Followers

Tuesday, February 26, 2008

கடவுளும் பாபம் செய்தவையா? நதிகள் எப்படிப் பாவம் செய்யும்? மீண்டும் பாவம் செய்வதற்கே!

மாசி மாதத்தில் முழு நிலவு நாளில் `மகம் திருவிழா கொண்டாடப்படுகிறது. மாசி மகத்தில் கும்பகோணம் மகாமகத்தின் போது (மூத்திர) குளத்தில் குளிப்பது என்பது பெரிய விழா. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இது நடைபெறுகிறது.

அன்றைய நாளில் கங்கை, யமுனை, சரசுவதி (?) நர்மதை, கோதா வரி, காவேரி, சரயூ, துங்க பத்திரா, கிருஷ்ணா ஆகிய ஒன்பது நதிகளும் மகாமக குளத்தில் குளித்துத் தம் பாவங்களை போக்கிக் கொள்கின்றனவாம்.

நதிகள் எப்படிப் பாவம் செய்யும்?

பாவம் செய்த மனிதர்கள் நதிகளில் குளித்துத் தம் பாவங்களைப் போக்கிக் கொண்டார்கள் அல்லவா? அப்படிக் கழுவிவிட்ட பாவங்கள் நதியின் பாவங்களாம். நதியின் பாவங்களை குளத்தில் போக்கிக் கொள்ளலாமாம்!

அது எப்படியோ இருக்கட்டும். `மாமகந்தான் ஆடுதற்கு வந்து வழிபடும் கோயில் என்று கும்பகோணத்தைப் பாடுகிறார்கள். மயிலையர் மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் என்று மயிலாப்பூரைப் பாடுகின்றனர். மாசி மக விழா நடக்கும் கோயில்கள் இருக்கும் ஊரெல்லாம் இப்படிப் பாடுகிறார்கள். `

மாசிக் கடலாடி வீற்றிருக்க மண்டபமும் தில்லை நடராசன் கோயிலில் கட்டுவித்தான் ஒருவன் எனச் சிதம்பரம் கோயில் கல்வெட்டு கூறுகிறது.

எனவே சாமி கடலில் குளிக்கிறது மாசி மகநாளில்.``பாவத்தைக் களைந்து புண்ணியத்தைப் போர்த்துக் கொள்வதாகிய ராஜ கிரகத்துக்கு ஒரு சடங்கு வேண்டாவோ?

அவ்விதச் சடங்கே மஹாமகம் முதலிய புண்ய தீர்த்த யாத்திரையென்க என முத்தாய்ப்பு வைத்தார் முண்டாசு கட்டியப் பார்ப்பனக் கவிஞர்.

இவரைத்தான் புது மைக்கவி என்று புரட்சிக்காரர்கள் பூரித்துப் புகழ்ந்து புல்லரித்துப் போகிறார்கள்.

மனிதர் பாவம் கழுவக் குளத்திலோ, ஆற்றிலோ, கடலிலோ, குளிப்பது சரி. அந்த நாளில் கடவுள் ஏன் குளிக்கிறது?

கடவுள் பொம்மைகளை ஏன் தூக்கிக் கொண்டு கடற்கரைக்கு ஓடுகிறார்கள்?
கடவுளும் பாபம் செய்தவையா?
பாரதி விளக்குவதற்கு வழியில்லை. பக்தர்கள் விளக்க வேண்டும்? செய்வார்களா?

அன்றைய நாளில் அப்படி ஒரு கடவுளைத் தூக்கிக் கொண்டு சிதம்பரம் வட்டத்தில் உள்ள நஞ்சை முகத்து வாழ்க்கை எனும் ஊரின் கடல்கரைக்கு வருகிறார்கள். கடவுள் பெயர் தரைப் பன்றிச் சாமி (பூவராகசாமி என்பதைத் தமிழ்ப்படுத்தினேன் அவ்வளவே) இருக்கின்ற ஊர் பெயர் சிறீமுஷ்ணம் (கடலூர் மாவட்டம்)சீர்வரிசையோடு இந்தச் சாமியை ஊர் எல்லையில் வரவேற்பது இசுலாமியர்கள். பட்டுப் புடவை தந்து வரவேற்கிறார்கள்.

சாமி கடலில் தீர்த்தவாரி செய்கிறது. நாம் செய்தால் குளியல். அவாள் செய்தால் ஸ்நானம். அது செய்தால் தீர்த்தவாரி. யானை மண்ணைவாரி போட்டுக் கொள்வதுபோல சாமி நீரை வாரிப் போட்டுக் கொள்கிறதோ?

தீர்த்தவாரி முடிந்து இசுலாமியர் தந்த பட்டு உடுத்தி ஜாம் ஜாமென்று சிறீ முஷ்ணம் திரும்பும் பூவராகனுக்குக் கோயிலின் கதவுகள் நான்கையும் திறக்காமல் (துடைப்பர்) கட்டையடித் திருவிழா நடத்துகிறார்களே, ஏன்?

இரவு முழுவதும் பன்றிச் சாமி தெருவில் கிடந்து, (பூர்வீக உணவை உண்கிறதோ?) விடிந்ததும் கோயிலுக்குள்ளே போகிறதே, ஏன்?

நஞ்சை முகத்து வாழ்க்கையில் `துலுக்க நாச்சியார் தந்த துணியைக் கட்டிக் கொண்டு வந்தது என்பதற்கான தண்டனையா?

சீரங்கம் ரங்கனை உறையூர் துலுக்க நாச்சியார் கோயிலுக்குத் தூக்கிப் போய் இரவுச் சல்லாபம் முடிந்ததும் மறுநாள் சிறீரங்கம் தூக்கி வருகிறார்களே, அதுபோல சிறீமுஷ்ணம் சாமியும் செய்துவிட்டதால் தாயார் தரும் தண்டனையாம். (விஷ்ணுவின் பார்யாள் பக்தர்களுக்கு தாயார்)

இதே காரணத்திற்காகத் திருப்பதியில் இருந்த அலர்மேலு மங்கைத் தாயார் திருப்பதியை (கணவன் இருப்பிடத்தை) விட்டு வெளியேறி திருச்சானூரில் தனிக் குடித்தனம் செய்கிறது.

ஊருக்கு ஒரு விதமான தண்டனை! நிற்க, பாவம் போக்க தீர்த்தவாரி என்றால், வைப்பாட்டி வீட்டுக்குப் போய் பாவத்தைக் கொள்முதல் செய்கிறதுகளே, கடவுள்கள்! இதுகளைத் திருத்தவே முடியாதா?

இந்தப் பாவத்தைக் கழுவுவது எப்போது? ஓகோ, அதற்காகத்தான் அடுத்த ஆண்டு மாசி மகம் வருகிறதோ?


``கீழே விழுவது மீண்டும் எழுவதற்கே என்றார் நரேந்திரன் என்கிற விவேகானந்தன்.

இங்கே, மாசி மக ஸ்நானம் மீண்டும் பாவம் செய்வதற்கே!
விந்தை மதம்தான் இந்து மதம்!

எந்தக் கடவுள் பெரியது?
இந்து மதத்தில் மும்மூர்த்தி கள் என்கிறார்கள். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி என்கிறார்கள். பிரம்மா படைக்கிறதாம். விஷ்ணு காக்கிறதாம். சிவன் அழிக்கிறதாம். அடுத்தது அதனதன் பாதையில் அதனதன் பணியைப் பார்ப்பதுதான் நல்லது. அதை விடுத்து ஒன்றின் பணியில் மற்றது குறுக்கிடுவது சரியல்லவே!

இச்சாதாரண முறை ஏன் கடவுள்களுக்குத் தெரியவில்லை?
இந்தப் பிரபஞ்சம் எல்லாவற்றையும் தாமே படைத்ததாக பிரம்மா நினைத்துக் கொண்டு தன்னை மிக உயர்வாக நினைத்துக் கொண்ட தாம். சிவனுக்கும் அய்ந்து தலைகள்; தனக்கும் அய்ந்து தலைகள். ஆகவே சிவன் ஒன்றும் பெரிதல்ல; தன்னைப் போலவே அது என்று இறுமாந்ததாம். இந்த நினைப்பு கெட்ட காரியத்திற்கும் தூண்டியதாம்.

சிவனின் மனைவியை ``ஒரு மாதிரியாகப் பார்த்ததாம் பிரம்மா!

அந்தப் பெண்மணிக்குக்கூட வேறுபாடு தெரியாதா, என்ன? அதுவும் பிரம்மா மேல் ``ஒரு மாதிரியாகப் பார்த்ததாம். பரமசிவன் அதைப் பார்த்து விட்டதாம். என் பெண் ஒரு மாதிரி, உன் பையனை அடக்கி வை எனக் கூறினானாம் ஒரு தந்தை!

அதைப் போலவே முறை தவறும் தன் மனைவியை ஒன்றும் செய்யாமல் பிரம்மாவின் தலையைக் கிள்ளி எடுத்து விட்டதாம் சிவன்.

அய்ந்து முகப் பிரம்மா நான்கு முகம் கொண்டதாகி விட்டதாம்.
தவறு செய்தான், தண்டனை கிடைத்தது என்று விட்டுவிடவில்லை. பிரம்மா பார்ப்பனன் ஆனதால் `பிரம்மஹத்தி (பார்ப்பனக் கொலை) தோஷம் சிவனைப் பிடித்துக் கொண்டதாம்.

இருந்தாலும் அதற்கு `பிரம்ம சிரகண்டீகர் எனப் பெயராம்.
மாவலிச் சக்ரவர்த்தியைத் தெரியுமல்லவா? மூன்றடி மண் வேண்டும் எனக் கேட்டு அவனைக் கொன்றது வாமன அவதாரம் எடுத்த விஷ்ணு. அதனால் கோபம் வந்து விட்டதாம் சிவனுக்கு. ஏன் தெரியுமா?

ஒரு முறை, சிவன் கோயிலில் எரிந்து கொண்டிருந்த அகல் விளக்குத் திரியைத் தூண்டிவிட்டு எரியச் செய்தவனாம் மாவலி. அதிலும் எலியுருவில் கோயிலில் நுழைந்து செய்தானாம். அதனால் சிவனால் வரங்கள் அளிக்கப்பட்டவனாம் மாவலி.

அப்பேர்ப்பட்ட சிவனின் பரமபக்தனை வதம் செய்ததால் விஷ்ணுவின் காலில் புற்றுநோய் உண்டாகும்படிச் சாபம் இட்டு விட்டதாம் சிவன்.

இந்தப் புற்று நோயால் அவதிப்பட்ட விஷ்ணு புலம்பிக் கொண்டே இருந்ததாம். காலில் வரும் புற்று நோய் கொடிய மெலனோமா அபூர்வமாக வருவது. ஆனாலும் ஆபத்தானது. கரும்பழுப்பு அல்லது கறுப்பு நிற மரு போலத் தோன்றும். கவனிக்காமல் விட்டால் பெரிதாகும் புண்ணாகும். இரத்தம் வடியும். பெரும்பாலும் பாதத்தில் வரும். தொடக்க கட்டத்திலேயே மருத்துவம் பார்த்தால் குணமாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

விஷ்ணு கயிலாயம் போய் சிவனைச் சந்தித்துச் சாப விமோசனம் கேட்டதாம். திருவெற்றியூர் வந்து (நிம்ப வனம்) குளத்தில் குளித்துத் தன்னைக் கும்பிட்டால் குணமாகும் என்று கூறியதாம் சிவன். விஷ்ணுவும் போனதாம். வாசுகி குளத்தில் குளித்துக் கும்பிட்டதாம். கால் புற்று நோய் குணமாகி விட்டதாம்.

மதுரையிலிருந்து திருவாடானை போய், 12 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திருவெற்றியூரை அடையலாம். கால் புற்றுநோய் கொண்டவர்கள் குளத்தில் குளித்தால் குணமாகி விடும் என நம்பிப் போய்விட வேண்டாம்.

எவன் தலையில் கை வைத்தாலும் அவன் தலைவெடித்துச் செத்துப் போவான் என்று பத்மா சூரனுக்கு வரம் கொடுத்து விட்டதாம் சிவன். வரம் பலிக்கிறதா எனப் பரிசோதனை செய்து பார்க்கலாம் என்று சிவன் தலையிலேயே கை வைத்துப் பார்க்க முயன்றானாம். பத்மாசூரன். பயந்து போன சிவன் ஓட, சூரன் துரத்த, விஷ்ணு பெண் வேடம் போட்டு வந்து சூரனை மயக்கிக் கொன்றதாகவும் ஒரு கதை.

முன் கதையை வைத்து சிவன் பெரியதா? பின் கதையை வைத்து விஷ்ணு பெரியதா?

பாரத மாதா கோயில்!
தருமபுரி மாவட்டம் பாப்பாரப் பட்டியில் பாரத மாதா கோயில் கட்ட வேண்டும் என்று சுப்ரமணிய சிவா என்பவருக்கு எண்ணம் இருந்தது. அவர் அந்த ஊர்க் காரர். கப்பலோட்டிய தமிழ னின் நண்பர். கண்ணனூர். கோவைச் சிறைகளின் கொடுமையை அனுபவித்து விட்டு வெளியே வந்த அவரை வரவேற்க வந்த உற்ற நண்பர் சிவா. அவருடைய தியாகம் உயர்ந்தது. பாரத மாதா கோயில் கட்டும் நோக்கம்கூட அன்றைய நிலையில் நியாயமாக இருந்திருக்கலாம்.இன்றைக்கு அதற்காக நடக்கிறார்களே! ஒரு அய்யம்,

கோயில் அன்றைய பாரத மாதாவுக்கா? இன்றைய மாதாவுக்கா? பாரத மாதா என்று இன்று அழைக்கலாமா? மணி முடி இருந்த கேசவர்த்தினி தடவாமலே வளர்ந்த தலைமயிர் (ஆப்கானிஸ்தான்) இன்றைக்கு இல்லை. முகத்தில் ஒரு பக்கம் தான் இருக்கிறது (காஷ்மீர்) மறுபக்கம் பாகிஸ்தானுக்குப் பறிபோய் விட்டது.

இருக்கும் பக்கம்கூட இழிபறியாக இருக்கிறது. வலது தோளும் கையும் காணோம். பாகிஸ்தானாகி விட்டது. இடதுகையும் சேலையின் முன்தானையும் (பர்மா) மியான்மா நாடாகி விட்டது. கால் பாதங்கள் இலங்கையாகி விட்டன.

இடதுபக்க இடுப்புப் பகுதி பறிபோய் பங்களா தேஷ் என்றாகி விட்டது.
மிச்சம் இருப்பது உருவமில்லா உருவமாக இருக்கிறதே! இதற்கா கோயில்?

கோட்சே குடும்பம் இன்றைக்கும் வைத்துக் கொண்டிருக்கும் பாரத மாதாவுக்கும் இன்றைய பாரத மாதாவுக்கும் ஏகப்பட்ட சேதங்கள், இழப்புகள் இருக்கையில் எந்தப் பாரதமாதாவுக்குக் கோயில்? நடப்பதற்கு முன்னால் யோசிக்கவில்லை. நடந்த பின்னாலாவது யோசிக்கலாமே!
நாட்டுக்குச் செய்யவும் மக்களுக்கு ஆற்றவும் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றை விடுத்து... http://viduthalai.com/20080223/snews05.html
--------------------------------------
படித்துவிட்டீர்க‌ளா?
பைபிளின் வகைகள்-- பைபிளில் அக்கிரமஙகள் ஆபாச, காம அபத்தஙகள் ஒழுக்க எதிர்மறைகள், பெண் இழிவு

பைபிளின் 20,000 to 50,000பிழைகள். சில பகுதிகள் உண்மையல்ல ஆதலால் பைபிளின் மீது ஆணையாக சத்தியம் கூடாது.> கத்தோலிக்க திருச்சபை.

ஏசு கடவுள் அல்ல - பைபிள் புரட்டுகள். கிறித்தவ மதத்தில் A to Z வரை பிரிவுகள்:
---------------------------
மற்ற பதிவுகளுக்கு:- சிந்திக்க உண்மைகள்

No comments: