Followers

Wednesday, February 20, 2008

பாரதத்தின் பெருமையை வேதங்கள் பறை சாற்றுகின்றனவா? கள்ளேதான் கடவுளடா என்றே வேதம் கூறுகிறது.

தந்திரப் புத்தி படைத்த பார்ப்பனர்கள் ஏமாளி மனிதர்களை மேலும் ஏமாற்ற ...... --சார்வாகன்

இந்தியாவின் தப்பு, தப்பு பாரதத்தின் பெருமையை வேதங்கள் பறை சாற்றுகின்றன என்கிறார்கள். இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த வேதங்களைப் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் படிக்கக் கூட முடியாதவாறு, ``சட்டங்கள் எழுதி வைத்துக் கொண்டார்கள்.

சூத்திரன் வேதத்தைப் படித்தால் காதில் ஈயத்தையும் அரக்கையும் காய்ச்சி உருக்கி ஊற்றவேண்டும் என்று எழுதி வைத்துக் கொண்டார்கள். வேதத்தைச் சொன்னால், நாக்கை அறுக்க வேண்டும். மனனம் செய்தவர்களின் இதயத்தைப் பிளக்கவேண்டும் என்றும் எழுதிவைத்துக் கொண்டார்கள்.

இன்று நிலை மாறி விட்டது. யாரும் படிக்கும் நிலை உருவாகிவிட்டது. வேதங்கள் பற்றி ஆய்ந்து பார்த்த மேலை நாட்டார் அவற்றை இங்கிலீசில் மொழிப் பெயர்த்துத் தந்துவிட்டனர். அனைவரும் படித்துவிட்டனர். அதன் உள்ளடக்கம் என்ன என்பது அனைவருக்கும் அம்பலமாகிவிட்டது.
ஆனாலும் வேதப் பெருமைகளைப் பேசும் பழக்கம் பார்ப்பனர்களை விட்டகலவில்லை.

கி.பி. 1400 இல் வாழ்ந்த ஸாயணாச்சாரி என்பவர் ரிக் வேதத்தை எழுத்து வடிவில் கொண்டு வந்துவிட்டார். அதற்கு முன்பு அது செவி வழியாகக் கேட்ட வாய்வழியாகச் சொல்லி வரப்பட்ட ``எழுதாக்கிளவியாகவே இருந்தது.
அதற்கும் முன்னதாகவே கி.பி. 629 முதல் 645 வரை இந்தியாவில் பயணம் செய்த பவுத்தக் கொள்கையினரான யுவான் சுவாங் தம் நாள் குறிப்பில் வேதங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளர்.

இந்த நாள் குறிப்பை சீன மொழியிலிருந்து பிரெஞ்ச் மொழிக்கு பெயர்த்தார். பிரஞ்சுக்காரர் ஸ்டானிஸ லாஸ் ஜூலியன். இந்த நாள் குறிப்பில் நான்கு வேதங்களையும் பற்றிய குறிப்புகள் உள்ளன.

பார்ப்பனச் சமூகக் குழுக்கள் (கணம்) பலவற்றிலும் பலவாறாக வேதங்கள் வழங்கப்பட்டு வேதங்கள் நிறைந்ததாக இருந்திருக்கின்றன. அதைக் குறிப்பிட்டு அவை ஒரே மாதிரியாகத் திருத்தப்பட்டு, எழுதப்பட்ட காலம் கி.மு. 800 ஆக இருக்கலாம் என்று ஜெர்மானியரான மாக்ஸ் முல்லர் தெரிவித்துள்ளார். ``கேம்பிரிட்ஜில் இந்திய வரலாறு எனும் நூல் இதனை கி.மு. 600 எனக் குறிப்பிடுகிறது.

வேத காலம் என்பதைச் சுமாராக 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றே வைத்துக் கொள்ளலாம். அந்தக் காலத்தில் அறிவு வளர்ச்சி இல்லாத - ஆடு, மாடு மேய்க்கும் இடையர்களாக இருந்த ஆரியர்கள் தாம் எவற்றை கண்டு பயந்தார்களோ, அவற்றை யெல்லாம் வணங்கியிருக் கின்றனர்.
அவற்றுக்கெல்லாம் தங்கள் உருவத்தைக் கற்பித்து குணங்களையும் கொடுத்துவிட்டனர்
.

விருப்பு, வெறுப்பு, கோபம், மகிழ்ச்சி எல்லாவற்றையும் அவற்றிற்கு அளித்ததோடு நிறுத்தாமல் அவற்றை வசியப்படுத்துவதற்கு வழி வகைகளையும் கூறிவிட்டனர்.

``போற்றிப் பாடடி, கடவுள் காலடி மண்ணை என்கிற பாணியில், இதைச் செய்தால் அதற்கும் பிரீதி என்றெல்லாம் கற்பனைக் கதை கட்டி வைத்துவிட்டார்கள்.

இதற்காகக் கண்டுபிடிக்கப் பட்ட சொல்தான் ``ஹவிஸ் ```அவிர்பாகம் முதலியன அப்படிப்பட்ட கடவுள்களுக்கு நாள் முழுக்கப் பணி ஒதுக்கீடு செய்து வேலை வாங்காமல் ஒவ்வொரு பொழுதுக்கும் ஒவ்வொரு கடவுள் என்று பாகம் பிரித்துக் கொடுத்துவிட்டனர்.

அந்தக் கடவுள்களில் பெண்களும் அடக்கம்.உஷஸ், அக்னி, சூரியன், ப்ருத்வி (மண்) த்யவுஸ் (வானம்) வருணன், இந்திரன், இந்திராணி, வருணானி, அத்னாயி என்ற பட்டியல் நீளும். இன்று இந்தக் கடவுள்கள் எதுவுமே `உயிருடன் இல்லை.

எல்லாம் மாஜி கடவுள்கள்!
வேதகாலக் கணக்கின்படி சொர்க்கம், மத்திய ஆகாயம், பூமி என்ற மூன்று லோகங்கள் மட்டுமே!
கவனியுங்கள் பாதாளம் கிடையாது. ஈரேழு லோகங்கள் என்கிற கணக்கின்படி 14 லோகங்கள் கிடையாது.
மூன்று லோகங்களுக் குமாகச் சேர்ந்து 11 கடவுள்கள் வீதம் மொத்தம் 33 கடவுள்கள் மட்டுமே!
இதனை எவன் 33 கோடியாக்கினான் எனத் தெரியவில்லை.

இதே மாதிரி மூன்று லோகத்தை யூதர்களும் கூறுகிறார்கள்.வருண்: ரிக் வேதப்படி மிகவும் சக்தி வாய்ந்த கடவுளாகக் கற்பிக்கப்பட்டது. வருணன்தான் தேவர்களின் கடவுளும் அதுவே மனிதர் களின் கடவுளும். அதுவே. பூமியையும் ஆகாயத்தையும் தனித்தனியே பிரித்தது வருணனால் தானாம். நதிகளெல்லாம் கடலில் கலப்பதும் இதனால் தானாம்

சூரியன் ஒளி வீசித் திகழ்வதும் வருணனால்தான். பூமியில் இருக்கும் கடல் நீர் கவிழ்ந்து ஒழுகாமல் இருப்பதும் வருணனால் தானாம்! ஆனால், இதே வருணன் அதர்வ வேதத்தில் சக்தி குறைந்த நோஞ்சான் கடவு ளாக்கப்பட்டுள்ளது

இந்திரன்: மனிதர்களின் வாழ்க்கை விவகாரங்களில் அடிக்கடி தலையிடும் கடவுள் இந்திரன். வாயு என்கிற கடவுள் இதற்குத் தேரோட்டி. இதற்கு ஆயுதம் வஜ்ரம்.

இதற்கு மற்றொரு பெயர் சோமன் பெயருக்கேற்ப சோம பானம் இதற்கு பிடித்த மது ஆகும்.

ஆரியர்களின் பாதுகாவலனாக இருந்துள்ளது. அதனாலேயே அதிகமாக இந்தக் கடவுளைத் துதித்தும் வாழ்த்தியும் நிறைய பாடல்கள் ரிக் வேதத்தில் உள்ளன.
இதன் பலத்தைக் கண்டு வான் கோளங்கள் பயந்தன. சீறிப் பாய்ந்த மலைகளை இதுதான் அடக்கிற்றாம். மேகங்களைப் பிளந்து நதிகளை ஒழுகச் செய்ததாம்.

சோமச் செடியை அம்மிக் குழவியினால் அமுக்கிப் பிழிந்து சாறு எடுத்துச் சோமபானம் தயாரிப்பவனாம். சூரியனின் ஏழு கதிர் களையும் ஏழு நதிகளையும் இந்திரனே என்றெல்லாம் போர்க் கடவுள் என்றே போற்றிப் பாடுகின்றன.

அக்னி: சூரிய ஒளி, மின்னல், எரிகின்ற தீ இவையெல்லாம் அக்னி என்றனர். இதனை சொர்க்கத்திலிருந்து பூமிக்குக் கொண்டு வந்ததாகக் கூறுகின்றனர். கிரேக்கப் புராணங்களிலும் புரொமீதியஸ் இந்தப் பணியைச் செய்ததாகக் கூறும். அக்னி, மரத்துண்டுகளிலிருந்து பிறக்கிறது என வேதம் கூறுகின்றது. ஆனா லும் கூரிய தாடை எலும்புகளும் சிவந்த தாடியும் தீப்பிடித்து எரியும் பல்களும் கொண்ட உருவை அக்னிக்கு அளித்துள்ளனர்.

இருட்டைப் போக்கும் அக்னி, கெட்ட ஆவிகளை யும் மந்திரங்களையும் துரத்தும் சக்தி பெற்றதாக வருணித்துள்ளனர். இதன் உணவாக நெய்யை உருவ கப்படுத்தி காண்பிக்கச் செய்தான். இன்றளவும் செய்கிறான். அக்னியில் எதைக் கொட்டினாலும் அவை கடவுளிடம் சேர்ந்து விடுவதாகக் கூறப்பட்டுள்ளது.

உஷஸ்: விடியற்காலைப் பொழுது எனப் பொருள் படும் வேதங்கள் வியந்து பாடும் பெண் கடவுள் இதுதான். இதற்காக 22 சூக்தங்கள் எழுதப்பட்டுள்ளன. இது மிக அழகுள்ளதாக எழுதப்பட்டுள்ளது. அதனாலேயே அக்னி, சூரியன், பூஷன், அஸ்வினி தேவர்கள் முதலியோர் இதன்மீது மையலுற்றுக் காமுற்று அலைந்தார்கள் என்று கூட எழுதி வைத்துள்ளனர்.

மிரட்டும் இருளைப் போக்கும் உஷஸ், கெட்ட கனவுகளைத் துரத்தும் உஷஸ், சிரிக்கும் உஷஸ், பாடும் உஷஸ், துணி இல்லாமல் மார்பழகைக் காட்டும் உஷஸ் என்றெல்லாம் கவர்ச்சிகரமாக உஷஸ் வருணிக்கப்பட்டுள்ளது.
அதிதி சரஸ்வதி, அரண்யாணி, (வாக்குவன்மைக்கான கடவுளச்சி) என்றெல்லாம் பெண் கடவுள்கள் உள்ளன.

சூரியன்: பத்து சூக்தங்கள் சூரியனைப்பற்றி உள்ளன. கீழேயுள்ள மனிதர்களைப் பார்ப்பதாகவும், தாவரங்கள் உயிர் இனங்கள் அனைத் தையும் காத்து வருவதாகவும் மனிதர்களுடைய பாவ புண்ணியங்களுக்குத் தீர்ப்பு வழங்குவதாகவும் உலகைப் படைத்துக் காப்பது சூரி யனே என்றும் எழுதப்பட்டுள்ளது.

ஸவித்ரு பூஷன்: இரவில் எதேச்சையாகத் தெரியக் கூடிய சூரியன் உண்டாம்.
அதுதான் ஸவித்ருவாம். அதுபோல கால் நடைகளின் பாதுகாவலனாகவும் மனிதனின் உற்ற நண்பனுமாகத் திகழ்வது பூஷன் என்பதாகும். இவை இரண் டும் சூரிய தேவர்களாம்.

அஸ்வினிகள்: இரட்டை யாகப் பிறந்த கடவுள்களாம், ஒளிக்கு அதிபதிகளாம். புனர் காலையிலும் மங்கிய மாலையிலும் ஏற்படும் வெளிச்சம்தான் அஸ்வினி களாம். தாம்பத்திய வாழ்க்கை, தாம்பத்ய சுகம் ஆகியவற்றைப் பாதுகாப்பதும், தேவர்கள், மனிதர் கள் ஆகியோரின் மருத்துவர்களாகவும் இவைகளுக்கு வேலையாம்.

சோமன்: சோமரசம் அல்லது சோமபானம் எனும் மது போதைத் தரக்கூடியதையும் கடவுளாக்கிவிட்டனர். இதிலிருந்தே கள் குடிக்கும் ஆரியர்கள் தந்த மரியாதையை ரிக் வேதம் பிரதிபலிப்பதை புரிந்து கொள்ளலாம்.

கள்ளேதான் கடவுளடா என்றே வேதம் கூறுகிறது.

வாயு ருத்ரன் என்றெல்லாம் கடவுள்கள் பேசப்படுகின்றன. விஷ்ணு என்பது ஒரு நோஞ்சான் கடவுள். பிற் காலத்தில் இது பயில்வான் ஆகிவிட்டது. கீதை எழுதப்பட்ட காலத்தில் இதை ஊதிப் பெருக்கி இதுவே ஹோமம். இதுவே யாகம், இதுதான் ஸ்வதா. இது மருந்து, இது மந்த்ரம், இது நெய், இது தீ, இது ஹவிஸ் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளிப் பெரிய கடவுளாக்கிவிட்டனர்.
``ஓம் என்பதும்தான். ரிக் வேதமும், சாம வேதமும், யஜூர் வேதமும் நான் நான் என்றே விஷ்ணு கீதையில் கூறுகிறது.

நாடுவிட்டு நாடு மாறிப் போகிற பகுதிகளில் ஆரியர்களுக்கு ஏற்பட்ட தோல்விகள் அவர்களின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தின. சீரான ஒரு பாதையில் தான் அனைத்தும் இயங்குகின்றன என்கிற எண்ணம் ஏற்படத் தொடங்கியது. கடவுள்களின் பலவீனமும் விதிபற்றிய நம்பிக்கையும் படிப்படியாக ஏற்பட்டு ஆரிய கோத்திரங்களை விழுங்கிவிட்டன.

கடவுள்கள், பேய்கள், ராட்சகர்கள் போன்றோரை வயப்படுத்துவதற்காக வித்தைகளும், மந்திரவாதமும் வளரத் தொடங்கின. மந்திரங்களால் கடவுளை மகிழ்ச்சி கொள்ள செய்து தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தனர்.

இந்தக் காலகட்டத்தில் தந்திரப் புத்தி படைத்த பார்ப்பனர்கள், ஏமாளி மனிதர்களை மேலும் ஏமாற்ற ஏதோ மந்திரங்களைச் சொல்லிக் கட்டுப் படுத்த முயற்சி செய்தனர். அதர்வ வேதம் பிறந்தது! --சார்வாகன்
http://viduthalai.com/20071215/snews04.html
----------------------------------
படித்துவிட்டீர்க‌ளா?
அப்துல்கரீம் அய்யங்கார் ? ஆபாசமே! இதுதான் தமிழ் வருடப் பிறப்பா? அறிவிற் சிறந்த தமிழ்ச் சமூகம் ???

நாரதருக்கும், விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளைகளா தமிழ் வருடங்கள்? முதலமைச்சர் கலைஞர் கேள்வி
---------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: