loss his mail id through the below websites:
http://ux-antique-w
http://t93t4ojxy39a.blogspot.com
http://www.usa-antivirus.com/
http://antispycompani.com/
http://xd-country-music-lyrics.blogspot.com/agon-wheels.blogspot.com/Attention please!Virus Protect http://antispycompani.com/Remove all viruses, spyware and adware!http://tinyurl.com/yu7csp
http://wapurl.co.uk/?QF5II6Z

This website is running from USA, conducted by tamil brahmins group,

they are working in USA.
After they catch our email id, they delete our orkut, blog and capture our credit card info and so on. So please dont click the above links.
Rgds,Ramesh.

பிற்சேர்க்கை: NHM என்ற தமிழ் எழுதியை தயார் செய்து அதற்குள் கீலாக்கர் வைத்து அனைவருக்கும் இலவசமாக கொடுக்கின்றனர் எனவே மேற்கொண்ட தமிழ் எழுதியை பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும். பயன்படுத்தி ஈமெயில், கிரெடிட் கார்டு, ரகசியங்கள் தொலைந்தால் அப்போது தெரியும். பார்ப்பனர் அல்லாதவர்கள் அந்த மென்பொருளை தவைர்க்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
மேலே உள்ள ஸ்பை கம்பெனிகளை நடத்துபவர்களும் பிராமனர்களே..
( தகவல்: ஒரு ப்ளாக்ஸ்பாட் Friday, March 14, 2008
தகவல் சுருக்கப்பட்டுள்ளது )
-----------------------------------------------
மேற்கண்ட தகவல் ஒரு ப்ளாக்ஸ்பாட்டில் காணப்பட்டது.
இதைப்பற்றி தாங்க‌ளுக்கு தெரிந்த தகவல்களை அன்பு கூர்ந்து வாசக்ர்கள் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். --நட்புடன் திராவிடன்

--------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

ஏசுவைக் கொல்லும்போது அவர்அணிந்திருந்த துணி.? கதை விடுகிறார்கள்! .

கரூரில் புனித தெரசா சர்ச்சின் பங்குத் தந்தையின் அலுவலகத்தில் படம் ஒன்று இருக்கிறதாம்.

ஏசுவின் படம். இத்தாலி நாட்டு டூரின் சர்ச்சில் வைக்கப்பட்ட ஏசுவின் கோடித் துணியின் படம் (பிணத்தில் மேல் போடப்படும் துணி) என்று கதை விடுகிறார்கள்.

ஏசுவைக் கொல்லும்போது அவர்அணிந்திருந்த துணி என்று கதை விட்டார்கள். துணியைக் கார்பன் பரிசோதனை செய்து அதன் காலம் 14-ஆம் நூற்றாண்டு என்று கூறி விட்டார்கள்.

வெட்கங் கெட்டவர்கள், மீண்டும் மீண்டும் அதே பொய்யைக் கூறிக் கொண்டிருக்கிறார்கள் இந்தியாவில்! இத்தாலியில் யாரும் இந்தப் பொய்யை இப்போது கூறுவதில்லை!

அங்கே விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது. இங்கே அஞ்ஞானம் நீடித்திருக்கின்றது!
http://viduthalai.com/20080112/snews07.html
---------------------------------------------
அப்பா‍ மகன்:http://viduthalai.com/20080330/news05.html
------------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

Sunday, March 30, 2008

சன் டி.வி?? சங் டி.வி?? "வீடு பற்றியெறியும் போது அதில் பீடிபற்ற வைக்கும்'' நல்ல (?) உள்ளங்கள் மீடியாவிலும் உண்டல்லவா?

சங் டி.வி ( சன் டி.வி.) யின் சேவை!.

""வீடு பற்றியெறியும் போது அதில் பீடிபற்ற வைக்கும்'' நல்ல (?) உள்ளங்கள் மீடியாவிலும் உண்டல்லவா?

சேது சமுத்திரத் திட்டத்தை ராமாயணத்தின் பேரால் மதவெறிக் கும்பல் முடக்கிப்போட முயலும்போது அவர்களுக்கு மேலும் ஊக்கமூட்டுவது போல, ராமாயணம் தொடரை ஒளிபரப்பி வருகிறது, இன்னும் அறிவாலயத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் சன் டி.வி.

தி.மு.க. தொண்டர்களை மட்டுமின்றி திராவிட உணர்வாளர்கள் அனைவரையும், இந்த துரோகம் கொதிப்படைய வைத்துள்ளது. பாபரி மஸ்ஜித் பிரச்சினை சூடுபிடித்தபோது, அத்வானி ர(த்)த யாத்திரை கிளம்பினார்.

தூர்தர்ஷன் ராமாயணத்தை ஒளிபரப்பி மதவெறி நெருப்பில் பெட்ரோல் ஊற்றியது. இறுதியில் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது.

இப்போது சேதுக் கால்வாய் பிரச்சினை பற்றியெரியும் போது ராமாயணத்தை ஆரம்பித்துள்ளது சன் டி.வி. திராவிட இயக்கத்தின் தோள்களில் ஏறி சிகரம் தொட்டதற்கு நன்றிக் கடனல்லவா இது?

""வேப்பமர உச்சியின் நின்று பேயொன்று ஆடுதுன்னு விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க - உன் வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க...'' என்று அக்காலத்தில் திரைப்படப் பாடல்கள் வாயிலாகப் பகுத்தறிவு பரப்பப்பட்டது.

பகுத்தறிவுப் பாதையில் வந்த திமுக வின் தோள்களில் பயணித்த சன் டி.வி., மூடநம்பிக்கைகளை பரப்பும் போட்டியில் முதல் பரிசு பெற்றது.

ராசிபலன், மாயமந்திரத் தொடர்கள், குடும்ப உறவுகளை சீரழிக்கும் தொடர்கள் என சகல தீமைகளையும் வளர்த்துவந்த சன் டி.வி., ராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்று இயக்கம் நடத்திய அண்ணாவின் பெயரில் அமைந்துள்ள அறிவாலயத்தில் அமர்ந்து கொண்டு ராமாயணத்தைப் பரப்புகிறது சன் டி.வி.

தீட்டிய மரத்தில் கூர் பார்ப்பது என்று பழமொழி உண்டு. சவாரி செய்த முதுகிலேயே சரமாரி குத்திப் பார்க்கிறதோ சன் டி.வி? ---கவின் முஹம்மது.
http://www.tmmkonline.org/tml/others/108572.htm
---------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

Saturday, March 29, 2008

நாம் வீதி மன்றங்களுக்குச் சென்று போராடினால்தான் நீதிமன்றங்கள் நம் வழிக்கு வரும்

சென்னை, நவ.28- நாம் நமது உரிமைகளைப் பெற நீதிமன்றங்களைத் திருத்திட வீதி மன்றத்திற்குச் சென்று போராடினால் ஒழிய நீதிமன்றங்கள் வழிக்கு வராது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

கலைஞர் அரசில்தான் முதல் முறையாக வரலாற்றை உருவாக்கிய ஒரு பொற்காலத்தை நாம் அறிந்திருக்கின்றம்.அதுதான் துணிந்து இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமல்ல, சிறுபான்மை சமுதாய மக்களுக்கு இட ஒதுக்கீடு 3.5. ஒரு பக்கத்தில் எதிர்ப்புக் குரல்கள் எல்லாம் ஒலித்தது. அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.

இந்த அரசு மக்களுடைய பிரச்சினைகளைக் கேட்கின்ற காது. இந்த அரசுதான் மக்களுக்கு உதவி புரிகின்ற கரங்கள்.
தட்டாமலேயே திறக்கின்ற அரசு - கலைஞர் அரசுதட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் என்றுதான் கடவுள் நம்பிக்கையாளர்கள், மத நம்பிக்கை யாளர்கள் சொல்லியிருக்கின்றார்கள். அப்படியானால் என்ன அர்த்தம்? கதவு சாத்தியிருந்தால்தான் தட்ட வேண்டும். திறந்திருக்கின்ற இடத்திலே தட்ட வேண்டிய அவசியமே கிடையாது.

ஆனால் ஒரு வித்தியாசம். கலைஞர் அரசு எப்பொழுதுமே கதவைத் திறந்து வைத்திருக்கின்ற அரசு. எனவே கலைஞர் அரசிடம் உங்களுக்குத் தட்டவேண்டிய அவசியமே கிடையாது. தட்டாமலேயே திறந்திருக்கின்ற அரசுதான் கலைஞர் அரசு. இங்கே உரிமைக்கு குரல் கொடுத்திருக்கின்றீர்கள்.

நோய் நாடி நோய் முதல் நாடவேண்டும். அடித்தளத்திற்கே செல்லவேண்டும். ஏனென்றால் இங்கே அமர்ந்திருக்கின்ற எல்லோருமே பேராசிரிய பெருமக்கள். கல்வியை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கக் கூடியவர்கள்.

புரடியூசர்ஸ் குட்ஸ் என்று பொருளாதாரத்திலே ஒரு செய்தியை சொல்லுவார்கள்.

மெசின்களை உருவாக்குகின்ற மெசின்கள் Machines that make Machines. கன்சியூமர் குட்ஸ் என்பது பயனுறு வகையிலே இருக்கக் கூடியது. ஆனால் இங்கே வந்திருக்கின்றவர்கள் கன்சியூமர் குட்ஸ் அல்ல. இங்கே இருக்கிறவர்கள் எல்லாம் புரடியூசர்ஸ் குட்ஸ். இங்கே இருக்கின்ற நீங்கள் பொருள்களை உற்பத்தி செய்யக்கூடிய மெசின்களை உருவாக்கக் கூடிய மெசின்களைப் போன்றவர்கள்.

பேராசிரியர்களாக, சட்ட வல்லுநர்களாக, மருத்துவர்களாக இருக்கக் கூடிய நாம் எல்லோருமே எங்கே சிக்கல் என்பதை நாம் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். அந்த சிக்கல்களை நாம் சரிப்படுத்தி விட்டால் மற்ற கோரிக்கைகள் என்பது சாதாரணமாக எளிதாக இரு அரசு களாலே நிறைவேற்ற முடியும்.

இரண்டு வகை கோரிக்கைகள்பொதுவாக கோரிக்கைகளை இரண்டு வகைகளாகப் பிரிப்பார்கள். ஒன்று நிதி சார்ந்தவை. மற்றொன்று நிதி சாராதவை என்று பிரிப்பார்கள். Financial Commitment.. Non Financial Commitment என்று சொல்லுவார்கள். அந்த வகையிலே இரண்டும் கலந்திருக்கிறது.

மத்திய அரசும் செய்ய வேண்டியதிருக்கிறது. மாநில அரசும் செய்ய வேண்டியது இருக்கிறது. அய்யா அப்துல்லா பாட்சா அவர்களோடு பேசும்பொழுது சற்று நேரத்திற்கு முன்பு கூட சொன்னேன்.

எல்லோரும் போராட வேண்டிய களம்
எல்லோரும் சேர்ந்து போராடவேண்டிய ஒரு களம் இருக்கிறதென்றால் அது நீதித்துறை.

நீதித்துறையிலே ஒடுக்கப்பட்ட மக்களுடைய போதிய பிரதிநிதித்துவம் வந்தாக வேண்டும் (கைதட்டல்). இன்றைக்கு இருக்கின்ற நீதித்துறைதான் நிர்வாகத் துறையையும் சேர்த்து நடத்திக் கொண்டிருக்கின்றது.

நீதித்துறை தடையாக இருக்கிறது
எந்த ஒரு அரசாங்கம் எவ்வளவு பெரிய சட்டத்தைப் போட்டாலும் அங்கிருக்கின்ற நீதிபதிகள் நினைத்தால் அவர்கள் ஒரு சிகப்பு கோடு போட்டுவிட்டால் அதற்குப் பிறகு மக்களாலே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இதுபோன்ற கருத்தரங்கங்கள், மாநாடுகள், நாம் நடத்திய போராட்டங்கள் அதன் விளைவாக விளைந்த விளைச்சல்கள் எல்லாவற்றையும் மேய்ந்து தீர்த்து விடக் கூடிய அளவுக்கு ஒரு ஆபத்து ஏற்படுகிறதென்றால் நீதித் துறை இந்த நாட்டிலே மிகப் பெரிய அளவுக்கு ஒரு தடையாக இருக்கக் கூடிய ஒரு சூழ்நிலை இன்றைக்கு இருக்கின்றது.

எனவேதான் Adequate Representation என்ற வார்த்தையை மிக அழகாகப் பயன்படுத்துகின்றீர்கள். இந்திய அரசியல் சட்டத் திலே இருக்கின்ற உரிமைகளைத்தான் இந்த சமுதாயம் கேட்கின்றதே தவிர இதற்கு அப்பாற்பட்ட உரிமைகளை வழங்குங்கள் என்று கேட்கவில்லை..

அரசியல் சட்டத்தில் உள்ளதை அமல்படுத்துங்கள்அரசியல் சட்டத்திலே எதை வகுத்துக் கொடுத்திருக்கின்றார்களோ அதை அமல்படுத்துங்கள். உண்மையாக செயல்படுத்துங்கள் என்று சொல்வதற்காகத்தான் நாங்கள் வந்திருக்கின்றோம்.

Adequate Representation என்பதை ஹசவஉமந 14 (4), 15 (4) பகுதியிலே சொல்லப்பட்டிருக்கின்றது. பேராசிரிய பெருமக்களுக்குச் சட்ட நிபுணர்களைக் கொண்ட அவைக்கு இவைகளை எல்லாம் விளக்கமாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

Adequate Representation என்றால் என்ன? இதைத்தானே நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதை எல்லா இடங்களிலும் செயல்படுத்த ஆரம்பித்தால் பிரச்சினை கிடையாது.

அனைவர்க்கும் அனைத்தும்
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும் என்பது தந்தை பெரியாரின் சுய மரியாதை இயக்கத்தின் தொடக்கக் கால திட்டம். எல்லாருக்கும், எல்லாமும் கிடைக்கும்பொழுது யாருக்கும் பிரச்சினை இல்லை. யாரும், யாருக்கும் எதிரிகளாக இல்லை. நாங்கள்தான் அனுபவிக்கப் பிறந்தவர்கள். எங்களுக்கு மட்டும்தான் உண்டு. உங்களுக்கெல்லாம் அந்த தகுதி கிடையாது என்று சொல்லக்கூடிய கூட்டம் ஒன்று இருக்கிறது.

அடிக்குவேட்டஸ்Adequate என்ற வார்த்தையே ஒரு லத்தீன் சொல். அடிக்கு வேட்டஸ் என்பதிலிருந்துதான் வந்த உருவான ஒரு சொல் லாகும். அடிக்குவேட்டஸ் என்ற சொல்லுடைய பொருள் என்ன என்பதை நீங்கள் எந்த அகராதியை எடுத்துப் பார்த்தாலும் தெரிந்து கொள்ளலாம்.

அதாவது மனிதர்கள் சமமாக வருகிறவரையிலே என்று அதற்கு பொருள். யாருக்கு உணவு கிடைக்கவில்லையோ எந்த அரசாக இருந்தாலும் யாருக்கு இதுவரை பந்தியிலே உட்காரக் கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லையோ யாருக்கு உணவு கிடைக்கவில்லையோ, யார் பசியாலே வாடிக் கொண்டிருக்கின்றார்களோ அவர்களை முதலிலே பந்தியிலே உட்கார வைத்து அவர்கள் எல்லாம் சாப்பிட்ட பிற்பாடுதான்.

ஏற்கெனவே உண்டு கொழுத்து கொண்டிருக்கின்றார்களே அவர்களைப் பந்தியிலே அமரவைக்க வேண்டும் என்பதுதான் அடிக்குவேட் ரெப்ரசன் டேசனாகும்.

மக்களுக்கு தெளிவும் - துணிவும் இருக்குமேயானால் சமமாக நிறுத்தப்படவேண்டும். நம்முடைய மக்களுக்கு உணர்ச்சி ஏற்பட்டு, தெளிவும், துணிவும் இருக்குமேயானால், மற்றவர்களுக்குச் சமமாக வருகின்ற வரையிலே எங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் என்று கேட்கவேண்டும்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தால் கம்யூனல். ஜி.ஓ. என்ற வகுப்புவாரி உரிமையை முதல் முறையாக தந்த மண் - இந்த மண்.

அதிலே போதிய பிரதி நிதித்துவம் இருந்திருக்கிறது. இடையிலே அந்த உரிமை பறிக்கப்பட்டது. எப்போது பறிக்கப்பட்டது?

நமக்கு சுதந்திரம் வந்தது என்ற காலத்திலேதான் சுதந்திரம் பறி போனது. இதுதான் அடிப்படையாக உள்ள செய்தி. எனவே பயன்பாட்டில் இருந்த ஒன்றை மாற்றினார்கள்.

அரசியல் சட்டத்தில் 15 (4) என்பதை சுட்டிக்காட்டினார்கள். அரசியல் சட்டத்தால் 15 (4) என்பதற்கு யார் காரணம் என்றால், தந்தை பெரியார் அவர்கள்தான் காரணம்.

முதலாவது அரசியல் சட்டத்திருத்தம் என்பதே கூட தமிழ்நாட்டிலே ஏற்பட்ட கிளர்ச்சியினாலேதான் சமூக நீதிக்கு ஒரு பாதுகாப்பு ஏற்பட்டது. அவர்களே சொன்னார்களே, இட ஒதுக்கீடு என்ற வாய்ப்பு ஏற்பட்டது என்று.

எனவே சட்டம் என்பது வியாக்கியானத்தைப் பொறுத்தது. நீதித்துறையிலே போதுமான அளவுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும். எல்லா மக்களுக்கும் வாய்ப்பு கிடைக்கவேண்டும். நீதித்துறை எப்படி நடந்துகொண்டு வருகிறது?

ஆனால், நீதித்துறை எப்படி நடந்துகொண்டிருக்கின்றது? அதிலே சிறுபான்மை சமுதாயத்திற்கு இடம் இருக்கின்றதா?

இங்கே அமைச்சரவர்கள் சொன்னார்களே, ரொம்ப அழகாக ஒரு விளக்கம் சொன்னார்கள். அதிகாரப் பங்களிப்பு சிறுபான்மை என்று சொல்லும்பொழுது வெறும் எண்ணிக்கையைப் பொறுத்ததல்ல. ஜனநாயகத்தில் அதிகாரத்தை பங்குகொள்வது. நம்முடைய பங்களிப்பு என்ன? நம்முடைய பங்கு அதிகாரம் என்ன? அதிகாரப் பங்களிப்பு இருக்கிறதா இந்த சமுதாயத்திற்கு?

இல்லை.உண்மைகளை ஊரறிய - உலகறியஇந்த உண்மைகளை ஊரறிய உலகறியச் செய்ய வேண்டியது உங்களைப் போன்ற, நம்மைப்போன்ற பேராசிரியர் ஆகியோர்களுடைய கடமை. அப்பொழுதுதான் நீங்கள் அரசாங்கத்திடம் வைக்கின்ற கோரிக்கைக்குப் பலன் ஏற்பட முடியும். என்ன நினைக்கின்றார்கள்?

இந்த அரசாங்கம் எப்பொழுதுமே இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருக்கின்ற அரசாங்கம். அதேபோல கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடியவர்கள். சிறுபான்மை சமுதாயத்திற்கு ஆதரவாக இருக்கக்கூடிய அரசாங்கம்.

அஜீரணத்தால் திணறிக் கொண்டிருக்கின்ற கூட்டம் ஏற்கெனவே பந்தியிலே உட்கார்ந்து மூக்கைப்பிடித்து சாப்பிட்டக்கூட்டம் இருக்கின்றதே, அஜீரணத்தால் திணறிக் கொண்டிருக்கின்ற கூட்டம் இருக்கிறதே அந்த கூட்டம்தான் இப்பொழுது வயிறு எரிந்துக் கொண்டிருக்கின்றது.

இதை எப்படியாவது நீதிமன்றங்களுக்குப் போய் அழித்துவிட வேண்டும் என்று நினைக்கின்றார்கள். வீதிமன்றத்திற்குச் சென்று போராடினால் ஒழிய நீதிமன்றங்கள் வழிக்கு வராது (கைதட்டல்).

நான் எதார்த்தமான உண்மையைச் சொல்லுகின்றேன். ஏனென்றால் எல்லா விளைவுகளுக்கும் சேர்த்து தயாராக இருக்கக் கூடியவர்கள் நாங்கள். எங்களைப் போன்று நீங்கள் வாருங்கள் என்று சொல்லமாட்டோம். நீங்கள் இருக்கிற இடத்திலேயே இருந்துகொண்டு உருவாக்கக் கூடிய கருத்துகளை உருவாக்குங்கள். உரிமைகள் கேட்கும்பொழுது என்ன சொல்லுகிறார்கள்?

வாயும் வயிறும் வேறு
நீயும், நானும் அண்ணன் - தம்பிதான், தாயும் பிள்ளையும் ஒன்றாக இருந்தாலும், வாயும் வயிறும் வேறு. என்னதான் ஒருமைப்பாடு பேசிக் கொண்டிருந்தாலும் நாம் எல்லோரும் சமம் என்றாலும் பக்கத்திலே இருப்பவரின் பையிலே கையை விட்டுக் கொண்டிருந்தால், தொடர்ந்து எடுத்துக் கொண்டே இருந்தால் அவர் எவ்வளவு காலத்திற்குத்தான் பொறுமையாக இருப்பது?

பை என்னுடையது - கை உங்களுடையதுஒரு கால கட்டத்திலே அவர் துணிந்து சொல்லுவார். நாமெல்லாம் சகோதரர்கள்தான். ஆனால் பை என்னுடையது, கை உங்களுடையது என்று சொல்லமாட்டாரா? (கைதட்டல்).

http://viduthalai.com/20080328/news20.html
----------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

மதவெறி சிவசேனா பிளவுபட்டது

வட இந்தியத் தலைவர்கள் கூண்டோடு விலகினர்.

புதுடில்லி, மார்ச் 27- புதன்கிழமையன்று சிவசேனா கட்சி உடைந்தது.

வட மாநிலத்தவர்க்கெதிரான போராட்டங்களில் சிவசேனா மகாராட்டிரத்தில் ஈடுபட்டதால், அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஒட்டு மொத்தமாக விலகி விட்டதால், கட்சி பிளவுபட்டு விட்டது.

வட இந்திய சிவசேனா தலைவர் பகவான் கோயல் என்பார் சிவசேனாவின் நடவடிக்கைகளால் நாடு பிளவுண்டு போகும் அபாயம் உள்ளது எனக் கூறினார்.

கடந்த 20 ஆண்டுகளாக அக்கட்சியில் தொடர்புடைய இவர் ஜார் கண்ட், இமாச்சலப் பிரதேசம், டில்லி, அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் செல்வாக்கு உடையவர்.சிவசேனா கட்சி என்பது பால்தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோரின் பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக உள்ளது என்றார்.

கட்சியை விட்டு விலகிய தலைவர்கள் ஜார்கண்ட் மாநிலத் தலைவர் தீனநாத் பாண்டே, இமாச்சலப் பிரதேசத் தலைவர் மதுக்கர் டோக்ரி ஆகியோர் ஆவர். புதிய கட்சியைத் தொடங்கப் போவதாக இவர்கள் அறிவித்துள்ளனர்.
http://viduthalai.com/20080327/news03.html
--------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

அரசு அலுவலகமா? கள்ளழகர் ஓய்விடமா?

கடவுள், மூட நம்பிக்கை. கோயில் விழாக்கள் காட்டுவிலங்காண்டித்தனம்.

அரசின் அலுவலகங்களின் பணியாளர்கள் விழாவில் பங்கு பெறுவது மதச் சார்பின்மைக்கு எதிர்.

இந்த நிலையில், கோயில் விழாக்களையே துறையின் சார்பாக நடத்துவது என்பது சட்ட விரோதம்.கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மாசி மக விழாவில், ஒரு நாள் விழாவை வருவாய்த் துறை நடத்துவதும், ஒரு நாள் விழாவைப் பொதுப் பணித்துறை நடத்துவதும் சட்ட விரோதம்.

கடலூர் குரங்கு (அனுமார்) கோயில் விழாவில் ஒரு நாள் விழாவை மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பணியாளர்கள் நடத்துவதும் சட்டப்படி தவறு.

இதே மாதிரி ஊரூருக்கு ஒரு விழாவில் அரசுப் பணியாளர்கள் பங்கெடுத்து அரசின் மதச் சார்பற்ற கொள்கைக்கு எதிர்ப்பு காட்டி வருகிறார்கள்.

கடவுளை நம்புவதும், கும்பிடுவதும், விழாக் கொண்டாடுவதும் அவரவர் தனிப் பிரச்சினை.
விழாவுக்குப் போவதும், பங்கெடுப்பதும், நன்கொடை கொடுப்பதும்கூட, தனி நபர் விருப்பம்தான்.
குறிப்பிட்ட அளவு நன்கொடை அளிக்கவேண்டும் என்று அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் உள்ளன. ஆனால், அரசு அலுவலகங்களில் கடவுள் விழா நடத்துவது தவறு; குற்றம்.

அப்படி ஒரு விழாவை, அரசு அலுவலகத்தில் நடத்தவேண்டும் என்று போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள் மதுரையில்! இவர்கள் கடவுளைத் தேடிப் போகாமல், கடவுள் இவர்களை நாடி வருகிறதாம்.

சித்திரைத் திருவிழாவின்போது கள்ளழகர் உலா என்ற மூடத்தனமும், பைத்தியக்காரத்தனமும் நிரம்பிய விழாவின்போது அதைச் சுமந்து கொண்டு தெருத் தெருவாகச் சுற்றுவார்களாம். வழியில் அந்தப் பொம்மையைக் கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் இறக்கி வைப்பார்களாம். தனியார் இடங்களிலும் இறக்கி எக்சிபிஷன் நடத்துவார்களாம். இதற்குக் கட்டணம் கட்டவேண்டுமாம்.

இதில் அரசு அலுவலகங்களும் அடங்குமாம். கலெக்டர் பங்களா, காவல்துறை, பொதுப் பணித்துறை, மின் வாரியம் என்று பல அரசு அலுவலகங்களிலும் காசு கொடுத்துக் கள்ளழகரைத் தங்க வைத்துக் கடவுளின் கருணா கடாட்சத்திற்குப் பாத்திரமாவார்களாம் அரசு அதிகாரிகள்.
அப்படி ஓர் அலுவலகத்தில் இந்தக் காரியத்தை நடத்திக் கொண் டிருப்பவர்கள் ஓய்வு பெற்ற அரசுப் பணியாளர்கள். மாவட்டத் தொழில் மய்ய அலுவலகத்தில் பணியாற்றியவர்கள் இந்தக் காரியத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

எல்லாம் வசூல் விசயம்தான்!
அலுவலகத்தின் உள்ளே வைத்துக் கொள்ளாதீர்கள்; அலுவலகத்தின் எதிரே வைத்துக் கொள்ளுங்கள் என்று அலுவலக உயர் அதிகாரி (பொது மேலாளர்) கூறினாராம். குதிக்கிறார்கள் பக்தர்கள்.காரணம்?

பொது மேலாளர் கிறித்தவர். விவகாரத்தை இந்துக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் பேசிய ஜூனியர் விகடன் ஆள்களிடம் கலெக்டர் கூறியதாக அந்த ஏடு எழுதியிருப்பது இதுதான்: நான் இன்ன மதத்தைச் சேர்ந்தவன். அதனால் பொது இடத்தில் பிற மதக் கடவுள் உள்ளே வரக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது என்று கூறினாராம்.

இது உண்மையானால், நமக்குத் தேவைப்படும் விளக்கம் ஒன்றுதான். அரசு அலுவலகம் திருவிழா நடத்தும் பொது இடமா?

மதச்சார்பற்ற அரசின் அலுவலகத்தில் கடவுள் படங்களே இருக்கக்கூடாது என்பது அரசு ஆணை. வழிபாட்டு இடங்களோ, கோயில்களோ, அதுபற்றிய வாசகங்களோ இடம்பெறக்கூடாது என்பதும் அரசின் ஆணைதான்.மதுரை மாவட்டக் கலெக்டருக்கு இவை தெரியாதா?

அரசுப் பணியிடத்தைப் பஜனை மடமாக்க விரும்பும் பார்ப்பனப் பத்திரிகை யாளர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டாமா?

அரசுக் கொள்கைக்கு எதிர்ப்பாக, ஆணைகளுக்கு எதிராக இவர் செயல்பட்டுவிட முடியாதே! அரசின் ஆணைப்படி அரசின் கொள்கைகளைச் செயல்படுத்த முனையும் ஓர் அலுவலரை முடக்கிப் போட முயல்கிறார்கள். சமூக சீர்திருத்தத் துறை இதில் கவனம் செலுத்தி விரைந்து செயல்பட வேண்டும்!- அரசு
http://viduthalai.com/20080328/news04.html
--------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

Friday, March 28, 2008

20 ஆயிரம் கிறித்துவர்கள் பேர் மதம் மாற முடிவு. " கிறிஸ்தவ ஜாதி சனியன் "ஜாதியை கைவிட மறுப்பு எறையூரில்

" கிறிஸ்தவ ஜாதி சனியன்".

உளுந்தூர்பேட்டை, மார்ச் 27- விழுப்புரம் மாவட்டத்தில் எறையூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட கிறித்துவர்களுக்கு தனிப்பங்கு கொடுக்காவிடில் இங்கு வசிக்கும் சுமார் 20 ஆயிரம் வன்னிய கிறித்துவர்கள், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் மதத்துக்கு மாறுவது என முடிவு செய்துள்ளனர்.

உளுந்தூர்பேட்டை வட்டம், எறையூரில் ஊராட்சி மன்றத் தலைவர், முன்னாள் தலைவர்கள், மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடந்த பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: எறையூரில் நீண்டகாலமாக இருந்து வரும் நடைமுறையை அழித்து கிறித்துவ வன்னியர்களின் உணர்வுகளை குழி தோண்டி புதைத்ததற்கும், நடந்து முடிந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கும் எறையூர் குருக்களும், ஆயரும் எடுத்த முடிவுகளே காரணம்.

பொது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் ஆயர் எடுத்த முடிவுகள், வருங்காலத்தில் கிறித்துவ மதத்துக்குள் அரசியலையும், சாதியையும் கொண்டு வருவதுடன் பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும் என்பதால் தாழ்த்தப் பட்ட கிறித்துவர்களுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் தனிப் பங்கு கொடுக்க வேண்டும்.

தனிப் பங்கு கொடுக்காவிடில் எறையூரில் வசிக்கும் சுமார் 20 ஆயிரம் வன்னிய கிறித்துவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் மதத்துக்கு மாறுவது என கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.எறையூரில் தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள் ஒரு சார்பாக நடத்தப்படுவதைக் கண்டித்து அவர்கள் தனியாக ஒரு தேவாலத்தை கட்டிக் கொண்டனர்.

அதில் ஒரு பாதிரியார் வந்து வழிபாடுகளை நடத்த வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது நடந்த தடியடி மற்றும் துப்பாக்கிச் சூட்டில் இருவர் இறந்தனர்.

இனி எல்லோரும் பொது வான பாதையையே பயன் படுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட கிறித்தவர்களைத் தனிப் பாதையில் செல்லுமாறு சொல்லக் கூடாது என்றும் கடந்த வார பேராயர் அந்தோணி ஆனந்தராயர் கூறினார்.மேலும் வன்னிய கிறித்து வர்களுக்கும், தாழ்த்தப்பட்ட கிறித்துவர்களுக்கும் தனித் தனியே கோயில் கட்ட முடியாது என்றும் எல்லா கிறித்தவர்களுக்கும் பொதுவானது தான் தேவாலயம் என்றும் அவர் கூறினார்.இதற்கிடையில் இரு தினங்களுக்கு முன்பு இறந்த தாழ்த் தப்பட்ட கிறித்துவப் பெண் ணின் இறுதி ஊர்வலம் பொதுப் பாதை வழியாக அமைதியாகச் சென்றது.

கண்டனம் தம் மாறினாலும் சாதியத்தை கைவிட மறுக்கும் வன்னிய கிறித்துவர்கள் வேறு மதத்துக்குச் செல்வதைப்பற்றி கிறித்துவ மதத் தலைவர்கள் கவலைப்படக் கூடாது என்று இந்தியக் குடியரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் செ.கு. தமிழரசன் கூறியுள்ளார்.
http://viduthalai.com/20080327/news21.html
-------------
படிக்கவும்:
பைபிளில்- பெண்களின் இழி நிலை .என்ன கொடுமை.

பைபிளின் 20,000 to 50,000பிழைகள். சில பகுதிகள் உண்மையல்ல ஆதலால் பைபிளின் மீது ஆணையாக சத்தியம் கூடாது.> கத்தோலிக்க திருச்சபை.

பைபிளின் வகைகள்-- பைபிளில் அக்கிரமஙகள் ஆபாச, காம அபத்தஙகள் ஒழுக்க எதிர்மறைகள், பெண் இழிவு

ஏசு கடவுள் அல்ல - பைபிள் புரட்டுகள். கிறித்தவ மதத்தில் A to Z வரை பிரிவுகள்:

" கிறிஸ்தவ ஜாதி சனியன்" . இந்து வெளியே போனாலும், உள்ளே வருகிறது ஜாதி!

இந்துத்துவா - இந்து மதம் மாறினாலும் இந்துக் கோயிலுக்குள் செல்ல அனுமதி உண்டா? குப்பையில் போக வேண்டியது எது?

மற்ற பதிவுகளுக்கு:- சிந்திக்க உண்மைகள்

கிறித்துவ, இசுலாமியப் பிள்ளைகளுக்கு விபூதி நாமம் !!!! ஆசிரியர்களுக்கு அறிவு வ(ள)ரவேண்டும்!

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் தொடங்கி விட்டன. 20 பேர் குறைய, எட்டு லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகிறார்கள்.

இவர்கள் தேர்வுக்குப் படிக்கும் நேரத்தில் கோயில்களில் நடத்தப்பட்ட அக்கிரமத்தைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.

எல்லாக் கோயில்களிலும் ஒலி பெருக்கி அலறிக் கொண்டே இருந்தது. கடவுளை எழுப்புகிறார்களா?

இப்படிச் சத்தம் போடும் ஒலி பெருக்கி எந்த ஆகம விதியின்படி வைக்கப்பட்டது?

தமிழில் பாடுவதற்குக் கூப்பாடு போடுபவர்கள் என்ன பதில் கூறுகிறார்கள்?

தேர்வுக்குப் பக்தனின் பிள்ளைகளும் படிக்கிறார்கள். அர்ச்சகர்களின் பிள்ளைகளும் படிக்கிறார்கள். ஆனாலும் ஒலி பெருக்கி கத்திக் கொண்டே இருக்கிறது. இதை நிறுத்த வேண்டும் என்று பல ஊர்களிலும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கழகம் பல ஊர்களில் தீர்மானமே போட்டு அனுப்பியது. கோயில்கள் கேட்வில்லை. விழா நேரங்களில் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட ஒலி அளவில் மட்டும் ஒலிபெருக்கியைப் பயன்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பு கூறியது. இதனை நிறைவேற்ற வேண்டிய காவல்துறை எருமை மாட்டின் மேல் பெய்த மழையாகக் கருதித் தன் கடமையைச் செய்கிறது.

பாவம், அவர்களுக்கும் எவ்வளவோ வேலை, துப்பாக்கியைப் பாதுகாப்பது உள்பட!இவ்வளவு இடையூறுகளுக்குமிடையே தேர்வு எழுதுபவர்கள் டென்சன் இல்லாமல் எழுத வேண்டும் என்பதற்காக, இத்தனை ஆண்டுகளாக இல்லாதச் சலுகையை இந்த ஆண்டு தமிழக முதல்வர் கலைஞர் அளித்துள்ளார்.

கேள்வித்தாளை முழுமையாகப் படித்திடக் கூடுதலாக பத்து நிமிடங்கள் தேர்வு எழுதும்போது அளித்துள்ளார். நிறைய மதிப் பெண்கள் பெறுவதற்காக மாணவர்கள் முயலும் நேரத்தில் தம்மாலான பங்களிப்பை அரசு அளித்துள்ளது - மக்கள் நலம் பேணும் அரசு என்பதால்!அதே நேரத்தில் கல்வியாளர்கள் என்பவர்கள் என்ன செய்கிறார்கள்?

மூட நம்பிக்கையை ஊட்டி வளர்க்கிறார்கள். படித்து ஆசிரியர்களாக இருக்கிறார்களே தவிர, இவர்களுக்கு அறிவு என்பதே கிடையாதோ என நினைக்கத் தோன்றுகிறது.
நெய்வேலியில், ஜவகர்மேல் நிலைப் பள்ளியில் நேற்று மாணவ, மாணவியரை காலை 8-30 மணிக்கே வரச் சொல்லி விட்டார்கள். கூட்ட அரங்கில் அமரச் செய்தார்கள்.

மேடையில் ஒரு பார்ப்பனக் கூட்டம் நெருப்பைக் கொளுத்தி, ஏதோ ஒரு ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தார்கள். மந்திரம் ஓதினார்களாம். மாணவ, மாணவியர் அதைத் திருப்பிச் சொல்லச் செய்திருக்கிறார்கள். அரை மணி நேரம் இந்த மூடச் சடங்கைச் செய்து முடித்து விட்டு மாணவ, மாணவியரை வரிசையாக வரச்சொல்லி அவர்களின் நெற்றியில் சாம்பலைப் பூசி அனுப்பியிருக்கிறார்கள்.
நாமம் போடும் பிள்ளைக்கும் விபூதிதான்!
கிறித்துவ, இசுலாமியப் பிள்ளைகளுக்கும் விபூதிதான்!

இப்படிச் செய்யலாமா? கல்விக் கூடங்களில் மத வழிபாடு நடத்தலாமா? அதிலும் ஒரு மத வழிபாடு நடத்தலாமா?
அதிலும் ஒரு மதத்தில் ஒரு பிரிவு வழிபாடு நடத்தலாமா?

சட்டம் இதை அனுமதிக்க வில்லையே! எப்படிப் பள்ளித் தலைமை ஆசிரியர் செய்கிறார்? நெய்வேலி நிருவாகம் எப்படி அனுமதிக்கிறது?

அரசின் கல்வித் துறை மாவட்ட அலுவலர்கள் என்ன செய்கிறார்கள்?தென் மாவட்டங்களில் ஒரு பள்ளியில் மாணவ, மாணவியரின் பெற்றோர்களையும் தேர்வுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக வரச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களின் கால்களைத் தட்டில் வைத்து, மாணவர்கள் அவற்றைக் கழுவிப் பூஜை செய்து ஆசி பெற்று, தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாளேடுகளில் படத்துடன் செய்தி வந்துள்ளது.இன்னொரு பள்ளிக் கூடத்தில் தேர்வு எழுதும் முன்பு அனைவரையும் நிற்க வைத்து நெற்றியில் வெள்ளை அடித்து அனுப்பியிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.

விருதுநகர் மாவட்டத்தில் நடந்த அசிங்கம் இது!இப்படியெல்லாம் செய்தால், தேர்வு எழுதிய எல்லா மாணவர்களும் 100 க்கு 100 மதிப்பெண் பெறவேண்டுமே! கிடைக்குமா? பின் ஏன் இப்படிப்பட்ட மடத்தனமான காரியங்களை ஆசிரியர்களும் கல்வித்துறை அலுவலர்களும் செய்கிறார்கள்? செய்ய அனுமதிக்கிறார்கள்?

பள்ளிக் கூடங்களில் பக்தியை வளர்க்கிறார்கள். அறிவை வளர்க்கவில்லை.அதனால்தான் தந்தை பெரியார் சொன்னார், முதலில் ஆசிரியர்களுக்கு அறிவு வரவேண்டும்; அவர்கள் முதலில் பகுத்தறிவாளர்களாக மாறவேண்டும்!அந்த நாள், எந்த நாள்?-அரசு
http://viduthalai.com/20080327/news04.html

Thursday, March 27, 2008

மோடியைத் தூக்கிப் பிடிக்கும் தந்திரம்

நரேந்திர மோடி என்னும் குஜராத் மாநில முதலமைச்சர் - இந்து மதவெறியர் - சிறுபான்மை மக்களின் உயிரைக் குடித்து, குடலைக் கிழித்து மாலையாகப் போட்டுக்கொள்ளத் துடிக்கும் குரூரர் - உச்சநீதிமன்றத்தால் நீரோ மன்னன் என்று அடையாளங் காட்டப்பட்ட பாசிஸ்ட் என்ற எண்ணம் பொதுவாக மக்கள் மத்தியில் நிலைத்துவிட்ட ஒன்றாகும்.

என்றாலும், ஆசை வெட்கம் அறியாது என்பதற்கேற்ப, குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரப் பீடத்தில் அவர் அமர்ந்துவிட்டார் என்பதை வைத்து,

மோடி ஆட்சியில் மக்கள் நலமாக வாழுகிறார்கள், வளமாக வாழுகிறார்கள் - பொருளாதார வளர்ச்சி ஓகோவென்று வளர்ந்து ஓங்கிவிட்டது - அதன் காரணமாக மக்கள் அவரை நேசிக்கிறார்கள் - மதிக்கிறார்கள் என்ற ஒரு பிரச்சாரத்தை நாடெங்கும் கிளப்பிவிட்டு,

அந்த மயக்கத்தில் மக்களை வீழ வைத்து, அதன்மூலம் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவது நல்லது - அடுத்து மத்தியிலும் அத்வானி தலைமையில் ஆட்சி அமைக்க மக்கள் ஆதரவு அளிக்கவேண்டும் என்ற எண்ணத்தை செயற்கையாக உருவாக்குவதுதான் இந்தியா முழுமையும் உள்ள பார்ப்பனர்களின் - அவர்கள் ஊடகத்தின் உண்மையான நோக்கமாகும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, துக்ளக், கல்கி, தினமணி, தினமலர் கம்பெனிகள் இந்தக் காரியத்தை திட்டமிட்ட வகையில் செய்து வருகின்றன.

குஜராத்டுடே என்ற தலைப்பில் கல்கி இதழ் ஒரு தொடரே ஆரம்பித்துவிட்டது.இதுபற்றி துக்ளக்கில் ஒரு பக்க விளம்பரம் இடம் பெறுகிறது.

நேராக குஜராத் மாநிலத்துக்கே சென்று நேரடி தகவல்கள் என்ற பெயரால் மோடியை இந்திரன், சந்திரன் என்று புகழ்ந்து தள்ளியுள்ளது.என்னதான் உண்மையைக் கரும் திரையிட்டு மறைத்தாலும், சிறுபான்மை மக்கள் மத்தியில் குஜராத் மாநிலத்தில் நிலவும் கருத்தினை கல்கியால் புறந்தள்ள முடியவில்லை.

2002 ஆம் ஆண்டின் (சிறுபான்மையினருக்கு எதிரான மதக்கலவரம்) வடு எல்லோர் மனத்திலும் இருக்கவே செய்கிறது. இப்போதும் சிறுபான்மையினருக்குப் பிரச்சினைகள் இருப்பது குறித்து இரு வேறு கருத்தில்லை என்று ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எல். வின்சன், சுரேஷ் ஆகியோர் கூறினர் (கல்கி, 30.3.2008).

சிறுபான்மையினர் திட்டமிட்ட வகையில், அரசு அதிகாரங்களைப் பயன்படுத்தி, காவல் துறையைப் பயன்படுத்தி, படுகொலை செய்ததெல்லாம் பெரிய விஷயமல்ல - சிறுபான்மையினரின் கடைகளையும், வீடுகளையும் கொளுத்திச் சாம்பல் ஆக்கப்பட்டதெல்லாம் சிறிய விஷயம்தான்.

நிறைமாத கர்ப்பிணிப் பெண்களைக்கூட பாலியல் பலாத்காரம் என்பது எல்லாம் வேறு எங்கும் நடக்காத ஒன்றா?

அவற்றையெல்லாம்விட மோடி ஆட்சியில் எப்படி எப்படியெல்லாம் நாடு முன்னேற்றம் அடைந்திருக்கிறது; தொழில் வளர்ந்திருக்கிறது, அலுவலகங்கள் எல்லாம் இலஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் செயல்படுகின்றன - இதை மட்டும் கவனியுங்கள் என்பதுதான் இந்தக் கூட்டத்தின் பிரச்சாரத் தந்திரமாகும்.

விவசாயிகளின் தற்கொலைகள் அந்த மாநிலத்திலும் நடந்திருக்கின்றன; வேலையில்லாப் பிரச்சினை அங்கும் உண்டு என்பது எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்!

இவற்றையெல்லாம்விட இந்த நாட்டுக்குரிய ஒரு பகுதி மக்கள் - இந்தியாவின் குடிகள் என்னும் உரிமையுடைய மக்கள், அவர்கள் மதத்தால் மாறுபட்டவர்கள் என்பதற்காக வாழும் உரிமையற்றவர்கள் என்ற வெறியில் அவர்களின் உயிரை ஒரு அரசாங்கமே முன்னின்று குடித்து முடிக்கிறது; நர வேட்டை ஆடுகிறது என்றால், அது அரசாங்கம்தானா?

மக்கள் நல அரசு (Welfare State) என்று சொல்வதன் பொருள் என்ன?இதற்கு மரியாதையாகப் பதில் சொல்லிவிட்டு, நரேந்திர மோடியைத் தோளில் தூக்கி வைத்து குதியாட்டம் போட பார்ப்பன ஊடகங்கள் முன்வரட்டும்!

பார்ப்பனர்கள் எந்தத் தந்திரங்களையும் மேற்கொண்டு, தங்கள் நலன் சார்ந்தவற்றை மக்கள் மத்தியில் பிரபலம் செய்வார்கள் என்பதற்கு இந்தக் குஜராத் அரசு தொடர்பான அவர்களின் அணுகுமுறையே போதுமானது!
http://viduthalai.com/20080326/news06.html

மோ(ச)டி அரசுக்கு உச்சநீதிமன்றம் மொத்து!

குஜராத் படுகொலைகள் மீண்டும் விசாரிக்க ஆணை.

புதுடில்லி, மார்ச் 26- இரண்டாயிரம் இசுலாமியர்களுக்கு மேல் கொலை செய்யப்பட்ட, திட்டமிட்ட கோத்ரா கலவரங்கள் தொடர்பாக குஜராத் மாநில பா.ஜ.க. அரசு நடத்திய விசாரணை சரியில்லை என்றும் புதியதாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குஜராத் மாநில அரசின் விசாரணை முறையாக நடத்தப்படவில்லை என மனித உரிமைக் குழு தெரிவித்ததை உச்சநீதி மன்றம் ஏற்றுக் கொண்டது.

புதிதாக விசாரணை செய்யப் படுவதற்கான 5 பேர் கொண்ட விசாரணைக் குழு ஒன்றை உச்ச நீதிமன்றமே நியமித்துள்ளது.

இந்து இருதய சாம்ராட் என்று மதவெறிக் கட்சிகளால் வருணிக்கப்படும் குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திர மோடியின் கட்டளைக்கேற்பவே அம்மாநிலக் காவல் துறை செயல்பட்டு நூற்றுக் கணக்கான வழக்குகளை மூடி மறைத்துவிட்டது.

இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவு பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதற்கான வழிவகைகளைக் காணும் என்று எதிர்பார்க்கலாம்.மூன்று மாதங்களில் சிறப்புப் புலனாய்வுக் குழு தன் அறிக்கையைத் தரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதைக்கப்பட்ட பல கொலைகளையும் மனித எலும்புக் கூடுகளையும் புதிய புலனாய்வு வெளியே கொண்டு வரும். சி.பி.அய். விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று பயந்து கொண்டிருந்த நரேந்திர மோடிக்கு ஆறுதலாகவும் இது அமைந்துள்ளது.

அய்ந்துபேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று அய்.பி.எஸ். அதிகாரிகளும் ஓய்வு பெற்ற சி.பி.அய். இயக்குநர் ஒருவரும் உத்தரப் பிரதேசக் காவல்துறை அலுவலர் ஒருவரும் உள்ளனர். குஜராத் மாநிலக் காவல்துறை அதிகாரிகளின் பெயர்களை நரேந்திர மோடியே பரிந்துரைத்துள்ளாராம்.சிறப்புப் புலனாய்வுக் குழு 10 கலவரங்கள் தொடர்பான வழக்குகளைப் புலனாய்வு செய்யும். ஏற்கெனவே, பாதிக்கப்பட்டவர்களும், கலவரத்தில் இந்து மத வெறியர்களால் திட்டமிட்டுக் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும் கொடுத்த புகார் மனுக்கள் காவல்துறையினரால் பதிவு செய்யப்படவே இல்லை.

இந் நிலையில் உச்சநீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து ஆணைகளை இன்று (புதன்) பிறப்பிக்கும். அதன் பிறகு தம் கருத்தைக் கூறுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.
http://viduthalai.com/20080326/news04.html