Followers

Wednesday, February 6, 2008

இந்துத்துவா - இந்து மதம் மாறினாலும் இந்துக் கோயிலுக்குள் செல்ல அனுமதி உண்டா? குப்பையில் போக வேண்டியது எது?

பார்ப்பனர் அல்லாதாருக்கு மீதிப்போன உணவைக் கொடுத்தால் அது தோஷமாம்.

இன்றைக்கும் கூட காஞ்சி சங்கரமடத்தில் வழங்கப்படும் சாப்பாடு மீதப்பட்டால் அதனைக் குழியில் போட்டுத் தான் புதைப்பார்கள்; பட்டினியால் சாகும் மற்ற மக்களுக்கு ஒரு பருக்கை கூட கொடுக்க மாட்டார்கள்.

பார்ப்பனர் அல்லாதாருக்கு மீதிப்போன உணவைக் கொடுத்தால் அது தோஷமாம். இன்றைக்கும் - இன்றைக்கும் இந்த நிலை அங்கு உண்டு.

4.3.2007 நாளிட்ட ‘தினமலரின்’ கடைசிப் பக்கத்தில் ஒரு செய்தி.
அமெரிக்கர் நுழைந்ததால் ‘தீட்டு’: பூரி கோவில் 7 ஆயிரம் பேர் ‘பிரசாதம்’ குப்பையில் வீச்சு

ஒரிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோவிலில், விதியை மீறி அமெரிக்கர் ஒருவர் நுழைந்து விட்டதால், ‘தீட்டு’ ஏற்பட்டுவிட்டது என்று கூறி, கோவில் அர்ச்சகர்கள் கொதித்தெழுந்தனர்.

இதனால், கோவில் பிரசாதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஏழாயிரம் பக்தர்களுக்கான பிரசாத சாப்பாட்டை அப்படியே, ‘மண்ணில் போட்டு’ புதைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடந்த வியாழன் அன்று பால்ரோடிகர் என்ற அமெரிக்கர் கோவிலில் நுழைந்துவிட்டார். இதை அங்குள்ளவர்கள் கேமராக்கள் மூலம் கண்டுபிடித்தனர்.

உடனே அர்ச்சகர்கள் கொதித்தெழுந்தனர். கோவிலை சுத்தம் செய்யவேண்டும் என்று கட்டளையிட்டனர். சன்னதிகளை எல்லாம் மூடச் சொன்னார்கள்.

‘கோவிலை சுத்தம் செய்யாவிட்டால், தெய்வ குற்றம் ஆகிவிடும். அதனால், பெரும் விபரீதம் ஏற்படும்’ என்று அர்ச்சகர்கள் கூறினர். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று, காலையில் கோவில் மூடப்பட்டது.சன்னிதிகள், எல்லாம் சுத்தம் செய்யப்-பட்டன. மீண்டும் மந்திரங்கள் ஓதி, தெய்வ சிலைகள் எல்லாம் புனிதம் செய்யப்பட்டன.

இத்துடன், பக்தர்களுக்காக மூன்று லட்சம் ரூபாய் செலவில் தயார் செய்து வைக்கப்பட்ட ஏழாயிரம் பேருக்கான பிரசாத சாப்பாடு அவ்வளவும் குப்பையில் வீசி எறியப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு சன்னிதிகள் திறந்து விடப்பட்டன. இதனால், இரண்டு நாள் முழுக்க பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வெள்ளைக்காரரை அனுமதித்த, கோவில் ஊழியர் யார் என்பது பற்றி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைப் படிக்கும்போது மனிதாபிமானிகளுக்குப் பகீர் என்றிருக்காதா? கடவுளால் படைக்கப்பட்டவனே மனிதன் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, அத்தகைய மனிதன் ஒருவன் ஒரு கோயிலுக்குள் நுழைந்ததாலேயே, மூன்று லட்சம் ரூபாய் செலவில் தயார் செய்யப்பட்ட ஏழாயிரம் பேருக்கான பிரசாத சாப்பாடு தீட்டுப் பட்டுவிட்டது என்று கூறி குப்பையில் வீசப்பட்டது என்கிறார்களே

சே.... சே... இப்படியும் ஒரு மதமா - இதற்கும் சில கடவுள்களா - இவற்றை ஆதரிக்கவும் தர்ம சாஸ்திரங்களாக இந்த கேவலத்தை நியாயப்படுத்தவும் இந்த 2007-லும் சில மனிதர்களா என்கிற எண்ணம் யாருக்கெல்லாம் ஏற்படுகிறதோ அவர்கள்தான் உண்மையிலேயே மனிதர்கள் - யாருக்கெல்லாம் இந்த எண்ணம் இயல்பாகத் தோன்றவில்லையோ அவர்கள் எல்லாம் மனித உருவத்தில் நடமாடும் பிராணிகள் - அவ்வளவுதானே?

அமெரிக்கர் ஒருவர் இந்துக் கோயிலுக்குள் நுழைந்துவிட்டதாலேயே சமைக்கப்பட்ட உணவு நஞ்சாகி விடுமோ? அதனைச் சோதித்துப் பார்த்து அந்த முடிவுக்கு வந்தார்களா? உண்மையிலேயே நஞ்சு அந்த உணவில் இல்லை - மாறாக இந்து மதத்தின் ஆணி வேரான அந்த பார்ப்பனர்களின் நெஞ்சில் தான் இருக்கிறது.

கடவுள் நம்பிக்கை தேவையா, தேவையில்லையா என்கிற விவாதத்தை ஒரு புறத்தில் ஒதுக்கி வைத்து விடலாம்.

மனித நேயம் இல்லையா என்பதை முடிவு செய்தால் இந்தச் செயலை எந்த இடத்தில் கொண்டு போய் வைப்பது?

இதுதான் அறிவார்ந்த கேள்வி, மனித மாண்பின் மகத்தான வினாவும் கூட!
எல்லா மதங்களும், கடவுள்தான் மனிதர்களை உண்டாக்கியதாகக் கதைக்கிறார்கள்.

அப்படியென்றால் ஒரு மதத்தைச் சேர்ந்தவர், இன்னொரு மதத்தைச் சார்ந்தவரின் கோயிலுக்குள் சென்று விடுவதாலேயே தோஷம் ஏற்பட்டு விடுகிறது என்று சொல்கிறார்களே - இதன் மூலம் கடவுள் அனைவருக்கும் பொதுவானவர் என்கிற பொதுத் தன்மை பொட்டலம் அவிழ்ந்து கொட்டியது போல பொல பொலத்துப் போய்-விடவில்லையா?

பொய்யாகப் புனைந்துரைக்கப்பட்டவைதான் அனைத்து மதக் கடவுள்களும் என்பது வெளிச்சத்துக்கு வரவில்லையா?
கடவுள் கடவுள் என்று காதைப் பிடித்துக் கொண்டு கல்லின் முன்பும், செம்பின் முன்பும் கதறுகிறார்களே, கடவுள் என்ற ஒருவர் இருந்திருப்பாரேயானால் அவர்களுக்கு நல்ல புத்தி கொடுத்திருக்க மாட்டாரா?
அப்படி நல்ல புத்தி கொடுத்திருந்தால் ஏழாயிரம் பேர் சாப்பிட வேண்டிய உணவைக் குப்பையில் தான் கொட்டியிருப்பார்களா?

மதவாதகள் கற்பித்த பக்தர்கள் நம்பும் அந்தக் கடவுள் என்ற ஒன்று உண்மையானால் பக்தர்களுக்கு நல்ல புத்தியைத்தான் கொடுத்திருக்க முடியும். மூன்று லட்சம் ரூபாயைக் கொட்டி தயாரிக்கப்பட்ட உணவு, அமெரிக்கர் ஒருவர் ஒரு கோயிலுக்குள் நுழைந்த மாத்திரத்திலேயே தோஷமாகிவிட்டது என்று நம்பி உணவைப் பாழாக்கி விட்டனர்.

கடவுள் நல்ல புத்தியைக் கொடுக்கவில்லை என்பதன் மூலம் கடவுள் என்ற ஒன்று இல்லை, இல்லவேயில்லை என்ற முடிவும் தெள்ளத் தெளிவாகவே ஆகிவிடவில்லையா!

இவர்கள் நம்பும் அல்லது போற்றும் கடவுளோ, மதமோ மனிதனை மனிதன் வெறுக்கும் கேவலமான புத்திக்குத்தானே அடியெடுத்துக் கொடுத்திருக்கிறது.

கடவுளை மற மனிதனை நினை என்ற தந்தை பெரியாரின் தத்துவத்தையும் இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தினால் எது உயர்ந்த சீலம் எது கீழான மலம் என்பது ஒரு நொடியில் விளங்கிவிடுமே!

தந்தை பெரியார் அவர்களின் வாலிபப் பருவத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் இந்த இடத்தில் நினைவிற்கு வருகிறது.

நெருஞ்சிப்பேட்டை சாமியார் என்பவர் ஈரோடு பகுதியில் பிரபல்யம். அவரின் தம்பி ஒரு அயோக்கியன் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கவே மாட்டான் - எல்லாம் அண்ணன் சாமியாராயிற்றே என்கிற தைரியம்-தான்.
வாரண்டோடு அமீனாவை வரச் சொல்லி வாலிபராகிய ராமசாமி (பிற்காலத்தில் பெரியார் என்று மதிக்கப்-பட்டவர்) நெருஞ்சிப் பேட்டை சாமியாரின் தம்பியைக் கையும் களவுமாகப் பிடித்துக் கொடுத்தார். அந்தச் சமயம் நெருஞ்சிப் பேட்டை சாமியார் முன்னிலையில் சமாராதனை (சாப்பாடு) நடந்து கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் உள்ளே போய் ஓடி ஒளிந்திருந்த சாமியாரின் தம்பியைப் பிடித்துக் கொடுத்தார் பெரியார். சமாராதனை நடந்த நேரத்தில் வாலிபப் பெரியாரும், சிலரும் உள்ளே நுழைந்து விட்டதால் உணவெல்லாம் தோஷமாகி விட்டது என்று கூறி குப்பையில் கொட்டி-விட்டனர்.
மதம் - குறிப்பாக இந்து மதம் என்பது இந்தக் கதியில்தான் அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

சம்பிரதாயங்களுக்கு விரோதமாகக் கோயில்களை மின்மயமாக்கினாலும் கூட அடிப்படையில் மனிதனை மனிதன் வெறுக்கும் ‘துவேஷம்’ மட்டும் இந்தப் பார்ப்பனர்களை விட்டு அகலவேயில்லை.


பேதத்தில் பிறந்து, துவேஷத்தில் வளர்ந்துகொண்டு போவதுதான் பார்ப்பனீயமும் அவர்களின் செல்லக் குழந்தையுமான இந்து மதம்!

இந்த மார்ச்சுத் தொடக்கத்தில் பூரி ஜெகந்நாதர் கோயில் சம்பவம், மனிதத்-தன்மையில் பார்ப்பனீயம் - அதன் இந்து மதம் இன்னும் மிருகத் தன்மையில்தான் வெறியோடு திரிகின்றன என்பதைப் பறைசாற்றிவிட்டது.

முசுலிம்களுக்கு உரிய நாகூர் தர்காவில் மாற்று மதங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளே நுழைந்தால் தர்கா தீட்டுப்பட்டுவிட்டது என்று கூறுவதில்லை.

வேளாங்கன்னியில் உள்ள மாதா கோவிலில் மாற்று மதத்தவர்கள் உள்ளே புகுந்த மெழுகுவத்தி ஏற்றியபோதுகூட, புனிதம் பொத்துக் கொண்டு போய்விட்டது என்று போர்க் குரல் கொடுப்பதில்லை.

ஆனால் இந்த ‘அர்த்தமுள்ள’ இந்து மதத்தில் மட்டும் இந்தக் கழிசடைத்தனம் இன்றைக்கும் -என்றைக்கும் சலங்கைகட்டி ஆடுகிறது.

1975ஆம் ஆண்டில் பிரபல பாடகரான ஜேசுதாஸ் குருவாயூரப்பன் கோவிலில் பாடினார் என்பதற்காக அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றது-கூட உண்டு.

1987 நவம்பரில் நேப்பாள நாட்டின் தலை நகரான காட்மாண்டில் ஆசிய நாடுகளின் ‘சார்க்’ கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி தம் மனைவியரான சோனியாவுடன் காட்மாண்டில் உள்ள பசுபதி கோயிலுக்குச் செல்ல விரும்பினார்.

சோனியா பிறப்பால் இந்து அல்ல - அவர் ஒரு கிறிஸ்தவர். எனவே கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று கறாராகவே கூறினார்களே.

ஏன் இந்திராகாந்திகூட அவர் கணவர் பார்சி என்பதால் கோயிலுக்குள் அனுமதிக்கப் படவில்லையே.

1975இல் வட நாட்டில் ஜாம் நகரிலிருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கல்காட் என்ற இடத்தில் உள்ள ஒரு கோயிலின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு சிறுவர்களில் ஒருவன் கோயிலுக்குள் சென்று சாமி கும்பிட்டான் என்பதற்காக அக்கோயில் அர்ச்சகனால் அடித்துக் கொல்லப்பட்டான். சாமி கும்பிட்ட அந்தச் சிறுவன் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் என்பதுதான் அதற்குக் காரணம்.

இந்த ‘அர்த்தமுள்ள’ இந்துமதம் மாற்று மதத்தவர்களை மட்டுமல்ல, சொந்த மதத்தைச் சேர்ந்தவர்களே தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தால் அவர்களையும் கூட கொலை செய்யும் அளவுக்கு வெறுத்துத் தான் வந்திருக்கிறது.

21.11.2005 தினகரனில் ஒரு செய்தி: குருவாயூர் கோயிலில் பரிகார பூஜை
குருவாயூர் கோயிலில் மன நிலை சரியில்லாத டேவிஸ் என்ற வாலிபர் நுழைந்துவிட்டதால் ‘புனர்யாகம்’ எனப்படும் பரிகாரப் பூஜை நடத்தப்பட்டது கடந்த அய்ந்து நாள்களாக மனநிலை பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ வாலிபன் ஒருவன் கோயிலுக்குள் சுற்றித் திரிந்ததால், அய்ந்து நாள் பூஜைகளையும் திரும்ப நடத்தினர்.

மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் கிறிஸ்தவ வாலிபன் ஒருவன் குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்குள் இருக்கிறான் என்ற தகவல் தெரிந்த மறு கணமே உடனடியாக பக்தர்கள் அனைவரையும் கோயிலில் இருந்து வெளியேற்றி கோயிலை மூடி ‘புனர்யாகம்’ எனப்படும் பரிகாரப் பூஜைகளுக்கு ஏற்பாடு செய்தனராம்.

இந்தச் செய்தியை வெளியிட்ட தினகரன் ஒரு ‘போனஸ்’ செய்தியையும் கூட வெளியிட்டு இருந்தது.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் உள்பட இந்துக்கள் அல்லாத பல முக்கிய பிரமுகர்கள் குருவாயூர் கோயிலில் நுழைவதற்கு அனுமதிக்கப்-படவில்லை என்பதுதான் அந்தச் செய்தியாகும்.

இந்த ‘அர்த்தமுள்ள’ இந்து மதத்தில் இன்னொரு சம்பவம். ஊர் உலகமே கை கொட்டி எக்கலித்தது.

இப்பொழுது கூறப்போவது ‘இந்தியன் எக்ஸ்பிர°’ (18.12.1993) ஏட்டில் வெளிவந்த செய்தியாகும்.
அதன் தலைப்ப Will Kerala’s Temple Close Doors on Dalailama?

புத்தர்களின் ஆன்மீகக் குருவான தலாய்லாமா கேரளா வந்திருந்தார்.
அப்பொழுது தன் விருப்பம் ஒன்றைத் தெரிவித்தார். ஒரு கிறித்தவ ஆலயம், ஒரு முஸ்லிம் மசூதி, ஒரு இந்துக் கோயில் ஆகியவற்றிற்குச் சென்று வழிபட வேண்டும் என்ற தன் விருப்பத்தைத் தெரிவித்தார். அதன்படி மும்மதங்களைச் சேர்ந்தவர்களும் தொடர்பு கொள்ளப்பட்டனர்.

செயின்ட் ஜோசப் கதீட்ரல் சர்ச் நிருவாகிகள் மிகவும் மகிழ்ச்சி தெரிவித்தனர். புத்தமத ஆன்மீகக் குருவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

பாளையம் மசூதியைச் சேர்ந்த சிலரோ ஒரு படி மேலே சென்று தலாய்லாமா எங்களுடன் மசூதியில் காலை உணவு விருந்தில் பங்கேற்க வேண்டும் என்றுகூட அறிவிப்பினை வெளிப்படுத்தினர்.

அடுத்தது இந்து மதம் தானே? மற்ற இரு மதத்தலைவர்கள் மனமகிழ்ந்து தலாய்லாமாவை வரவேற்கக் காத்திருந்தது போல இவர்களும் இன்ப அழைப்பினை விடுத்தார்களா?

திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு பொறுப்பாளர்கள் என்ன கூறினார்கள்?
தலாய்லாமா இந்துமத நமபிக்கையானவரல்லர். அவர் அணிந்திருக்கும் காவி உடையைக் களைந்து விட்டு வந்தால் கூட அவரை இந்துக் கோயிலில் அனுமதிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனரே -

பவுத்தம் என்பது இந்து மதத்தின் ஒரு பிரிவுதான் என்று வெட்கமில்லாமல் கூறிக் கொள்ளும் இந்தக் கூட்டம்தான் பவுத்த மதக்குருவை உள்ளே விட மறுத்தது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

கணக்கில் அடங்கா எடுத்துக்-காட்டுகள் உண்டு. இந்து-மதத்தின் கேவலமான ‘கலியாண’ குணங்களுக்கு. என்றாலும் அவர்களின் இறுமாப்புக்கும், ஆதிக்க வெறிக்கும் இன்னொரு எடுத்துக்காட்டு உண்டு. அது ‘ஜூனியர் விகடன்’ இதழில் (23.11.2005) வெளிவந்ததுதான் - அதாவது அவாள் இதழில்)!

இந்தியாவின் ‘புண்ணிய’ பூமிகளைக் காண்பதற்கென்றே அமெரிக்காவிலிருந்து வந்த பெண்மணி பமீலா கேஃபிளிக் (வயது 28) வாரணாசிக்கு வந்தபோது அங்குள்ள இந்து வாலிபரான பொறியாளர் அனில் யாதவிடம் காதல் கொண்டு திருமணமும் புரிந்து கொண்டார்.

ஒரு இந்துவைத் திருமணம் செய்து கொண்டதற்காக கிறித்தவ மதத்திலிருந்து இந்துவாகவும் மாறினார்.

ஒரிசாவிற்குச் சென்று புவனேஸ்வரில் உள்ள இந்து மதக் கோயிலான லிங்கராஜ் கோயிலுக்குள் சென்ற-போது தடுக்கப்பட்டார் பமீலா. வேற்று மதக்காரி - இந்து மதக் கோயிலுக்குள் உனக்கு அனுமதி இல்லை என்று கல்தா கொடுத்தனர். தாம் மதம் மாறியதற்கான சான்றுடன் மறு நாளும் தம் துணைவருடன் அதே கோயிலுக்கு வந்தார்.

ஆதாரம் இருக்கிறது - கண்டிப்பாகக் கோயிக்குள் செல்லலாம் என்ற ஆர்வத்துடன் வந்தவர்களுக்கு ஏமாற்றம்தான் மிச்சம். அடிதடிதான் நடந்தது. காவல்துறைக்குச் சென்று புகார் கொடுத்தார். புகார் பதிவு செய்யப்படவில்லை என்பதுதான் சோகமான செய்தியாகும். ஏடுகளில் வாதப் பிரதிவாதங்கள் இடம் பிடித்தன.

இந்து மதம் மாறினாலும் இந்துக் கோயிலுக்குள் செல்ல அனுமதி உண்டா என்ற கேள்வி சூடாகக் கிளப்பப்பட்டது.

மதம் மாறியவர்கள் பற்றி விசாரிக்க பூரி சங்கராச்சாரியாரின் தலைமையில் ஒரிசாவில் குழு ஒன்று உள்ளது. ‘முக்தி மண்டபம்’என்று அதற்குப் பெயர்.

நிஷ்ச் சாலனந்த் சரஸ்வதி என்ற பெயருடைய பூரி சங்கராச்சாரியாரிடம் பமீலா தொடர்பான பிரச்சினையைக் கொண்டு சென்றனர் பத்திரிகையாளர்கள். அவர் திருவாய் அமுதம் தான் எத்தகையது? இதோ!

“வேற்று மதத்தைச் சேர்ந்த ஒருவர் இந்துவாக மதம் மாறி, ஒரு இந்துவை மணம் புரிந்தால், அவரை இந்துவாக ஏற்றுக் கொள்வதில் எந்தத் தடையும் இருக்கக் கூடாது. ஆனால் வழிபாடுகளில் இவருக்கான உரிமைகள் மாறுபடுகிறது.

இந்து சனாதன தர்மத்தின்படி கோயில் வழிபாடுகள் வர்ணாசிரமத்துக்கு அல்லது சாதியின் பிரிவுக்கு ஏற்ப அமைந்துள்ளன. வேற்று மதத்திலிருந்து இந்துவாக மதம் மாறியவர்கள் வர்ணாசிரம தர்மத்துக்கு அப்பாற்பட்டவர்கள்.

எனவே வழிபாடு பற்றிய உரிமைகள் அவர்களுக்குப் பொருந்தாது. யார் வேண்டுமானாலும் இந்து மதத்துக்கு மாறலாம். ஆனால் தான் எந்தத் தரமான இந்து என்பதை அவர்-ள் முடிவு செய்து கொள்ள வேண்டும். உலகின் எல்லா மதங்களிலும் விதிகளும், வரைமுறைகளும் உள்ளன.

இந்துக் கடவுள்கள் மீது உண்மையான பக்தியும், நம்பிக்கையும் ஒருவன் கொண்டிருப்பானேயானால், தன்மீது விதிக்கப்படும் இந்த விதிகளையும், வரைமுறை-ளையும் மனமுவந்து பின்பற்ற வேண்டும்.” இதுதான் பூரி பெரியவா(ய்)ள் அருளியது.

இந்து மதத்தில் சேர்வீர் என்று இந்து முன்னணிகள், சங்பரிவார்கள் கூவிக் கூவி அழைக்கின்றனர். அந்தக் கூவலைக் கேட்டு எந்த மதத்தவர்கள் இந்து மதத்திற்குள் வந்தாலும் அவர்கள் பிறவியின் அடிப்படையில் உள்ள இந்து மதக்காரர்களுக்குச் சமமானவர்கள் ஆக மாட்டார்கள். மற்ற இந்துகளுக்கு உள்ள வழிபாட்டு முறையை இந்தப் புதியவர்கள் பின் பற்ற முடியாது.

இந்தப் பேதத்தை அவர்கள் மனம் உவந்து ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். நுகத்தடியில் கழுத்தைத் தானாகவே நுழைத்துக் கொள்ளும் மாடுகள் போல!

ஏற்கெனவே இந்து மதத்தில் இருக்கும் நால் வருணம் போதாது என்று இந்தப் புதிய ‘வரவுகள்’ இன்னொரு இரண்டாம் தரத்தினராகவே கருதப்படுவார்கள்.

இந்து மதத்தில் உள்ள ஜாதி அமைப்பு மதம் மாறுதலுக்குத் தடையாக இருக்கிறது என்பதை மரியாதையாக ஒப்புக் கொள்ளவேண்டும்.

சங்கராச்சாரியார்கள் எல்லாம் ஒன்று கூடி மாநாடு போட்டு, ஜாதி ஜாதிக்கு ஆதாரமான சாஸ்திரங்கள், சுருதிகள், ஸ்மிருதிகள் அனைத்தையும் ஒன்றாக இறுகக் கட்டி பட்டப்பகலில் பகிரங்கமாகத் தீயிட்டுக் கொளுத்தி
அதன் சாம்பலை ‘இந்து’மாக் கடலில் கரைத்து, இந்து மதம் புனிதமாகி விட்டது, வேறு மதம் சென்றவர்களே விரைந்து வாருங்கள், மாற்று மதத்தினரே மனமுவந்து வாருங்கள், மனதார வரவேற்கிறோம் என்று அழைப்பு விடுத்தால் அதில் கொஞ்சம் அறிவு நாணயம் இருக்கும்.


அதனை விட்டுவிட்டு என்னதான் ஆகாயக் கூச்சல்போட்டாலும் ஆரிய மதம்தான் இந்து மதம், பார்ப்பனக் கூடாரம்தான் இந்த இந்து மதம் என்கிற இமய மலைபோன்ற உண்மையை அவாளின் ஆயிரம் கைகளாலும் மூடி மறைத்தாலும் மறைக்க முடியாது! முடியவே முடியாது!

குப்பையில் கொட்டப்பட வேண்டியது பிரசாதம் அல்ல - இந்துமதமே!--- கவிஞர் கலி.பூங்குன்றன் >> http://unmaionline.com/20070401/03.htm
-----------------------
படித்துவிட்டீர்க‌ளா?
காமுகப்பட்டு, தொட்டிலிலே வளர்ந்தவளை கட்டிலுக்கிழுத்து முக்தி பெற்ற பார்ப்பான். பாவி அன்னையையா இந்த அக்கிரமம் என்று கேட்க...

சமுத்திரத்தைத் தாண்டி (கடல் தாண்டி அந்நிய நாட்டுக்கு)இந்துவாக இருக்கக்கூடிய ஒருவன் போகக்கூடாது

யார் நாஸ்திகர்கள்? யார்? யார்? யார்?
------------------------------
மற்ற பதிவுகள்

6 comments:

செந்தழல் ரவி said...

இந்துமதம் எங்கே போகிறது - மற்ற பதிவுகள் எப்போது வெளிவரும்...(நான் புத்தகத்தை வாங்கிவிட்டேன்...ஆனாலும் ஆன்லைனில் இருந்தால் ஷேர் செய்வது எளிது...)

சிந்திக்க உண்மைகள். said...

கண்ணியத்திற்குரிய தோழர் ரவி அவர்களே.

தாங்களுக்காக இன்று 15 பாகங்கள் பதிவாகி இருக்கிறது.

செந்தழல் ரவி said...

Nanri Thozar...

குலவுசனப்பிரியன் said...

ரவி,

புத்தகம் முழுவதும் இங்கே காணக் கிடைக்கின்றது.
http://balasthoguppu.blogspot.com/

Unknown said...

இது ஐதர் காலத்து பிரச்சினை சார். எங்க ஊர் ரமணாஸ்ரமத்திற்கு வந்து ஏதாவது வாயில் நுழையாத சமஸ்கிருத பெயரை வைத்துக் கொண்டு அலையும் வெள்ளைக்காரர்கள் பலரை அவர்கள் சனாதன தர்மத்தில் எந்த பிரிவில் சேர்ப்பார்கள் என்ற இதே கேள்வியை நான் பல காலமாக கேட்டுக் கொண்டு வருகிறேன். ஒரு பயலுக்கும் இதற்கு விடை சொல்ல தெரியவில்லை. மேலும் ஒரு சுவாரஸ்யமான விஷயம். ஆஸ்ரமங்கள் மற்றும் சாமியர்ர் சாமியாரிணிகளிடம் வரும் வெளிநாட்டுக்காரர்கள் பெரும்பாலும் வெள்ளைக்காரர்களாகவே உள்ளது எதேச்சையான ஒன்றா? நீக்ராய்டு இனத்தை சேர்ந்த கருப்பினத்தை சேர்ந்தவர்கள் ஒருவரைக்கூட நான் இது போன்ற இடங்களில் பார்த்ததில்லை. ஒருவேளை அப்படி யாரேனும் வந்தாலும் அவர்களை ரமணாஸ்ரமம் போன்ற அமைப்புகளில் சேர்ப்பார்களா? இவர்களும் கிட்டே சேர்க்க மாட்டார்கள். பிற மதத்தில் சேர்ந்தாலும் வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொள்வார்கள். என்ன கொடுமை சார் இது?

Unknown said...

இது ஐதர் காலத்து பிரச்சினை சார். எங்க ஊர் ரமணாஸ்ரமத்திற்கு வந்து ஏதாவது வாயில் நுழையாத சமஸ்கிருத பெயரை வைத்துக் கொண்டு அலையும் வெள்ளைக்காரர்கள் பலரை அவர்கள் சனாதன தர்மத்தில் எந்த பிரிவில் சேர்ப்பார்கள் என்ற இதே கேள்வியை நான் பல காலமாக கேட்டுக் கொண்டு வருகிறேன். ஒரு பயலுக்கும் இதற்கு விடை சொல்ல தெரியவில்லை. மேலும் ஒரு சுவாரஸ்யமான விஷயம். ஆஸ்ரமங்கள் மற்றும் சாமியர்ர் சாமியாரிணிகளிடம் வரும் வெளிநாட்டுக்காரர்கள் பெரும்பாலும் வெள்ளைக்காரர்களாகவே உள்ளது எதேச்சையான ஒன்றா? நீக்ராய்டு இனத்தை சேர்ந்த கருப்பினத்தை சேர்ந்தவர்கள் ஒருவரைக்கூட நான் இது போன்ற இடங்களில் பார்த்ததில்லை. ஒருவேளை அப்படி யாரேனும் வந்தாலும் அவர்களை ரமணாஸ்ரமம் போன்ற அமைப்புகளில் சேர்ப்பார்களா? இவர்களும் கிட்டே சேர்க்க மாட்டார்கள். பிற மதத்தில் சேர்ந்தாலும் வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொள்வார்கள். என்ன கொடுமை சார் இது?