Followers

Wednesday, February 13, 2008

சிவனின் எது அறுந்து விழுந்து லிங்கமாக ஆகிப் போனது ?. - புராணம்.

புராணங்களைப் புரிந்து கொள்ளுங்கள்! (51)- சு. அறிவுக்கரசு

நாராயணனும் அதன் மகன் பிரம்மாவும் எவன் பெரியவன் என்று சண்டை போட்டுக் கொண்டனவாம்.

மெய்யாலுமே பெரிய சிவன் எதிரே வந்து நின்று போட்டி வைத்ததும் பிரம்மா பொய் சொல்லி மாட்டிக் கொண்டதும் இப்புராணத்தில் வருகிறது.

ஒரு சமயம் தன்னைக் காணவந்த தேவர்களிடம் திருமால், `எனக்கேற்பட்டுள்ள மகிமை எல்லாம் பராத்பரனான பரமேஸ்வரனின் கருணையால் ஏற்பட்டது. அவரே அனைத்துலகையும் பரிபாலனம் செய்பவர். பிரளய காலத்தில் நான் ஆலிலை மீது படுத்துக் கொண்டிருக்கையில் ஆயிரக் கணக்கான தலைகள், கரங்கள், கால்களுடன் ஒரு பேரொளி காணப்பட்டது.

கொஞ்சம் கொஞ்சமாக அது நான்கு முகங்களுடன், பொன்நிறம் கொண்டு, பூணூல், கமண் டலங்களுடன் தோன்றி என்னை யாரென்று கேட்டது.
பின்னர் அவ்வடிவம்தான் சுவயம்பு என்றும், சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரகன் நானே என்றது. அப்போது நான் (விஷ்ணு) நானே சர்வமும் என்று கூறி விளக்கினேன். இருவருக்கும் பெரிய வாக்கு வாதமே நடந்தது.

அப்போது எங்கள் இருவர் எதிரில் வடக்கிலிருந்து ஒரு பேரொளி வந்து நின்றது. அதனருகில் நாங்கள் சென்று பார்க்க அது ஒரு மகாலிங்கமாய் காட்சி அளித்தது. அதன் அடியும் முடியும் புலப்பட வில்லை. அப்போது அதன் அடியைக் காண நானும் (விஷ்ணு) முடியைக் காண பிரம்மாவும் புறப்பட்டோம். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகியும் அடி, முடிகளைக் காண முடியவில்லை.

இருவரும் புறப்பட்ட இடத்திற்கே வந்து தங்கள் தோல்வியை ஏற்றோம். ``ஓ, பரமேஸ்வரா எங்களைக் காத்திடுங்கள் என்று பிரார்த்தித்தோம்.
அப்போது எதிரில் கோடி சூர்ய பிகாத்துடன் பிநாகம், திரிசூலம், பாம்பு, பூணூலுடன் சிவன் பிரத்யக்ஷமானார். தோன்றியவர் பெரிய அட்டகாசம் செய்தார்.

அதைக் கண்டு நாங்கள் அச்சமடைந்தோம். அப் போது அவர், `அச்சமேன். நீங்கள் என்னிலிருந்து தோன்றியவர்கள். வலக்கையிலிருந்து பிரம்மாவும், இடக்கையிலிருந்து விஷ்ணுவும் தோன்றினீர்கள். உங்களுக்குள் ஏன் போராட்டம்!

உங்கள் துதியினால் மகிழ்ச்சி கொண்டேன். என்ன வரம் வேண்டும் என்று கேட்டார் பரமன். அதற்கு நாங்கள் `உங்கள் திருவடிகளில் எங்கள் பக்தி என்றும் நிலைத்திருக்க வரம் அளியுங்கள் என்றோம்.

`இனி நீங்கள் சிருஷ்டியை ஆரம்பியுங்கள் என்று பரமன் கூறி மறைந்தார். `பரமன் அருளாலேயே தனக்கு துஷ்ட சிக்ஷணம், சிஷ்ட பரி பாலனம் செய்யும் சக்தி கிடைத்ததென்று அனைவரும் சிவனை பூசித்தனர் என்றார் திருமால்.

சிவனின் சிசினம் (ஆண்குறி) அறுந்து விழுந்த கதையையும் அதுவே லிங்கமாக ஆகிப் போனதையும் இப்புராணம் தான் கூறுகிறது.

இமயமலையில் தேவதாரு மரங்கள் நிறைந்த தாருகாவனத்தில் முனிவர்கள் தமது மனைவியருடன் ஆசிரமங்கள் கட்டிக் கொண்டு வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு அருள் புரிய சிவபெருமான் பிரகிருதி வடிவில் ஜடாதரனாய், கோரப் பற்களுடன் திகம்பரனாக தோன்றி அவர்கள் அமை தியைக் குலைக்க அவர் தவம் பங்கப்பட்டது.

முனிவர்கள் பரமனைக் கழுதை ஆகுமாறும், பேயாகுமாறும் சபிக்க அவர் கோபம் கொள்ளவில்லை. அவரது ஒளிக்கு முன் முனிவர்கள் சூரியனுக்கு முன் அகலாகக் காணப்பட்டனர்.முனிவர்கள் தேஷதாரி யிடம் நல்ல விதமாகப் பேச முனைந்தனர்.

இறுதியில் அவர் ஆடையுடுத்திவராவிடின் அவரது ஆண்குறி அகன்று விடும் என்று கூறி அச்சுறுத்த முயன்றனர்.

அப்போது பரமன் `கேச வாதியர்களால்கூட அது முடியாது. என் லிங்கத்தை நானே பூமியில் விடுகிறேன் என்று கூற

முனிவர்கள் `உன் பிரபாவம் எங்களுக்குத் தேவையில்லை. ஆடையுடுத்தி நாகரிகமாய் நடந்துகொள், இல்லாவிட்டால் இவ்விடம் விட்டு அகன்று விடு என்றனர்.

பரமன் மறைந்து விட்டார். ஆனால் அங்கு ஒரு லிங்கம் தோன்றியது. இவ்வாறு பரமன் மறைந்தவுடன் உலகமே அசைவற்று ஸ்தம்பித்துப் போய்விட்டது.

இதன் காரணத்தை அறியாமல் முனிவர்கள் பிரம்மாவிடம் சென்று நடந்தவற்றை எல்லாம் கூறி முறையிட அவர், ``வந்தவர் ஆதி புருஷனான பரமேஸ்வரனே. அவரே நாம் உயிருடன் இருப்பதற்கு, உலகில் ஜீவராசிகள் வாழ்வுக்கு ஆதிகாரணம். இது சிவனது லீலையே. எந்த தேஜஸ்ஸிலிருந்து லிங்கம் தோன்றியதோ அதை பரமேஸ்வர ரூபமாக எண்ணிச் சேவித்து இஷ்ட சித்திகளைப் பெறுங்கள் என்றார்.

புராணங்கள் 18 போதாது என்று கொசுறு ஆக வாயு புராணம் புளுகப்பட்டிருக்கிறது.

விண்மீன்கள், கிரகங்கள், சந்திரன் முதலிய ஜோதிர் மண்டலத்திலுள்ளவை அனைத்தும் சூரியனிலிருந்து தோன்றியவை என்கிறது இப்புராணம்.

சூரியன் பூமிக்குச் சமீபத்தில் உள்ள ஒரு நட்சத்திரம். விண்வெளியில் உள்ள பல நூறு நட்சத்திரங்களில் சிறிய நட்சத்திரம். இதைப்போல பல மடங்குப் பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் உண்டு. அப்படியிருக்கையில் சூரியனிலிருந்து தோன்றியவை என்பது மடத்தனத்தின் உச்சம்.

சூரிய கிரகணங்கள் பலவாம். அதில் முக்கியமானவை ஏழாம். அந்த ஏழிலிருந்து ஏழு கிரணங்கள் தோன்றின என்கிறது இப்புராணம். ஒரே ஓர் உண்மையை இப்புராணம் கூறுகிறது; சூரியனை ஒரு நட்சத்திரம் என்றே கூறுகிறது.சூரிய கிரகணங்கள் பல. முக்கியமானவை ஏழு. அந்த ஏழிலிருந்து ஏழு கிரகங்கள் தோன்றின.

கிரணம் - கிரகம்1) ஹரிகேசவன் - தானேயானது - சூரியன்.2. சுப்ஸம்ன - வளர்ச்சி, தேய்வு சந்திரன் உடையது.3. சம்பத்வசுவு - குஜன்(அ) அங்காரகன்.4. விச்வகர்ம - புதன்.5. அர்வாவசுவு - பிருகஸ்பதி.6. விச்வச்ரவன் - சுக்கிராச்சாரியார்.7. சுவராட்டு - சனி.

விண்மீன்கள் எனும் நக்ஷத்திரங்களும் சூரியனின் பிரபாவத்தால் உலகம் அழி யினும் இவை அழியா என்பதால் நக்ஷத்திரங்கள் எனப்பட்டன. சூரியன் விண்மீன்களைத் தன்னுள் கொண்டிருப்பதால் அதுவும் ஒரு நக்ஷத்திரமே.
புண்ணியம் செய்து விண்ணுலகம் அடைவோர்க்கு வீடு போன்றவை என்பதால் `கிரகங்கள் என்ற பெயர் ஏற்பட்டது.வெண்மை நிறம் கொண்டுள்ளதால் நக்ஷத்திரம் எனப் பெயர் பெற்றன.

இருளைத் தன்னுள் மறைத்து ஒளி தருவதால் சூரியனுக்கு `ஆதித்தியன் என்று பெயர். ஒளி, மழை பொழியச் செய்வதால் `சவித என்று பெயர். உலகுக்கு மகிழ்ச்சி அளித்து, அமுதைப் பொழிவதால் `சந்திரன் என்று பெயர். சூரியனது ஒளிமண் டலம் சந்திரனது மேக மண்டலம் என்று பெயர்.ராகு, கேதுக்கள் நிழல் கிரகங்கள் (சாயா கிரகங்கள்) ஆகும்.

மகா அசிங்கமானப் புளுகு இந்தப் புராணத்தில் உண்டு. படியுங்கள்.

அத்திரிமா முனிவர் மூவாயிரம் ஆண்டுகள் தவம் செய்த வர அவர் உடல் சோமரசமயம் ஆயிற்று. அவர் கண்களிலிருந்து சோமரசம் சிந்த ஆரம்பித்தது.

அதைக் கண்ட பிரம்ம தேவர் தேவதா ஸ்திரீகளை அழைத்து அந்த சோம ரசத்தை அருந்தி கருவுறுமாறு கூறிட, அவர்களும் அவ்வாறே செய்து கருவுற்றனர்.

ஆனால், அவன் கனம் தாங்காமல் அவற்றை அவர்கள் கீழே நழுவவிட அவை கீழே விழுந்து உடனே ஒன்றாக இணைய சந்திரன் (சோமன்) உருவானான்.

பிரம்மா உடனே சந்திரனைக் கீழே விடாமல் தேரில் வைத்துக் கொண்டு செல்ல பிரம்மாவின் மானச புத்திரர்கள் வேத மந்திரங்களால் துதி செய்தனர்.

பிரம்மாவுடன், சந்திரன் அத்தேரிலிருந்து பூமண்டலத்தை இருபத்தோரு முறை சுற்றிவர ஓக்ஷதிகள், வனஸ்பதிகள் (தாவரங்கள்) தோன்றி வளர்ந்தன.

சந்திரன் தவம் செய்து தன் சக்தியை வளர்த்துக் கொண்டான். பிரம்மா சந்திரனை ஓஷத சாம்ராஜ்ஜியத்திற்குப் பட்டாபிஷேகம் செய்வித்தார்.
தக்ஷன் நக்ஷத்திரங்களான இருபத்தேழு பெண்களைச் சந்திரனுக்கு விவாகம் செய்து வைத்தான். சந்திரன் அரசாட்சி பெற்ற மமதையுடன் ஆங்கீரசர் ஆகிய முனிவர்களை எதிர்த்து பிரகஸ்பதியின் மனைவியாகிய தாராவை அபகரித்துச் சென்றான்.

ரிஷிகள், தேவர்கள் அவன் செய்வது அக்கிரமம் என்றும், தாரையை விட்டு விடுமாறும் அறிவுரை கூறினர். ஆனால், அவன் கேட்கவில்லை. அவனுக்கு உதவியாகச் சுக்கிராச்சாரியார் வர தேவாசுரப் போர் நடந்தது.

இந்நிலையில் தேவர்கள் பிரம்மாவை நாடிப் போரை நிறுத்த வேண்டினர். பிரம்மா வும் தலையிட்டு போரை நிறுத்தி தாரையைத் தானே பெற்று பிரகஸ்பதியிடம் ஒப்படைத்தார்.

ஆனால், கருவுற்றிருந்த அவளை ஏற்க மறுத்தார் பிரகஸ்பதி. அக் கருவை விட்டு விட்டு வருமாறு கூறினார். அவள் அக்கருவை ஒரு மரத்தடியில் விட்டுவிட்டாள். அக்கரு உடனே ஒரு சிறுவனாக மாறிட அதன் ஒளி, அழகு கண்டு தேவர்கள் வியப்புற்றனர்.

பின்னர் அக்குழந்தை சந்திரனுடையதே என்று தாரை கூறினாள். அக்குழந்தைக்குச் சந்திரன், புதனெனப் பெயரிட்டான்.

``சின்னஞ்சிறியதாக இருப்பதை பூதக் கண்ணாடி நன்றாகப் பெரிசு பண்ணிக் காட்டுகிறதல்லவா?

இம் மாதிரி வேதத்தில் சுருக்கமாக, சின்னச் சின்னதாகப் போட்டிருக்கிற தர்மவிதிகளை கதை கள் மூலம் பெரிசு பண்ணிக் காட்டுவதுதான் புராணம் என்று காலஞ்சென்ற காஞ்சி புரம் சங்கர மடத் தலைவர் சந்திரகேரேந்திர சுவாமிகள் கூறியுள்ளார். (கும்பகோணம் மடத் தலைவர் விழுப்புரம் சாமிநாதன் என்றும் கூறலாம்)

ஸ்தயம்வத (உண்மையே பேசு) என்று வேதம் சொல்கிறது. அதைப் புராணங்களே கடைப்பிடிக்கவில்லை என்பதை இந்தத் தொடர் ஓரளவு எடுத்துக்காட்டியுள்ளது.

இந்தப் புராணங்களை இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் வெளியிட்டுப் புண்ணியம் சம்பாதித்திருக்கிறார் கீழ்க் கொவளவேடு கிருஷ்ணமாச்சாரியார் என்பவர்.

அதிகமான விமர்சனத்திற்கு ஆளாகக் கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வோடு சுருக்கியும், அடக்கியும், நீக்கியும் எழுதி இருக்கிறார்.

பத்தும் எட்டும் பதினெட்டு என்பது நம் மரபு. ஆரியப் பார்ப்பனர் மரபு மாற்றிப் போடுவது! அதாவது எட்டுப் பத்து என்பது. எட்டுப் பத்து எண்பது அல்லவா?

ஆனால் சமக்கிருதம் பதினெட்டு என்கிறது. அதன்படி `அஷ்டாதச புராணமெனும் பதினெண் புராணங்கள் எனும் தலைப்பில் அவர் எழுதி நர்மதா பதிப்பகம் வெளியிட்ட நூலின் அடிப் படையில்தான் இத்தொடர் கட்டுரை எழுதப்பட்டது.

புராணத்தில் மாறுபாடுகள், வேறுபாடுகள், முரண்பாடுகள் எவையேனும் தலையெடுத்தால் நான் பொறுப்பல்ல. --- சு. அறிவுக்கரசு (நிறைவு)

SOURCE: viduthalai.com 09/02/2008
-----------------------------
படித்துவிட்டீர்க‌ளா?
அமெரிக்காவில் கடனைத் திருப்பிக் கட்டாத இந்துக் கடவுள் ஏலம்.!! அன்ன ஆகாரம், அர்ச்சனை இல்லாமல் தவிக்கும் சரசுவதியின் கோயிலே ஜப்தி!

யானை, கரடி உரு எடுத்து புணர்ந்த சிவனும் பார்வதியும் .. !!! வயிற்றுக்குள் விஷம் போனால், சிவன் செத்து விடுவானா? செத்தால் அவன் எப்படிக் கடவுளாவான்?

3000 பார்ப்பனர்களை திப்புசுல்தான் வலுக்கட்டாயமாக மதம் மாற்றினாரா? அவர் நெருக்கடியால் 3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா?
-------------------
மற்ற பதிவுகள்

1 comment:

அறிவாளி said...

ஐயையோ .............! அப்போ சிவனுக்கு அது கிடையாதா. அப்போ பார்வதி நிலைமை பாவம். சரி சரி கடவுளா இருக்குறதுனால இந்த பாப்பான் எல்லாம் சேர்ந்து எதாவது தகிடு தத்தம் பண்ணி சமாளிசிடுவானுங்கோ. சரி இப்போ ஒரு சின்ன சந்தேகம் அசுவமேத யாகத்துக்கும் இப்போ பார்வதி இருக்குற சூழ்நிலைக்கும் எதோ வொர்க் அவுட் ஆகுதே. சரி இது பத்தி பேசப் போன வாய் நாறிடும்.