Followers

Wednesday, February 6, 2008

கல்வியில் மதவாதம்.- பாடத்திட்டத்தில் படம் எடுக்கும் பாம்புகள் !

ஏஃபார் அர்ஜுன்,- பிஃபார் பிரம்மா,- ; ஜிஃபார் கணேஷ், -எச்பார் ஹனுமான், -ஆர்ஃபார் ராம்

பிரபல வரலாற்று ஆசிரியர் கே.என். பணிக்கர் அவர்கள் ‘தாமரை’ இதழுக்கு அளித்த பேட்டி மதச் சார்பின்மையில் நம்பிக்கை உடையவர்களுக்கு மட்டுமல்ல; சமூகப் பொறுப்புள்ள அனைவரின் கவனத்துக்கும், கவலைக்கும் உரியதாகும்.

இதோ பேராசிரியர் பணிக்கர் பேசுகிறார்:
``இன்றையக் கல்வி நிறுவனங்களில் திட்டமிட்ட சதிகளின் மூலம் இந்துத்துவா நுழைந்து கொண்டிருப்பதை இன்னமும் கவனிக்காமலிருக்கிறோம்.

பி.ஜே.பி., ஆட்சியின் கடந்த அய்ந்து ஆண்டுகளில் கல்வி நிறுவனங்களில் இவை ஊடுருவிவிட்டன. பாடத் திட்டங்களில் இவை செய்த ஏமாற்று வேலைகளை மட்டும் தான் நாம்ழ அறிந்திருக்கிறோம்.

மத வெறிக்கான மாணவர்கள், ஆசிரியர் குழுக்களைத் தயாரித்து விட்டார்கள்.

இதைப் போன்று சமூகக் குழுக்களையும், பண்பாட்டு செயல்பாடுகள் என்னும் பெயரில் பண்பாட்டுக் குழுக்களையும் தயாரித்து வைத்துள்ளார்கள். பல கல்வி வளாகங்களில் இவர் கள் நுழைவதற்கான பாதையைக்கூட, `ரக்ஷாபந் தன்’ தொடங்கி வரும் கல்வி நிலைய விழாவாக விரிவடைந்து வருகிறது.

தமிழ்நாட்டிலோ அல்லது தென்னிந்தியாவிலோ பின்பற்றப்படும் பழக்கம் அல்ல இது. கல்வி நிறுவனங்களில் ஊடுருவப் பயன் படும் கருவியாக இவற்றைக் கருதுகிறார்கள். இதன் மூலம் இளம் மாணவ - மாணவியரின் கவனத்தைத் தாங்கள் பெற்றுவிடலாம் என்று திட்டம் வகுக்கிறார்கள்.’’
இவ்வாறு கே.என். பணிக்கர் தன் பேட்டியில் கூறியுள்ளார்.பணிக்கர்அவர்கள் இப்பொழுதுதான் இந்தக் கருத்தைக் கூறுகிறார் என்றல்ல. தொடர்ந்து அபாய அறிவிப்புகளைக் கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறார். 19-1-2001 நாளிட்ட ஃபரண்ட் லைன்’ இதழில் விரிவாக்கவே எழுதியிருக்கிறார். அதனை இந்த நேரத்தில் எடுத்துக்காட்டுவது பொருத்தமானதாக இருக்கும்.
இதோ பணிக்கர் அவர்கள் பேசுகிறார்கள்.

சங்பரிவாரங்கள் தற்போது ஈடுபட்டுள்ள வரலாற்றைத் திருத்தி எழுதும் நடவடிக்கைகள் வரலாற்றோடு மட்டுமல்ல,

சுதந்திர இந்தியாவின் மதச்சார்பற்ற கல்வி மற்றும் கலாச்சாரக் கொள்கைகளையும் மாற்றியமைக்கும் மிகப்பெரிய ஒரு நீண்ட காலத் திட்டத்தோடு ஒருங்கிணைந்ததாகும். இந்த முனையை நோக்கி சங்பரிவாரங்கள் ஏற்கனவே பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. அவற்றுள் மிகவும் முக்கியமானது கல்வியின் உள்ளடக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதும், தனியாகப் பள்ளிகளை நிறுவுவதும் கலாச்சார நிறுவனங்களின் மீது கட்டுப்பாடுகளைக் கொண்டிருப்பதும் ஆகும்.

புரட்சிகர மாறுதல்! ---கல்வியின் களத்தில் பல்கலைக் கழக மானியக் குழுவும் (யு.ஜி.சி.) என்.சி.இ.ஆர்.டி.யும் மதவாதச் செயல்திட்டத்தைப் பின்பற்றுவதாகவே தோற்றமளிக்கின்றன. யு.ஜி.சி. நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான பாடத் திட்டத்தை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக வேத பாடங்களையும், ஜோதிடத்தையும், ரேகை சாஸ்திரத்தையும், இந்து மதச் சடங்குகளையும் பாடங்களாக நுழைக்கத் தயாராகி வருகிறது

மிக விரைவில் பல்கலைக் கழக சான்றிதழ்களோடு இந்துப் பண்டிதர்களின் ஒரு பட்டாளம் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பிறப்பு, திருமணம், இறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் மதச் சடங்குகளைச் செய்யக் கிடைப்பார்கள்! ஆறுதல் அளிக்கும் ஒரு அம்சம் இந்துக்கள் அல்லாதவர்களுக்கும் இத்தகைய கல்விச் சேவையை அளிப்பதாக யு.ஜி.சி.யின் தலைவர் உறுதியளித்திருப்பதுதான்!

மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சரின் ‘சுதேசி’, சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு பல்கலைக் கழகங்களின் பொதுக் கருத்தே புரட்சிகரமான மாறுதல்களுக்குள்ளாகி வருவதாகத் தோன்றுகிறது!

கலைத்திட்ட ஆவணம்-- என்.சி.இ.ஆர்.டி.யில் மிக அவசரக் கடமையாக ‘பள்ளிக் கல்விக்கான தேசியக் கலைத்திட்ட கட்டமைப்பை’ உருவாக்கும் பணி எடுத்துக்கொள்ளப்பட்டது. என்.சி.இ. ஆர்.டி.யால் வெளியிடப்பட்டுள்ள விவாதத்திற்கான ஆவணம்’ மதச்சார்பற்ற கல்வியிலிருந்து மதத்தைப் பற்றிய கல்விக்கு மாறிச் செல்வதை மிகத் தெளிவாக கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த அறிக்கையில் உள்ள பெரும்பாலான ஆலோசனைகள் காலாவதியான பழமைக்கு மீண்டும் புத்துயிர் அளிப்பதையும் மிகப்படுத்தப் பட்ட மூடநம்பிக்கைகளையும் சுற்றிச் சுழல்வனவாக உள்ளன.
அது உள்நாட்டுச் சிந்தனையாளர்களின் கருத்துகளைப் போற்றிப் பாராட்டும் ஒரு சொந்தக் கலைத்திட்டத்தை முன் வைக்கிறது. ஆனால்,

இவர்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் குறிப்பிடத்தக்க வகையில் காணாமல் போயிருக்கிறார்கள்.

பெருமித உணர்வு? ----புதிய கலைத்திட்டத்தின் முக்கியமான நோக்கங்களில் ஒன்றாக ‘உலக நாகரீகத்திற்கு தனது சிந்தனைகளாலும், செயல்களாலும், சாதனைகளாலும் பெரும்பங்கு ஆற்றியதிலும் இந்திய நாகரீக வளர்ச்சி பற்றிய உணர்வு பூர்வ தெளிவு பெற்ற இந்தியனாக இருப்பதிலும் பெருமிதம் கொள்கின்ற ஓர் உணர்வை ஊட்டி அதைத் தொடர்ந்து பேணிப் பாதுகாப்பது’ என்பது உள்ளது.

தவறான கற்பிதம் ---இந்திய நாகரீகத்தை உருவாக்கியதில் வெளிப்புறத் தாக்கங்களின் பங்கு முற்றிலும் மறைக்கப்பட்டுள்ளது.

‘மதச்சார்பின்மை’ என்பதே சர்வதர்ம சமபாவ என்று மதரீதியான அர்த்தம் கற்பிக்கப்பட்டு மதம் அதன் அடிப் படை வடிவமான ஆதாரமற்ற நம்பிக்கைகள், புராணங்கள், சடங்குகள் மூலம் இளைய தலைமுறைக்கு

அடிப்படையான ஒழுக்கத்தையும், ஆன்மீக மதிப்பையும் தரும் எனக் கற்பிதம் செய்கிறது.

அகத்தூண்டுதல் --வித்யாபாரதி என்ற ஆர்.எஸ்.எஸ். கல்வியாளர்களால் தயாரிக்கப்ட்டு 1998ல் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரால் முன் வைக்கப்பட்ட திட்டத்திலிருந்து யு.ஜி.சி.யும், என்.சி.இ. ஆர்.டி.யும் அகத் தூண்டுதல்களைப் பெற்றிருக்கின்றன எனத் தோன்றுகிறது.

‘இந்திய மயமாக்கல், தேசிய மயமாக்கல், ஆன்மீக மயமாக்கல்’ என்ற பெயரால் இந்துத்துவ உணர்வுகளைப் புகுத்தி மதச்சார் பின்மையை அகற்றுகின்ற முயற்சி அப்போது மேற்கொள்ளப்பட்டது. இப்போது அந்த நோக்கத்தை அடைய பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயப் பாடமாக்கப்பட்டு வேதங்களும், உப நிஷத்துக்களும் ஆரம்பக் கல்வி முதல் மேல் நிலைக் கல்வி வரை - தொழிற் கல்வி உட்பட புகுத்தப்பட உள்ளன.

இவற்றுடன் கூட, இந்துமத அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்திய கலாச்சாரம் எல்லாப் பாடங்களிலும் ஒருங்கிணைந்த பகுதியாக அமைந்துள்ளது.

அரசியல் சாசன மீறல் ---கலைத் திட்டத்தில் சமஸ்கிருதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் இணைப்பது விரும்பத்தகாத ஒன்றல்ல; ஆனால், இது இந்துத்துவா முறை அறி வுக்கு முன்னுரிமை அளித்துப் பிறவற்றை நீக்கி ‘மதச்சார்பற்ற அரசு’ என்ற அரசியல் சாசனக் கோட்பாட்டையே மீறுவதாக உள்ளது.

இந்தத் திட்டம், மதச்சார்பற்ற சக்திகளின் எதிர்ப்பு காரண மாக கைவிடப்பட்க் கூடும் என்றாலும் சங் பரிவாரங்கள் போதுமான அரசியல் வலிமை யைப் பெற்றுவிடுமானால் எதிர்காலத்தில் என்ன நேரும் என்பதை முன்னுணர்த்துவதாக உள்ளது.

துவக்கம் எப்போது? ---கல்வி அமைப்பை இந்துத்துவ மயமாக்கும் முயற்சிகள் பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தைப் பெறுவதற்கு மிக முன்னரே துவங்கிவிட்டன. 1942லேயே ஆர்.எஸ்.எஸ். தனது சொந்தக் கல்வி வலைப் பொறியைத் துவக்கிவிட்டது.

அப்போது முதல் சங்பரிவாரத்தால் நடைபெறும் பள்ளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்தது. தற்போது இதன் நிர்வாகத்தின் கீழ் 70,000 பள்ளிகள் உள்ளன என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. தற்போது விசுவ ஹிந்து பரிஷத் மேலும் தனது கல்விச் செயல்பாடுகள் - குறிப்பாக மலை ஜாதிப் பகுதிகளில் விரிவுபடுத்தும் தனது நோக்கத்தை அறிவித்துள்ளது.

தற்போதைய அரசின் நிதி மற்றும் நிர்வாக உதவியுடன் இந்துக் கல்வி என்ற ஒரு இணையான கல்வி அமப்பு 1978ல் உருவாக்கப்ட்ட ‘வித்யா பாரதி சிக்ஷாசன்ஸ்தான்’ என்ற அகில இந்திய அமைப்பின் வழிகாட்டுதலோடு நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது.

உரிமை விரிவாக்கம்? --இந்த கல்வி அமைப்பு முறைக்கு உதவுவதற் காகவே, இன்றுவரை அரசியல் சாசனத்தின் பிரிவுகள் 29 மற்றும் 30ன் படி சிறுபான்மையினருக்கு உரிய கல்வி உரிமையினை மற்றவர்களுக்கும் விரிவுபடுத்துவது என்பதை பரிசீலிக்கக் கூடிய ஆலோசனையாக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முன் மொழிந்துள்ளார்.

இந்தத் தேவையின் காரணமாக மிக அதிகமான கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ள கிறிஸ்தவர்கள் மீது நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் நடைபெற வழிவகுக்கப்பட்டுள்ளது; ஏனெனில் கிறிஸ்தவர்கள் ஓரளவக்காவது விலக்கப்படாவிட்டால் கல்வித் துறையை முழுமையாகக் கைப்பற்ற முடியாது.

எது வரலாறு? --இந்தப் பள்ளிகளில் பாடத்திட்டம் - அது வரலாறாகவோ, அரசியலாகவோ, இலக்கிய மாகவோ இருந்தாலும் கூட - மிகத் தெளிவாகத் தீவிர மதவாதத் தன்மைகொண்ட இந்துத்துவ பாடமாகவே உள்ளது.

இந்தப் பள்ளிகளுக்கான பாடநூல்கள் - குறிப்பாக வரலாற்றுப் பாடங்கள் இந்துக்களை வீரதீர பராக்கிரமங்கள் நிறைந்தவர்களாகவும், வெளியாரை இழிவுபடுத்திக் கேவலப்படுவதாகவும் அமைந்து மதவாத அரசியலை ஏற்றுக்கொள்ள வைக்கும் வகையைச் சார்ந்தவைகளாக உள்ளன.
வளர்ச்சிப் போக்கில் வரலாறு என்பது இளம் குழந்தைகளின் சிந்தனையில் தறான மதவாதப் பெருமைகொள்ள வைப்பதாகவும், பிற மதத்தவர் மீது துவேஷத்தை ஊட்டும் வகையிலும் கட்டுக்கதைகளின் தொகுப்பாக மாற்றப்பட்டுள்ளது.

கலாச்சார மரபுகள் முழுவதும் இந்துக்களுடையதே என்பதோடல்லாமல் கடந்த காலம் என்பது இந்துக்களின் வீரதீர பராக்கிரமங்களின் காலமாகவே சித்தரிக்கப் படுகிறது.

தோல்வியே வெற்றியாக ! ---உண்மையில் அநேகமாக ஒவ்வொரு இந்து மன்னனும் வெளியாரிடம் அடைந்த தோல்விகள் எல்லாம் வெற்றிகளாகவே கற்பிக்கப்படுகிறது.

இத்தகைய ஒரு கட்டுக்கதைக்கு நல்ல உதாரணமாக முகமது கோரிக்கும், பிரிதிவிராஜ் சௌஹானுக்கும் இடையே நடைபெற்ற போர் அமைந்துள்ளது. இரண்டாம் தராய் போரில் பிரதிவிராஜன் தோற்று மகம்மது கோரியால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டான். இந்த வரலாற்றுச் சம்பவம் பாடப்புத்தகம் ஒன்றில் கீழ்க்கண்டவாறு விவரிக்கப்பட்டுள்ளது.

‘முகம்மதுகோரி இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று விசுவநாதர் ஆலயத்தையும் பகவான் கிருஷ்ணர் ஜென்மபூமியையும் மசூதிகளாக மாற்றினான். அவன் பிரதிவியைக் கஜினிக்கு கொண்டு சென்றான்.

ஆனால், பிரதிவி அங்கு அவனை ஒரே அம்பால் கொன்றான். முகம்மது கோரியின் உடல் அவன் பாவக் கதைகளுக்குப் பரிகாரம் தேடுவதுபோல் பிரதிவியின் காலடியில் விழுந்தது. (ஆதாரம் பாடநூல்கள் மதிப்பீடு பற்றிய என்.சி.இ.ஆர்.டி. அறிக்கை 1998 பக்கம் 6)


முக்கிய நோக்கம் --வரலாற்றை திருத்தி எழுதுவதன் முக்கிய நோக்கமே மதவாத அரசியலுக்கு வரலாற்று அங்கீகாரத்தை அளிப்பதுதான். ஆர்.எஸ்.எஸ்.ஆல் நிர்வகிக்கப்படும் பள்ளிகளின் பாடநூல்களில் இந்திய சுதந்திரப் போராட்டம் விவரிக்கப்பட்டுள்ள விதமும், ‘சுதந்திரத்தை நோக்கி’ என்ற நூலின் இரண்டு பாகங்களைத் தடை செய்ய இந்திய வரலாற்று ஆய்வுக் கழகம் (ஐ.சி. ஹெச்.ஆர்.) எடுத்துக்கொண்ட மிகவும் கீழ்த்தரமான நடவடிக்கையும் இந்த வகையில் நடைபெற்றுவரும் பல்வேறு நிகழ்ச்சிகளின் பகுதியாகும். கலனி ஆதிக்கத்துடன் இணைந்து செயல்பட்டவர்கள் என்பதைத் தவிர

ஆர்.எஸ்.எஸ்.க்கு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் எத்தகையப் பங்கும் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆனாலும், சங் பரிவாரங்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றது ஒரு தேசிய மதிப்பைப் பெற்றுத்தர மிகவும் தேவைப் படுவதால் அதை ஒரு சொத்தாக பயன்படுத்திக் கொள்ள மிகவும் கவனமாக உள்ளன.

மாபெரும் தலைமை? ----எனவே, காலனி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத் தில் ஆர்.எஸ்.எஸ். ஆக்கபூர்வமான பாத்திரத்தை வகித்ததாக சுதந்திரப் போராட்ட வரலாறு திரித்து எழுதப்படுகிறது. இது அவர்களது தலைவர்களை சுதந்திரப் போராட்ட வீரர்களாகச் சித்தரிக்கவும், மறுபுறத்தில் அவர்களது உண்மையான தோற்றத்தை மறைத்துக் கொள்ளவும் தேவைப்படுகிறது.

இவ்வாறு வரலாற்றைத் திரித்து எழுதிய வித்யா பாரதியின் எல்லாப் பாடநூல்களிலும் ஆர்.எஸ்.எஸ். நிறுவனரான கேசவ் பாலிராம் ஹெட்கோவர் காலனி ஆதிக்க எதிர்ப்புப் போரில் மகாத்மா காந்தியையும், ஜவஹர்லால் நேருவையும் விட மாபெரும் தலைவராகச் சித்தரிக்கப்பட்டுள்ளார். (ஆதாரம்: ராஜஸ்தான் சிக்ஷா சமிதி வெளியிட்டுள்ள சங்கர்சௌரவ் தொடர்கள்)

ஆதாரங்களை மறைத்து உத்தரப்பிரதேச அரசால் வெளிடப்பட்ட ஒரு பாநூலில் 20 பக்கங்கள் கொண்ட இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஹெட்கோவர் வங்காளப் பிரிவினைக்கு எதிரான காலனி ஆதிக்க எதிர்ப்புப் போரில் தலைமை ஏற்று ஈடுபட்டதாக 3 பக்கங்கள் இடம்பெற்றுள்ளன! (ஆதாரம்: பாடநூல் மதிப்பீடு பற்றிய என்.சி.இ.ஆர்.டி. அறிக்கை பக்கம் 14)

ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் தலைவர்களுக்கு இத்தகைய சாதகமான தோற்றங்களை வெற்றிகரமாக உருவாக்கி முன்னிருத்துவது என்பது உண்மையான ஆதாரங்களை மூடிமறைப்பதன் மூலமாகவே சாத்தியமாகும்.

விளக்கம் என்ன? --ஐ.சி.ஹெச்.ஆர். ‘சுதந்திரத்தை நோக்கி’ என்ற வரலாற்றுத் தொடரின் இரண்டு பாகங்களைத் திரும்பப் பெற்ற நடவடிக்கைக்கு இதுதான் விளக்கமாகத் தோன்றுகிறது. ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள ‘சுதந்திரத்தை நோக்கி’ தொடரின் பாகங்கள் காலனி ஆதிக்க எதிர்ப்புப் போரில் ஆர்.எஸ்.எஸ்?க்கு எந்த பங்கையும் அளிக்கவில்லை.

மாறாக அவற்றில், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் கடிதங்கள், பேச்சுக்கள் என்ற வகையில் பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்களுடன் கூடிக் குலாவியதற்கான ஆதாரங்கள் உள்ளன.

தேசியப் பெருமை? ---ஆர்.எஸ்.எஸ்.ன் உறுதியான கட்டுப்பாட்டின் கீழ் இப்போது உள்ள ஐ.சி.ஹெச்.ஆர். மேலும் சில பாகங்கள் வெளிவருவதைத் தடுத்திடவும் தற்போது வெளியாகி உள்ளவற்றைத் திரும்பப் பெறவும் மிகத் தீவிரம்காட்டி வருவது ஏன்? என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஏனெனில் இந்தப் பாகங்களின் மூலமாக ஆர்.எஸ்.எஸ் ன் பாத்திரம் பற்றிய செய்தி கள் மக்களிடையே சென்றுவிடுமானால் சங்பரிவாரங்களின் தேசியப் பெருமைகள் மங்கி மடிந்து போய்விடும்.- ‘ப்ரண்ட்லைன்’, 19.1.2001, -நன்றி: ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

பேராசிரியர் பணிக்கர் அவர்களின் இந்த வெளிச்சத்தில் பார்க்கின்றபோது நாடு எவ்வளவுப் பெரிய அபாய அமைப்பின் கொடுங்கரங்களில் சிக்கியிருக் கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

70 ஆயிரம் கல்வி நிறுவனங்கள் அந்த அக்டோபசின் கரங்களில் மோசமான நோக்கத்தில் இயங்கி வருகின்றன.

தனியார் நிறுவனம் என்கிற காரணத்தால் எந்தச் சட்ட மீறலையும், ஒழுங்குத் தப்பிதங்களையும் செய்யலாம் என்று எங்காவது சட்டம் இருக்கிறதா?

`இந்திய வரலாறு தலைமுறைகளை அழிக்கும் குண்டுகளைத் தயாரிக்கும் ஆலைகளாக மாற்றப் பட்டு விட்டன’ என்று பார்வதி மேனன் மற்றும் டி.கே.ராஜலட்சுமி ஆகியோர் ஃபரண்ட் லைனில் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர் இது ஒரு நறுக்குத் தெறித்த விமர்சனம் என்பதில் அய்யமில்லை.

பா.ஜ.க., ஆண்ட மாநிலங்களில் அவர்களால் நடத்தப்படும் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரமும் கொடுக்கப்பட்டு விட்டது. டில்லி, குஜராத், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் மாநிலங்களில் ஹிந்து சிக்ஷ சமிதி என்ற பெயரால் நடத்தி வருகின்றனர்.

ஒரிசா, பஞ்சாப், மாநிலங்களில் இவர்களால் நடத்தப் படும் `சிக்ஷ விகாஷ் சமிதி’களுக்கு அரசு அனுமதி கிடையாது; எனினும் நடத்தப்படுகின்றன. கேரள மாநிலத்தில் சிசு வித்யாலயா (14 மாவட்டங்களில் 174 பள்ளிகள்) என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்., நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கும் அரசு அனுமதி கிடையாது.

இவர்களால் நடத்தப்படும் பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்களின் கால்களைத் தொட்டுக் கும்பிட வேண்டும். வருகைப் பதிவேடு எடுக்கும் பொழுது `உள்ளேன் அய்யா’ என்பது போன்ற குரல் கொடுக்கக் கூடாது; மாறாக வந்தே மாதரம் என்றுதான் சொல்ல வேண்டும்.

டாக்டர் இராதா கிருஷ்ணன் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாட வேண்டும் என் பது அரசின் ஆணை. ஆனால் இவர்கள் நடத்தும் பள்ளிகளில் வியாசர் பிறந்த தினம்தான் ஆசிரியர் தினம் (வியாசர் பிறந்ததற்கு நாள் குறித்தது யார்? அவர் பிறந்த ஆபாசத்தை சொல்லி எங்கே போய்தான் முட்டிக் கொள்வதோ!)

அதேபோல நேரு பிறந்த நாளை குழந்தைகள் தினமாக அவர்கள் அனுசரிப்பதில்லை. கிருஷ்ண ஜெயந்திதான் அவர்கள் கொண்டாடும் குழந்தைகள் தினம்.

(சின்ன வயதில் வெண்ணெய்யைத் திருடி வாலிப வயதில் பெண்ணைத் திருடும் பழக்கத்தைத் தான் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பார்களோ!)

அவர்கள் கல்வி நிறுவனங்களில் `ஜனகனமன’ என்கிற தேசிய கீதம் கிடையாது. மாறாக சரஸ்வதி வந்தனாதான்! (பெற்ற அப்பனையே புருஷனாகப் பெற்ற `பாக்கியம்’ சரஸ்வதிக்கு அல்லாமல் வேறு யாருக்குத்தான் கிடைக்க முடியும்!)

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பண உதவியுடன் ஆயிரக்கணக்கான ஏகல் வித்யாலயங்களை பா.ஜ.க., ஆளுகின்ற ஜார்க்கண்ட் மாநிலத்தில் விசுவ ஹிந்து பரிசத் நடத்தியது.

தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. ஏஃபார் அர்ஜுன், பிஃபார் பிரம்மா, சிஃபார் கவ்; டிஃபார் துருவா, ஜிஃபார் கணேஷ், ஃஎச்பார் ஹனுமான், ஆர்ஃபார் ராம் என்று இந்து புராண பெயர்களைப பயன்படுத்துகிறது.


வழிபாடு நடத்தும் போது இந்து வீரர்கள் எனப்படுவோருக்கு ஒவ்வொரு நாளும் ஒதுக்கப்படுகிறது.

இன்று சோமவார் (திங்கள்கிழமைம) இது சிவாஜிக்கு உரிய நாள்; அவருக்கு வழிபாடு நடத்துவோம்;
இன்று மங்கள் வார். (செவ்வாய்க்கிழமை), இது ஹனு மானுக்கு உரிய நாள், அவனுக்கு வழிபாடு செய்வோம் என்று ஒவ்வொரு நாளும் பிள்ளைகளை இந்து வெறியில் வீழ்த்துகிறார்கள்
.

இவை எல்லாம் பா.ஜ.க., ஆட்சியில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி காலத்தில் ஓகோ என்று நீர் ஊற்றி, உரமிட்டு வளர்க்கப்பட்டது.

அதன் பின்னர் வந்த ஆட்சிக் காலத்தில் இது குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட ஆய்வுக்குழு அளித்த அறிக்கையில் இவ்விவ ரங்கள் காணப்படுகின்றன. அவதேஷ் கவுசல், தீபக் மாலிக், கதிர்குமார், கே.ஆர். மீனா ஆகியோர் அந்தக் குழுவின் உறுப்பினர்கள் ஆவார்கள்.

அரசு தரும் மானியங்களை இந்த ஏசல் பள்ளிகள் ஏராளமாகத் தின்று கொழுத்தன.

கிராமப்புற மக்களுக்கு முறை சாராக் கல்வியை அளிக்கும் பெயரிலும், அதற்கான பொருள்களை விநியோகிக்கும் பெயரிலும் ஆர்.எஸ்.எஸின் இந்த ஏகல் பள்ளிகள் மனிதவள மேம்பாட்டுத் துறையின் மானியங்களைப் பெற்றன என்று அந்த நால்வர் குழு அம்பலப்படுத்தியுள்ளது.

ஒரு கிராமத்தில் நடக்கும் அரசாங்கப் பள்ளியில் உள்ள பதிவேட்டில் உள்ள பெயர்கள் ஏகப்பள்ளிகளில் சிலவற்றிலும் அப்படியே இடம் பெற்றிருந்தன என்பது எவ்வளவுப் பெரிய மோசடி! மானியங்களைப் பெறுவதற்கென்றே இத்தகைய ஊழல்கள் ஓகோ என்று கொடி ஏறியிருக்கின்றன.

பா.ஜ.க., மத்தியில் ஆட்சி செய்த காலத்தில் அனைத்து மாநிலங்களிலும் ஒரு கல்வித் திட்டத்தை அரங்கேற்றத் திட்மிட்டனர்.

22-10-1998 அன்று கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் மனிதவளத் துறை சார்பாக அளிக்கப்பட்ட இருந்த கல்வி திட்டம் வருமாறு:
(இந்துத்துவக் கல்விக் கொள்கை மேதை என்று ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் மெச்சப்படும் கிட்லங்கி யாவால் தயாரிக்கப்பட்டு மாநிலக் கல்வி அமைச் சர்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டது).
1. இந்தியக் கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு முதல் வகுப்பு முதல் உயர்நிலைக் கல்வி வரைக்கும் பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும்.
2. பெண்களைப் பொறுத்தவரையில் `வீட்டை நிர்வாகிப்பது சம்பந்தமாக’ போதிக்கப்பட்டாக வேண்டும்.
3. சகல மட்டங்களிலும் தாய்மொழிகள் மூல மாகவே பாட போதனைகள் நடத்தப்பட வேண்டும்.
4. இந்தியாவின் கலாச்சார ஒருமைப்பாட்டைப் பேணிப் பாதுகாப்பதற்காக மூன்றாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரைக்கும் சம°கிருத மொழியைக் கட்டாய பாடமாக்க வேண்டும்.
5. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நீதிநெறி போதனையானது செயல்படுத்தப்பட வேண்டும். அந்த போதனைகள் இந்துத்துவாக் கோட்பாட்டின் படி நடத்தப்பட வேண்டும்.
6 சரஸ்வதி வணக்கம். வந்தே மாதரம் பாடல்கள் சகல பள்ளிகளிலும் பாடப்படுவதைக் கட்டாயமாக்கிட வேண்டும்.
7. பாடத் திட்டங்கள் யாவும் சுதேசி மயமாக்கப்பட வேண்டும் (அதாவது காவி மயமாக்கப்பட வேண்டும்).
8. நாட்டில் நான்கு பிரதேசங்களில் சம°கிருத பல்கலைக் கழகங்கள் தொடங்கப்பட வேண்டும். இதற்காக அரசாங்கத் தரப்பில் நிதியாதாரங்கள் ஒதுக்கப்பட்டு விட்டன. (நிதியுதவிகள் கிடைக்காமல் கல்வித் துறையில் பல துறைகள் வாடிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் இங்கு நினைவுபடுத்திட விரும்புகின்றோம்).
9. இந்தியத் தத்துவப் பாடங்கள் (அதாவது இந்துமதத் தத்துவப் பாடங்கள்) போதிக்கப்பட வேண்டும்.
அ. உப நிஷத்துகள், வேதங்கள் முதலியவற்றை யெல்லாம் பாடத் திட்டத்தில் இணைத்திட வேண்டும்.
ஆ. எல்லோருக்கும் உயர்கல்வி அளித்திடும் இன் றைய முறையை மாற்றியமைத்திட வேண்டும். அப் போதுதான் கல்வித்தரமானது உயர்த்திட முடியும்.
இ. கல்வித்துறையில் அரசாங்கத்தின் பங்களிப்பை விட சமூகத்தினுடைய பங்களிப்பே அதிகமாக இருக்க வேண்டும்.
கல்விக்கூடங்களைத் தொடங்கிடுவதற்கு அரசு அனுமதி தேவையில்லை என்று ஒரு ஏற்பாடு செய்யப்பட வேண்டும். 10 வருடங்கள் செயல்பட்டு வரும் கல்வி நிலையங்களுக்கு உடனேயே அரசு அங்கீகாரம் அளிக்கப்பட்டாக வேண்டும்.

ஆர்.எஸ்எஸின் இந்தக் கல்வித் திட்டம் என்பது ஆரியப் படையெடுப்பின் அம்சம் என்பதல்லாமல் வேறு என்ன?

ஷபனா ஆஸ்மியின் கீறல்---உலக மகளிர் நாளை முன்னிட்டு மாநிலங்களவையில் பிபரல நடிகையான ஷபனா ஆஸ்மி பேசினார்.
தொடக்கக் கல்விப் பாடத் திட்டத்தின்கீழ் தயாரிக்கப்பட்டு இருக்கும். ஒன்றாம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் `மா கஹா ஹை, கஷர் பப்பா கஹா ஹை’ என்ற கேள்வி (அம்மா எங்கே அப்பா எங்கே?) என்பது கேள்வி?

அதற்குப் பதில் சொல்லும் குழந்தை `மார சோய் பா அவுர் பப்பா ஆபீ°’ என்கிறது. சமையல் அறை யில் அம்மா இருக்கிறார். அபீசில் அப்பா இருக்கிறார் என்று பதில் கூறுகிறது குழந்தை.

இதன் மூலம் சமையல் அறையில் பெண்கள் அடங்கிக் கிடக்க வேண்டும் என்ற காவிமயக் கொள்கையை சிறுவர் சிறுமியர் மனங்களில் பாரதீய ஜனதா புகுத்துகிறது. இந்தக் கேள்விக்கு ஆபீசில் அம்மாவும், சமையல் அறையில் அப்பாவும் இருப்பதாக ஏன் பதில் கூறக் கூடாது?’’ என்று தீப்பொறி பறக்கப் பேசினார். -(`ஆதாரம்: `தினமலர்’ 9-3-2002 திருநெல்வேலி பதிப்பு).

பா.ஜ.க., ஆளும் மாநிலங்களில் பள்ளிகளில் இந்து வெறியை ஊட்டும், மூடத்தன முடை நாற்றம் வீசும் பாடங்களைப் பயிற்று விட்டது ஒருபுறம்.

இன்னொருபுறம் பல்கலைக் கழகங்களில் வேத கால சோதிடம், வேத கணக்குகளை அறிமுகப்படுத்தத் துடியாய்த் துடிந்தனர்.அறிவியல் நிறுவனங்களும் அறிவியலாளர்களும் அதற்குக் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

``இந்த அறிவியல் அறிவுச் சமூகத்தின் பெரும் பகுதியினைச் சென்றடைய அனுமதிக்கவும். இந்த மிக முக்கியமான அறிவியல் உலகின் பிற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கவும் இந்தியாவில் வேதகால ஜோதிடத்திற்கு புத்துயிர் ஊட்டுவதற்கான அவசர தேவை உள்ளது’’ என்று பல்கலைக் கழக மான்யக் குழு பல்கலைக் கழகங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியது என்றால் இதனைக் கண்டு வாயால்தான் சிரிக்க முடியுமா?

இவர்கள் கூறும் வேதங்களில் 5 கோள்களுக்கு மேல் இடம் கிடையாது என்பது கடைந்தெடுத்த நகைச்சுவையாகும்.

அறிவியலார் கண்டனம்-- இதுகுறித்து அறிவியலாளர்கள் மிகக் கடுமையாகவே கருத்துகளைத் தெரிவித்தனர்.

``கோள்களின் இயக்கமும், மாற்றமும் பூமியின்மீது மிகக் குறைந்த அளவான பாதிப்பையே கொண்டுள்ளது. ஒருவரின் பிறந்த காலம், இடம் ஆகியவற்றைப் பொறுத்து குறிப்பாக அவரின்மீது எந்தவித பாதிப்பையும் உறுதியாக அவை ஏற்படுத்துவதில்லை” என பல்கலைக் கழக மான்யக் குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் யஷ் பால் கூறுகிறார்”;

அறிவுடன் சிந்திக்கும் வழிகளிலிருந்து பாதுகாக்கப்படும் மத மடாலயங்களைப் போல ஜோதிடத்திற்குத் தனியாக துறைகளை பல்கலைக் கழகங்களில் அமைப்பது ஒரு மாபெரும் தவறாகும். எந்தத் தன்மானம் கொண்ட பல்கலைக் கழகமும் இத்தகையத் துறையினைத் தொடங்க அனுமதி கோர முன்வராது’’

“ஜோதிடத்தில் மக்கள் நம்பிக்கை வைப்பது என்பது வேறு பல்கலைக் கழகங்களில் அதனைப் பாடமாக அறிமுகப்படுத்துவதென்பது வேறு” என்று பல முக்கியமான பதவிகளை வகித்த, நாட்டின் அறிவியல் கொள்கையினை வடிவமைப்பதில் ஒரு முக்கிய பங்காற்றிய டாக்டர் சி.என்.ஆர். ராவ் கூறுகிறார்.

``தனிப்பட்ட மதமும் நம்பிக்கையும் பொது விஷயங்களில் நுழையக்கூடாது. ஜோதிடம் என்பது ஒரு அறிவியல் அல்ல; அறிவியல் நடைமுறைகளான ஆய்வு சோதனை ஆகியவற்றினால் அது மெய்ப்பிக்கப் பட இயலாததாகும். பல்கலைக் கழக பாடத் திட் டத்தின் ஒரு பகுதியாக ஜோதிடத்தை அறிமுகப் படுத்துவதன் மூலம், அதனை ஒருஉண்மையான அறிவியல் பாடமாக ஆக்க அரசு முயல்கிறது. அமைச்சரவையில் அறிவியல் ஆலோசனைக் குழு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய தீவிரமான பிரச்சினை இது” எனவும் அவர் கூறுகிறார்.

“இப்பிரச்சினை அறிவியல் சமூகத்திற்கு அளிக்கும் கவலை அளிக்கும் ஒன்றாக உள்ளதால், அதனை நடைமுறைப்படுத்தும் முன், அறிவியல் அறிஞர் களுடன் அதுபற்றி கலந்துரையாடியிருக்க வேண்டு” மென, இந்திய அறிவியல் நிறுவன இயக்குநரும், இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் தலைவருமான டாக்டர் கோவர்த்தன் மேதா கூறியுள்ளார்.

ஜோதிடம் என்பது ஒரு அறிவியல் அல்ல. அதனை பல்கலைக் கழகத்தில் ஒரு பாடமாக அறிமுகப்படுத்துவது சிறிதும் பொருத்தமற்றது என தேசிய முன்னேற்ற ஆய்வு நிறுவன இயக்குநர் டாக்டர் ரோடம் நரசிம்மா கூறியுள்ளார். இந்திய வானியல் அமைப்பின் தலைவர் டாக்டர் ஜி.சீனிவாசன், இதுபற்றி இவ்வமைப்பின் கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இம்முயற்சி பற்றி தங்களது எதிர்ப் பினை நாட்டிலுள்ள அறிவியல் நிறுவனங்கள் பல ஈ-மெயில் கடிதங்களில் பரிமாறிக் கொண்டுள்ளன. பல அறிவியலாளர்கள் விரும்பிப் படித்த பொதுவான ஈ-மெயில் கடிதம் இவ்வாறு தெரிவிக்கிறது. `கீழ்க் கண்ட இந்திய அறிவியல் சமூக உறுப்பினர்களான நாங்கள், இந்தியப் பல்கலைக் கழகங்களில் வேத கால ஜோதிடத்தை (ஜோதிடர் விஞ்ஞானம்) அறிமுகப் படுத்தும் பல்கலைக் கழக மான்யக் குழுவின் திட்டம்,

இது வரை நம் நாடு அறிவியல் துறையில் என் னென்ன சாதனைகளைப் படைத்துள்ளதோ அவற்றையெல்லாம் மதிப்பிழக்கச் செய்துவிவட்டது போன்று, சிந்தனையில் ஒரு பெரும் பிற்போக்குத் தனமாக தாவலாக அமைந்துள்ளதெனவே கருதுகிறோம்.

இத்தகைய மதிநுட்பமற்ற பாடத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டுமென நாங்கள் பல்கலைக் கழக மான்யக் குழுவினைக் கேட்டுக் கொள்கிறோம்’’--(தி ஹிந்து’ 28-3-2001)

அறிவியல் சிந்தனைகளுக்கு எதிராக இவ்வாறு ஆரியக்கூத்து நடத்தப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பள்ளிகளாக இருந்தாலும், அங்கும் விஞ்ஞானத்துக்கு மாறாக நடத்தப்படும் பாடங்கள் தடை செய்யப்படவேண்டும். மதவெறிப் பாடத் திட்டங்கள் உடனடியாக நீக்கப்படவேண்டும்.-- கலி. பூங்குன்றன்
http://unmaionline.com/20060301/hindu.htm
---------------------
படித்துவிட்டீர்க‌ளா?
பார்ப்பனன் கும்பிடாத அசிங்கத்தைச் சூத்திரப் பக்தர்களிடம் தள்ளி விட்டனர்.ஒருத்திக்கே டசன் கணக்கில் கணவன்கள்..... ஒருவனுக்கே ஆயிரக்கணக்கில் மனைவிகள் ...

உண்மையான நிலை இந்துக் கோயில் என்ற ஒன்று கிடையாது .பார்ப்பனீய திருட்டுத் தந்திரத்தை தூக்கிப் பிடிக்கும் பக்தர்கள்...!!! நிர்வாண நாட்டில் கோவணம் கட்டி.

கடவுள்களுக்குக் காசு செலவழிந்து காசுக்குப் பஞ்சம் வந்த காரணத்தால்...! ? சும்மா இருக்க முடியுமா! எப்படி சமாளித்தார்கள்!!
------------------------
மற்ற பதிவுகள்

No comments: