Followers

Saturday, February 16, 2008

வள்ளுவரிடம் - எந்த விலைமாது சதை விற்று முதலாளி ஆனாள் ?.மகளுக்குக் குபேரன் வீட்டில் சம்பந்தம் பேசினாள்?

வள்ளுவர் எதிர்பார்க்கவில்லை வினாக் குறிகளாக இரண்டு
விலை மாதர்கள் நின்றனர் அவர் முன்.

அதிர்ச்சியில் வள்ளுவர் வானில் கீறல்கள்!
திகைப்பில் வள்ளுவர் நொடிகளில் முடிச்சுகள்!
மருட்சியில் வள்ளுவர் மூச்சில் நெரிசல்கள்!

“எங்களுக்கும் ஓர் அதிகாரம் ஒதுக்கியதற்கு நன்றி அய்யா!”
வள்ளுவர் கண்கள் வந்தவர்கள் அமர்வதற்கு அனுமதியை உச்சரித்தன

“தீட்டுப் படாதல்லவா உங்கள் வீட்டுத் திண்ணை?”
இப்படி கேட்டபடி அமர்ந்தனர் இருவரும்.

‘மனைத்தக்க மாண்பு’ இல்லாத இனம் எங்களுடையது.
‘கற்பென்னும் திண்மையை’ உடைத்து நொறுக்கிய சமுதாயம்
எங்களைப் ‘பெருந்தக்க’வாக எப்படி ஏற்றுக் கொள்ளும்?

‘மாய மகளிர்’ என்று எங்களை வருணித்த வள்ளுவரே!
எங்கள் அனுபவம் உங்களுக்கும் உண்டோ?

‘மாயும் மகளிர்’ என்று திருத்தம் செய்தால் உங்கள் பாட்டு,
தளை தட்டாது என்று நினைக்கிறோம்

இப் ‘பண்பில் மகளிர்’ இப்படியொரு பாடபேதம் செய்து கொள்ளலாமா?

உடம்பைக் ‘காயம்’ என்றது உங்களைவிட எங்களுக்குத்தன் அதிகம் பொருந்தும்

காமுகர் செய்யும் காயங்களால் ஆன காயங்கள் எம்முடையவை. நாங்கள் செத்த பிறகும் எங்கள் காயங்கள் வாழும் நியாயங்கள் கேட்கும்.

அவசரப்பட்டவர்கள் விந்துகள் தெறித்துத் தெறித்து எங்கள் பாடல்கள் கறைபடிந்தன.

எங்கள் தூக்கங்களும் துகிலுரியப்படுகின்றன கனவுகள் உள்ளேயும் புகுந்து அங்குலம் அங்குலமாகக் காமப் பற்களால் கடித்துக் குதறுகின்றனர்.

கல்யாணி இராகத்தை மீட்ட முடியாத கண்ணீர் வீணைகள் நாங்கள். எங்கள் கிழக்கில் இருட்டுச் சூரியன்... எப்படி எழுதுவான் எங்கள் விடியலை?

புண்ணின் இரத்தத்தில் பூத்த பூக்கள் நாங்கள்... ஒவ்வொரு இதழிலும் மாறுவேடம் பூண்ட மரணம். எங்கள் உடம்பின் எந்த ஓர் அங்குலத்திலும்
எங்கள் ஆன்மாவுக்கு இடம் இல்லை.

காமக் கழுகுகள் கொத்தும்போது நாங்களும் எங்கள் உடம்பிலிருந்து வெளியேறி விடுகிறோம்.

நீங்கள் எங்களை ‘ஏதில் பிணம்’ என்று சொன்னது பிழையே இல்லை வள்ளுவரே! பிணம் கொத்திச் சுகம் பொறுக்கும் ஆண்களைக் காப்பாற்றத் துடிக்கும் நீங்கள்... எங்களைக் காப்பாற்ற எங்களை மீட்க ஏதும் சொன்னீர்களா?

எங்கள் ‘பால்’ அங்கங்கள் படைத்த குறள் வெண்பா ஒன்று சொல்லவா? பிழையிருந்தால் பெரியவர் நீங்கள் மன்னிக்க வேண்டும்.

‘பால் அங்கங்கள்’ - சிலேடை... புரியுமே உங்களுக்கு!
காம வெறியரின் கள்ள முயக்கமே காட்டு விலங்கணைத் தற்று”
பதவுரை மொழிப்புரை பரிமேலழகரைக் கேட்டால் சொல்வார்.

‘அய்ய! நீங்கள் சொன்னதுபோல் எல்லாம் விற்கிறோம் - எனினும் இதயத்தை விற்பதில்லை’

அதனால்தான் எங்கள் முயக்கம் ‘பொய்ம்மை முயக்கமோ’
ஆடவர் எம்மை அணைப்பது மட்டும் அன்பு முயக்கமோ?

ஆடவரைக் காப்பாற்றக் கையில் விளக்கோடு எங்கள் தெருமுனையில் தவிக்கும் உங்கள் குறட்பாக்களுக்குக் கண்பறிக்கப்பட்ட எங்கள் கதறல்கள் காதில் விழுமா?

பிணங்களை வாடகைக்கு எடுக்கக் கையில் பணத்தோடு திரியும் உம் இனம் பலியாவது பற்றிப் பதற்றம் அடையும் உம் குறட்பாக்களைக் கூப்பிட்டுக்
கேளும்...

எந்த விலைமாது சதை விற்று முதலாளி ஆனாள் என்று... எந்த விலைமாது இரவுகளை விற்றுக் கிழக்கைக் கிரையம் செய்து கொண்டாள் என்று.... எந்த விலைமாது தன் மகளுக்குக் குபேரன் வீட்டில் சம்பந்தம் பேசினாள் என்று....

எழுந்து புறப்படும் முன் இருவரும் கூறினர்...
‘நீங்கள் ஏதும் பேசாமல் நாங்களே பேசிக்கொண்டிருந்து விட்டோம்’.

தவறில்லை என்று தங்கள் மனத்திற்குப் பட்டால் உங்கள் குறட்பாக்களைக் கொஞ்சம் எங்கள் வீட்டுப் பக்கம் அனுப்பி வையுங்கள்.

நாங்கள் அவற்றோடு நிறையப் பேசவேண்டியிருக்கிறது...
விடைபெறவா நாங்கள்?

வள்ளுவரின் கண்கள் அவர்களுக்கு விடையளித்தன
விடையளிக்க முடியாமலே!
http://unmaionline.com/2005012/2005012u1.html
--------------------------
படித்துவிட்டீர்க‌ளா?
இந்து மதம் விலங்குகளை மட்டுமல்ல, நரபலி இடுவதையும் நியாயப் படுத்துகிறது. கற்பனையில் காட்டு விலங்காண்டி ஆரியர்களால் உருவாக்கப்பட்ட கடவுள்கள்.

எவ்வளவு பெரிய மோசடியை எவ்வளவு சாதாரணமாக எழுதி வைத்திருக்கிறார்கள் பார்த்தீர்களா? யாரால்? யாரை ஒழிக்க?

கல்கி பகவான் படத்தில் குங்குமம் கசிகிறதாம்.பக்தியின் பெயரால் மோசடி செய்யும் சாமியார்களைத் தோலுரிக்க....
-------------------
மற்ற பதிவுகள்

No comments: